ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143436 topics in this forum
-
ஜனாதிபதியை மதிக்காத மங்கள பதவி விலகவேண்டும்!. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தை சவாலுக்கு உட்படுத்திய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலக வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். நடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவோ, அல்லது அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி ஒன்றை வகிக்கவோ தகுதியற்றவர் எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கருத்தை மறுதலிக்கும் வகையில் யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள…
-
- 2 replies
- 347 views
-
-
வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும். இதற்கு வன்னி மாவட்ட கூட்டமைப்பினர், ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வன்னி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், வட பகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் அதனை வவுனியாவின் தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என கடந்த பல மாதங்களாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசாங்கம் ஓமந்தையில் அமைக்க ஆரம்பத்தில் மறுத்திருந்த போதும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யும் இடத்தில் அமைக்க உறுதி மொழி வழங்கியுள்ளது. இந…
-
- 11 replies
- 657 views
-
-
போர் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைன் இலங்கை அரசுக்கு ஒன்பது மாத கால அவகாசம் வழங்கியுள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பயன்படுத்திய 5 சர்வதேச நீதிபதிகளே கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்துவதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடும் அழுத்தங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒன்பது மாதங்களில் இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தி அதில் எப்படி வழக்கு விசாரணைகள் நடத்தப்படுகிறது என்பதை கண்காணிக்க உள்ள மனித உரிமை ஆணையாளர், அது குறித்த முழுமையான அறிக்கை ஒன்றை 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் சமர்பிக்க உள்ளார். …
-
- 0 replies
- 178 views
-
-
இராணுவத்தினர் சுட்டனர்; கிளிவெட்டி படுகொலை வழக்கில் சாட்சியம் பொன் ஆனந்தம் 'தனலெட்சுமி என்பவரும் நானும் கிளிவெட்டிக்கு ரியூசனுக்கு சென்றுகொண்டிருந்தபோது, இராணுவத்தினர் சுட்டுக்கொண்டே வீதியால் வந்தார்கள். இதன்போது, அருகில் இருந்த முத்து அண்ணனின் கடைக்குள் சென்று நான் ஒழிந்தேன். என்னோட வந்த தனெலெட்சுமியும்; மேலும் பலரும் சுடப்பட்டு இறந்ததை நான் நான் பின்னரே அறிந்தேன்' என ஜோசப் மோசஸ் அன்ரனி (வயது 30) என்பவர் சாட்சியமளித்தார். திருகோணமலை, கிளிவெட்டிப் பிரதேசத்தில் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதியன்று பொதுமக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசார…
-
- 2 replies
- 213 views
-
-
7 அரச வாகனங்களை ராவனா பலயவிற்கு வழங்கிய விமல் : விசாரணைகளில் அம்பலம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, கட்டுமான மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சராக இருந்த காலத்தில், ராவனா பலய அமைப்பிற்கு 7 அரசாங்க வாகனங்களை வழங்கியுள்ளதாக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை பொறியியலாளர் திணைக்களத்தின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட வாகனங்களில் 7 வாகனங்களையே இவ்வாறு ராவனா பலயவிற்கு விமல் வீரவன்ச வழங்கியுள்ளார். குறித்த வாகனங்களை பெற்று கொண்ட ராவனா பலயவின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில்…
-
- 0 replies
- 257 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கோணாவில் காந்தி கிராமத்தில் மக்களது குடியிருப்புக் காணிகள், வயல் காணிகளில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலரால் சட்டவிரோத மண் அகழ்வு வியாபாரம் தொர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இச்சட்டவிரோத மண் அகழ்வு குறித்து காந்தி கிராமம் மக்களும் காந்தி கிராமம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையம் மற்றும் அக்கராயன் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டபோதும் இப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் சட்டவிரோத மண் அகழ்பவர்கள் இவ்விடயம் பற்றி எடுத்துக் கூறி இது பிழை, சட்டவிரோதமானது என கதைப்பவர்களை தமக்கு உயர் மட்டச் செல்வாக்கு இருப்பதாகக…
-
- 0 replies
- 339 views
-
-
இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள வல்வை அராலி வீதியில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டு நேற்று முதல் மக்களுடைய பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கட்டுவன் சந்திவரை செல்லும் சுமார் 600 மீற்றர் வரையான வீதியே இதன் போது விடுவிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து அண்மையில் 101.3 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு கையளிக்கப்பட்ட பகுதிகளில் வல்வை அராலி வீதியும் மக்களுடைய பாவனைக்காக திறந்து விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அப்பகுதியில் உள்ள படைமுகாம் காரணமாக குறித்த வீதியினை முழுமையாக விடுவதற்கு இராணுவத்தினர் மறுப்புத…
-
- 0 replies
- 285 views
-
-
கண்டியில் தலாய்லாமா குறித்த கண்காட்சி அதிருப்தியில் சீனா. சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை பயணத்துக்கு முன்னதாக, கடந்த புதன்கிழமை தலாய்லாமா தொடர்பான ஒளிப்படக் கண்காட்சி ஒன்று கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியின் இலங்கை பயணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக கண்டியில் தலாய்லாமா தொடர்பான ஒளிப்பட கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டமை தொடர்பாக சீனா ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 158 views
-
-
ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக வழக்குத் தொடர இலங்கைப் புத்திஜீவிகள் சிலர் ஆயத்தமாகி வருகின்றனர். மனித உரிமைப் பிரகடனங்களை மீறி இலங்கைக்கு எதிராக பரிந்துரைகளை முன்வைத்துள்ளார் என சயிட் அல் ஹூசெய்ன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இலங்கை தொடர்பில் செய்துள்ள 38 பரிந்துரைகளில்; 35 பரிந்துரைகள் மனித உரிமை துறைசார் விடயங்களுக்குப் புறம்பானது என இந்த புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் ஐக்கிய நாடுகள் மனித …
-
- 0 replies
- 302 views
-
-
யுத்தக்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவதை அவரது தனிப்பட்ட கருத்து என ஒதுக்கிவிட முடியாது. வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அவருக்கு மட்டுமே இருக்கும் நிலையில் இந்த விடயத்தில் "ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் கருத்துக்களில் பயனில்லை. கலந்துரையாடல் மூலமே இறுதி முடிவு எட்டப்படும்'' என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் கருத்தில் மாற்றம் ஏற்படாமல் யுத்தக்குற்ற விசாரணைகள் இடம்பெறுவது சாத்தியமானது அல்ல என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசமைப்பின் அடிப்படையில் பன்னாட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கான நியமன அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்…
-
- 2 replies
- 458 views
-
-
யுத்தக்குற்ற விசாரணையின் போது ஹைபிரட் என்ற கலப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கான உரிய காரணங்களை சமர்ப்பித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஷபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நீதிபதிகள், கலப்பு நீதிமன்றத்தில் பங்கேற்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் பேரவையின் தீர்மானம் இலங்கையின் நீதித்துறைக்கு ஏற்புடைய ஒன்றல்ல. அத்துடன், இலங்கையின் இறையாண்மை மற்றும் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் அதனை நடைமுறைப்படுத்த முடியாது. குறித்த விடயத்தினை, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை …
-
- 0 replies
- 246 views
-
-
மாவை தலைமையிலான குழுவினர் இன்று ஓமந்தை விஜயம் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து ஆராய்வதற்காக கூட்டத்தில் ஓமந்தை பிரதேசம் உகந்ததென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழகக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை குறித்த பகுதிக்கு நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவை சேனாதிராஜா எம்.பி.வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனும் இவ்விடயம் குறித்து கலந்தாலோசித்து இறுதி முடிவும் அறிவிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் தீர்மானி…
-
- 0 replies
- 193 views
-
-
ஹெரோய்ன் கடத்தல் : மாலைதீவு பிரஜைகள் கைது இலங்கை ஊடாக, பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவுகளுக்கு இடையில் ஹெரோய்ன் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களை, தெஹிவளை பகுதியில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மாலைத்தீவு பிரஜைகள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவ்விருவரும், கொழும்பை மையப்படுத்தியே இந்த ஹெரோய்ன் வர்த்தகத்தை மேற்கொண்டுவந்ததாக அறியமுடிகின்றது. சந்தேக நபர்களிடமிருந்து 385கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது. மருந்து குளிசைகள் போலவே, ஹெரோய்னை இவ்விருவரும் வைத்திருந்துள்ளனர். அவ்விருவரையும் தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸ் ப…
-
- 0 replies
- 169 views
-
-
இறுதிப்போரில் கொத்துக் குண்டுகளை இராணுவம் பயன்படுத்தவில்லை என்கிறார் பொன்சேகா இறுதிப்போரின்போது இராணுவம் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இறுதிக்கட்டச் சமரின்போது இலங்கை இராணுவம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்பட ஆதாரத்துடன் சர்வதேச ஊடகமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. கொத்துக்குண்டு பயன்படுத்தப்பட்தப்பட்டுள்ளது என முன்வைக…
-
- 0 replies
- 219 views
-
-
இலங்கையில் பாரிய முதலீடுகளை தொடர்ந்தும் மேற்கொள்ளும் சீனா இலங்கையில் பெரியளவிலான உட்கட்டமைப்பு மற்றும் தனியார் முதலீடுகளை சீனா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், இலங்கையுடன் விரைவில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, நேற்றுமாலை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர், நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். ‘வரலாற்று ரீதியாக எமக்கிடையில் உள்ள உறவு, எமது ஆழமான தொடர்புகளையும் வலுவான அரசியல் அடித்தளத்தையும…
-
- 0 replies
- 332 views
-
-
வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் பற்றிய சர்ச்சை - ஓமந்தையில் அமைவதே பொருத்தமானது:- வ.ஐ.ச. ஜெயபாலன்:- வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் பற்றிய சர்ச்சை - ஓமந்தையில் அமைவதே பொருத்தமானது: வ.ஐ.ச. ஜெயபாலன் வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைவதே பொருத்தமானது என்று ஈழக் கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலன் கூறுகிறார். வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் பற்றிய சர்ச்சை குறித்து தனது முகநூலில் பதிவிட்ட கருத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது குறிப்பு. 1977 இனக்கலவரம் வரைக்கும் யாழ்பாணம் மாவட்ட சந்தைகளுக்கு நேரடியாகவே சிங்களப் பகுதிகளில் இருந்து லொறிகளில் பொருட்கள் தங்கு தடையின்றி வந்தன. 1977க்கு பின் சந்தை …
-
- 1 reply
- 388 views
-
-
யாழில் தொழில் அலுவலகம் அங்குரார்பணம் -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் தொழில் அலுவலகத்தின் புதிய அலுவலக அங்குரார்பண நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை (08), யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, சிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர். - See more at: http://www.tamilmirror.lk/176563/ய-ழ…
-
- 1 reply
- 384 views
-
-
சர்வதேச நீதிமன்றங்களை அனுமதியேன்: ஜனாதிபதி தான் ஜனாதிபதியாக இருக்கும் வரையிலும், இலங்கை விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றங்கள் அல்லது நிறுவனங்களை தலையிடுவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாணந்துரையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/176567/சர-வத-ச-ந-த-மன-றங-கள-அன-மத-ய-ன-ஜன-த-பத-#sthash.nTJd2uul.dpuf
-
- 1 reply
- 261 views
-
-
கஞ்சாவினால் யாழ்ப்பாணத்துக்கு சிக்கல் -சொர்ணகுமார் சொரூபன் 'யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கஞ்சா மீட்புக்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடுவதனூடாக, யாழ். மாவட்டத்தின் மீதான வெளிச்சமூகத்தின் பார்வை மாற்றமடைந்து எமது சமூக கலாசாரம் மழுங்கடிக்கப்படுகிறது' என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் சமூக பாதுகாப்பு குழுக்கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (08), யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'யாழ். மாவட்டத்துக்கென ஒரு கலாசாரம் உள்ளது. அதை இல்லாமல் செய்யும் வகையில்,…
-
- 0 replies
- 202 views
-
-
முல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை முற்று முழுதாக சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டன எனவும், தமிழ் மக்களும், கிராம சேவை அலுவலகர்களும் அந்த கிராமத்திற்குள் நுழைவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை எனவும் முல்லைத்தீவு மீனவ அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கை இராணுவமும், அதற்குத் துணைபோகின்ற அதிகாரிகளும் நாயாறு கிராமத்தை முற்று முழுதாக சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையை பூர்த்திசெய்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, முகத்துவாரம் கிராமத்தை தமிழ் மக்களிடமிருந்து கைப்பற்றிய பின்னரே நாயாறு கிராமத்தை சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. இப்பகுதியில் 299 சி…
-
- 2 replies
- 669 views
-
-
போரின் போது இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அரச படையினரை பலி கொடுக்க சிலர் முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். மொறட்டுவை ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்தார். ”புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதம் ஓரங்கட்டப்படலாம் என்ற அச்சம் எம்மத்தியில் எழுந்துள்ளது. இந்த அச்சம் அனைத்து பௌத்த மக்கள் மத்தியிலும் நிலவுகின்றது. இந்த நிலைமையை புரிந்துகொண்டு அவ்வாறான நிலமை எற்படுவதைத் தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று நாம் நம்புகின்றோம். அரசாங்கம் மேற்கொள்ளும் அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் அனைவரும் உன்னிப்…
-
- 1 reply
- 331 views
-
-
சமஷ்டி முறையிலான அரசியலமைப்பையே வடக்கு மக்கள் கோரி நிற்கின்றனர் இணைந்த வடக்குக் கிழக்கில் சமஸ்டி முறையிலான அரசியலமைப்பு மாற்றத்தினையே வட மாகாண மக்கள் கோரி நிற்கின்றனர், என அம் மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா ஆகியோரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சார்பில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தற் குழுவின் முன் பிரசன்னமாகியிருந்த வேளையே அவர்கள் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளனர். விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாக அவரின் சார்பில் கல்வி அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் அக் குழு முன் ஆஜராகி, மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியலம…
-
- 2 replies
- 520 views
-
-
பௌத்த சமயத்திற்கு ஏற்படும் அழுத்தங்களுக்கு எதிராக பாணந்துறை கொள்கை போன்ற வாத விவாதங்களுக்கு தயார் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி்ல் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பன்றி ஒற்றன் அண்மையில் எமக்கு விடுத்த கொலை அச்சுறுத்தல் பேச்சு காரணமாக மிகவும் சிறந்த வழி உருவாகியுள்ளது. அங்காங்கே இருந்து கொண்ட திருட்டு கல்லை பொறுக்கி கண்ணாடி மாளிகைகளுக்கு கல்லெறியாமல், எந்த இடமாக இருந்தாலும் எம்முடன் விவாதத்திற்கு வருமாறு அழைக்கின்றோம். இலங்கையில் முடியாது என்றால் சவூதி அரேபியாவின் மதினா, நபிகள் நாயகத்தின் கல்லறை அருகில் எந்த இடமாக இருந்தாலும் நாங்கள…
-
- 1 reply
- 325 views
-
-
பிரிட்டன் தொடர்பான ஐ.நாவின் மௌனம், பாய்ந்து விழுகிறார் கோட்டா பிரிட்டனின் ஈராக் மீதான போர் குறித்த சில்கொட் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மௌனம் காத்து வருவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களும் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்து, சர்வதேச மட்டத்திலான விசாரணைகளை வலியுறுத்திவரும் ஐக்கிய நாடுகள் சபைக்கும், அதன் கிளை நிறுவனமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் இலங்கை மீதான அழுத்தத்தை திணிக்க எவ்…
-
- 1 reply
- 324 views
-
-
தாதியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு மேல் நீதிமன்றம் தடையுத்தரவு -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவு தாதியர்கள்; இன்று வெள்ளிக்கிழமை (08) மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்ததோடு இது தொடர்பில் ஆட்சேபனை கோரிக்கைகளை முன்வைக்கவும் தாதியர் சங்கத்துக்கு கால அவகாசமும் வழங்கியுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சைப்பகுதிக்கு பொறுப்பான தாதி விடயத்தில் வைத்தியசாலை நிர்வாகம் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள யாழ். அரச தாதி உத்தியோத்தர் சங்கம் இன்று (08) காலை 7 மணி தொட…
-
- 0 replies
- 143 views
-