Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிகம் பயணிக்கவேண்டும் இலங்கை-பிரிட்டன் வலியுறுத்து இலங்கையின் மனித உரிமைகள் நிலையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, அந்த நாடு இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தினால் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ள, மனித உரிமைகள் முன்னுரிமை பற்றிய நாடுகளின் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில்,…

  2. மத்திய அரசின் கையாட்களாக இயங்கமுடியாது : சி.வி. மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாகாண அரசாங்கம் இயங்கமுடியாது என உலக வங்கியின் அலுவலர்களிடம் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு மனோநிலை இல்லையாயின் பணியை சரிவர முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் அலுவலர்களான பீற்றர் டி எலிஸ், ஜெசிக்கா ரசல் ஸ்மிற், யென் மற்றும் நெல்சிப் திட்ட அலுவலர் சின்னத்தம்பி மனோகரன் ஆகியோர் வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இக் கலந்துரையாடல் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கை…

  3. பல்கலைக்கழக சம்பவம்: சிங்கள மாணவர்கள் மத்தியில் பாரிய அச்சம் நீண்டகால குழப்பங்களின் பின்னர் நாட்டில் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. பலமான நல்லிணக்க பயணத்தை உருவாக்க எடுக்கும் முயற்சிகளை தமிழ்,சிங்கள இனவாதிகள் தடுக்கக்கூடாது என்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல் குரே தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக சம்பவத்தை அடுத்து சிங்கள மாணவர்கள் மத்தியில் பாரிய அச்சம் நிலவுகின்றது. மாணவர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். வடமாகாண ஆளுனர் ரெஜினோல் குரே கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர…

  4. கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி போராட்டம்: கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் எமது நிலம் எமக்கு வேண்டும் எனும் கோரிக்கையுடன் ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை 22-07-2016 ஜனநாயகத்திற்கான வடக் இளைஞர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலை வவுனியாவிலும்,ஓமந்தையிலும்,மதியம் கிளிநொச்சி இரனைமடு படை முகாமிலும், பரவிபாஞ்சான் பிரதேசத்திலும் மாலை வலி வடக்கிலும் குறித்த போராட்டம் நடத்தபட்டுள்ளது. காணிப்பிரச்சனையில் அரசியல் நாடகம் வேண்டாம் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணியை உடனடியாக…

    • 2 replies
    • 378 views
  5. தமிழர் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை நினைவு நாள்! [Saturday 2016-07-23 09:00] கொழும்பில் தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கிய, தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திய, கறுப்புஜூலை நினைவு நாள் இன்றாகும். பல வரலாற்றுத் துன்பங்களை சுமந்து வந்துள்ள ஜூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. 33 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய நாளில் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித் தாக்குதல் நடத்தப்பட்டது. 1983இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அ…

    • 0 replies
    • 451 views
  6. சூரியவெவ பிரதேசத்தில் சிறுநீர், இரத்தமாதிரிகளை பரிசோதித்த 35 வயதுடைய ஆண் நபர் ஒருவருக்கு கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவ அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தனியார் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், அதன் அறிக்கையினை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மருத்துவ அறிக்கையில் அவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தால் அவர் அதிர்ச்சியுடன், வெட்கமும் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பிரதேசத்தில் இவ்வாறு பலருக்கு தவறான மருத்துவ அறிக்கைகள் வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளிகள் பலரும் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக பொது மக்கள் குற்றம்…

  7. குமாரபுரம் படுகொலைகள்: சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரிக்கை inShare திருகோணமலை – மூதூர், குமாரபுரம் கிராமத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் 26 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் 6 உறுப்பினர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறு அரசாங்கத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி சுதர்சன டீ சில்வா இன்று வட மத்திய மாகாண மேல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கின் சாட்சியங்களுக்கு ஏற்ப முன்னாள் இராணுவ உறுப்பினர்களே இந்தக் கொலைகளை மேற்கொண்டமைக்கான நியாயமான சாட்சியங்கள் சந்தேகமின்றி உறுதிப்படுத்தப்பட்ட…

  8. தெற்கிலே சிங்களம் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்பட்டால் அதற்கு பதிலடியாக வடக்கில் தமிழ் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்படும். அதேபோல் வடக்கில் தமிழ் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்பட்டால் அதற்கு பதிலடியாக தெற்கில் சிங்களம் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்படும். யாழ் பல்கலைக்கழக சம்பவத்தை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும். அது முழு நாட்டுக்கும் தந்து இருக்கும் செய்தி இதுதான். தென்னிலங்கையில் உள்ள பல்கலைக்கழக மாணவர் மற்றும் பேராசிரியர் சமூகத்துக்கு ஒரு யோசனை சொல்ல விரும்புகிறேன். முடியுமானால், இங்கே உங்கள் பீடங்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதிலே நாதஸ்வரம், மேளதாளம், பரதநாட்டியம் என்ற தமிழ் கலாச்சார அடையாளங்களை உள்வாங்கி, நீங்கள் …

  9. நாடு எத்தனை பிளவுகளை சந்திக்கப் போகின்றது என்பதினை கூடிய விரைவிலேயே அறியமுடியுமானதாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்ரம தெிரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வாரத்தின் மூன்றாவது நாள் அமர்வு இன்று இடம் பெற்றது இதில் உரையாற்றும் போதே இவர் இதனை தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்துகையில், ஆளும் கட்சியில் உள்ளவர்கள் எவருமே நிதி மோசடி விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்படவில்லை, அவர்கள் குற்றம் செய்தாலும் அவை தொடர்பில் விசாரணைகள் இடம் பெறுவதில்லை. ஊழல் செய்தாலும் செய்யாவிட்டாலும் ஆட்சியை எதிர்ப்பவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆளும் பலத்தில் செய்யப்படும் செயல்களே இவை. அண்மையில் இடம் பெற்ற நாமலின் கைதானது இதனை …

  10. மாகாண அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் எடுபிடியாக இருக்க முடியாது. இரு அரசாங்கங்கள் இடையிலும் புரிந்துணர்வு உண்டாக வேண்டும். புரிந்துணர்வு இல்லையாயின் நாம் சரியாக செயற்பட முடியாது என வட மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் அதிகாரிகள் குழு ஒன்று இன்றைய தினம் யாழ். குடாநாட்டுக்கான விஐயம் ஒன்றினை மேற்கொண்டு இருந்தது. இந்நிலையில் குறித்த குழு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இன்றைய தினம் காலை 11 மணியளவில் முதலமைச்சரை கைதடியில் உள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்த மேற்படி உலக வங்கியின் அதிகாரிகளான பீற்றர் டி எலிஸ், ஜெசிக்கா ரசல் ஸ்மிற், யென் மற்றும் நெல்சிப் திட…

    • 0 replies
    • 236 views
  11. யாழ்.பல்கலைகழக மோதல் சம்பவத்தை தொடர்ந்து பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினர் இன்று யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்துள்ளதுடன், துணைவேந்தர், பீடாதிபதிகள், மற்றும் விரிவுரையாளர்களை சந்தித்துக் கலந்துரையாடினர். இன்று காலை பல்கலைக்கழத்திற்கு விஜயம் செய்த ஆணைக்குழுவினர், பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், 10 பீடங்களினதும், பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களை சந்தித்து மாலை 4 மணி வரையில் கலந்துரையாடல்கள் நடத்தினர். இந்த கலந்துரையாடல்களின் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து தமது விஜயம் குறித்து தெளிவுபடுத்தினர். இதன்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சார்பில் கலந்து கொண்டிருந்த…

    • 0 replies
    • 257 views
  12. வடமாகாண பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சுடன் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியில் 13 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பனைசார் கைப்பணிப்பொருட்கள் மற்றும் பனை உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இக்கண்காட்சி தினமும் காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இடம்பெறவுள்ளது. கண்காட்சியில் பனை…

    • 0 replies
    • 400 views
  13. வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதி களின் வீதிகள் மற்றும் நிலங்களைப்பொலிஸார் அடாத்தாகப் பிடிக்க முடியாது. இது தொடர்பில் உரியவர்களின்கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வலி. வடக்கில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அண்மையில் விடுவிக்கப்பட்டபகுதிகளில் உள்ள மக்கள் பயன்பாட்டு வீதிகள் உள்ளிட்ட சில இடங்களைப் பொலிஸார்மீண்டும் அடாத்தாகக் கையகப்படுத்தியுள்ளனர் என குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பில் யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்ததாவது:- வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளை பொலிஸார் அடாத்தாககையகப்படுத்துகின்றனர் என்று மக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். …

    • 0 replies
    • 278 views
  14. சீனி களஞ்சியசாலையில் 274 கிலோ கொகேயின் மீட்பு பேலியகொடை பகுதியில் உள்ள சீனி களஞ்சியசாலை ஒன்றிலிருந்து 274 கிலோ கொகேயின் மீட்கப்பட்டுள்ளது. பேலியகொடை நுகே வீதியில் அமைந்துள்ள சீனி களஞ்சியசாலையின் சீனி கொள்கலன் ஒன்றிலிருந்தே மேற்படி கொகேயின் மீட்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினருடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இணைந்தே மேற்படி சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். மீட்கப்பட்ட கொகேயின் பெறுமதி இதுவரை மதிப்பிடவில்லை என தெரிவிக்கும் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். இலங்கையில் மீட்கப்பட்ட அதிக தொகை கொகேயின் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதற…

    • 2 replies
    • 393 views
  15. மத்தல விமான நிலையம், மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில் உள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். அம்பாந்தோட்டையைச் சேர்ந்த ஐதேக மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பிராந்திய அரசியல்வாதிகளே சிறிலங்கா பிரதமரிடம், மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். ஆனால் அதற்கு மகிந்த ராஜபக்ச உடன்படவில்லை என்று நாடாளுமன்ற வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம், அம்பாந்தோட்டை ருகுணு மாகம்புர ராஜபக்ச துறைமுகம் ஆகிய பெயர்களில் இருந்து. ராஜபக்சவின…

    • 2 replies
    • 477 views
  16. கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் மேற்படி சிறுமியும் இளைஞனும் காதலித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 19ஆம் திகதியன்று, கொடிகாமம் பகுதிக்குச் சென்றுள்ள மேற்படி இளைஞன், குறித்த சிறுமியை தன்னுடன் அழைத்துக்கொண்டு கிளிநொச்சிக்கு சென்றுள்ளார். இது தொடர்பில், சிறுமியின் தாயாரினால், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த சிறுமியை, மறுதினமே அழைத்துவந்துள்ள மேற்படி இளைஞன், அவரை கொடிகாமத்தில் விட்ட…

  17. ஜனாதிபதியை, பிரதமரை நம்ப முடியாவிட்டால் எதையும் நாங்கள் அடைய முடியாது – இரா.சம்பந்தன் inShare தமிழினத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி சபாநாயகருமான காலஞ்சென்ற மு.சிவசிதம்பரத்தின் 93 ஆவது ஜனன தினம் இன்றாகும். காலஞ்சென்ற மு.சிவசிதம்பரத்தின் ஜனன தினத்தை முன்னிட்டு யாழ். வடமராட்சி – நெல்லியடியில் நேற்று மாலை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் …

    • 5 replies
    • 440 views
  18. இலங்கையின் வெளியுறவுக்கொள்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சர்வதேசத்திடம் இருந்து பெறும் அனைத்து நன்மைகளையும் எமது மக்களுக்கு வழங்குவதே எமது நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போர்த்துக்கல், அயர்லாந்து, மெக்சிக்கோ மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு நேற்று கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. அங்கு ஜனாதிபதி ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும், நாட்டிலிருந்து வறுமையை ஒழிப்பதும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதுமே இலங்கையின் கொள்கை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதுவே நாட்டில்…

  19. இரண்டாம் இணைப்பு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்கவேண்டுமாயின் முதலில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என தான் கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். அப்படி செய்தால், ரணில் விக்ரமசிங்கவும் ஆலோசகர் பதவியை வழங்கி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட ரணில் விக்ரமசிங்கவுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் கீதா குமாரசிங்க மேலும் கூறியுள்ளார். முதலாம் இணைப்பு அனைவரையும் விட பிரதமருக்கு என்மீது தனி விருப்பம்…

  20. கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் உந்துருளி விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த கதிரவேலு கபிராஜ்(26) என்ற ஒரு பிள்ளையின் தந்தையும் மாவத்தகமவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் பீசீ கரம்பொல என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இறந்துள்ளனர். இறந்த பொலிஸாரது சடலம், கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய கதிரவேலு கபிராஜ் என்பவரை விபத்து நடைபெற்ற இரவு 1.30 மணியளவில் காணவில்லை என்று தேடியபோது விப…

  21. படைச்சிப்பாயின் தாக்குதலுக்குள்ளான தந்தையும்,மகனும் வைத்தியசாலையில் கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் விடுமுறையில் வந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான நிலையில் அதே இடத்தைச்சோ்ந்த தந்தையும்,மகனும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பில் மேலும் தொியவருவதாவது கடந்த 20-07-2016 அன்று இரவு எட்டு மணியளவில் முழங்காவில் விஜி வீதியைச்சோ்ந்த செல்லத்துரை துரைசிங்கம் என்பவரும், அவரின் மகன் கௌதமன் வயது 23 என்வருமே தாக்கப்பட்டு முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசைப் பெற்று வருகின்றனா். குறித்த இராணுவச் சிப்பாய் தமிழ் இளைஞன் எனவ…

    • 1 reply
    • 261 views
  22. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை ரத்து செய்யப்படும் என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு மிக் விமானங்கள் நான்கு கொள்வனவு செய்யப்பட்ட சம்பவம் குறித்து சரியான முறையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால், கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை ரத்துச் செய்யப்படலாம் என அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய தற்போது வரையில் மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மிக் தாக்குதல் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தப்பட்ட மூல ஆவணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  23. எல்லா இனங்களின் கலாச்சாரங்களையும் கலந்த தேசிய கலாச்சாரம் ஏற்பட வேண்டும் July 22, 2016 03:19 pm தெற்கிலே சிங்களம் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்பட்டால் அதற்கு பதிலடியாக வடக்கில் தமிழ் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்படும். அதேபோல் வடக்கில் தமிழ் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்பட்டால் அதற்கு பதிலடியாக தெற்கில் சிங்களம் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்படும். யாழ் பல்கலைக்கழக சம்பவத்தை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும். அது முழு நாட்டுக்கும் தந்து இருக்கும் செய்தி இதுதான். தென்னிலங்கையில் உள்ள பல்கலைக்கழக மாணவர் மற்றும் பேராசிரியர் சமூகத்துக்கு ஒரு யோசனை சொல்ல விரும்புகிறேன். முடியுமானால், இங்கே உங்கள் பீடங்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து…

  24. நாடாளுமன்ற உறுப்பினர் தரப்படுத்தல் முதலிடத்தில் அநுரகுமார நாடாளுமன்ற உறுப்பினர்களை தரப்படுத்தும் தர வரிசையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க முதலிடம் பெற்றுள்ளார். குறித்த தரப்படுத்தலை இணையத்தளம் ஒன்று மேற்கொண்டுள்ளது.அத்துடன் குறித்த இணையத்தளம் தெரிவு செய்துள்ள 10 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தரப்படுத்தல் வரிசையில், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி…

  25. யாழ். அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. வடக்கில் தற்போதும் அதிகளவான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இந்நிலையில், இன்றைய தேர் திருவிழாவின் போது ஆலயத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வருகை தந்திருந்தனர். இவ்வாறு வருகை தந்த இராணுவத்தினர் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், பக்தர்களுடன் இணைந்து வடம் பிடித்து தேரும் இழுத்துள்ளனர். தமது மேலாடைகளை கலைந்து விட்டு, தமது காலணிகளை கழட்டி விட்டு பக்தர்களுடன் இணைந்து இராணுவத்தினர் தேரினை இழுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/festival/01/111370

    • 19 replies
    • 3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.