ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
பிரதி சபாநாயகராக முஹமட் ரிஸ்வி சாலி தெரிவு! பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல ( Asoka Sapumal Ranwala) நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து 10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1409273
-
-
- 2 replies
- 633 views
-
-
இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி! இனவாத அரசியலுக்கு இனி நாட்டில் இடமளிக்கப்போவதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரும் நாட்டின் பிரஜைகள். இந்த அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக மக்களின் அபிலாஷையாக இருந்த தேசிய ஐக்கியத்தை நாட்டில் கட்டியெழுப்புவதற்கான பாரிய சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது. நாட்டு மக்களுடனான உறவுகளை பாதிக்க தானும் அரசாங்கமும் இடமளிக்க மாட்டோம். இந்த ஆட்சியை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தாங்கள் கட்டுப்பட்டு அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 10 ஆவது நாடாளும…
-
- 0 replies
- 128 views
-
-
சர்ச்சைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வில் ரவி கருணாநாயக்க! புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நியமனமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் இன்று கலந்து கொண்டார். நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரவி கருணாநாயக்க, தேசிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது என தெரிவித்தார். இந்த விடயம் ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை என்றும் முழு கட்சியினருக்கும் பிரச்சினை இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதுடன், பலமான அரசியல் சக்தியாக அதனை சரியான பாதையில் வழிநடத்…
-
- 2 replies
- 628 views
-
-
இலங்கை, இந்திய மீனவர் விவகாரம் - ஆரம்பத்திலேயே நேரடி தலையீடுகள் இல்லை - சந்திரசேகரன் இலங்கை, இந்திய மீனவர் விவகாரத்தை சுமுகமாக தீர்க்கவே சமகால அரசாங்கம் விரும்புகிறது. அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெறும் பேச்சுகளில் இணக்கப்பாட்டுக்கு வரமுடியும் என எதிர்பார்க்கிறோம். அதனால் ஆரம்பத்திலேயே அரசாங்கத்தின் உயர்மட்ட நேரடி தலையீடுகள் இந்த விடயத்தில் இருக்காது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இலங்கை கடல்வளத்தையும், மீன்வளத்தை பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் உறுதியாக எடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்திய, இலங்கை மீனவர்கள் விவகாரத்தில் சமகால அரசாங்கத்தின் ஆரம்பகட்ட நகர்வுகள் எவ்…
-
- 0 replies
- 142 views
-
-
எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன்! - கோவிந்தன் கருணாகரன் November 19, 2024 05:49 pm இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்பதற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது இது ஒரு வரவேற்கத்தக்கது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். செவ்வாய் (19 நவ) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த பாராளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட எனக்கும் என்னுடைய குழுவினருக்கும் ஆ…
-
- 1 reply
- 225 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கியு சென்ஹொங் இற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதியில் ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், மேலும் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் தூதுவரை சந்தித்த குழுவினர் மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை, உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொ…
-
- 1 reply
- 149 views
- 1 follower
-
-
பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், நேற்று புதன்கிழமை (20) பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் முற்படுத்தப்பட்டார். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேகநபர், மே 31 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. வடமராட்சியை சேர்ந்த இந்த சந்தேகநபர், தான் பாதாள உலகக் குழுவின் தலைவன் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா எனவும், அவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து பூக்குடி கண்ணா என்பவருடன் இணைந்து செயற்பட்டு வந்ததாகவும், கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்…
-
- 2 replies
- 161 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் புது டில்லி நகரத்திற்கு இன்று வியாழக்கிழமை (21) புறப்பட்டார் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது மனைவி மைத்ரி விக்கிரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் சென்றுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் காலை 08.19 மணியளவில் இந்திய விமான சேவையின் ஏ. ஐ - 282 விமானத்தின் மூலம் இந்தியாவின் புது டில்லி நகரத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/199300
-
-
- 10 replies
- 519 views
- 1 follower
-
-
மின்னணுத் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் பார்வை குறைபாடுகள் அதிகரித்து வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் அனுஷா தென்னெக்கும்புர தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மத்தியில் குறும்பார்வை அல்லது நீள்பார்வை பாதிப்பு ஏற்படும் நிலைமை காணப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டுயுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199299
-
- 0 replies
- 94 views
- 1 follower
-
-
புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்விற்கு முன்னதாக பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்றிருக்ககூடாது அவர்களது நியமனம் சட்டவிரோதமானது என சில தரப்பினர் தெரிவிப்பது எந்த ஆதாரமும் அற்ற விடயம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார். முகநூல் பதிவில் இதுகுறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு வரை பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்பதற்பகாக காத்திருக்கவேண்டும் என்பது தவறான கருத்து என தெரிவித்துள்ளார். வரலாற்றுரீதியில் புதிய நாடாளுமன்றத்தின் அமர்விற்கு முன்னரே பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்பது வழமை என சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார். ஜேர்ஆர் ஜெயவர்த்தன, டிபிவிஜயதுங்க, சந்திரிகா குமாதரதுங்க ஆகி…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
சம்பந்தன் குடும்பத்தினருக்கும் டக்ளஸுக்கும் பறந்த எழுத்து மூல அறிவிப்பு! Vhg நவம்பர் 21, 2024 மறைந்த இரா.சம்பந்தனின் மகளுக்கும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் உடனடியாக அரசாங்க பங்களாக்களை ஒப்படைக்குமாறு நீதித்துறை அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது குறித்த அறிவிப்பானது, எழுத்து மூலம் நேற்று (20-11-2024) விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தனின் பங்களா கடந்த 12ஆம் திகதி கையளிக்கப்படும் என அவரின் மகள் அமைச்சுக்கு கடிதம் மூலம் அறிவித்த போதும் நேற்று (20) வரை அது கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தனின் குடும்ப உறுப்பினர்கள் அவர் இறந்த பிறகு, சம்பந்…
-
- 1 reply
- 213 views
-
-
ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான லெப்.சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார். அந்த நாளையே மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம் ஆரம்பமாகும். இந்நாட்களில் தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள் மேற…
-
- 3 replies
- 300 views
- 1 follower
-
-
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக நடைபெறுவுள்ளது. அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெவுள்ள பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்வைப்பார். 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு சம்பிரதாயபூர்வமான முறையில் ஆரம்பிக்கப்படும். பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட அரசியல்வாதியுமான நிஹால் கலப்பதியை நியமிப்பதற்கு ஆளும் தரப்பு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. அத்துடன…
-
- 4 replies
- 236 views
- 1 follower
-
-
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு ஆரம்பமாகியிருக்கும் நிலையில், ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தந்து தனது கொள்கைப் பிரகடன உரையை உரையாற்றி வருகிறார். https://thinakkural.lk/article/312474
-
- 3 replies
- 224 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) ஐக்கிய மக்கள் சக்தியில் எஞ்சியுள்ள 4 தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்று பெண்ணொருவருக்கு வழங்கப்படும் என்று நம்புகின்றேன். அவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் அதற்கு நானே பொருத்தமானவராக இருப்பேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியலுக்காக எனது பெயர் பல தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விவகாரம் செயற்குழுவில் கலந்துரையாடல் மட்டத்திலேயே காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் எஞ்சியுள்ள 4 ஆசனங்களில் பெண்னொருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ந…
-
-
- 2 replies
- 208 views
- 1 follower
-
-
21 NOV, 2024 | 10:25 AM புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு வைபவரீதியாக ஆரம்பமான நிலையில், பத்தாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார். இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல சபாநாயகராக வாக்கெடுப்பின்றி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர். இதையடுத்து, புதிய சபாந…
-
- 3 replies
- 158 views
- 1 follower
-
-
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.” – இவ்வாறு நேற்று யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யாழ்ப்பாணத்துக்கு வந்ததுள்ளமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதிலும் அனைவரும் எதிர்பார்க்கின்ற ஊடக அமையத்துக்கு வந்துள்ளமை மேலும் சந்தோசமாக உள்ளது. வட…
-
- 0 replies
- 114 views
-
-
வடக்கில் சமீபத்தில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமை குறித்தும் மேலும் பல முகாம்களை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறித்தும் நாமல் ராஜபக்ச கடும் கரிசனை வெளியிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் பொதுமக்களிடம் மீள நிலங்களை ஒப்படைப்பது பொதுவாக பிரச்சினைக்குரிய விடயம் இல்லை என்றாலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக இது குறித்து பாதுகாப்பு தரப்பினருடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை 30 வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டது. ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்ட நிலையில் இன்று அனைத்து சமூகத்தினரும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு தெற்க…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று புதன்கிழமை (20) கையளித்தார். வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (20) காலை இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இதன்போதே அவர் இந்தக் காசோலையைக் கையளித்தார். வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த இலங்கைக்கான சீனத்தூதுவர், இந்தப் பிரதேசத்தின் அபிவிருத…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
மாங்குளம் வெள்ளாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று புதன்கிழமை (20) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பகுதியில் இருந்து மல்லாவி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மாங்குளம் வன்னிவிளாங்குளம் ஐந்தாவது மைல் கல் பகுதியில் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவத்தில் மாங்குள பகுதியில் வசிக்கும் விஜய…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) தேர்தல் காலத்தில் ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக சட்டத்தின் முன் நிரூபிக்குமாறு ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன். குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரம் -ருவன்வெலிசாயவில் இன்று புதன்கிழமை (20) மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான நிர்வாகத்தின் மீது நாட்டு மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளார்கள்.மக்களின் எதிர்பார்ப்பை அரசா…
-
- 0 replies
- 94 views
- 1 follower
-
-
ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் ஒற்றையாட்சியை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கத்தினை தமிழர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கவுள்ளதாக காண்பிப்பதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவளித்து இந்தியா வரலாற்றுத் தவறைச் செய்துவிடக்கூடாது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் நிறைவின் பின்னரான நிலையில் சமகால மற்றும் எதிர்கால அரசியல்,பொருளாதார நிலைமைகள் சம்பந்தமான கலந்துரையாடலொன்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேற்றைய…
-
- 0 replies
- 83 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த வைத்தியக் கலாநிதி விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) இடம்பெற்ற சித்த மருத்துவ பீடச்சபை கூட்டத்தில் நடாத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின் போது 04 மேலதிக வாக்குகளைப் பெற்று கலாநிதி விவியன் சத்தியசீலன் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் சித்த மருத்துவ அலகாகச் செயற்பட்டு வந்த சித்த மருத்துவ கற்கை அலகு கடந்த ஜூலை 26 ஆம் திகதி பீடமாகத் தரமுயர்த்தப்பட்டது. சித்த மருத்துவ பீடத்தில் நஞ்சியல் மற்றும் பரம்பரை மருத்துவம், மனித உயிரியல், சமூகநல மருத்துவம், சிரோரோகமும் அறுவை மருத்துவமும், நோய் நாடல் சிகிச்சை, குணபாடம், மூலதத்துவம், குழ…
-
- 0 replies
- 684 views
- 1 follower
-
-
அடுத்த மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற பிரஜைளை உருவாக்கக்கூடிய மன அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் தனது அமைச்சுப் பதவியை இன்று (20) பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், கல்வி போன்றதொரு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். விடயத்தின் ஆழத்தை தான் முழுமையாக புரிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசின் கொள்கைகளின்படி, கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, பாடசாலைக் கல…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
யாழ் ஆரியகுளத்தடியில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர். இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை. டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. - சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.
-
-
- 68 replies
- 4k views
- 1 follower
-