Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்துக்களின் புனித பூமியாக விளங்கும் வடக்கில் இந்து ஆலயத்தை உடைத்து அழித்து பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளமையை சர்வதேச இந்து மத குருபீடத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம் என சர்வதேச இந்து மத குரு பீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக லங்காசிறி 24 சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலே மேற்கொண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு மனிதனும் தங்களின் மதங்களுக்குரிய ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டுவருகின்றமை வழமையான பண்டுதொட்டு வருகின்றது. அந்தவகையில் மதங்களுக்குள்ளே முரண்பாடான கருத்துக்களை மக்கள் மத்தியிலே திணிக்கின்றவகையிலே இன்…

  2. வட பகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் நிர்மாணிப்பதா? தாண்டிக்குளத்தில் அமைப்பதா? என்ற பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு வடக்கு மாகாண சபை எக்காலத்திலும் ஒன்றுபட்ட முடிவை எடுக்க கூடாது என்பதை உறுதி செய்துள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்துடையது என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஏலவே கூறியுள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் தெளிவாக முன்வைத்திருந்தார். இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்ற முடிவை எடுப்பதற்காக மேற்குறித்த விவகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரிடம் செல்கிறது. இந்த இட…

    • 0 replies
    • 369 views
  3. கடந்த திங்கட் கிழமை இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் மீன்பிடிப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முகமாக, இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்க சிறீலங்கா அரசாங்கம் பரிந்துரைசெய்துள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை இலங்கை இந்திய மீனவர் நலன் பேணல் மன்றத்தின் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆலோசகர் எஸ்.பீ.அந்தோனிமுத்து உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு வட மாகாண மீனவர்கள் எதிர்புத் தெரிவித்துள்ளனர். குறித்த இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனையானது நீண்டகாலமாக தமிழ் நாட்டுத் தமிழ் மீனவர்களுக்கும் வடக்குக் கிழக்கு தமிழ் மீனவர்களுக்குமான பிரச்சனையே அன்றி சிங்கள மீனவர்களுக்கான பிரச்சனையல்ல. இதில் இலங்…

    • 0 replies
    • 339 views
  4. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து இன்று ஸ்கேன் பரிசோதனைக்காக சென்ற கற்பிணித்தாய்மார்கள் பலரை பத்துமணித்தியாலங்கள் காத்திருக்க வைத்து திருப்பியனுப்பிய கொடுமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, மாவடிவேம்பு, செங்கலடி, கொக்கட்டிச்சோலை, மங்கிகாடு, வந்தாறுமூலை, இலுப்படிச்சேனை போன்ற பல பிரதேசங்களில் இருந்து அந்தந்த சுகாதார வைத்திய அதிகாரிகளினால் ஸ்கான் பரிசோதனைக்காக இன்றைய தினம் அனுப்பிவைக்கப்பட்ட சுமார் 30 இற்கும் மேற்பட்ட கற்பிணித்தாய்மார்களை காலை 6 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை காத்திருக்கச் செய்துவிட்டு வைத்தியர் வரவில்லை என கூறி திருப்பி அனுப்பியுள்…

    • 1 reply
    • 170 views
  5. போரின் இறுதிக்கட்டத்தில் அரச படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறிவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இன்று முன்னிலையான போது மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சட்ட நிபுணர் மனோரி முத்தெட்டுவ தலைமையிலான விசேட செயலணி,…

  6. யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளிலும் தமிழீழ விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. கரும்புலிகள் தினத்தை முன்னிட்டே இந்த சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருக்கின்றன. தமிழீழ மக்கள் படை என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதி, விரிவுரை மண்டபங்கள், பரீட்சை மண்டபங்கள், மலசலகூடங்கள் உட்பட பல்கலைக்கழகத்தின் பல இடங்களில் இன்று காணப்பட்டன. 'தமிழீழ மக்களுக்கு வணக்கம்' என்று ஆரம்பிக்கும் இந்த சுவரொட்டியில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் மற்றும் தமிழினப் படுகொலை தொடர்பிலும் பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அதேவேளை கரும்புலிகள் தினம் குறித்தும் இதில் வ…

  7. 17 தமிழக மீனவர்கள் கைது இலங்கை, கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 17 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் – பருத்துத்துறை கடற்பரப்பில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதோடு, நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் http://onlineuthayan.com/news/14668

    • 1 reply
    • 166 views
  8. அஸாத் சாலிக்கு எதிராக பொதுபல சேனா பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து, மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலிக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது. இந்த முறைப்பாடு இன்று காலை 10 மணியளவில் பொலிஸ் தலைமைக்கு காரியாலயத்தில் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகேயினால் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்கள்; http://www.dailyceylon.com/89079

    • 0 replies
    • 208 views
  9.  பிரதியமைச்சர் தெவரப்பெரும கைது உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/176325/ப-ரத-யம-ச-சர-த-வரப-ப-ர-ம-க-த-#sthash.3463pTfl.dpuf

  10. மூவின மக்களும் தரிசிக்கும் புனித பூமியான கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடம்பெறும் உற்சவ நிகழ்வுகள் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. கதிர்காமம் உற்சவத்தினை முன்னிட்டு, யால காட்டினூடாக 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் அடியார்கள் பக்தி பூர்வமாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்கின்றனர். ஆலய கொடியேற்றல் நிகழ்வு நாளை காலை கதிர்காமத்தின் பால்குடி பாவா பள்ளிவாசலில் பச்சை நிறத்திலான கொடியினை வைத்து இஸ்லாமிய மதப் பெரியார்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். பின்னர் அதற்கு சந்தனம் பூசி ஆகம முறைப்படி பாரம்பரிய இசையுடன் பள்ளிவாசலை வலம் வந்து, பிரார்த்தனை இடம்பெறுவதை தொடர்ந்து அனைத்து மத தல…

  11. வெயங்கொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட முதியோர் இல்லமொன்று நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்ட குறித்த இல்லத்தின் கீழ் தளத்தில் முதியோர் இல்லம் காணப்பட்டதாகவும், அங்கு 12 முதியவர்கள் இருந்ததாகவும், இவர்களுள் ஆண்கள் ஐவரும்,பெண்கள் 7 பேரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வைத்தியராக தன்னை இனங்காட்டிக்கொண்ட பெண் ஒருவராலேயே இந்த முதியோர் இல்லம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், பணம் பறிக்கும் நோக்கிலேயே நடாத்தப்பட்டு வந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. தேசிய வயது முதிர்ந்தோர் செயலகம் மற்றும் அத்தனகல சுகாதார அதிகாரிகள் அலுவலகர்களும் இணைந்தே குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண…

  12. முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமவினால் மறுக்கப்பட்டு வந்த விடயம் தொடர்பில் ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது. WP GE -2034 டிபென்டர் ஜுப் வண்டியை தான் ஒரு போதும் கண்ணால் கண்டது கூட இல்லை முன்னாள் அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே சத்தியம் செய்திருந்தார். இந்நிலையில் அரசாங்கத்திற்கு சொந்தமான WP GE -2034 டிபென்டர் ஜுப் வாகனத்தை தவறாக பயன்படுத்தும் வகையில் தேர்தல் இலக்க போஸ்டர்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளமை தொடர்பில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு மஹிந்தானந்தவின் உறவினரான வீரசிங்க அளுத்கமகே உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது வெளியாகியுள்ளது. …

  13. அடையாளம் காட்ட உதவுமாறு பொது மக்களிடம் கோரிக்கை.! சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவைப் படுகொலை செய்தனர் என்று சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர்கள் இருவரின் மாதிரி வரைபடங்களை பொலிஸ் தலைமையலுவலகம் வெளியிட்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் சாட்சியாளர்களின் தகவல்களுக்கு அமைவாக பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவின் ஓவிய நிபுணர்களால் இந்த உருவங்கள் வரையப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காகவே இவ்வாறு அவர்களது உருவங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் இந்த உருவ அமைப்பை ஒத்தவர்களை காணுமிடத்து அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பி…

  14. அரச வைத்தியர்களின் போராட்டத்தினால் 10 லட்சம் பேருக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில் நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலையில் நேற்றைய தினம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் வைத்தியசாலைகளின் வெளி நோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளச் சென்ற பத்து லட்சம் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதிலும் நேற்றைய தினம் செய்யப்படவிருந்த ஆயிரம் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன. சிகிச்சை பெற்றுக்…

  15. அமிர்தலிங்கம் ஆக முடியாது சம்பந்தன் : கூறுகிறார் ரம்புக்வெல எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஒருபோதும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆக முடியாது. இவ்வாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள மஹிந்த ராஜபக்ஸ தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்க வேண்டும். ஆனால் இரா.சம்பந்தன் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக கெஹலி…

  16. யாழ். பல்கலைக்கழக விடுதியில் கரும்புலி தின சுவரொட்டி - சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் வாயில் கதவில் கரும்புலிகள் தினமான இன்று செவ்வாய்க்கிழமையைக் (05) நினைவுபடுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'தமிழீழ மக்களுக்கு ஓர் அறிவித்தல்' எனத் தலையங்கமிடப்பட்டு, ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டியை, தமிழீழ மக்கள் படை ஒட்டியதாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/176253/ய-ழ-பல-கல-க-கழக-வ-ட-த-ய-ல-கர-ம-ப-ல-த-ன-ச-வர-ட-ட-#sthash.qJHjKxBl.dpuf

  17. பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமையுங்கள்-வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர், தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்காணியில் பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெற்றால், 05 நன்மைகளும் – 09 தீமைகளும், ஓமந்தை காணியில் அமையப்பெற்றால் 13 நன்மைகளும் – 02 தீமைகளும் மட்டுமே உண்டு. என்று துறைசார் நிபுணர்கள் குழுவினர் கணிப்பிட்டுள்ளனர். எனவே வடக்கு மாகாண மக்களுக்கு 13 நன்மைகளை பெற்றுக்கொடுக்கப்போகின்றோமா? அல்லது 05 நன்மைகளை மட்டும் பெற்றுக்கொடுக்கப்போகின்றோமா?, மக்கள் 09 தீமைகளை எதிர்கொள்ள வேண்டுமா? அல்லது 02 தீமைகளை மட்டுமே எதிர்கொள்ள வேண்டுமா? வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம…

  18. எங்கள் தமிழ் அரசியல் தலமைகளைப் பார்த்து தென்னிலங்கை சிங்கள அரசியல் தலமைகள் கை கொட்டி சிரிக்கும் நகைப்பிற்குரிய செயற்பாடுகளாக தமிழ் அரசியல் தலமைகளின் செயற்பாடுகள் அமைந்திருப்பது வேதனைக்குரிய செயற்பாடாக அமைந்திருக்கிறது. ஒருகாலகட்டத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல், அபிவிருத்தி, மற்றும் தேவைகள் குறித்து அக்கறை கொண்டிருந்தனர் என்பது மறுக்க முடியாது உண்மை. பின்னர் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துப் விடப்பட்ட இன அடக்குமுறைகளுக்கு எதிராக இளைஞர்கள் துடித்தெழுந்து, ஆயுதம் தாங்கினர். அந்த இளைஞர்களின், மனதில் தமிழ் மக்களின் விடுதலை பற்றிய இலக்கு, கனவு மட்டுமே இருந்தது. அதைத்தவிர அவர்கள் வேறு எதையும் சிந்தித்திலர். மறுபுறத்தில், ஆயுதப் போராட்டம் தொடர்ந…

  19. ஒட்டகப்புலம் பகுதியில் நிரந்தரமாக்கப்பட்டு வரும் இராணுவ முகாம் - செல்வநாயகம் கபிலன் வலிகாமம் வடக்கு வயாவிளான் ஒட்டகப்புலம் பகுதியில் நிரந்தரமாக கட்டப்பட்டு வரும் இராணுவ முகாமால் அப்பகுதிகள் வாழ் பூர்வீக மக்கள் மத்தியில் அச்சமான நிலைமை தோன்றியுள்ளது. 105 குடும்பங்களுக்கு சொந்தமான 169 ஏக்கர் காணியினை படையினர் சுவீகரிக்கும் நோக்கில் நிரந்தரமாக முட்கம்பி வேலிகளை அமைத்தும், பாரிய வாயிற் துண்களை நிறுவியும் வருகின்றனர். கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த வசாவிளானில், கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பகுதியளவில் விடுவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஒட்கப்புலம் பகுதி முழுமையாக இராணுவத்தின்…

  20.  காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக விவகாரம்: 'திருத்தங்களை முன்மொழிவோம்' கெலும் பண்டார காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பற்றி கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது, குறித்த அலுவலகத்தை ஸ்தாபித்தல் தொடர்பில் சில திருத்தங்களை முன்மொழிவதற்கு, நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் த.தே.கூ ஆல் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிக்கேற்ப, அரசாங்கம் இந்தச் சட்டமூலத்தை வரைவு செய்துள்ளது. இது தற்போது நாடாளுமன்றத்…

  21.  'யாருக்கும் அஞ்சேன்' மத்திய வங்கியின் ஆளுநராகத் தனது கடமைகளை நேற்றுப் பொறுப்பேற்றுக் கொண்ட கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, யாருக்கும் அஞ்சாமல் செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார். 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் சந்தித்த போது, வெளிப்படையாகவும் யாருக்கும் அஞ்சாமலும் செயற்படுமாறு ஆலோசனை வழங்கினார். அவருடைய ஆலோசனையை நான் பின்பற்றி, வெளிப்படையாகவும் யாருக்கும் அஞ்சாமலும் பணிபுரிவேன்' என, கலாநிதி இந்திரஜித் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த கலாநிதி இந்திரஜித், நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து, பொருளாதாரத்தில் அரசியல் கலக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். 'நாடு எப்போது சுதந்திரமடைந்ததோ, அப்…

  22. இந்திய மீனவர்கள் 6பேர் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குதிரமலையிலிருந்து வடமேற்கு பகுதியில் வைத்து இவர்கள் கடற்படையினரால் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட மீனவர்களை புத்தளம் உதவி கடற்றொழில் அலுவலக பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் நாட்டு படகில் வந்து மீன்பிடித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எட்வின் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சுவிஸ்டன், எட்மா, வினோத், விஜய், ரோனா…

  23. வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தில் வடமாகாண அமைச்சர் பா. சத்தியலிங்கம் இரட்டை வேடம் போடுவதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் அமைப்பது என முடிவாகியது. இதற்கான அனுமதி கிடைத்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், வவுனியாவின் எந்த இடத்தில் பொருளாதார மையத்தினை அமைப்பது என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் வவுனியா மாவட்ட விவசாயிகள் உள்ளிட்ட பலர் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என கோரி வந்த நிலையில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் செயற்பட்டு வந்தார். அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை வவுனியா, சிதம்பரபுரம…

  24. கொத்தணி குண்டுகள் பயன்படுத்தியதனை நியாப்படுத்தும் மெக்ஸ்வல் பரணகம இலங்கையில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை நியாயப்படுத்தும் வகையில், காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தவல் வெளியிட்டுள்ளார். 2010ம் ஆண்டுக்கு முன்னதாக படையினர் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். 2010ம் ஆண்டுக்கு முன்னதாக கொத்தணி குண்டுகள் பயன்படுத்தும் பிரகடனம் அமுலில் இருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த பிரகடனம் அமுல்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ தேவைகளுக்காக படையினர் 2010ம் ஆண்டுக்கு முன்னதாக கொத்தணி குண்டுகளை பய…

    • 2 replies
    • 386 views
  25. என்னையும் எனது குடும்பத்தையும் சிறையடையுங்கள் என்னுடன் குரோதம் இருந்தால் என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடையுங்கள். அதைவிடுத்து எனது பிரதேச கிராம மக்களை பழிவாங்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ஆட்சிக் காலத்தில் குடிசைகள் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக வசதியான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹுங்கம அத்புடுவ விஹாரையில் இடம்பெற்ற மத வைபவத்தில் உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இன்று அரசியல் ரீதியாக கைது செய்யப்படுபவர்கள் உளரீதியாக மட்டுமல்ல உடல் ரீதியாகவும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.