Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் கருத்துக்களை கூறுவார் எனும் எதிர்ப்பார்ப்புடன் வலி.வடக்கில் இருந்து கடந்த 30 வருட காலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். அந்நிலையில் விளையாட்டரங்கை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இதனால் எதிர்பார்ப்புடன் இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 20ம் திகதி யாழில் நடைபெற்ற தேசிய நத்தார் தின நிகழ்வில் கல…

  2. பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கருத்து கணிப்பு வாக்கெடுப்பு தொடர்பில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூனுக்கு உதவுவதற்காக இலங்கையில் இருந்து நான்கு அமைச்சர்கள் பிரித்தானியா சென்றுள்ளனர். சுசில் பிரேமஜயந்த, ஹரின் பெர்ணான்டோ, ஹர்ச டி சில்வா மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே பிரித்தானியா சென்றுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை தவிர முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்கவும் பிரித்தானிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றில் இருந்து விலக வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக இந்த கருத்து கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத…

    • 11 replies
    • 634 views
  3. தீர்வுக்கான நேரம் நெருங்கி வரும் நிலையில் தமிழர் தரப்பு அதனை குழப்பக்கூடாது-இப்படிக்கூறுகிறார் ராஜித எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்தை விமர்சிக்கவும், சர்வதேசமட்டத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தவும் சர்வதேச ரீதியில் கருத்துக்களை வௌிப்படுத்தவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு உரிமையுள்ளது என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களையோ, வடமாகாண முதலமைச்சரின் கருத்துக்களையோ அல்லது புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கருத்துக்களையோ முழுமையாக நடைமுறைப்படுத்தி தீர்வுகாண வேண்டும் என்ற தேவை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அனைத்த…

  4. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துரையப்பா விளையாட்டரங்கு திறப்பு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி வடமாகாண முதலமைச்சரை விழிக்காது தனது உரையை ஆரம்பித்திருந்தமை பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே ஒர் சலனத்தையும் ஏற்படுத்தியிருந்ததுடன், ஜனாதிபதி வேண்டுமென்றே இவ்வாறு செயற்பட்டாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவின் உதவியில் துரையப்பா விளைராட்டரங்கு மீள் நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் அதனை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்ததுடன் செய்மதி மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்…

    • 0 replies
    • 246 views
  5. ஈழ விடுதலை போராட்டத்தின் போது ஆயுதம் ஏந்தி போராடிய அந்த போராட்ட இயக்கங்களில், ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கின்றமையின் போது ஓர் அரசியல் நீரோட்டங்களுக்கு அப்பால் போராளிகளை வளப்படுத்தி கொண்டு வந்ததில் முதன்மை வாய்ந்த இயக்கமாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயற்பட்டு வந்துள்ளதாக அந்த அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் தோழர் க.பத்மநாபா மற்றும் போராளிகளின் 26 வது நினைவு தினம் நேற்று காலை மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது. மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலை…

    • 0 replies
    • 226 views
  6. வெயாங்கொட-வெடக்ஸ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையை அகற்றக் கோரி ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆயுதக் களஞ்சியசாலையினை அகற்றி இந்தப் பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஒரு இலட்சம் கையெழுத்து பெறும் நடவடிக்கையானது நேற்றைய தினம் வெயாங்கொட நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஆயுதக்களஞ்சியசாலையை சூழவுள்ள 4 கிலோ மீற்றருக்குள் வசிக்கும் விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட மக்கள் இதனை அகற்றக் கோரும் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 வருடங்களுக்கு முன்னைய ஆட்சியானது மக்களின் எதிர்ப்புக்களை கவனத்திற் கொள்ளாமலும், மக்களை அச்…

    • 0 replies
    • 339 views
  7. யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு துரோகியின் பெயர் பலகையைக் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பா என்பவரின் பெயரை சிங்கள அரசு சூட்டி, இந்தியப் பிரதமர் மோடி அவர்களைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் இரையானது வருந்தத்தக்கதாகும். 1975-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பர்ட் துரையப்பா தீவிர முயற்சி செய்தார…

    • 0 replies
    • 260 views
  8. இலங்கை இராணுவத்தினர் பலருக்கு எதிராக காணப்படுகின்ற அரசியல் குற்றச்சாட்டு தொடர்பில் நிவாரண ரீதியான கொள்கை ஒன்றை கடைபிடிக்குமாறு, இராணுவ தளபதி கிரிஹாந்த டி சில்வா, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இராணுவ தளபதி சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சென்று சட்டமா அதிபரை சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். தற்போது வரையில் இராணுவத்திற்கு பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தை நடத்தி செல்வதற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என இராணுவ தளபதி சட்டமா அதிபாரிடம் கூறியுள்ளார். அத்துடன் கடந்த கால குற்றங்கள் தொடர்பில் இராணுவத்தினரை சந்தேக நபர்கள் என பெயரிட வேண்டாம் என கோரிக்கை விடுத…

  9. உக்ரைன் செல்கிறார் மங்கள சிக்குவாரா வீரதுங்க? உக்ரைனுடன் குற்றவாளிகளை பறிமாற்றிக்கொள்ளும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், உக்ரைனில் மறைந்து வாழ்வதாக நம்பப்படும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்யும் நடவடிக்கைகளை இலங்கையின் நீதித்துறை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளிகளை பரிமாற்றிக்கொள்ளும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்த வாரம் உக்ரைன் நோக்கி செல்லவுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப…

  10. ஒரே நாளில் இலங்கையை சுற்றி வரும் விழிப்புணர்வு பயணத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் இயற்கையை பாதுகாத்தல், சுற்றுச் சூழலை வளமாக்குதல் தொடர்பிலான விழிப்புணர்வு பயணத்தை, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்துள்ளனர். இதில் வவுனியாவைச் சேர்ந்த பிரதாபன் மற்றும் இமயவன் ஆகிய இரு இளைஞர்களே ஒரே நாளில் 1,320 கிலோ மீற்றர் பயணம் செய்து இலங்கையை சுற்றிவர உள்ளனர். இவர்களது சாதனைப் பயணத்தினை வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா மற்றும் ஆர்.இந்திரராஜா ஆகியோர் பொன்னாடை போர்த்திக் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர். மேற்படி இந்தப் பயணம் தொடர்பாக இளைஞர்களான த.பிரதாபன்…

  11. "இலங்கை அரசின் சம்மதத்துடன்தான் கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, இந்தத் தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதிலிருந்து இலங்கை அரசு விலகிச்செல்ல சர்வதேச நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது.'' - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 32ஆவது கூட்டத்தொடர் கடந்த 13ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியது. அடுத்த மாதம் முதலாம் திகதி வரையில் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பில் 29 ஆவது கூட்டத்தொடரில் (கடந்த மார்ச் மாதம்) தீர்மானம் …

    • 4 replies
    • 323 views
  12. தெற்கில்-கம்மன்பில,வடக்கில் சிவாஜிலிங்கம்- சாடுகிறார் டிலான் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெற்கில் எதிர்ப்பு வெளியிட்டு வருவதைப் போன்று, வடக்கில் சிவாஜிலிங்கம் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஜெனீவா விவகாரம் குறித்து ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே, இராஜாங்க அமைச்சர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். உள்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் எழுந்தபோதும், சர்வதேசத்தில் இலங்கைக்கு நற்பெயர் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த டிலான், தற்போதைய ஜெனீவா விவகாரமும் இலங்கைக்கு சாதகமானதாக மாறிவிடும் என்பதில் எவ்வித மாற்றுக் கர…

    • 2 replies
    • 306 views
  13. இ.தொ.காவின் அமைச்சு பதவிகள் தொடர்பில் யாரும் தலையீட வேண்டாம்.! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்குவதாக தகவல்கள் பரவி வருகின்றது. இந்த அமைச்சு பதவிகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யாரிடமும் கேட்கவில்லை. அமைச்சு பதவிகளை கொடுப்பதற்கு முன்பே சிலர் இதனை கொடுக்க வேண்டாம் என விமர்சிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் இதில் தலையீட வேண்டாம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் வழியுறுத்தியுள்ளார். கொட்டகலையில் அமைந்துள்ள இ.தொ.காவின் தொழிற்பயிற்சி கேட்போர் கூடத்தில் வைத்து இன்று ஊடகவியலாளர்களினால் எழுப்பிய கேள்விகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர…

  14. அரசாங்கத்தின் உயர்மட்ட ஆட்சியாளர்கள் தான் 18 பில்லியன் டொலர்களை கொள்ளையிட்டுள்ளதாக சில சந்தர்ப்பங்களில் கூறியுள்ளதாகவும் தான் ஒரு டொலரையாவது திருடியதாக நிரூபித்தால் கழுத்தை அறுத்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜப்பான் டைம்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனை கூறியுள்ளார். மேலும் எதிர்கால அரசியல் வாழ்க்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெற மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை தனக்கு எதிராக திசை திருப்பியதன் காரணமாகவே தான் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் கூற…

    • 1 reply
    • 313 views
  15. "ஒரு சமரசமான சில விட்டுக் கொடுப்புகளுடன் கூடிய அரசியலமைப்பே ஈற்றில் எமக்கு கிடைக்கும்" நடராஜா குருபரனின் நேர்காணலில், கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ண:- GTBC.Fm விழுதுகள் நிகழ்ச்சிக்காக கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்னவை நடராஜா குருபரன் அங்கிலத்தில் கண்ட நேர்காணலின் தமிழ் வடிவம்:- குருபரன்: முதலில் நான் ஒரு பொதுவான கேள்வியுடன் நேர்காணலை ஆரம்பிக்கின்றேன். நீங்கள் இலங்கையின் அரசியலமைப்பு தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர். இந்த நவீன உலகின் தேவைக்கேற்றாற் போல அமைய, எவ்வாறான சவால்களை இலங்கையின் அரசியலமைப்பு முகம் கொடுக்கின்றது. இலங்கையில் உள் நாட்டுச் சிக்கல்களாக இனச்சிக்கல் மற்றும் மனித உரிமை குறித்த விடையங்கள் காணப்படுகின்றது. தற்போதைய அர…

  16. இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் , கோட்டா மீதும் விசாரணை-மக்ஸ்வெல் பரணகம கோரிக்கை அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பணியகம், இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் ராஜபக்ச, கோட்டாபய, சவேந்திர சில்வா போன்ற இரண்டாம் தரப்பினரையும் விசாரணை செய்ய வேண்டும் என்று மெக்ஸ்வல் பரணகம கோரிக்கை விடுத்தார். காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை மட்டுமே தமது ஆணைக்குழு விசாரணை செய்தது. எனினும் அவர்களால் குற்றம்சாட்டப்பட்ட பாதுகாப்பு தரப்பினரை விசாரணை செய்வதற்கான கால அவகாசம் தங்களுக்கு இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே இந்த விவகாரத்தில் தீர்வொன்றை பெற வேண்டுமாயின் காணாமல…

  17. முதலாவது அரசியல் பலிக்கடா! அரசாங்கத்தின் கூட்டு எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையில் முதலாவது அரசியல் பலிக்கடாவாக கம்மன்பில கருதப்படுகிறார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார். இதேவேளை, எதிர்காலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாகவும் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு விசாரணைகளை நடத்த கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்த சட்டத்தை கொண்டு வரும் தேவையும் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். …

  18. இவ்வருட இறுதிக்குள் வடக்கில் குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டில்! வடக்கில் இவ்வருட இறுதிக்குள் 90 வீதமான குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தப்படுமென, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உறுதியளித்துள்ளார்.. வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொலிஸ்மா அதிபர், நேற்று (சனிக்கிழமை) மாலை கிளிநொச்சிக்கு சென்றிருந்தார். இதன்போது சிவில் பாதுகாப்புக் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று, கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே பொலிஸ்மா அதிபர் மேற்குறித்த உறுதிமொழியை அளித்தார்.. இலங்கையில் குற்றச்செயல்களை 100 வீதம் குறைப்பதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ்மா அதிபர், வடக்கில்…

  19. சிறிலங்காவில் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எட்டு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்துக்கு, வரும், செவ்வாயன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் குமார தெரிவித்தார். புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள அடையாள அட்டையில், அனைத்து கைவிரல் அடையாளங்களையும் உள்ளடக்கிய உயிரியல் தகவல்கள் மற்றும் ஒளிப்படம் அடங்கிய இலத்திரனியல் அட்டை ஒன்று இருக்கும். 65 வயது வரை, ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இது புதுப்பிக்கப்படும். 65 வயதுக்குப் பின்னர் புதுப்பிக்கத் தேவையில்லை. இந்த அடையாள அட்டையி…

    • 1 reply
    • 413 views
  20. நயினாதீவில் நீராடிய மூவர் பலி நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழாவுக்கு சென்ற எட்டுப் பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று நயினாதீவு கடலில் நீராடிய போது, அதில் மூவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணம் கோண்டாவில் நாராயணன் கோவிலடியைச் சேர்ந்த இளைஞர்கள் மூவரே இவ்வாறு பலியாகியுள்ளனர். பலியாகிய இளைஞர்களில் இருவர் சகோதரர்கள் ஆவர். மூவரது சடலங்களுக்கும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/175054/நய-ன-த-வ-ல-ந-ர-ட-ய-ம-வர-பல-#sthash.XAhtdYPv.dpuf

  21. தனியான பிரதேச சபைக்காக 26 வருடங்கள் காத்திருக்கும் ஒட்டுசுட்டான் மக்கள்! முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானுக்கு தனியான பிரதேச சபை பிரிவு அமைக்கப்பட்டு தனியான அலுவலக சேவைக்காக 26 வருடங்களாக காத்திருப்பதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவின் முக்கிய பகுதியாக கருதப்படும் ஒட்டுசுட்டான் கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி, பிரதேச செயலாளர் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. இதன்போது, உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் என்ற பெயருடன் ஒட்டுசுட்டான் மேல்பற்று வடக்கு கிராம சபையின் கட்டிடத்தில் இப்பணியை அப்போதைய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடைமையாற்றிய காலஞ்சென்ற கந்தையா பொன…

  22. தரையிறங்க அனுமதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகளை, மீண்டும் அனைத்துலக கடற்பகுதிக்கு கொண்டு சென்று விடும் திட்டம் கைவிடப்படவில்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியா நோக்கிச் செல்லும் வழியில்,படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவில் தரைதட்டிய, அகதிகள் படகு கடந்த ஒரு வாரமாக கடலில் தத்தளித்து வந்தது. படகில் இருந்த அகதிகளை தரையிறங்க விடாது இந்தோனேசிய அதிகாரிகள் தடுத்து வந்தனர். அகதிகளை மீண்டும் அனைத்துலக கடற்பகுதிக்கு கொண்டு செல்லும் முடிவில் இருந்த இந்தோனேசியதாவுக்கு அனைத்துலக அளவில் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, படகில் இருந்த அகதிகளை தரையிறங்க இந்தோனேசியா நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து படகில் இருந்த அகதிகள் தரையிறக்கப்பட்டு, கடற்க…

  23. முன்னாள் ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதிக் கிரியை நிகழ்வில் ஜேவிபி சார்பில் எவருக்கும் அஞ்சலி உரை வழங்கப்படாததன் காரணமாக இறுதி நிகழ்வுகள் இடம்பெற முன்னரே ஜேவிபி உறுப்பினர்கள் அனைவரும் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றதாக தெரியவருகிறது. இறுதிக் கிரியை நிகழ்வில் ஜேவிபி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சோமவன்ச அண்மையில் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் சேவை கட்சி மற்றும் தேசிய சுதந்திர முன்னணி இணைந்து இறுதிக் கிரியை நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது ஜேவிபி சார்பில் எவருக்கும் அஞ்சலி உரை வழங்கப்படாத காரணத்தால் உறுப்பினர்கள் அனைவரும் வௌிநடப்புச் செய்தனர். சோமவன்ச அமரசிங்க…

  24. எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜப்பான் டைம்ஸுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்தக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். தாம், மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வரமுயற்சித்த போதும் அதற்கு தடையேற்பட்டது. எனினும் பிரதமர் நிலைக்கு போட்டியிட தடையில்லை என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஒய்வு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இறுதிப்போர் தொடர்பாக கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ச, நிலைமையை வேலுப்பிள்ளை பிரபாகரன் தவறாக எடை போட்டுவிட்டதாக தெரிவித்தார். எனினும் விடுதலைப்புலிகள் மீளிணைவதை தடுப்பதில் தற்போதைய அரசாங்கம் தவறி வருவதாகவும் அவர் சுட்டிக்க…

  25. யாழ்ப்பாணம், மயிலிட்டியை 12 ஆம் திகதிக்குள் விடுவிக்காவிடின் மக்கள் போராட்டம் வெடிக்கும் என கூறிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இன்றைய தினம் யாழ் விஜயம் செய்த ஜனாதிபதி மயிலிட்டி, வலிவடக்கு மீள்குடியேற்றம் என்பன தொடர்பில் எந்தவொரு சாதக பதிலையும் வழங்காத நிலையில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தநிலையில், கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின் மகளின் பிறந்த நாளில் ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளார். http://www.tamilwin.com/events/01/108139

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.