ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143432 topics in this forum
-
'முன்னாள் போராளிகளின் மரணம் தொடர்பில் ஆராய வேண்டும்' புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் மரணமடைந்து வருகின்றனர் என ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்ற நிலையில், அதன் பின்னணி தொடர்பில் முழுமையானதும், பகிரங்கமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் இவர்கள் உரிய உடல் மற்றும் உள ரீதியிலான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்பட வேண்டுமென்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில்அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, …
-
- 2 replies
- 294 views
-
-
தனது சொந்த சகோதரியை கப்பம் கோரிக் கடத்திய குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முதல் பிள்ளையான குறித்த 17 வயதுடைய சிறுவன், தனது சகோதரியைக் கடத்திச் சென்று மாற்றுக் குரலில் தந்தையிடம் சுமார் 700,000 ரூபாய் கப்பம் கோரியதாகக் கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனின் தாயார், மூன்று பிள்ளைகளையும் அவர்களின் தந்தையின் பராமரிப்பில் விட்டு, வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். தனது மூத்த மகன், இசைக் குழுவொன்றை அமைப்பதற்காக தன்னிடம் 500,000 ரூபாய் கோரியிருந்ததாகவும் தனது 15 வயதுடைய மகள் திடீரெனக் காணாமல் போனதையடுத்து அயலவர்களுடன்…
-
- 0 replies
- 301 views
-
-
இலங்கைக்கு எதிரான எல்லா சர்வதேச அழுத்தங்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்து விடும். ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்துடன் சர்வதேச கடிவாளத்தில் இருந்து இலங்கை விடுபட்டுவிடும். ஏனெனில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா விவகாரங்கள் ஆரம்பமாகும் முன்னர் நாம் சகல பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவோம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் தீர்வு தொடர்பில் சிந்தித்து அதற்கமைய நகர்ந்துகொண்டுள்ள நிலையில் வடமாகாண முதல்வரின் செயற்பாடுகளும் கருத்துக்களை முன்வைப்பதும் மிகவும் பாரதூரமான விடயமாகும். எவ்வாறு இருப்பினும் தேசிய பிரச்சினைகளை தீர்வு காணும்போதும் புதிய நகர்வுகளை கையாளும் போதும் தேசிய பாதுகாப்பிற்கு அமை…
-
- 0 replies
- 378 views
-
-
பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தமது கட்சியின் பெயரை தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக மாற்றம் செய்துள்ளது. வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் திருகோணமணமலையில் நேற்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். திருகோணமலை கடல்முக வீதியில் அமைந்துள்ள கட்சியின் காரியாலத்தில், மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் சுகு சிறீதரன் மற்றும் நிர்வாகச் செயலாளர் சிவராஜா மோகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த, வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், நாட்டில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இது நல்லாட்சிதான் என உ…
-
- 6 replies
- 596 views
-
-
சிறிலங்கா கடற்பரப்பில் இயற்கை எரிவாயு அகழ்வுக்கான சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு, அடுத்தவாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மன்னார் கடற்பரப்பில், இரண்டு துண்டங்களில் எரிவாயு ஆய்வுக்காக அனைத்துலக அளவில் கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளன. இது தொடர்பாக ஆறு அனைத்துலக நிறுவனங்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். மலேசியாவின் பெற்றோனஸ், நெதர்லாந்தின் றோயல் டச் ஷெல், இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கூட்டுத்தாபனம், பிரான்சின் டோட்டல், அமெரிக்க பல்தேசிய நிறுவனமான எக்சோன் மொபில் கோர்ப், அமெரிக்காவின் ஹலிப…
-
- 1 reply
- 502 views
-
-
கண்ணிவெடி பிரதேசமாக முல்லை கைவேலி பிரகடனம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராமசேவையாளர் பிரிவின் கைவேலி கிராமத்தில், அண்மையில் தொடர்ச்சியாக வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (07) அப்பகுதிக்குச் சென்ற அயப மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால், அப்பகுதி ஒரு கண்ணிவெடி பிரதேசமாக அடையாளம் காணப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர் . இது தொடர்பாக பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளருக்கு அறிவித்து அப்பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியை மேற்கொள்ளுமாறு தெரிவித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே உரிய அதிகாரிகள் இப்பகுதியில் கண்ணிவெடி அகற…
-
- 0 replies
- 293 views
-
-
இரு இந்திய உயர் மட்ட குழுக்கள் நாளை இலங்கையில்.! இலங்கை - இந்திய ஆணைக்குழுவில் இணக்கம் காணப்பட்ட இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்திய மத்தியரசின் பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை வருகின்றது. உத்தேச கூட்டு ஒப்பந்தத்தின் முதலாவது அதிகாரிகள் மட்ட பேச்சு வார்த்தை இதுவாகும். இதேவேளை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைப்பெறவுள்ள மனித வள உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ளும் நோக்கில் தகவல் தொழில்நுட்ப, உள்ளுராட்சி நிர்வாகம் மற்றும் நகர அபிவிருத்தி மத்தியமைச்சர் கே.டி. ராமா ராஹோ தலையிலான குழுவினரும் இலங்கை வருகின்றனர். அவர்கள் நாளை மறுநாள் புதன்கிழமை இலங்கை வருகின்றனர். …
-
- 0 replies
- 248 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்,கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாகவும், யாழ் பஸ் நிலையத்திற்கும் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறையில் படுகொலை செய்யப்பட்ட டில்ரூக்ஷனின் மரணத்திற்கு நீதி வழங்குமாறு கோரியும் வெகுஜன அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று(திங்கட்கிழமை) யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ‘நல்லாட்சி அரசாங்கமே அரசியல் கைதிகளை விடுதலை …
-
- 3 replies
- 525 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றுவவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு இணங்க, இந்த மாதம் 10ம் திகதி வவுனியாநீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் அறிவித்துள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டருக்குஎதிராக முன்னதாக பல குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்ருந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின்நெருங்கிய நண்பர் தயா மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/ltte/01/113498
-
- 0 replies
- 335 views
-
-
நிலாவரை கிணற்றில் குதிக்க முற்பட்ட தாயும் பிள்ளைகளும் மீட்பு செல்வநாயகம் கபிலன் நிலாவரை கிணற்றில் குதிக்க முயற்சி செய்த இளம் தாய் ஒருவரும், இரண்டு பிள்ளைகளையும் இரகசிய பொலிஸார் மீட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. தனது இரண்டு பிள்ளைகளுடன் நிலாவரை கிணற்று பகுதிக்கு வந்த தாய் ஒருவர், பிள்ளைகளுடன் கிணற்றில் குதிப்பதற்கு முயற்சித்துள்ளார். அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இரகசிய பொலிஸார், குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். தனது கணவனால் தனக்கு தனது பிள்ளைகளுக்கும் துன்புற…
-
- 3 replies
- 348 views
-
-
சதிகாரர்களுடன் இணைந்தே தாம் ஆட்சி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் சியோல் நகரில் நேற்று இலங்கையர்களை சந்தித்து உரையாடியபோதே அவர் அவ்வாறு கூறினார். “ அந்தக் காலத்தில் எனது ஆட்சியின் கீழ் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் இந்த அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவி வகிக்கின்றனர். என்னுடன் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்த சில அமைச்சர்கள் இன்று மைத்திரியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். நான் பெற்றுக்கொண்ட கடன் தொகை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனை நாட்டைப் பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடியும். நாம் ஒன்பது பில்லியன் ரூபா என தற்போதைய ஆட்சியாளர்கள் குற்றம் சுமத்துக…
-
- 0 replies
- 216 views
-
-
தமிழ் மக்கள் பேரவையில் 3 முக்கிய விடயங்கள் ஏக மனதாக நிறைவேற்றம்! தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்ட தொடரில் மூன்று முக்கியமான விடயங்கள் இன்று ஏகமனதாக பேரவையின் தலைவர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் இணைத் தலைவர்கள், உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.. அரசியல் தீர்வானது தமிழ் மக்கள் கேட்டவாறு கிடைக்காவிடின் நல்லிணக்கம் எற்படாது என்ற கருத்தினை வலியுறுத்தியும், வடக்கு, கிழக்கு மாகாணத்தின் ஒருங்கிணைப்பை வலியுறுத்த வேண்டும், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாரம்பரியமாக தமிழ் பேசும் மக்களின் தமிழ் மொழி நிலைக்க வேண்டும், அதேபோன்று அவர்களின் கலாச்சாரம் மேன்படவேண்டும் போன்றனவே அந்த மூன்று விடயங்களும். இதன்போது வடக்கு முதல்வரால் தெரிவிக்க…
-
- 2 replies
- 296 views
-
-
ஆஸி செல்வதற்காக சிறுநீரகங்களை விற்கும் இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வதற்காக இலங்கை அகதிகள், தமது சிறுநீரகங்களைவிற்பனை செய்துவருவதாக தகவல்கள் வெளியா கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் நியூஸ்கோப் என்ற செய்திசேவை, இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக தாம் மேற்கொண்ட ஆய்வின்படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகஅந்த சேவை குறிப்பிட்டுள்ளது.அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளின் ஆர்வலரான சாமுவேல் சந்திரஹாசன், இது தொட ர்பில்கூறும்போது, கடந்த மூன்று வருடங்களில் சுமர் 500 இலங்கை அகதிகள், 3000 டொலர்கள்என்ற விலைகளில், அவுஸ்திரேலியாவுக்கான தமது படகு பயணங்களுக்காக சிறுந…
-
- 0 replies
- 309 views
-
-
அரசாங்கம் எமக்கு புனவர்வாழ்வளிப்பதாகக் கூறி விஷமேற்றி பாரிய துரோகத்தைச் செய்து நம்பவைத்து ஏமாற்றியுள்ளது என முன்னாள் போராளியொருவர் தெரிவித்துள்ளார். இதற்கு சர்வதேசமும் தமிழ் அரசியல்வாதிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் போராளியான சுப்ரமணியம் தவமணி என்பவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நான் 2009.05.11இல் ஓமந்தையில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்தேன். பின்பு எம்மை வவுனியா பூந்தோட்ட முகாமிலும், செட்டிகுள முகாமிலும் தடுத்துவைத்தார்கள். அங்கெல்லாம் எமக்கு கோழி இறைச்சியே உணவாகத்தருவார்கள். ஒருநாள் மீன்தரப்படும். நாம் உணவு சமைப்போம். ஆனால் அவர்…
-
- 0 replies
- 336 views
-
-
அரசியல் கைதிகள் நிபந்தனையிலாவது விடுவிக்கப்படவேண்டும். இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி பல வருட காலமாக சிறைச்சாலைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளை நிபந்தனையின் அடிப்படையிலாவது விடு தலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை கோரி இன்று திங்கட்கிழமை கொழும்பு மற்றும் யாழ்ப்பாண பகுதிகளில் இருவேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க ப்படவுள்ளன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்க…
-
- 0 replies
- 671 views
-
-
உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர் தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதல் கைதிகள் உணவு உண்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகவும் அனுராதபுரம் சிறைச்சாலை மற்றும் கொழும்பு மகசீன் சிறைச்சாலைகளில் உள்ள 99 பேரே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நீண்ட காலமாக சிறையிலுள்ள தாம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியே இவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 369 views
-
-
ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரினால் இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹிருனிகா பிரேமசந்திரவிற்கும் மேலும் எட்டு பேருக்கும் எதிராகவும் இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட 29 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் ஹிருனிகா பிரேமசந்திர கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார…
-
- 0 replies
- 358 views
-
-
முன்னைய அரசாங்கம் தரமாட்டோம் என்றது. இந்த அரசாங்கம் தருவோம் எனகூறி எம்மிடையே மோதலை உண்டு பண்ணுகிறது: முன்னைய அரசாங்கம் வெளிப்படையாகத் தரமாட்டோம் என்றது. இப்பொழுதைய அரசாங்கம் எல்லாந் தருவோம் என்று காலத்தைக் கடத்திக் கொண்டே செல்கின்றது. அது மட்டுமல்ல. “எல்லாம் தருவோம்” என்று எங்களுக்குக் கூறிவிட்டு எம்மை எம்மிடையே அல்லது எமது சகோதர இனங்களுடன் மோத விடும் ஒரு பாங்கினைக் கண்கூடாகக் காண்கின்றோம். என வடமாகாண முதலாமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்ட தொடர் ஞாயிற்றுக்கிழமை பொது நூலகத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் இணைத்தலைவராக , கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். ம…
-
- 0 replies
- 277 views
-
-
இணைப்பு விவகாரம்: வடக்கிலும் கிழக்கிலும் ஏட்டிக்குப் போட்டி வடக்கிலும் கிழக்கிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இரண்டு முக்கியமான கூட்டங்களில், வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பிலான யோசனைக்கு, ஏட்டிக்குப் போட்டியான வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர், யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. இதேவேளை, கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடும், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விரு கூட்டங்களிலேயே, வடக்கு மற்றும் கிழக்கை மீளவும் இணைப்பது தொடர்பிலான யோசன…
-
- 0 replies
- 358 views
-
-
நாயை விடவும் கேவலமான நிலையில் அநுராதபுரம் நிலக்கீழ் சிறையில் தமிழ் இளைஞர்கள் தமிழ் இளைஞர்கள் பலர் அநுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தினுள் உள்ள, நிலக்கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை தான் கண்டதாக, பெண்மணி ஒருவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில், நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வு, நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே குறித்த பெண் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், '1996ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் வைத்து எமது பிள்ளைகளை இராணுவத்தினர், கடத்திச் சென்றிருந்தனர். அதன் பின்னர், அது ப…
-
- 0 replies
- 287 views
-
-
இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் ரயில் மோதி 250 பேர் உயிரிழந்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர்களில் அனேகமானோர் தற்கொலை செய்து கொண்டவர்கள் என ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன தெரிவித்தார். சமிஞ்சை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள புகையிர கடவைப் பகுதிகளிலும் அதிகமான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ரயில் விபத்துக்களை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன மேலும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=163111&category=TamilNews&…
-
- 1 reply
- 441 views
-
-
கற்றல் நடவடிக்கைக்கு திரும்பும் சிங்கள மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவாதம் அளித்துள்ளதனால், கல்வி நடவடிக்கைகளுக்கு சமூகமளிக்க சம்பந்தப்பட்ட மாணவர்கள் தீர்மானித்துள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதிக்கும் யாழ். பல்கலையின் சிங்கள மாணவர்களின் பெற்றோருக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் பின்னர் எடுத்துள்ள இறுதித் தீர்மானத்தை சிங்கள மாணவர்கள் வெளியிட்டுள்ளனர். http://onlineuthayan.com/news/15982
-
- 2 replies
- 555 views
-
-
பொறுப்புக்கூறல் தொடர்பான ஜெனிவா தீர்மானத்தின் நோக்கை மழுங்கடிக்க அரசாங்கம் முயற்சி செய்வதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாண நூலகத்தில் தமிழ் மக்கள் பேரவையின் 5 ஆவது கூட்டத் தொடர் இன்று காலை இடம்பெற்றது. இதில்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கமோ அல்லது எந்தவொரு பெரும்பான்மையின அரசாங்கமோ தரப்போகும் அரசியல் தீர்வு முழுமையான திருப்தியை அளிக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் அரசியல் யாப்புக்களால் முற்றிலும் திருப்திப்படுத்தப்படப் போவதில்லை. இதனால் பொறுப்புக் கூறலை தியாகம் செய்து விட்டு பெறுமதியான நிலையான தீர்வொன்றையும் அரசியல் ரீதியாகப் பெற முடியாத நிலைம…
-
- 1 reply
- 560 views
-
-
காணாமல்போனோர் பணியகத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சர்வதேச நிதி உதவி மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். காணாமல் போனோர் பணியகம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார், “அரசமைப்புக் குழுவால் நியமிக்கப்படும் இந்தப் பணியகத்துக்கு மனித உரிமைகள் தொடர்பில் பூரண அனுவபம் உள்ளவர்களே நியமிக்கப்படுவார்கள். நடுநிலை பற்றி அறியாதவர்கள் ஒருபோதும் நியமிக்கப்பட மாட்டார்கள். அவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் உண்டு. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இயங்கும் காரியாலங்கள் போன்று இலங்கையில் அம…
-
- 2 replies
- 375 views
-
-
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில், பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு என வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி, வட்டக்கச்சியிலிருந்து மணல் ஏற்றிச் சென்ற இரு டிப்பர்களும் வழி அனுமதிபத்திரத்தில் குறிப்பிடப்பட்டதுக்கு எதிராக, வாகனம் செலுத்தியமைக்காக மற்றுமொரு டிப்பர் வாகனமும், அனுமதிபத்திரத்தில் வழி சரியான முறையில் குறிப்பிடப்படாமையால் ஏனைய இரு டிப்பர்களுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. சனிக்கிழமை (06) கைது செய்யப்பட்ட மேற்படி சாரதிகளை, அவர்களின் வாகனங்கள் சகிதம், கிளிநொச்சி மாவட்…
-
- 0 replies
- 477 views
-