Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுங்க வரி செலுத்தாது இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான செல்போன்கள் உட்பட இலத்திரனியல் பொருட்களுடன் நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட தேடுதலில் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பிரதான வாயிலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 309 செல்போன் மற்றும் டெப்கள், சிப்கள், செல்போன் உதிரி பாகங்கள், சிகரட்டுக்கள், முக அழங்கார திரவியங்கள் என்பன அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி இரண்டு கோடியே 34 இலட்சத்து 33 ஆயிரத்து 978 ரூபா என அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ம…

  2. பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை எதிர்வரும் 12ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார். சீனாசெல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் ஆறு தினங்கள் சீனாவில் தங்கியிருக்கவுள்ளதாக தெரியவருகின்றது. இவ்விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஜின்பிங் உள்ளிட்ட முக்கிய உயர்மட்டத்தரப்பினரை பிரதமர் தலைமையிலான குழுவினர் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கும் சீனாவுக்கு இடையிலான பொருளாதார மேம்பாடுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை முன்னதாக சீனப்பிரதமர் லீ கேக்கியாங்கின் அழைப்பை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் மூன்று நாள் விஜயம் மேற…

  3. இலங்கை: கிழக்கு மாகாண சபையின் ஆசிரியர் நியமன வயது வரம்பில் சர்ச்சை இலங்கையில் கிழக்கு மாகாண சபையினால் புதிதாக நியமனம் பெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அநீதி இழக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினராலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 - 35 என பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான வயது எல்லை வரையறுக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் தகுதியை இழந்துள்ளனர் கிழக்கு மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காகப் பட்டதாரிகளிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பொதுச் சேவைகள் …

  4. கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த பாத யாத்திரையின் நோக்கம் அரசாங்கத்தை கவிழ்ப்பதல்ல எனவும் மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களை அரசாங்கத்தின் மீது வெறுப்படைய செய்வதே எனத் தெரியவந்துள்ளது. மகிந்த ராஜபக்ச தென் கொரியாவுக்கு புறப்பட்டுச் செல்லும் முன்னர் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்று கடந்த 4ம் திகதி விமல் வீரவன்ஸவின் வீட்டில் நடந்துள்ளது. இதில் டளஸ் அழகப்பெரும, குமார வெல்கம, லொஹான் ரத்வத்தே, பந்துல குணவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, சீ.பீ. ரத்நாயக்க ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். வருடந்தோறும் பண்டிகை காலத்தில் மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துவது குறித்து இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நீர்கொழும்பு, கந்தானை,…

  5.  'புத்தரின் பூர்வீகமே இந்து மதம்தானே?' -சொர்ணகுமார் சொரூபன் 'கலப்புத் திருமணம் பற்றியும் பௌத்தர்கள் இந்துக் கடவுளை வணங்குகின்றனர் என்றும், கடமைகளைப் பொறுப்பேற்ற உடனேயே கருத்துரைத்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முதலில் இந்து சமய வரலாற்றை படிக்க வேண்டும்' என யாழ். மாவட்டச் செயலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற, நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வின் போது, பெண்ணொருவர் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அப்பெண் கூறியதாவது, 'சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைய வேண்டும். கலப்புத் திருமணம் செய்யவேண்டும் என்று, வடக்கு ஆளுநர் கூறுகிறார். தமிழ்ப் பெண்கள், வெள…

  6. தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்-மாவை போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை வேண்டும் என்றே மக்கள் கருத்தறியும் நல்லிணக்க செயலணியிடம் தமிழ் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே, தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். உண்மைகள் கண்டறியப்பட்டு, பொறுப்புக்கூறல் உரிய முறையில் நடைபெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தால்தான் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என்றும் அவ…

  7. அனைத்து ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர்களின் கவனத்துக்கு : வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் கொழும்புக் கிளையானது கடந்த 75 வருடங்களுக்கு மேலாக அதற்குரிய சுயாதீன யாப்புடன் கிட்டத்தட்ட 750 உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர்கள் கடின உழைப்பினால் பல துறைகளிலும் உயர்ந்த நிலையை அடைந்து கல்லூரியின் நற்பெயரை தொடர்ந்து பேணி வருகிறார்கள் . சமுதாய மருத்துவ நிபுணராக கடமை ஆற்றி வரும் நான் கொழும்புக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினராகவும் பிரதி தலைவராகவும் பல வருடங்களாக செயல்பட்டுள்ள நிலையில் ஹார்ட்லி கல்லூரியில் மாணவர்களுக்கு உதவும் முகமாக வருடந்தோறும் சதுரங்கப் பயிற்சி பட்டறைகளையும் உயிரியல் விளக்க வகுப்புகளையும் ஒரு …

  8. இளைஞர்,யுவதிகளின் எதிர்காலத்தை பாழாக்குகிறது இராணுவம் வடக்கில் உள்ள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். ஏனெனில் இராணுவமே இங்குள்ள இளைஞர் யுவதிகளது எதிர்காலத்தை பாழாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. நாட்டில் கடந்த காலத்தில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டமையினாலேயே இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடத்தொடங்கியதாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் ஆவண ஊடக பொறுப்பாளர் மனோகரி செல்லத்துரை தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் ஜந்தாவது அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்து…

  9. போரில் பாதித்த மக்களுக்கான நியாயத்தை வழங்கும் அறிக்கையை அரசு வெளியிடவேண்டும்-அரசை எச்சரிக்கும் கலாநிதி பாக்கியசோதி போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்காக அரசா ங்கத்திடம் கையளிக்கப்பட்ட யோசனைகள் அடங்கிய அறிக்கையை அர சாங்கம் வெளியிடவில்லை என்றால், அதனை தான் பகிரங்கமாக வெளியிடப் போவதாக நல்லிணக்கத்திற்காக மக்களின் கருத்துக்களை அறிய அரசாங்கம் நியமித்த நிறுவனத்தின் பிரதானியான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார். போர் மற்றும் போருக்கு பின்னர் நடந்த குற்றங்கள் சம்பந்தமாக நியாயத்தை நிறைவேற்றுவதற்காக பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படுமாயின் அதில் முழுமையாக அல்லது பெரும்பாலான பிரதிநிதிகள் சர்வதேச ரீதியில் …

  10. கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய பகுதியில் தாழிறக்கம் காரணமாக 50 அடி ஆழத்தில் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அத்தோடு மேலும் அப்பகுதியிலிருந்த 4 வீடுகள் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு முற்றாக சேதமாகியுள்ளது. அந்த பகுதியில் புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கபாதைகள் அமைக்கப்படுவதனால் அதில் ஏற்படும் அதிகமான அதிர்வுகள் காரணமாக இவ்வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு ஏற்கனவே அதிகாரிகள் ஊடாக அனுப்பப்பட்டதன் காரணமாக உயர் ஆபத்துக்கள், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என…

  11. சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம், நிதி நகரம் என்ற பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடைநிறுத்தப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை, மீண்டும் புதிய உடன்பாடு ஒன்றுக்கு அமைய ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் புதிய உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது. இதில், துறைமுக நகரத் திட்டம் என்பதற்குப் பதிலாக, நிதி நகரம் என்று பெயர் மாற்றம் இடம்பெறவுள்ளது. இது முற்றிலும் ஒரு நிதி கேந்திரமாகவே இருக்கும் என்றும், எனவே, நிதி நகரம் என்ற பெயரிடப்படுவதே பொருத்தமானத…

  12. புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் திடீரென மரணிக்கின்றனர். இவர்களின் மரணம் இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது. எனவே, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனைவருக்கும் தகுந்த தரம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தொடச்சியான உயிரிழப்பு பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. கடந்த காலத்தில் அரசால் புனர்வாழ…

  13. வடக்கில் முதலீட்டாளர் மாநாடு சர்வதேச நாடுகளின் பங்குபற்றுதலுடன் வடக்கில் முதலீட்டாளர்கள் மாநாடொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். குறித்த முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பில், விரைவில் புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். யாழ்.நல்லூர் உற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த உற்சவத்திற்கு வரும் புலம்பெயர் சமூகத்துடன் இதுகுறித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்ட வடக்கு ஆளுநர், இதன்போது யாழ்ப்பாணத்தில் காணப்படும் முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து தெளிவுபடுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். …

  14. பொறிமுறைகளை குளிரூட்டிய அறைகளுக்குள் மட்டுப்படுத்தினால் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடாது அவை மக்கள் மயப்பட்டதாக கிராமிய மட்டத்தில் விரிவுபடுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ள கருவி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுகைளைக்கூட அரசு எழுத்துவடிவில் மாத்திரமே வைத்திருப்பதாகவும் அவை செயல் வடிவத்தில் இல்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். வடக்கின் நான்கு மாவட்டங்களில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றுவருகின்றன அவற்றில் பங்கேற்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நல்லூர் பிரதேச செலர் பிரிவிற்குட்பட்ட மக்களும் ஏனைய அமர்வுகளில் சாட்சியமளிக்காதவர்களும் பங்குகொள்ளும் வகையில் யாழ்ப்பாணம…

    • 0 replies
    • 180 views
  15. சுதந்திரக் கட்சியின் 46 தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட உள்ளனர் சுதந்திரக் கட்சியின் 46 தொகுதி அமைப்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளனர். ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் இவ்வாறு கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கப்பட உள்ளனர். கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்பட்டவர்களே இவ்வாறு தண்டிக்கப்பட உள்ளனர். அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பாத யாத்திரையில் பங்கேற்றவர்களே இவ்வாறு நீக்கப்பட உள்ளனர். அண்மையில் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதேவேளை, பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த…

  16. இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க திணைக்களத்தின் மற்றுமொரு இராஜாங்க உயர் அதிகாரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். பொருளாதார மற்றும் வியாபார விவகாரங்கள் தொடர்பான உதவிச் செயலாளர் சார்லஸ் எச்.ரிவ்கினே இவ்வாறு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. இவர் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையில் இலங்கை மற்றும் பர்மாவிற்கு பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிவ்கின் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இலங்கை வரவுள்ளார் என்றும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக அரசு மற்றும் தொழில் தலைவர்களை சந்த…

  17. வவுனியா - கொக்குவெளி பகுதியில் வசித்த சிங்கள மக்கள், சுய விரும்பின் பேரிலேயே தமிழர்களுக்கு தமது காணிகளை விற்பனை செய்தபோதிலும் தற்போது அந்த காணிகளுக்கு மீண்டும் உரிமைகோருவதாக தமிழ்த் தேசிக்ய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், காணியை விற்பனை செய்தபோது தமிழ் மக்களிடம் பெற்றுக்கொண்ட பணத்தை கூட மீள வழங்காமல் அமைச்சர்களின் செல்வாக்குடன் குறித்த காணிகளை மீள பெற்றுக்கொள்வதற்கு சில சிங்கள மக்கள் முயற்சிப்பதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதனிடையே சமாதானத்துக்கான குடியேற்ற கிராமம் என்ற பெயரில் தமிழ் பெண்களை திருமணம்செய்த சிங்கள படைவீரர்களுக்கான கிராமமொன்றை தமிழ் மக்களின் காணிகளில் அரசாங்கம் நிர்மாணிதுள்ளதாகவும…

    • 0 replies
    • 183 views
  18. வடக்கு அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை வட மாகாண அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக தொடர்ச்சியாக மக்களினால் முன்வைக்கப்பட்டு வரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய குழு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வடக்கு முதல்வர், வட மாகாணசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அனுமதி கோரி பிரேரணை ஒன்றினை வடக்கு முதல்வர் முன்வைத்துள்ளதாக தெரியவருகின்றது. வட மாகாண விவசாய அமைச்சர் தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் என வட மாகாணசபை உறுப்பினரான பசுபதிப்பிள்ளை ஏற்கனவே கோரியிருந்த நிலையில் முதலமைச்சரினால் இவ்வாறான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் அமர்வின்போது இவ்விடய…

  19. பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி இன்று இலங்கை வருகிறார் பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான் இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கைக்கு வரவுள்ளார். பாகிஸ்தானிடம் இருந்து ஜேஎவ்-17 போர் விமானங்களை இலங்கை விமானப்படைக்குக் கொள்வனவு செய்வது தொடர்பாக இழுபறி நீடித்து வருகின்ற நிலையிலேயே, பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியின் இந்தப் பய ணம் இடம்பெறவுள்ளது. எனினும், ஜேஎவ்-17 போர் விமானக் கொள்வனவு தொடர்பாக பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியுடனான பேச்சுக்களில் முக்கிய விடயமாக கலந்துரையாடப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவான பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தே கலந்துரை யாட…

  20. இலங்கையில் கால்பதிக்கிறது சீனவங்கி உலகின் மிகப் பெரிய வங்கிகளில் ஐந்தாவது இடத்தில் உள்ள சீன வங்கி (Bank of China) தெற்காசியப் பிராந்தியத்துக்கான தலைமையகத்தை கொழும்பில் அமை க்கவுள்ளது. சீனாவிலும், ஏனைய 41 நாடுகளிலும், இந்த வங்கி கிளைகளைக் கொண்டி ருக்கிறது. எனினும் தெற்காசியாவில், கொழும்பிலேயே முதலாவது வங்கிக் கிளை அமைக்கப்படவுள்ளது. இந்த வங்கியை அமைப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கு, விரைவில் சீன அதிகாரிகள் குழு கொழும்பு வரவுள்ளதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது கொழும்பில் அமைக்கப்படவுள்ள சீன வங்கியின் கிளை, துறைமுக நகரத் திட்டம் நிறைவ…

  21. பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்த பெண்கள் கௌரவிப்பு நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு வழங்கும் பெண் தொழில் முனைவோரை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. பெண் தொழில் முனைவோரை, தொழில்துறையில் ஊக்குவிக்கும் நோக்கில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கிய 10 பெண்கள் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிறந்த பெண் தொழில் முனைவோராகத் தெரிவு செய்யப்பட்ட லக்மினி விஜேசுந்தரவை ஜனாதிபதி தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்திருந்தார். …

  22. வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் கிடந்த பெட்டிக்குள் இருந்து ஆண் சிசு, இன்று ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். சைக்கிளொன்றில் வந்த சிலர், சிசுவை அந்தப் பகுதியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். சிசுவை மீட்ட இளவாலை பொலிஸார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.tamilmirror.lk/178798/வ-த-ய-ல-வ-சப-பட-ட-ஆண-ச-ச-ம-ட-ப-

    • 0 replies
    • 209 views
  23. உலகம் உண்மைகளை இனியேனும் அறியட்டும் வீ.ஆனந்தசங்கரி யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. நீங்கள் உருவாக்கியதாக சொல்லப்படுகின்ற அரசு செயற்படத் தொடங்கி 20 மாதங்கள் ஆகிவிட்டன. மக்களிடமிருந்து பலாத்காரமாக பெறப்பட்ட காணிகள் தொடர்ந்தும் இழுபறி நிலையில்தான். கிளிநொச்சி நகரின் முதலாவதும், முக்கியமானதுமான கிராமம் பரவிப்பாஞ்சான். இக்கிராமம் இராணுவத்தினரின் தலைமை செயலகமாக செயற்படுகின்றது. இத்தகைய அலங்கோலங்களுக்கு முடிசூட்டுவது போல் யுத்தத்தால் அடைந்த துன்பங்கள், கஸ்டங்கள,; இழப்புக்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் பொதுமக்களின் நிலம் 617 ஏக்கர் முள்ளிவாய்க்கால் மக்களிடமிருந்து இன்றோ நாளையோ பறிபோகவுள்ளது. இதிலிருந்து நீங்களும் உங்கள் சகாக்களும் எதனைச் சாதித்து விட்டோமென தம்பட்…

    • 0 replies
    • 395 views
  24. சிங்களவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான யாழ்ப்பாணத்தை யுத்தத்திற்குப் பின்னர் மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியிலேயே சிங்கள மாணவர்கள் யாழ்பாணத்திற்கு தற்போது செல்கின்றார்கள் என சிரேஷ்ட விரிவுரையாளர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார். நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் சிங்கள மாணவர்கள் சிங்களத்தையும் பௌத்தத்தையும் மனதில் வைத்துக்கொண்டே செயற்படுகின்றனர். அங்கு செல்லும் மாணவர்களின் முகநூலைப் பார்த்தால் இதனைப் புரிந்துகொள்ளமுடியும். இவர்களின் இத்தகைய செயற்பாடுகள் சரியா தவறா என விவாதிக்கத் தேவையில்லை. தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களின் வ…

  25. போராளிகளை சர்வதேசத்தின் உதவியோடு பரிசோதிக்க ஒன்றுதிரள்வோம்- கோவிந்தன் கருனாகரம் இறுதி யுத்ததின் போது இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் மரணங்கள் தொடர்ந்துகொண்டுள்ளன. இவ்விடயம் தொடர்பாக புனர்வாழ்வு பெற்ற போராளிகளை சர்வதேசத்தின் உதவி கொண்டு பரிசோதனை செய்வதற்கு ஒன்றுதிரண்டு குரல்கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருனாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு – ஆறுமுகத்தான் குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலய வகுப்பறைக்…

    • 0 replies
    • 282 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.