ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் கடத்தப்பட்டிருந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சகீம் சுலை மான் (வயது-29), சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாவனெல்ல, ஹெம்மாதுகம பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) மீட்கப்பட்ட குறித்த சடலத்தை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நடைபெற வுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்டிருந்த குறித்த வர்த்தகரை விடுவிப்பதற்கு கட த்தல்காரர்கள் இரண்டு கோடி ரூபா நட்டஈடு கோரியதாக, அவர்களது உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுதது கடத்தல்காரர்களை பற்றிய விபரத்தை அறியத்தருவோருக்கு 50 இலட்சம் ரூபா சன்மானம் …
-
- 1 reply
- 899 views
-
-
கடவுள் அந்த மனிதரை மீண்டும் என்னை சந்திக் வைத்ததால் இந்தக் கதையை எழுத வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாகிப் போய்விட்டது. கடந்த வருடம் ஒரு மழைப் பொழுதில் ஏதோ மூட்டை முடிச்சுடன் உயர்ந்த மிடுக்கான தோற்றத்துடன் கிளிநொச்சி நகரத்தில் பேரூந்துக்காக வீதியில் ஒரு பெரியவர் நின்றிருந்தார். நான் அவசரமாக மோட்டார் வண்டியில்சென்று கொண்டிருந்தேன். ஒரு கெல்மெற்றுடன் ஓடி வந்து என்னை மறித்தார். என்னால் அந்த பெரியவரை கணக்கெடுக்காமல் செல்ல முடியவில்லை. நின்று எனது மோட்டார் சைக்கிளில் ஏற்றினேன். அவர் வைத்திருந்த மூட்டை பற்றி விசாரித்தேன். அவர் சொன்னார். 20 வருடங்கள் என்ரை வாழ்க்கை முழுக்க இயக்கத்திலேயே கழிஞ்சிது. இயக்கத்தில் இருக்கேக்க எப்படியெல்லாம் இருந்தம். இப்ப இந்த அரிசி மூட்டைக்க…
-
- 0 replies
- 485 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பான வழக்கு விசாரணையினை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதிஸ்தரன் ஒத்தி வைத்துள்ளார். கடந்த மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது, விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின் போது, தன்னைத் தாக்கியது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் என காயமடைந்த சிங்கள மாணவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை கைதுசெய்ய முயன்ற வேளை, அவர் நீதிமன்றில் சரணடைந்தார். அதையடுத்து மேற்படி வழக்கினை இன்றைய தினம் வரை ஒத்திவைத்த நீதிபதி மீண்டும் குறித்த வழக்கினை இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு …
-
- 0 replies
- 340 views
-
-
இன்று கிளிநொச்சியிலிருந்து நடைபெறும் நடைபயணத்தில் சிறுவர்கள் முதியவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனை வாகனத்தில் அமர்ந்தவாறு நடைபயணத்தில் இணைந்துகொண்ட சிறிதரன் தலைமைதாங்குவதாக இடைவிடாது ஒலிபெருக்கியில் அறிவித்தமை பங்குகொண்டவர்களை விசனப்பட வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு பற்றி சமூகவலை தளத்தில் ஒருவரின் ஆதங்கம் வருமாறு: 65- 75 வயதுடைய முதியவர்களும் பெண்களும் ‘நடைபயணத்தில்’ நடக்க கிளிநொச்சியின் ‘சின்னக்கவுண்டர்’ வாகனத்தில் பவனிவர வெட்கமே இல்லாமல் ‘சிறிதரன் தலைமையில் நடைபயணம் என முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்க’ தொடர்கிறது சிறிதரன் இயக்கி நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ வீதி நாடகம். http://thuliyam.com/?p=38625
-
- 0 replies
- 494 views
-
-
குடும்பத்தில் ஒன்பது 9 பேரை பலி கொடுத்து தனிமைப்பட்டுள்ளேன்; எதற்காக இவ்வாறு செய்தார்கள் என்ற சரியான காரணம் புரியவில்லை - நல்லிணக்கப் பொறிமுறை கருத்தறியும் அமர்வில் 78 வயது வயோதிபர் ஆதங்கம் 2016-08-25 10:29:45 (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) எனது குடும்பத்தில் மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள் உட்பட 9 பேரைப் பலியெடுத்து இந்த உலகில் என்னைத் தனிமைப்படுத்தி விட்டனர்” என ஏறாவூரில் 1990ஆம் ஆண்டு தாக்குதலுக்குள்ளான 78 வயது வயோதிபர் தனது துயரத்தை முன்வைத்தனர். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறி முறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு…
-
- 0 replies
- 332 views
-
-
மன்னாரில் “மாவா“அமோக விற்பனை போதையை ஏற்படுத்தக்கூடிய 'மாவா' என அழைக்கப்படுகின்ற ஒரு வகைப் பாக்கு, மன்னாரில் இளைஞர்கள் மத்தியில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மன்னார் பஸார் பகுதியில் குறித்த போதைப்பாக்கு மறைமுகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் ஒரு சரைப் மாவாப் பாக்கு, 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவருகின்றது. இந்தப் போதைப்பாக்கினை இளைஞர்களே அதிகம் பயன்படுத்துவதாகவும், தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. எனவே, மன்னார் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் குறித்த…
-
- 0 replies
- 591 views
-
-
ஐ.நா. செயலர் வருகைக்கு முன் வடக்கில் இடம்பெயர் முகாம்களை மூடத் திட்டம்! ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விஜயத்திற்கு முன்னரே வடமாகாணத்தில் உள்ள இடம்பெயர் முகாம்களை மூடுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. ஐ.நா செயலாளர் நாயகம் அடுத்தமாத முதல்வாரத்தில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்ற நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களை இந்த மாத இறுதிக்குள் மீள்குடியேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறு அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்ப ட்டிருப்பதாக தெரிவிக்கப்படு…
-
- 0 replies
- 259 views
-
-
திருகோணமலையில் இந்திய பொருளாதார வல யத்தை அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரையில் எந்தவிதமான இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று புதன்கிழமை சபையில் தெரிவித்தார். ஆனால் திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் விமானப்படைக்கு சொந்தமான காணிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என்றும் பிரதமர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி. எம்.பி பிமல் ரத்னாயக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். திருகோணமலை துறைமுகத்தை அண்டியதாக இந்தியாவின் வி…
-
- 0 replies
- 373 views
-
-
பேராதனை பல்கலை. தமிழ்,முஸ்லிம் முதலாமாண்டு மாணவர்கள் அச்சத்தால் வெளியேற்றம் பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட சிரேஷ்ட மாணவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அந்த பீடத்தின் முதலாம் ஆண்டு தமிழ் முஸ்லிம் மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்திற்கு வருகைதராத காரணத்தால் அந்த பீடத்தின் முதலாம் வருட தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற அவசர சந்திப்பில் தமிழ், முஸ்லிம் மாணவர…
-
- 0 replies
- 277 views
-
-
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் வழங்கியுள்ளார். குறித்த காணி இராணுவத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் நில அளவீடு செய்யும் நடவடிக்கைகள் நேற்று இடம் பெற்றுள்ளது. நில அளவைத்திணைக்கள அதிகாரிகளினால் குறித்த காணி நில அளவை செய்யப்பட்டமை குறித்து அப்பகுதி மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று (24) காலை குறித்த பகுதிக்குச் சென்று இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டு நில அளவை செய்யப்பட்ட குறித்த காணியை பார்…
-
- 3 replies
- 658 views
-
-
மட்டக்களப்பு சித்தாண்டியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 57 பேரின் நினைவு நாள் இன்று புதன்கிழமை அனுஸ்ட்டிக்கப்பட்டது. கடந்த 1990 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15 ஆம் 18 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சுமார் 57 ற்கு மேற்பட்டவர்களின் உறவினர்களினால் இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்றலில் காலை 9 மணிக்கு இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி விசேட வழிபாடுகளுடன் கூடிய பேரணி ஒன்றைய…
-
- 0 replies
- 446 views
-
-
இங்கிலாந்தில் நிதி மோடியில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்ட்ட ஸ்ரீலங்கா மாணவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நிறுவனமொன்றில் இருந்து 2 இலட்சம் பவுண்ஸ் நிதியை மோசடி செய்வதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் குறித்த மாணவருக்கும் இந்தியர் ஒருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் தலா 22 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வணிக கற்கைகளுக்காக பிரித்தானியாவிற்கு வருகைதந்த குறித்த ஸ்ரீலங்கா மாணவன், விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தண்டனை காலம் நிறைவடைந்த பின்னர் உடனடியாக அவர் நாடு கடத்தப்படுவார் என பிரித்தானிய அதிகாரிகள் குறிப்…
-
- 0 replies
- 378 views
-
-
வடக்கு மாகாண அபிவிருத்திக்கான கணிப்புப் பற்றிய கூட்டம் திரு. பாஸ்கரலிங்கத்தின் தலைமையில் இன்று கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயல்திட்ட நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சந்திரிக்காவின் செயலணியின் செயலாளர் போன்றோரும் கலந்துகொண்டனர். கூட்டத்தின் ஆரம்பத்திலேயே வடக்கு மாகாண முதலமைச்சரை உரையாற்றுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சரின் உரையில் தெரிவித்திருப்பதாவது, 2003ல் ஒரு தேவைகள் கணிப்பு நடைபெற்றது. பின்னர் 2004ல் சுனாமியும் 2009ல் போரின் முடிவுக்கட்டமும் பல விதமான பாதிப்புக்களையும் அழிவுகளையும் கொண்டு வந்தன. எனவே புதியதொரு கணிப்பு நடைபெறுவ…
-
- 6 replies
- 694 views
-
-
பேராதனை பல்கலை தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல். 12 மாணவர்கள் வைத்தியசாலையில். இரு மாணவர்களுக்கு பலத்த காயங்கள். பேராதனை இணைந்த சுகாதார விஞ்ஞான பீட 1ம் வருட தமிழ் மாணவர்கள் குறிஞ்சிக் குமரன் ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு தமது விடுதிக்கு திரும்பிச் செல்லும் பாதையில் வைத்து வழி மறித்த 2ம் வருட சிங்கள மாணவர்கள் பொல்லுகள் மற்றும் தலைக் கவசங்களினால் தமிழ் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இவ் தாக்குதலில் காயமுற்ற மற்றும் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் உடனடியாக ( 22.08.2016 திங்கள்) மாலை 7 மணியளவில் சக மாணவிகளின் உதவியுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அனுமதிக்கப்பட்டுள்ள 12 மாணவர்களில் 2 மாணவர்களுக்கு பலத்த இரத்த கா…
-
- 14 replies
- 1k views
-
-
எஸ்.எம்.ஈ.சி. என்ற அவுஸ்திரேலிய நிறுவனம் சிறீலங்காவில் லஞ்ச, ஊழல் மோசடியில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் வெளிநாட்டு அதிகாரிகள் 2011ஆம் ஆண்டு சிறீலங்காவின் கழிவுநீர் திட்டத்திற்காக 2.3மில்லின் டொலரினை மோசடியான முறையில் வழங்கியுள்ளனர். குறித்த நிறுவனத்தின் இ-மெயில்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சராக இருந்த நேரம் குறித்த நிதியானது எஸ்.எம்.ஈ.சி. நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அரசியலுக்கான ‘நன்கொடை’ என மைத்திரிபால சிறிசேனவும் அவரது உதவியாளரும் தெரிவித்திருந்தனர். ஆனால், இ-மெயில்கள் இது 2009ஆம் ஆண்டு உலக வங்கியினால் அணைக்கட்டுத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி என்பதைப் படம்பிடி…
-
- 3 replies
- 435 views
-
-
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டார். கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய சம்பந்தன் இப்போது யாழ்ப்பாணத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது? எதற்காக மக்கள் போராட்டத்திற்கு திட்டமிடுகிறார்கள்? என்ற கேள்வியை பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கேட்டதற்கு சுமந்திரனும் மாவை சேனாதிராசாவும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த பேரணியை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறினர். அதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன் அது என்ன பொங்குதமிழ் மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த திட்டத்தை ஒருபோதும் எற்றுக்கொள்ளக் கூடாது என்றும்,தற்போத…
-
- 11 replies
- 625 views
-
-
ஜெருசலத்தில் ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த சந்தேகநபர், அங்கு வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்படி, சிறுமியின் வீட்டுக்கு சுத்தம் செய்யும் பணிகளுக்காக சென்ற வேளையே அவர் இந்த தீங்கை இழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, 46 வயதான குறித்த நபர் சுமார் மூன்று வருடங்கள் அந்த வீட்டில் பணிபுரிந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற போது, சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாயிடம் சென்று சிறுமி இது குறித்து முறையிட்ட வேளை, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இவரைக் கைது செய்வதற்காக ஜெருசலம் பொலிஸார் நடவடிக்கைக…
-
- 9 replies
- 750 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க-அரசை வலியுறுத்துகிறார் சம்பந்தன் இலங்கையின் சட்டத்தில் இருப்பதற்கு, தகுதியற்ற சட்டம் என்று அரசாலேயே விமர்சி க்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல்கைதிகள் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சம்பந்தன், எதிர்வரு…
-
- 0 replies
- 279 views
-
-
2 , 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் : வடக்கு முதல்வர் இலங்கையில் 2 , 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் அதனாலேயே பௌத்த சின்னங்கள் இருக்கிறது - இவ்வாறு வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் மாநகராட்சியின் மன்ற சைவ விவகாரக் குழுவால் வருடந்தோறும் வெளியிடப்படும் நல்லைக் குமரன் 24 வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். தான் கொழும்பில் இருந்து யாழ்பாணத்திற்கு விமானத்தில் வரும் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமத்துடன் உரையாடியபோது அவர் தன்னிடம் பல கேள்விகளை எழுப்பியதாகவும் குறிப்பி…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஆயுதம் ஏந்திப் போராடினோம். ஆனால், தற்போது அந்தப் போராட்டம் மெளனிக்கப்பட்டுவிட்டது. ஆனால் எங்களுடைய போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை. நாங்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டேயிருக்க வேண்டிய தேவையிருக்கிறது. எங்களுடைய தனித்துவமான மனித வளத்தை நாங்கள் பாவிக்க வேண்டும். எங்களுடைய அறிவைப் பாவிக்க வேண்டும். எங்கள் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை வேறொரு வகையில் அர்ப்பணிப்புள்ளதாக வகுத்துக் கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சரும், நீதியரசருமான க. வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார் யாழ்ப்பாண மாநகராட்சி மன்றத்தின் சைவசமய விவகாரக் குழு வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிட்டு வரும் "நல்லைக் குமரன் மலர்-2016 வெளியீட…
-
- 0 replies
- 480 views
-
-
வடமராட்சி கிழக்குப் பிரதேசமான மணற்காட்டு கடற்கரை சந்தைக் கட்டட அபிவிருத்திக்கென ஒருக்கப்பட்ட 3.2மில்லியன் ரூபா நிதி நயினாதீவில் அமைக்கப்பட்டுவரும் 67அடி புத்தர் சிலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிக்குவின் வேண்டுகோளுக்கிணங்கவே குறித்த நிதி நயினாதீவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதே வேளை வடபகுதி கடற்பரப்பில் கடல் அட்டை மற்றும் சங்கு பிடிப்பதனை உடனடியாக தடை செய்து கரை வலை தொழிலை சுதந்திரமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யாழ் வந்திருந்த இலங்கை மீன்பிடி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடபகுதி மீனவருக்கு தற்போதுள்ள மிகப்பெரிய பிரச்சனை…
-
- 8 replies
- 605 views
-
-
வடக்கில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து மோசடி சம்பவம் இடம்பெற்று வருகின்றது. குறித்த மோசடி மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வேலையற்ற இளைஞர் யுவதிகளை இலக்கு வைத்து அவர்களுடைய கைத்தொலைபேசிக்கு ஒரு நபர் அழைப்பு விடுப்பார். அதில் யாழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிதாக திறக்கப்பட்ட வங்கி கிளையில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும், அதற்காக அவர்களின், சுயவிபரக்கோவையை மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கோரி மின்னஞ்சல் முகவரி குறுஞ்செய்…
-
- 0 replies
- 450 views
-
-
மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பஸ் சேவை நேற்று திங்கட்கிழமை இரவு 8.20 மணிக்கு மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த இரவு நேர நெடுந்தூர பஸ் சேவையானது [ 412 கி மீ] தூரம் கொண்ட இந்த பஸ் சேவையை பல காலங்களுக்கு பின் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் உதயகுமார் ஆரம்பித்து வைத்தார். மட்டக்களப்பு, யாழ் மக்களினதும் ,இசை நடனக் கல்லூரி, கல்வியயல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இந்த இரவு நேர பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்ப பட்டுள்ளது . இதன் படி மட்டக்களப்பில் இருந்து இரவு 8.20 க்கும் காங்கேசன்துறை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து இரவு 9 .30 க்கும் தனது சேவையை தொடர்கின்றது. …
-
- 5 replies
- 958 views
-
-
வடமாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் காணாமல் போனவர்களின் உறவினர்களை ஒன்று திரட்டி வடமாகாணத்தில் சங்கம் ஒன்றை அமைக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவத்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பாக வடமாகாண சபையின் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான என்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆகியோர்கள் தலைமையில் நடாத்தப்பட்ட விசேட கூட்டம் இன்று (24) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளின் நன்மை கருதி இந்தச் சங்கத்…
-
- 0 replies
- 388 views
-
-
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கிருந்து தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறியுள்ளனர். விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களை வெளியேறவேண்டாமென பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்தபோதும் மாணவர்கள் அதனைப் புறக்கணித்துள்ளனர். வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவிகளே இவ்வாறு வெளியேறியுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக இது இருக்கலாம் எனவும், 15 மாணவர்கள் தாக்கப்பட்டபோதும் 4 மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்ட இந்தச் சம்பவமானது தமிழ் மாணவர்களின் கற்றல…
-
- 3 replies
- 505 views
-