ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச புதிய கட்சியை அமைக்கும் பணிகளை பதுளையில் ஆரம்பிக்கவுள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான விரிவான தேசிய சக்தியொன்றை பதுளை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக பசில் ராஜபக்ச ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 2ம் 3ம் மற்றும் 4ம் திகதிகளில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. பதுளை மாவட்டத்தின் 9 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய 18 உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் பின்னர் இந்த திட்டம் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான விரிவான சக்தியொன்றை அமைக்கும்…
-
- 1 reply
- 267 views
-
-
முக்கிய இரு நகரங்களுக்கான விமான சேவைகளை இடைநிறுத்த இலங்கை முடிவு பாரிஸ் மற்றும் பிராங்பேர்ட் (Frankfurt) ஆகியவற்றுக்கான தனது சேவையை, இவ் வருடத்தின் குளிர்காலத்துடன் (winter) இடைநிறுத்த ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிராங்பேர்ட் மற்றும் கொழும்புக்கு இடையிலான இறுதி விமான சேவை (UL 553/554) ஒக்டோபர் 30ம் திகதியும், பாரிஸில் இருந்து கொழும்புக்கான இறுதி விமான சேவை (UL 563/564) நவம்பர் 6ம் திகதியும் இடம்பெறவுள்ளது. நாளாந்தம் ஏற்படும் நிதி இழப்புக் காரணமாக குறித்த விமான சேவைக்கு நிதி வழங்குவதை நிறுத்த அரசாங்கம் தீர்மான…
-
- 1 reply
- 324 views
-
-
மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு மாவட்டச் செயலர் விஜயம் -செல்வநாயகம் கபிலன் வலி.வடக்கு, தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், இன்று திங்கட்கிழமை (27) நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் கடந்த 26 வருடங்களாக உள்ளடங்கியிருந்த குரும்பசிட்டி, வறுத்தலைவிளான் மற்றும் காங்கேசன்துறை பகுதிகளை சேர்ந்த 201.3 ஏக்கர் காணி மக்களிடம் மீளவும் கடந்த சனிக்கிழமை(25) பாதுகாப்பு செயலாளர் கருணாசேன கெட்டியாரச்சியால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குறித்த பகுதிகளில் இருந்த இராணுவ முட்கம்பிவேலி…
-
- 0 replies
- 210 views
-
-
மீள்குடியேறுவதற்கு இடமில்லாதவர்களுக்கு கே.கே.எஸ்.இல் காணி -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணத்தில், மீள்குடியேறுவதற்கான காணி இல்லாத மக்களுக்கு, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அண்மித்தப் பகுதியில் காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது' என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தமிழ்மிரருக்கு தெரிவித்தார். இதற்காக, 140 ஏக்கர் காணியைப் பெறுவதற்குரிய அனுமதியை, மீள்குடியேற்ற அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் அவர் கோரினார். அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்ற பின்னர், காணியில்லாத குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு என்ற அடிப்படையில் காணி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 'தற்போது 971 குடும்பங்க…
-
- 0 replies
- 197 views
-
-
ஆடு திருடர்கள் கைது -செல்வநாயகம் கபிலன் அச்சுவேலி மற்றும் சுன்னாகம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆடுகள், தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை, ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்துள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். புத்தூர், நிலாவரை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவர், தனது இரு ஆடுகளும் காணாமல் போயுள்ளதாக, கடந்த சனிக்கிழமையன்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். இதன்பின்னர் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார், நெல்லியடி, கரவெட்டி, கொற்றாவத்தை பகுதிகளைச் சேர்ந்த மூவரையும், திருடிய ஆட்டைக் கொள்வனவு செய்த யாழ்ப்பாணம் ஐ…
-
- 0 replies
- 404 views
-
-
இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணை இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இன்று குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணை செய்யப்பட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கொழும்பு குற்றப்புலனாய்வுத் தலைமயகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், 10 வருடங்களுக்கு முன்பு மட்டக்களப்பு புறநகர் பகுதியில் இடம் பெற்ற அரசியல் படுகொலை சம்பவமொன்று தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தேர்வாகியிருந்த கிங்ஸிலி…
-
- 0 replies
- 238 views
-
-
புகைபிடிப்பவர்களில் மாணவர்களும் அடக்கம் இலங்கையில் நாளாந்தம் புகை பிடிப்பவர்களில் மூன்று வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின் படி, நாட்டில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை, நூற்றுக்கு 23.4 என தெரியவந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார். ‘2020ஆம் ஆண்டில் புகைப்பழக்கம் இல்லாத இலங்கை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். http://onlineuthayan.com/news/14113
-
- 1 reply
- 229 views
-
-
திருமண வீட்டிற்குள் புகுந்து துணிகரக் கொள்ளை : யாழில் சம்பவம் (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பகுதியில் திருமண வீடொன்றில் இருந்து 7 இலட்சம் ரூபா பணம் மற்றும் 35 பவுண் நகை ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த வீடு மணப்பெண்ணுடைய வீடாகும். இந்நிலையில் அன்று இரவு வீட்டில் இருந்தவர்கள் சம்பிரதாயங்களின்படி மாப்பிள்ளை வீட்டிற்…
-
- 0 replies
- 349 views
-
-
'இனவாத செயற்பாடுகள் தலைதூக்க அனுமதிக்கக்கூடாது' நாட்டில் மீண்டும் இனவாத செயற்பாடுகள் தலைதூக்க இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், 'கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டிருந்த பல்வேறு இனவாதச் செயற்பாடுகள் காரணமாக எமது சமூகங்களுக்கிடையில் பரஸ்பர நல்லிணக்கம் என்பது வெகுவாகப் பாதிக்கப்பட்ட ஒரு நிலையையே நாம் காணக்கூடியதாக இருந்தது. 'இந்த நாட்டில் அனைத்து சமூகங்களுக்கிடையிலும் நிலையான - சுமுகமான உறவுகள் உறுதிப்படுத்தப்படுவதன் ஊடாகவே இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்…
-
- 0 replies
- 251 views
-
-
இறுதிப்போரில் இராணுவம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியமை உறுதி! காடியன் தெரிவிப்பு இறுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளெஸ்டர்) பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெ காடியன் செய்தி வெளியிட்டுள்ளது. தெ காடியன் செய்தித்தாள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு ஆதாரங்களாக வன்னியில் இருந்து மீட்கப்பட்ட கொத்துக்குண்டுகளின் பாகங்கள் புகைப்படங்களாக காட்டப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் இருந்து ஆர்பிகே 500 ஏ கியு-2.5RD என்ற கொத்துக்குண்டுகளே மு…
-
- 5 replies
- 735 views
-
-
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: மேலும் நான்கு ஆசிரியர்கள் கைது செல்வநாயகம் கபிலன் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது பாடசாலை மாணவியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் இந்தச் சம்பவத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்த அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் 3 ஆசிரியைகள் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழைமை (19) கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். …
-
- 7 replies
- 630 views
-
-
வடமாகாண தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு: மக்கள் அவதி எஸ்.என். நிபோஜன் வடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை (27) முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள நிலையில், கிளிநொச்சி பகுதியிலுள்ள அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தனியார் பஸ்ஸூக்கு 60 சதவீதம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் 40 சதவீதம் என்ற விகிதாசார அடிப்படையில், கடந்த 3 வருடகால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது. எனினும் இந்த அட்டவணைக்கு, இலங்கை போக்குவரத்துச் சபை ஒத்துழைப்பு வழங்காத நிலையில், அத்துமீறிய சேவையை மேற்கொண…
-
- 0 replies
- 408 views
-
-
36 இலங்கை தமிழ் அகதிகள் நாளை இலங்கைக்கு வருகை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய ஒருங்கிணைப்புடன் நாளை செவ்வாய்க்கிழமை 36 இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதர உள்ளனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி வெளிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, குறித்த அகதிகள் சென்னையிலிருந்து மிஹின்லங்கா விமானசேவை (MJ 130) ஊடாக மு.ப. 11.45 மணியளவில் வருகைதர உள்ளனர். இதற்கமைய அவர்களது பயணப்பொதியின் அளவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 339 views
-
-
பாநூ கார்த்திகேசு முக்கிய முடிவுகளை எட்டுவதற்காக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), எதிர்வரும் புதன்கிழமையன்று கூடவிருக்கின்றது என்று, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் பதவிக்காலம், இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில், அவரின் பதவிக்காலத்தை நீடிக்கக்கூடாதென ஆளும், எதிர்த்தரப்பைச் சேர்ந்த பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த விவகாரம் தொடர்பில் கோப் ஆராய்ந்து, அறிக்கையிடவுள்ளது. அந்த அறிக்கை கிடைக்கும் வரையிலும், கடமையிலிருந்து தான் விலகி நிற்பதாக அர்ஜுன மகேந்திரன் அறிவித்திருந்த நிலையிலேயே விஜித ஹேரத் எம்…
-
- 0 replies
- 323 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்துக்கு கெடுபிடி ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்துக்கு, இவ்வாரம் கெடுபிடி நிறைந்ததாகவே அமைந்திருக்கும் என்று, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நல்லாட்சி அரசாங்கம், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட கொள்கைக்கு அமைவாகச் செயற்படாவிடின், அந்த அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களுக்கு நன்மை பயப்பனவாய் அமையாதுவிடின், அந்த அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு அஞ்சமாட்டேன் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில…
-
- 0 replies
- 216 views
-
-
பொறுப்பு கூறுல் விவகாரத்தில் இலங்கை நீண்ட தூரத்தை கடக்க வேண்டியுள்ளது – MAP: குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் இன்னமும் நீண்ட தூரத்தை கடக்க வேண்டியிருப்பதாக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்களை கண்காணிக்கும் குழுவின் சட்ட வல்லுனர்கள் (legal experts from the Monitoring Accountability Panel) தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது இலங்கை நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுதல் போன்றன தொடர்பில் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் போது பாத…
-
- 0 replies
- 353 views
-
-
யாழில் 100 கிலோ கேரள கஞ்சா கடத்தல் முயற்சி விஷேட அதிரடிப்படையினரால் முறியடிப்பு (ரி.விரூஷன்) யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு கடத்திச் செல்லுவதற்காக கொண்டு வரப்பட்ட 100 கிலோ கேரள கஞ்சாவினை விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் அதனுடாக பாரிய கடத்தல் முயற்சியொன்றையும் முறியடித்துள்ளனர். அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட அக்கரை கடற்பகுதியில் வைத்தே இப் பாரிய கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இக் கடத்தல் முயற்சி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அக்கரை கடற்பகுதியினுடாக இருவர் 100 கிலோ கேரள கஞ்சாவினை கடத்தி வந்துள்ளனர். இவ்வாறு கடத்தி வரப்பட்ட கஞ்சாவை குறித்த பகுதியில் வைத்து வேறொருவருக்கு கைமாற்ற முயற்சித்த…
-
- 0 replies
- 348 views
-
-
தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனது அரசாங்கம் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டுகளாக நீடித்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடிய யுத்தத்தினை தனது அரசாங்கமே முடிவுக்கு கொண்டு வந்தது. தமிழ் மக்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்த்து மற்றும் சமாதானம் உள்ளிட்டவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் உறுதியாக இருந்தது. அதற்காக வேண்டியே விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடிய யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தேன். எனினும், எனது ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை…
-
- 1 reply
- 486 views
-
-
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் [ Monday,27 June 2016, 02:53:56 ] கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கீழ்மட்ட நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட வேண்டும் என அரச பொருளாதார நடவடிக்கை தொடர்பான ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. ஸ்ரீலங்கான் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திலேயே இந்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், ஸ்ரீலங்கன் விமான சேவையை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கவுள்ளமையினால், விமான நிலையத்தின் கடமைகளை அரசாங்கம் ஏற்க வேண்டும் என அரச பொருளாதார நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. இந்த ப…
-
- 0 replies
- 488 views
-
-
இலங்கை முஸ்லிம் பேரவை தனக்கு எதிராக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தை ரொபர்ட் மொஹமட் ஊடாக இறைவன் அல்லாவுக்கு அனுப்புமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எப்படியான கடிதமாக இருந்தாலும் எந்த நபருக்கு அனுப்பினாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். சும்மா கேட்டு வாங்கி கொள்ள வேண்டாம் என முஸ்லிம் பேரவையிடம் கேட்டுக்கொள்கிறோம். நாட்டின் முன்னோர்கள் வியர்வை, இரத்தம் சிந்தி கட்டியெழுப்பிய சிங்கள பௌத்த நாடு இது. இலங்கை சவூதி அரேபியாவோ, ஐக்கிய அரபு ராஜ்ஜியமோ, பாகிஸ்தானோ, ஆப்கானிஸ்தானோ அல்ல என்பதை நினைவில் வைத்து கொள்ளுமாறு ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/politics/0…
-
- 3 replies
- 424 views
-
-
கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மேலதிக வெடிபொருட்களை, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. விமானப்படையின் பேச்சாளர் விங்கொமாண்டர் சந்திம சில்வா இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், முன்னதாக ஆயுத களஞ்சிய வசதிகள் தொடர்பில் விமானப்படை ஆய்வுகளை மேற்கொண்டது. அத்துடன், வெடிபொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளிலுள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பாதுகாப்பான இடங்களில் களஞ்சியப்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் இருந்த மேலதிக வெட…
-
- 1 reply
- 347 views
-
-
போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் சிறப்பு முகாங்களில் ஓராண்டு கால புனர்வாழ்வுப் பயிற்சியைப் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்கள் தமது கடந்த காலத்தை மறந்து மீண்டும் இயல்பான வாழ்விற்குத் திரும்ப வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார். அரசியல் தலைமைத்துவத்தின் அக்கறையின்மை, அதிகாரத்துவப் போட்டி, பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் முன்னாள் போராளிகளை சந்தேகக் கண்ணோடு நோக்குதல் போன்ற பல்வேறு காரணிகள் இவர்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்புவதற்குத் தடையாக உள்ளன. உள்நாட்டு யுத்தமானது ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த போதிலும் இன்றும் யுத்த நினைவுகள் முன்னாள் போராளிகளின் மனங்களை விட்டு அகலாதிருப்பதற்கு சிறிலங்கா அரசின் செயற்…
-
- 1 reply
- 300 views
-
-
இப்படியும் ஒரு உணவகம் : றோல்ஸில் பீடி Published by RasmilaD on 2016-06-26 14:25:44 காத்தான்குடி பிரதான வீதியில் பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள ஹோட்டலொன்றில் இன்று காலை சாப்பிட்ட றோல்ஸ் ஒன்றினுள் பற்றவைக்கப்பட்ட பீடி இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. றோல்ஸ் உட்கொண்ட நபர் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அளித்த தகவலின் பேரில் ஸ்தலத்திற்கு விரைந்த சுகாதார பரிசோதகர்கள் குறித்த வர்த்தக நிலையத்தை சீல் வைத்து மூடியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எம்.றஹ்மதுல்லாஹ் தெரிவித்தார். குறித்த நபர் நாளை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் சுகாதார பகுதியி…
-
- 10 replies
- 971 views
-
-
சாலாவ முகாமை அண்டிய பகுதியில் 566 வீடுகள் புனரமைக்கப்பட்டு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. அண்மையில் கொஸ்கம சாலாவ பிரதேசத்தில் இராணுவ ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியில் அதனை அண்டிய பிரதேசங்களின் வீடுகள் பாரியளவில் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சேதமடைந்த 566 வீடுகள் புனரமைக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர கொழும்பு ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார். ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியதில் பகுதியளவு சேதமடைந்த வீடுகள் இவ்வாறு புனரமைக்கப்பட்டு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் 76 வீடுகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன, இந்த வீடுகளை புனரமைக்கும் நடவடிக்க…
-
- 0 replies
- 372 views
-
-
மலேசியாவைச்சேர்ந்த பெண்ணொருவர் தன்னை வவுனியாவை சேர்ந்த இளைஞரொருவர் மலேசியாவில் வைத்து ஏமாற்றியதாக தெரிவித்து ஊடகசந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.வவுனியா ஊர்மிளாக் கோட்டத்தில் அவர் தங்கியுள்ள வீடொன்றில் ஏற்பாடு செய்திருந்த இவ் ஊடக சந்திப்பில் வவுனியா பொலிஸார் அவ் இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க தவறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.மேலும் அவர் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், நான் ஊடக சந்திப்பொன்றை நடத்த காரணம் வவுனியாவில் இருந்து அகதியாக மலேசியாவிற்கு வேலைதேடி வருகை தந்த இளைஞனொருவர் தான் மத போதகர் எனவும் தான் முன்பு விடுதலைப்புலிகளில் பணியாற்றியதாகவும் கூறி அறிமுகமாகியிருந்தார்.அந்த இளைஞன் என்னுடைய மலேசிய அலுவலகத்தில் பணியாற்றினார்.கடந்த வரு…
-
- 46 replies
- 2.4k views
-