ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்யாத அரசு காணாமற் போனவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமா? கைதிகள் கேள்வி உயிருடன் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காதஅரசாங்கம் எவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்போகின்றது எனஅரசியல் கைதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அநுராதபரம் சிறைச்சாலைக்கு இன்று சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன் விஜயம் மேற்கொண்டு அரசியல் கைதிகளைசந்தித்து கலந்துரையாடினார். அதன்போதே அரசியல் கைதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த கலந்துரையாடலின் போது, எதிர்வரும் 08ஆம் திகதி அரசியல் கைதிகள் அடையாளஉண்ணாவிரத பேர…
-
- 1 reply
- 207 views
-
-
வடக்கில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டதென்பது உண்மைக்கு புறம்பானது. வடபகுதியில் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என கூறுவதானது ஒரு உண்மையான துரோகச் செயல் என வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் ஜந்தாவது அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர், ‘தொடர்ச்சியாக இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதானது ஒரு துரோகச் செயலாகும். வடக்கில் தற்போது சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல மருத்துவ தாதி பயிற்சி கல்லூரியிலு…
-
- 0 replies
- 325 views
-
-
மு.திருநாவுக்கரசு எழுதிய ”இலங்கை அரசியல் யாப்பு” எனும் நூல் இன்று வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு தமிழருவி த.சிவகுமாரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர் http://newsfirst.lk/tamil/2016/08/இலங்கை-அரசியல்-யாப்பு-என/
-
- 0 replies
- 252 views
-
-
2800 இலட்சம் மெட்ரிக் தொன் மீன்கள் ஏற்றுமதி இலங்கைக்கு இவ்வருட இறுதிக்குள் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை கிடைக்கும் எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரவீர, ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர் 2800 இலட்சம் மெட்ரிக் தொன் மீன்கள் அங்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சிக்காலத்தில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகைத் தடை செய்யப்பட்டது. இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில் நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள், மக்கள் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டதால், இவ்வருட இறுதிக்குள் எமக்கு மீண்டும் ஜீ.எஸ்.…
-
- 4 replies
- 497 views
-
-
வவுனியாவை விட வேறு இடத்தில் பொருளாதார மையம் அமைக்கக்கூடாது.தீர்மானம் நிறைவேற்றம் வவுனியாவை விடுத்து வேறு மாவட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கக்கூடாது என்றும் வவுனியாவில் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பது தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னதாக முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பது தொடர்பாக தீர்மானத்தினை எடுப்பதற்காக வவுனியா மத்தியஸ்த சபையின் தலைவர் எஸ். வரதகுமார் தலைமையில் நேற்று புதன்கிழமை மாலை வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த 20…
-
- 4 replies
- 408 views
-
-
ஆண்டு தோறும் ஏற்படும் விண்கல் மழை (Persied meteor shower) இன் உச்சநிலையை அடுத்தவாரம் இலங்கையர்கள் அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவின் பின்னர் இலங்கையர்கள் இதனை அவதானிக்க முடியுமென இலங்கை கோள்மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் ஏற்படும் இந்த மழையை இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நள்ளிரவின் பின்னர் கண்காணிக்க முடியும். http://www.seithy.com/breifNews.php?newsID=163054&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 559 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பறிக்கும் வகையிலான சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குற்றம்சுமத்தியுள்ளார். கண்டி மல்வத்து பீடத்தை இரண்டாக பிளவடையச் செய்ய மஹிந்த சதித் திட்டம் தீட்டியதாகவும் இது குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மஹிந்தவின் குடியுரிமை பறிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சில தரப்பிலிருந்து வெளியாகும் செய்திகளை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது. …
-
- 0 replies
- 336 views
-
-
தமிழ் மக்களுக்கும் தெற்குக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் விரும்புவதாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டெல்றொக்ஷன் பாதுகாப்புத் தரப்பினால் கொலைசெய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடாத்த விசேட ஆணைக்குழுவொன்றை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்திக் கூறும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் வண. சத்திவேல், இருவரும் கொல்லப்பட்ட விதம், யார் கொலை செய்தார்கள், எவ்வாறு கொலை செய்தார்கள், ஏன் கொலை செய்யப்பட்டார்கள் என்ற விடயங்கள் ஆராயப்பட்டு தயாரிக்கப்படும் அறிக்கை மக்கள் முன் கொண்டுவரப்படவேண்டும் என்றும் கூறுகிறார். http://maatram.org/?p=4673
-
- 1 reply
- 362 views
-
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு, இலங்கை அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று சனிக்கிழமை போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் உருவபொம்மையை எரித்தனர். இலங்கை இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்த 107 போராளிகள் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கு நீதி விசாரணை கோரி இந்த போராட்டம் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 200இற்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். http://malarum.com/article/tam/2016/08/06/15189/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%…
-
- 0 replies
- 157 views
-
-
இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்றும், ஹனுமானின் வாலில் தொங்கிக் ககொண்டேனும் ஆட்சியை பிடிக்கவே பொது எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார். உயர்கல்வி மற்றும் நெஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது. அதுத் தொடர்பில் நாம் சிந்திக்கவும் இல்லை. திட்டமும் கிடையாது. ஆனால் பொது எதிர்க்கட்சியென்ற கூட்டம் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு அமைச்சுக்களை பிடித்துக் கொண்டு தடுமாறுகின்றது. ஒரு கால கட்டத்தில் மத்திய வங்கி பிணை முறிவுகளில் தொங்கிக் கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் வற்வரியை பிடித்துக் கொண்டனர். இது முடிய வெளிநாட்…
-
- 1 reply
- 406 views
-
-
இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் காணிக்குள் விகாரைக்கு மதில் அமைக்கும் இராணுவம்:- கிளிநொச்சி இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மூன்றாவது வீதி காணப்படுகின்ற ஆலயத்திற்குச் சொந்தமான காணிக்குள் மிகப்பெரும் விகாரைக்கான சுற்றுமதில் அமைக்கும் பணியில் இராணுவத்தினர் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 1957 ஆம் ஆண்டு இரனைமடு குளத்தினை தீர்த்த தளமாக கொண்டு யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இரனைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு 13.5 ஏக்கர் காணி இருந்தது. இதில் தற்போது ஒன்பது ஏக்கர் காணி மாத்திரமே ஆலய நிர்வாகத்தின் கீழ் காணப்படுகிறது. மிகுதி 4.5 ஏக்கர் காணியும் இராணுவத்தின் பிடியில் இருக்கிறது…
-
- 0 replies
- 656 views
-
-
துப்பாக்கி ரவைகள் மீட்பு -தீசான் அஹமட் திருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரத்தடி சந்தியில் உள்ள வளவொன்றுக்குள் இருந்து நேற்றிரவு ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 54, எம்.எம் துப்பாக்கி ரவைகள் 02 என்பன மீட்கப்பட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மலசலகூடம் கட்டுவதற்காக வேண்டி அவ்வீட்டு உரிமையாளர் குழி தோண்டிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கி ரவைகள் இருப்பதை கண்டுள்ளார். இதுதொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - See more at: http://…
-
- 0 replies
- 262 views
-
-
பாதயாத்திரையில் சிறுவனை ஈடுப்படுத்தியமை குறித்து நாமல் மற்றும் ஜனகவிடம் விசாரணை (லியோ நிரோஷதர்ஷ்ன்) கூட்டு எதிர் கட்சியின் பாதயாத்திரையில் இருந்த சிறுவன் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜனக பண்டாரதென்னகோண் ஆகியோரிடம் குறித்த சிறுவன் தொடர்பில் பொலிசார் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளனர். கடந்த மாதம் 28 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர் கட்சியினர் கண்டியிலிருந்து கொழும்பை நோக்கி பாதயாத்திரையில் ஈடுப்பட்டனர். தொடர்ந்தும் 5 நாட்கள் இடம்பெற்ற இந்த பாதயாத்திரையில் நிட்டம்புவ பகுதியில் வைத்து சிறுவன் ஒருவனை ப…
-
- 0 replies
- 259 views
-
-
நாடாளுமன்ற வளாகத்தின் சில முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட உள்ளது. நாடாளுமன்றை பார்வையிட பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள காரணத்தினால், பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி இவ்வாறு கமெரா பொருத்தப்படுகின்றது. மக்கள் பிரவேசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு கமெராக்கள் பொருத்தப்பட வேண்டுமென பொலிஸார் அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர். இதன் அடிப்படையிலேயே பாதுகாப்பு கமெராக்கள் பொருத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸாநாயக்க சிங்கள நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=162993&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 167 views
-
-
வவுனியா- கொக்குவெளி பகுதியில் வசித்த சிங்கள மக்கள் சுய விரும்பின் பேரிலேயே தமிழர்களுக்கு தமது காணிகளை விற்பனை செய்த போதிலும் தற்போது அந்த காணிகளுக்கு மீண்டும் உரிமை கோருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். காணியை விற்பனை செய்த போது தமிழ் மக்களிடம் பெற்றுக்கொண்ட பணத்தை கூட மீளவழங்காமல் அமைச்சர்களின் செல்வாக்குடன் குறித்த காணிகளை மீள பெற்றுக்கொள்வதற்கு சிங்கள மக்கள் முயற்சிப்பதாகவும்கூ அவர் குறிப்பிட்டார். சமாதானத்திற்கான குடியேற்ற கிராமம் என்ற பெயரில் தமிழ் பெண்களை திருமணம்செய்த சிங்கள படைவீரர்களுக்கான கிராமமொன்றை தமிழ் மக்களின் காணிகளில் அரசாங்கம் நிர்மாணித்துள்ளது. கொக்குவெளியில் இவ்வாறு இராணுவத்தால் கா…
-
- 0 replies
- 279 views
-
-
துப்பாக்கி முனையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி செய்வதாக நல்லிணக்க கருத்தறியும் செயலமர்வின் போது பெண்மணி ஒருவர் சுட்டிக் காட்டினார். யாழ் மாவட்ட செயலகத்தில் 5ஆவது அமர்வு இன்று இடம்பெற்றது இதன் போதே குறித்த பெண்மணி தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அமர்வின் போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் சட்டம் நீதியான முறையில் நடைபெறவில்லை. அண்மையில் நடைபெற்ற குமரபரம் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 நபர்களுக்கு தண்டணை வழங்குவதற்கு யூரி சபையினை நீதிச்சேவை ஆணைக்குழு நியமித்துள்ளது என்றால், ரலயட்பார் நியமித்து விசாரணை செய்து தண்டனை விதித்திருக்கலாம். ஏன், அந்த ரயலட்பார் மூலம் தண்டனை வழங்கவில்லை. திருகோணமலையில் நடைபெற்…
-
- 0 replies
- 261 views
-
-
ஆளும்கட்சியின் அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் இருந்து செல்ல தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் முழுமையான அனுமதியை பெற வேண்டும் என ஜனாதிபதி, கடிதம் ஒன்றின் மூலம் அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளார். இதனடிப்படையில் வெளிநாடுகளுக்கு செல்லும் அமைச்சர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்து எழுத்து மூலமான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அரச நிதி மற்றும் வெளிநாட்டு திட்டங்கள் மூலம் கிடைக்கும் நிதி ஆகியவற்றை பயன்படுத்தி சிலர் குழுக்களாக வெளிநாடுகளுக்கு…
-
- 0 replies
- 256 views
-
-
சீனாவுக்கு கொழும்பு துறைமுகத் திட்டம் அதற்கு பதிலாக இந்தியாவுக்கு இலங்கைக்கான பாலம் அமைக்கும் திட்டத்தை இலஞ்சமாக அரசாங்கம் வழங்கியுள்ளது எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இதனால் இலங்கை இந்தியாவின் காலனித்துவ நாடாக மாற்றும் ஆபத்து இருப்பதாகவும் அவ்வியக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுக நகரத்திட்டம் (போர்ட் சிட்டி) அமைப்பதற்கு சீனாவுக்கு அனுமதி அளித்துள்ள அரசாங்கம், இதன் காரணமாக இந்தியாவின் அழுத்தத்திற்கு ஆட்பட்டுள்ளது. எனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைப்பதற்கான அனுமதியை அரசாங்கம் இரகசியமாக இந்தியாவிற்க…
-
- 1 reply
- 367 views
-
-
இலங்கையில் சட்டம் நீதியானதாக இல்லை குமரபுரம் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு. இலங்கையில் சட்டம் நீதியான முறையில் நடைபெறவில்லை. திருகோணமலை குமரபுரம் படுகொலைச் சம்பவம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என நல்லிணக்கத்திற்கான கருத்தறியும் செயலமர்வில் பெண்மணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். நல்லிணக்கத்திற்கான கருத்தறியும் செயலமர்வு இன்று (சனிக்கிழமை) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பெண்ணொருவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் சட்டம் நீதியான முறையில் நடைபெறவில்லை. திருகோணமலை குமரபுரம்…
-
- 0 replies
- 225 views
-
-
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கழிவு நீரானது வைத்தியசாலையின் பின்புறமாக உள்ள ஆற்றுக்குள் விடப்படுவதால் அதனைச் சுற்றியுள்ள மக்கள் மிகப்பெரும் சுகாதார சீா்கேட்டுக்கு முகம் கொடுத்துள்ளதோடு, சுற்றுப்புறச் சூழல் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என பிரதேச பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனா். மேற்படி நடவடிக்கையானது வேலியே பயிரை மேய்வது போன்றுள்ளது எனவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படுகின்ற அனைத்து நீா்க் கழிவுகளும் வைத்தியசாலைக்கு பின்புறமாக காணப்படுகின்ற கிளிநொச்சிக் குளத்திற்கு நீரை கொண்டு வருகின்ற ஆறாகவும், கனகாம்பிகை குளத்திலிருந்து வான்பாய்கின்ற நீரை வெளியேற்றுகின்ற ஆறாகவும் காணப்படுகின்ற …
-
- 0 replies
- 260 views
-
-
அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி டெல்ருக்சனின் 4 ஆண்டு நினைவு தினத்தினை நினைவு கூர்ந்தும் சிறைகளில் விடுதலைக்காக போராடிவரும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்கள்; நடைபெறவுள்ளன. அரசியல் கைதிகளை விடுதலை செய்யவதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இப் போராட்டங்கள், நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாகவும் காலை 10.30 க்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பா கவும் நடைபெறவுள்ளன. ஆட்சி மாற்றத்தின் பின்பாக பல தடவைகள் அரசியல் கைதிகள் தமது விடுதலையினை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டத்தினை நடத்த…
-
- 0 replies
- 276 views
-
-
வடக்கில் ஒரு இலட்சம் படையினர் சமாதானம் எவ்வாறு மலரும்? வடமாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான படையினர் உள்ள நிலையில், சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வடமாகாண மக்களின் காணிகள் பலவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள நிலையில், மக்களது வளங்கள், வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு வருவதாக, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியான ஜோடி கறஸ்கோ முனோஸிற்கு, முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய ஒன்றிய, நாடுகளின் சமாதானமான ஸ்தீரன நிலையை உருவாக்குவதற்கு தடையாகவுள்ள காரணிகளை ஆராய்ந்து அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள…
-
- 5 replies
- 824 views
-
-
புதிய குற்றசாட்டு இராணுவத்தினரிடம் சரணடைந்த அல்லது படையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊசி மருந்து இப்போது சமூகத்திலும், அரசியல் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. தடுப்பூசி மருந்து என்ற பெயரில் ஏற்றப்பட்ட ஊசி மருந்து காரணமாக ஒருவர் மருந்து ஏற்றப்பட்ட அன்றே உயிரிழந்ததாகவும், சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் நாளடைவின் பின்னர் தனக்கு சக்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் முன்னாள் போராளி ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார். தங்களுக்கு ஏற்றப்பட்ட ஊசி மருந்தில் இர…
-
- 0 replies
- 333 views
-
-
திருகோணமலை மாவட்டம் மொராவகன் புலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார். திருகோணமலை மொராவகன் புலத்தினைச் சேர்ந்த பேரின்பராசா தனபாலசிங்கம் (40) என்ற 4 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கடந்த 2ஆம் திகதி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவது, குறித்த போராளியான பேரின்பராசா தனபாலசிங்கம் கடந்த மாதம் 29ஆம் திகதி உந்துருளியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது சிறு விபத்துக்குள்ளாகி திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று முதலாம் திகதி வீடு வந்து சேர்ந்தார். பின்னர் 02ஆம் திகதி தலையில் விறைப்புத்தன்மையாக இருக்கின்றது எனக் கூறி மீண்டும் சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையி…
-
- 0 replies
- 317 views
-
-
தமிழ்க்கொலை ; மக்கள் விசனம் கொத்மலை நீர்ததேக்கத்திற்கு அருகிலுள்ள பெயர்ப்பலகையில் தமிழ்க்கொலையொன்று இடம் பெற்றுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த பெயர்ப்பலகையில் இடம்பெற்றுள்ள தமிழ் எழுத்துப் பிழைகளை திருத்தியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேணடுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பிரயாணிகள் கூடும் இடத்தில் இவ்வாறு எழுத்துபிழைகளுடன் பெயர்ப்பலகைகள் இருப்பது எந்தவகையில் நியாயமென மக்கள் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/9839
-
- 4 replies
- 478 views
-