Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தை அமையுங்கள் : எமது கோரிக்கையை புரிந்துகொள்ளுங்கள் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சிங்கள மக்களுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் இருக்காது என்பதனை தொடர்ச்சியாக தெளிவாகவும் அழுத்தமாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசின் அரசியல் விருப்பின்மையை தெட்டத்தெளிவாக பிரதிபலிக்கின்றது என்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையானது சர்வதேச நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் விசாரணையாளர்களையும் உள்ளடக்க வேண்டியதை ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும். இ…

  2. சர்வதேச நீதிபதிகள் வழக்கறிஞர்களைக்கொண்டு விசாரணை பொறிமுறையை உருவாக்குங்கள் : வலியுறுத்தியது சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையை சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நிறுவவேண்டும். நீதிப் பொறிமுறையானது நம்பகரமானதாவும் சுயாதீனமாகவும் பக்கசார்பற்ற முறையிலும் இருக்க வேண்டுமாயின் சர்வதேச பங்களிப்பு இடம்பெற வேண்டியது அவசியமாகும் என்று சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இன்றையதினம் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அந்த அமைப்பின் பிரதிநிதி மேற்கொண்டவாறு கூறி…

  3. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் : சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தல் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) நல்லிணக்க செயற்பாடுகள் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக சர்வதே தரத்துடன் கூடிய சட்டம் வரவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிரதிநிதி மேற்கண்டவாறு கூறினார். …

  4. இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களை நாடும் உயர் அந்தஸ்துள்ளவர்கள் : வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல் நாட்டில் உயர் அந்தஸ்துள்ள அதாவது பணம் படைத்தவர்கள் ஆண் விபசாரிகளை நாடுவதாகவும் இதனால் ஆண்களுக்கு எயிட் நோய் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். சமூதாயத்தில் உயர் அந்தஸ்த்திலுள்ள பலர் ஓரின சேர்க்கையாளர்களின் சேவையை பெற்றுகொள்கின்றனர். இந்நிலைமை தற்போது நகர்புறங்களில் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் ஆண் விபசாரிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதுடன் எயிட்ஸ் நோயாளர்களினும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. http://www.virakesari.lk/article/8347

  5. அர்ஜுன மகேந்திரனை ஒருபோதும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை : குற்றத்தை நிரூபிக்காமல் எவ்வாறு பதவி நீக்குவது இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை ஒருபோதும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குற்றம் நிரூபிக்கப்படாமல் எவ்வாறு ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவது எனவும் கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விவ­காரம் தொடர்பில் பல அலகுகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சி காலத்தில் மத்திய வங்கியில் காணப்பட்ட முரண்பாடுகள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. இதேவேளை பிணை முறி விவ­…

    • 1 reply
    • 289 views
  6. பிள்ளையானுக்கு பிணை மறுப்பு முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 21.7.2016 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம் கொலை தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்க கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்காக இன்று முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். …

    • 1 reply
    • 324 views
  7. இசைத்துறையில் யாழ் இளைஞனுக்கு விருது! இலங்கையின் தேசிய ரீதியிலான அரச இசை விருது வழங்கும் விழா கடந்த 21 ஆம் திகதி மாலை நெளும்பொக்குண மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டிய பலருக்கு விருதுகள் வழங்கப்படடன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறந்த இசையமைப்பாளர் – கிராமிய இசை (நவீன வடிவம்) விருது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பிராஜா பிரியனுக்கு வழங்கப்பட்டது. குறித்த விருதினை இலங்கை கலாச்சார அமைச்சர் எஸ்.பி நாவின்ன வழங்கினார். அத்துடன் இவர் சார்ந்த குழுவினரின் 7 படைப்புக்கள் விருதுக்…

    • 1 reply
    • 546 views
  8.  'ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தக்கூடாது' -சொர்ணகுமார் சொரூபன் ஒரு சில ஆசிரியர்கள் விடும் தவறால், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்துவதற்கு நமது சமூகம் இடமளிக்கக்கூடாது என மேல் நீதிமன்ற முன்னாள் நீதவான் இ.த.விக்னராஜா தெரிவித்தார். சர்வதேச சித்திரவதைகள் எதிர்ப்பு தினத்தை ஒட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்வு, இன்று வியாழக்கிழமை (30) யாழில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்;றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …

  9. பிரதியமைச்சர் தற்கொலை அச்சுறுத்தல் பிரதியமைச்சர் பாலித தெவரபெரும், மின்விசிறியில், கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். களுத்துறையில் உள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, அப்பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த பிரதியமைச்சர், அவ்வார்ப்பாட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றினார். அவருடைய கோரிக்கைகளுக்கு உரிய முறையில் பதில் கிடைக்காமையை அடுத்தே அவர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/175916/ப-ரத-யம-ச-சர-தற-க-ல-அச-ச-ற-த-தல-#sthash.SUMHcAd9.dpuf

  10. சித்தி­ர­வ­தைக்கு முற்­றுப்­புள்ளி என்ற தலைப்பில் இன்று பேரணி மனித உரி­மைகள் ஆணை­க்­குழு இன்று சித்தி­ர­வ­தைக்கு முற்­றுப்­புள்ளி என்ற தலைப்பில் பேரணி ஒன்றை நடத்­த­வுள்­ளது. இன்று நாம் சித்­தி­ர­வதை தொடர்பில் அதி அவ­­தானம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. ஏனெனில் சித்­தி­ர­வதை என்­பது கடந்­த பல தசாப்த கால­மாக பாரிய சிக்­க­லாக உரு­வெ­டுத்துள்ள ஒரு கார­ணியாகும். இலங்­கையில் சித்­தி­ர­வ­தை­­க­ள் அதி­க­ரித்­துள்­ளன. அது தொட­ர்பில் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விற்கு கிடைக்­கும் முறைப்­பா­டு­களின் எண்­ணிக்­கையும் அதி­­க­ரித்­துள்­ளன. எனவே மனி­த உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் சட்­டங்­களை வலு­வாக்கம் செய்­வது தொடர்பில் ஆராய்ந்து வரு­வதாக மனித உரி­மைகள் ஆணை…

  11. மினி சூறாவளி... புத்தளம், மாரவிலப் பகுதியில் நேற்று புதன்கிழமை (29) அதிகாலை மழையுடன் கூடிய மினி சூறாவளி வீசியமையால், சுமார் 6 வீடுகள் சேதமாகின. மரங்கள் பல முறிந்து விழுந்தமையால் வீடுகள் மற்றும் பாடசாலைகள் பெரும் சேதமடைந்துள்ளதுடன், கூரைகள் பலவும் காற்றில் வீசியெறியப்பட்டுள்ளமையைப் படங்களில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/175905/ம-ன-ச-ற-வள-#sthash.TSKiI9sY.dpuf

  12. இனப்படு கொலை என்பதனை ஒருபோதும் ஏற்க முடியாது - மங்கள (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கையின் யுத்தத்தின் போது இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை நான் ஓருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். யுத்தத்தின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை குறித்து நாம் நம்பகரமான விசாரணை நடத்துவோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளாகத்தில் வைத்து வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இதன்போது மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் யுத்தத்தின்போது இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை நான்…

    • 4 replies
    • 607 views
  13. நாமலுக்கு எதிராக வழக்குத்தாக்கல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/175912/ந-மல-க-க-எத-ர-க-வழக-க-த-த-க-கல-#sthash.lN29culO.dpuf

  14. பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது ஹெலி ஒன்றில் இருந்து மலர்தூகள் துவப்பட்டுள்ளன. இரத்மலானையில் உள்ள வீட்டிலிருந்து நேற்று முன்தினம் நல்லடக்கத்திற்காக பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்ட போதே ஹெலி மூலம் மலர் தூவப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்களினால் அண்மையில் மஹர நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பிரபல போதைப் பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழு தலைவருமான சுதேஸ் அசாங்க எனப்படும் லன்சியா என்பவரின் இறுதிக் கிரியைகளின் போது தனியார் ஹெலி மூலம் மலர் தூவப்பட்டுள்ளது. ஞானேந்திர மாவத்தை, தெலவல சந்தி, எயார்போர்ட் சந்தி உள்ளிட்ட இடங்களில் வானிலிருந்து மலர் தூவப்பட்டது. மேலும் வீடு முதல் …

    • 3 replies
    • 694 views
  15. இயற்கை செயற்கை இடர்கள், விபத்துக்கள், அசம்பாவிதங்கள், தற்செயல் நிகழ்வுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுவது இயல்பு. ஒரு போது இவற்றை விதி என்கின்ற வரையறைக்குள் கொண்டு வந்து சமாதானப்பட்டு தேற்றிக் கொள்ள முடிகின்றது. ஆனால், இவ்வாறான வேளைகளில் பல மனிதாபிமான செயற்பாடுகள் இடம்பெற்று விடுகின்றன. அது நமக்கு படிப்பனைக்குரியதாகவும் உள்ளது. அவ்வாறான இன மத பேதங்களைக் கடந்த உண்மையும் உயிரோட்டமுமான மெய்சிலிர்க்க வைக்கும் மனிதாபிமான நிகழ்வு சனிக்கிழமையன்று (ஜுன் 25, 2016) மட்டக்களப்பு உன்னிச்சையில் இடம்பெற்றதை தன்னால் மறக்கமுடியாதிருப்பதாக கூறுகின்றார் ஏறாவூர் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் லோகிதராஜா தீபாகரன். அன்றைய தினம் மட்டக்களப்பு ஓட்டமாவடி மீரா…

    • 0 replies
    • 238 views
  16. வடக்கு,கிழக்கில் இரா­ணுவ பிர­சன்னம் அதிகம் : சில குற்­றச்­சாட்­டுக்கள் யுத்த குற்­றங்­க­ளா­கவும் மனித குலத்­திற்கு எதி­ரானதா­கவும் இருக்­கலாம் : செய்ட் (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்) நீதிப்­பொ­றி­முறை விசா­ர­ணையில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பா­னது நம்­பகத் தன்­மை­யையும் சுயா­தீ­னத்­தையும் பக்­க­ச்சார்­பற்ற தன்­மை­யையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அவ­சி­ய­மா­னது என்று நான் கரு­து­கிறேன். எமது விசா­ரணை கண்­டு­பி­டிப்­புக்­க­ளின்­படி சில குற்­றச்­சாட்­டுக்கள் யுத்த குற்­றங்­க­ளா­கவும் மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்­க­ளா­கவும் இருக்­கலாம் என்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் தெரி­வித்தார். ஜெனிவா மனித உரிம…

  17. “ஆ.. மாடியில இருந்து குதிச்சி செத்து நாசாமா போ..” மடிக்கணனிக்கு முன்னால இருந்து ஆழமாகப் பேஸ்புக் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவன் எழும்பி ஓடிப்போய் 2 ஆவது மாடியில இருந்து கீழே குதிக்கிறான். அந்த விடுதியெங்கும் பரபரப்புப் பரவுகிறது. அனைவரும் அவசரமாகின்றனர். அவசர வாகனம் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து அவனுடலை அள்ளிப் போகிறது. அவனின் தற்கொலைக்கான காரணத் தேடலை நண்பர் – போராசிரியர் குழாம் தீவிரப்படுத்துகின்றது. பேஸ்புக், டுவீற்றர், இங்ஸ்ரோக்ராம், ஜீமெயில் என எதிலும் அதற்கான தேடல் முடிவு வெற்றியளிக்கவில்லை. மாடியில் இருந்து குதித்தவனின் அறையில் வசித்த நண்பன் அவனின் கைத்தொலைபேசியைக் கவனித்தான். 97 மிஸ்ட் கோல்!. 43 எஸ்எம்எஸ்!. அவனின் பார்வைபடாமல் இருந்திருக்கின்றது. அல…

    • 0 replies
    • 385 views
  18. சித்திரவதைகள் இடம்பெறுகின்றன ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் இன்னமும் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன என்பதை ஏற்றுக் கொண்டார். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைனால், இலங்கை, மியான்மார் ஆகிய நாடுகளுக்கான வாய்மொழிமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த வாய்மொழிமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் உரையாற்றும் போதே, அமைச்சர் மங்கள இவ்வாறு தெரிவித்தார். அமைச்சருக்கு வழங்கப்பட்ட 5 நிமிடங்களில் குறிப்பிடத்தக்க அளவை, இலங்கையின் அண்மைக்கால அடைவுகள் குறித்து வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்திய அமைச்சர் மங்கள, இலங்கையின் தே…

  19. சர்­வ­தேச நீதி­ப­தி­களை அனு­ம­தி­யுங்­கள் : ஜெனி­வாவில் அமெ­ரிக்கா, கனடா, வலி­யு­றுத்தல் (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் நேற்று நடை­பெற்ற இலங்கை தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரையாற்­றிய சர்­வ­தேச நாடுகள் மற்றும் சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்­புகள் அனைத் தும் இலங்­கையின் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பு மிகவும் கட்­டா­ய­மாக இடம்­பெற வேண்­டு­மென வலி­யு­றுத்­தின. அமெ­ரிக்கா, நெதர்­லாந்து, கனடா, ஜப் பான், நோர்வே, அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­ லாந்து, கொரியா உள்­ளிட்ட நாடு­களும் சிறு­ பான்மை உரி­மைக்­கான அமைப்பு, சர்­வ­தேச யூரிகள் ஆணைக்­குழு,…

  20. ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் [ Thursday,30 June 2016, 03:38:08 ] ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இவ்வாண்டு ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது அமர்வில் உரையாற்றிய ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஊக்கம் மற்றும் நம்பிக்கையுடன் சர்வதேச சமூகத்தை அணுகுவதற்கு ஸ்ரீலங்கா வழி ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் மங்கள சமரவீர எடுத்துரைத்துள்ளார். ஸ்ரீலங்காவின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைவரும் நாட்டிற்கு விஜயம் செய்யுமாறும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்க அழைப்பை வி…

  21. மாணவிகள் மீதான பாலியல் வதை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள்: நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை.:- மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை மாணவிகள் மீது பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். யாழ் மேல் நீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிணை மனு ஒன்று சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றின்போது, சமூக விரோதக்குற்றச் செயல்களைக் கட்டுப்பட…

  22. முல்லைத்தீவில் பெருமளவில் அரச காணிகளை கோரும் சிவில் பாதுகாப்பு திணைக்களம்! பண்ணை அமைப்பதற்காக 524 ஏக்கர் அரசகாணியை வழங்குமாறு சிவில் பாகாப்புத் திணைக்களத்தினரால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே பல இடங்களிலும் பாதுகாப்புப் படையினரும், சிவில் பாதுகாப்புப் படையினரும் அரச மற்றும் தனியார் காணிகளை பெருமளவில் ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற நிலையில் தற்போது பண்ணை அமைப்பதற்காக மேலும் பல காணிகளை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவில் அனுமதி பெறப்பட வேண்டிய காண…

  23. விபத்தில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் பலி -சொர்ணகுமார் சொரூபன் யாழ். காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், தாவடி காளி கோவிலடியைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன் (வயது 17) என்ற மாணவனே உயிரிழந்தார். சைக்கிளில்; பாடசாலைக்குச் சென்ற மாணவனை வேகமாக வந்த பட்டா வாகனம் மோதித்தள்ளியது. இதில் மாணவன் பலத்த காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். …

  24. நல்லிணக்க பொறிமுறையின் அவசியம் குறித்து தென்னிலங்கை மக்களை தெளிவுபடுத்துங்கள் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் தென்னிலங்கை மக்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். தென்னிலங்கை மக்களை தெ ளிவுபடுத்தாமல் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கம் அர்த்தமற்றதாகி போகும் அபாயம் உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் உலக தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் இம்மானுவேல் அடிகளார் எடுத்துரைத்துள்ளார். தென்னிலங்கை மக்களை தெளிவுபடுத்தாமல் அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்குவதில் அர்த்தமில்லை எனவும் அவர் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார். …

    • 2 replies
    • 380 views
  25. வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் தாக்குதலுக்குள்ளான இளைஞர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் பாடசாலை வீதி இமையாணன் உடுப்பிட்டியைச் சேர்ந்த 22 வயதுடைய நற்குணம் நிசாந்தன் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று முன்தினம் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு முன்னால் நின்ற இளைஞனை மேற்குறித்த போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி (SI) தொலைபேசி ஒன்று சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்து அழைத்துச் சென்று மாலை 6 மணிவரையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து இளைஞனைத் கட…

    • 1 reply
    • 323 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.