ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143431 topics in this forum
-
சட்டச் சிக்கல்களுடன் அரசுக்கு எதிராக மஹிந்த தலைமையில் பாதயாத்திரை LIVE BLOG 2016-07-28 09:33:01 ஒன்றிணைந்த எதிரணியினர் அரசுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக ஒழுங்கு செய்துள்ள ஆர்பாட்டப் பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியிலுள்ள சர்வமத ஸ்தானங்களுக்கு விஜயம் செய்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர். 2016-07-28 09:08:02 நீதிமன்றங்களின் உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார். …
-
- 6 replies
- 628 views
-
-
கூட்டு எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரையின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கண்டியிலிருந்து ஆரம்பமான குறித்த பாதயாத்திரையில் கெடம்ப சந்தியில் வைத்து அரச அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதயாத்திரையில் கலந்து கொண்ட கூட்டு எதிர்க்கட்சியினர் கற்களைக் கொண்டு அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும் செய்தியாளர் கூறினார். இது தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து தெரிவிக்கையில், “ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையில் எதிர்பார்த்த அள…
-
- 0 replies
- 479 views
-
-
குமாரபுரம் கொலை வழக்கில் 6 இராணுவ வீரர்களும் விடுதலை (மூதூர் நிருபர்) மூதூர் குமாரபுரம் கிராமத்தில் 1996 ஆம் ஆண்டு 24 பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கில் குற்றஞ் சுமத்தப்பட்டிருந்த 6 இராணுவ வீரர்களும் குற்றவாளிகள் அல்லர் என அநுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று மாலை இந்த தீர்ப்பை வழங்கினார். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=18214#sthash.BCuNq373.dpuf தமிழர்கள் 26 பேர் படுகொலை சம்பவம் ; 6 இராணுவ வீரர்களும் விடுதலை திருகோணமலை - குமாரபுரம் பகுதிய…
-
- 7 replies
- 951 views
-
-
அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இது தொடர்பிலான யோசனை ஒன்றை சமர்ப்பித்து அனுமதி பெற்றுள்ளார் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அரசாங்க நிதியை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. அரச நிதியை சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தும் வகையில் சுற்றுநிருபமொன்று வெளியிடப்படவுள்ளது. குறிப்பாக உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மக்கள் பணத்தைக்கொண்டு வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்…
-
- 0 replies
- 223 views
-
-
சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களில் இருவரில், ஒருவர், நாங்கள் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார். அவர், தான் அணிந்திருந்த தலைக்கவசத்தை (ஹெல்மெட்) தூக்கிவிட்டே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டார்.என்று லசந்த விக்கிரமதுங்கவின் வாகனச் சாரதி தெரிவித்தார். சண்டே லீடர் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை, லசந்த விக்கிரமதுங்கவின் சாரதி, அடையாளங்காட்டியுள்ளார். இந்த அடையாள அணிவகுப்பு, கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது. லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவருக்கு சாரதியாக இருந்தவரே,…
-
- 0 replies
- 225 views
-
-
வழமைக்குத் திரும்பியது மாணவர் வருகை ! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் வருகை இயல்பு நிலையை அடைந்துள்ளதாக, உயர் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அப் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில், யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அப் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதுஎவ்வாறு இருப்பினும் சில நாட்களுக்கு பின்னர் கல்வி நடவடிக்கைகள் மீளவும் வழமைக்குத் திரும்பின என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 212 views
-
-
“ விவேகமுள்ள ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை கனடா அரசு வழங்கும்” ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவரது விவேகமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் (Stephane Dion) தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ (Jus…
-
- 0 replies
- 241 views
-
-
கோயில்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் மிகவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கோயில்களில் வேள்விகளின்போது ஆடுகள், கோழிகள் பலியிடப்படுவதற்கு தற்போது நீதிமன்றங்களினால் இடைக்காலத் தடை உத்தரவுகளின் அடிப்படையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவுகளை மீளப் பெறச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் கோயில்களில் பலியிடுவதற்கு ஏராளமான ஆடு மற்றும் கோழிகள் தயாராகவுள்ளன. கோயில்களில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி மிருகங்கள் பலியிடப்படுவதை நிர…
-
- 2 replies
- 274 views
-
-
நாமலை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு பேரை உடனடியாக கைதுசெய்ய கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இன்று (28) உத்தரவிட்டுள்ளார். குறித்த உத்தரவினை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு நீதவான் பிறப்பித்துள்ளார். ஹலோ கோப் நிறுவனத்தின் ரூபா 10 இலட்சத்து 125 பெறுமதியான பங்குகள் கொள்வனவு செய்தமை, குறித்த பணம் அவருக்கு எவ்வாறு கிடைத்தது தொடர்பிலான சந்தேகத்தினை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நீதிமன்றில் இன்று முன்வைத்திருந்தது. இந் நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்த நீதவான் நாமல் ராஜபக்ஷ உள்ளிட ஆறு பேரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். http://…
-
- 0 replies
- 237 views
-
-
கனடா வெளிவிவகார அமைச்சர் - த.தே.கூ சந்திப்பு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டையன், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இச்சந்திப்பு, எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (28) மாலை 05 மணியளவில் இடம்பெறவுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/178109/கனட-வ-ள-வ-வக-ர-அம-ச-சர-த-த-க-சந-த-ப-ப-#sthash.wXyX8qKK.dpuf
-
- 0 replies
- 277 views
-
-
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது உளவியல், உடல் ரீதியான பாதிப்புடைய அனைத்துச் சம்பவங்களையும் உள்ளடக்கும் - மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா (எஸ்.றொசேரியன் லெம்பேட்) மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் இங்குள்ள சிறுவர்கள் கடந்த 30 வருட கால யுத்தத்தினாலும் அதன் பின்னர் ஏற்பட்ட வறுமையின் காராணத்தினாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா தெரிவித்தார். சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் …
-
- 0 replies
- 195 views
-
-
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தலைவர்கள் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளுக்கும் நேற்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜீலை 27 திங்கட்கிழமை வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, ஜெகன், தேவன், நடேசுதாசன், சிவபாதம், சிறீக்குமார், குமார், மரியாம்பிள்ளை, குமாரகுலசிங்கம் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் 33ஆவது அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்த…
-
- 1 reply
- 355 views
-
-
நாளை யாழ். வருகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்றுமாலை கொழும்பு வந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன்,நாளையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கனேடிய வெளிவிவகார அமைச்சரை, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, வெளிவிவகாரச்செயலர் சித்ராங்கனி வாகீஸ்வரா ஆகியோர் வரவேற்றனர். இன்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரை கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார். இன்று பிற்பகல் …
-
- 1 reply
- 268 views
-
-
இந்திய அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவையின் முதலாவது கட்டம் இன்று வியாழக்கிழமை(28) ஆரம்பமாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 470 உள்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாயப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/178113/இந-த-ய-அம-ப-ய-லன-ஸ-ச-வ-ஆரம-பம-#sthash.8d6yCKm5.dpuf
-
- 0 replies
- 136 views
-
-
பிரான்சில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் இராமலிங்கம் – ஞானசேகரம் வயது – 46 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, பிரான்சில் கடந்த வாரம் பார ஊர்தி ஒன்றினால் மோதி பலரின் உயிரைப் பறித்த தாக்குதலில் அகப்பட்ட குறித்த யாழ் வாசி தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் மூளை செயல் இழந்து மரணமடைந்துள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டிற்கு சென்று தஞ்சமடைந்த நிலையில் வாழ்ந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்…
-
- 2 replies
- 730 views
-
-
இந்த நாட்டில் தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற வெலிக்கடை படுகொலையின் 33ஆவது நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மனிதப்படுகொலை என்று சொல்லும் வகையில் இந்த நாட்டில் கொலைகள் நடைபெற்றுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போக செய்யப்பட்டார்கள். சரணடைந்தவர்கள், கடத்தப்பட்டவர்கள் என இப்படி பலருக்கு என்ன நடந்தது என தெரியாதுள்ளது. ஆகவே தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது இந்த நாட்டில் எழுத…
-
- 0 replies
- 358 views
-
-
பாத யாத்திரை மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – ராஜித சேனாரட்ன பாத யாத்திரைகளின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் சிறு குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பதவியில் அமர்த்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினர் பாத யாத்திரை ஒன்றை எவ்வாறு நடத்துவது என்பது கூட தெரியாமல் இருக்கின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பாத யாத்திரை நடத்தப்பட வேண்டுமாயின் கூட்டங்களை நடாத்தவும் ஏனைய தேவைகளுக்கும் முன்கூட்டியே மைதான ஒதுக்கீட்டை …
-
- 0 replies
- 161 views
-
-
நீதிமன்ற உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது – காவல்துறை மா அதிபர் நீதிமன்ற உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையின் மூலம் இது பற்றி அறிவித்தல் விடுத்துள்ளார். பல்வேறு தரப்பினர் பாத யாத்திரை, கட்சி மேம்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த செயற்பாடுகளுக்கு தடை விதித்து கண்டி மற்றும் மாவனல்ல நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவினை பின்பற்றத் தவறும் தரப்பினர் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாத யாத்திரை மற்றும் ஏனைய அரசியல் செயற…
-
- 0 replies
- 209 views
-
-
கொழும்பு கதிரேசன் வீதியில் எழுந்தருளி இருக்கும் அன்னை காட்டு மாரியம்மன் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. குறித்த தேர் திருவிழா இன்று காலை 5.30 மணி முதல் இடம்பெற்ற விஷேட பூஜைகளின் பின்னர் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. கலை, கலாச்சாரம் நிறைந்ததாக இடம்பெற்ற இந்த தேர் திருவிழாவுக்கு வெளிநாட்டவர் ஒருவர் தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Go to Videos Colombo Kattu Mariyamman Temple Event http://www.tamilwin.com/religion/01/112317
-
- 1 reply
- 424 views
-
-
முல்லையில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் பெரும்பான்மையின அபகரிப்பால் போரால் நொந்த மக்கள் பாதிப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் பெரும்பான்மையின அபகரிப்பால் இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பல்வேறு பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முள்ளிவாயக்கால் போர் எனப்படும் ஈழத்தின் இறுதிப்போர் நடைபெற்ற இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்தும் ஆதிக்கப் போரினால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். முல்லைத்தீவு இலங்கையிலேயே பின்தங்கிய மாவட்டம் என்றும் அங்கு வசதி வாய்ப்புக்கள் எதுவுமில்லை என்றும், பெண்களின் நிலை, தொழில், கல்வி எனப் பல்வேறு விடயங்களும் மிக பின்தங்கிய நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சப…
-
- 0 replies
- 229 views
-
-
இலங்கையின் 11000 வைத்தியர்கள் லண்டனில்;இந்திய மருத்துவர்கள் இங்கு வர முடியாதா? (ரொபட் அன்டனி) இலங்கையின் வைத்தியர்கள் 11 ஆயிரம் பேர் லண்டனில் பணிபுரிகின்றனர். அப்படியாயின் ஏன் வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இலங்கையில் பணிபுரிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலளார் எழுப்பிய கேள்விக்கு பதிளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் இங்கு குறிப்பிடுகையில், இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள எட்கா உடன்படிக்கை தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைக்கி…
-
- 0 replies
- 410 views
-
-
இலங்கையில் திருவள்ளுர் சிலைகள் வைக்கப்படுவதற்கு குறித்து சிங்கள ஊடகம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. “தமிழக கவிஞரான திருவள்ளுவரின் 16 சிலைகளை இலங்கைக்கு கொண்டு வந்து நாடு முழுவதிலும் அவற்றை வைக்க எடுக்கும் முயற்சி பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது. கொழும்பு, மாத்தளை, ஹட்டன், நாவலப்பிட்டி, புத்தளம், சாவகச்சேரி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்ப, கட்டைப்பறிச்சான் ஆகிய நகரங்களில் இந்த சிலைகள் வைக்கப்பட உள்ளன. தமிழக கவிஞர் ஒருவரின் சிலைகள் இலங்கையில் வைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எனினும் இது குறித்து மக்களினதோ மாகாணசபைகளினதோ கருத்து கோரப்படவில்லை. தமிழகத்தின் விஜிபி என்ற நிறுவனமே இந்த சிலைகளை வழங்குகின்றன. இந்த சிலைகளுக்கான ச…
-
- 3 replies
- 510 views
-
-
கடந்த அரசாங்கத்தில் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பதவிவகித்த போது சட்டம், நீதி என்பன சரியான முறையில் செயற்பட்டது. எனினும் தற்போது பொலிஸார் சட்டங்களை மீறி நடந்துக்கொள்வதாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மேல்மாகாணத்தில் தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் இடம்பெறுகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறுகளும் , பல மணி நேர வாகன போக்குவரத்து தடையும் ஏற்படுவதாக குறிப்பிட்டு மனித உ…
-
- 0 replies
- 434 views
-
-
தொண்டைமானாறு உவர்நீர் தடுப்பணையின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. உலக வங்கியின் 399 மில்லியன் ரூபா நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகளை சம்பிரதாயபூர்வமாக வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று தொடங்கி வைத்தார். தொண்டைமானாறு உவர் நீரேரியில் மழைநீரைச் சேமிக்கும் நோக்கிலும், கடல்நீர் ஏரிக்குள் வராமல் தடுக்கும் நோக்கிலும் ஏற்கனவே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மடைக்கதவுகள் உருக்கினால் ஆனவை என்பதால் துருப்பிடித்து பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது 300 மில்லியன் ரூபா செலவில் துருப்பிடிக்காத கறையில் உருக்கினாலான மடைக்கதவுகளைக் கொண்டதாகத் தடுப்பணை புனரமைக்கப்பட உள்ளது. தொண்டைமானாறு ஏரியில், தடுப்பணையின் மடைக்கதவுகளை மூடி …
-
- 0 replies
- 355 views
-
-
நீர்ப்பாசன விடயங்களில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை (ரொபட் அன்டனி) நீரியல் மற்றும் நீர்ப்பாசன விடயங்களில் மாகாண சபைகளுக்கு எவ்விதமான அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனவே நீரியல் மற்றும் நீர்ப்பாசன பிரிவுகள் எப்போதும் மத்திய அரசாங்கத்திடமே காணப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனராட்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலளார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதா…
-
- 0 replies
- 239 views
-