ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
வேட்பாளர் பட்டியலில் 30 வீதம் பெண்கள் – மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம்! வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 30 சதவீத இடமளிக்கும் வகையில், மாகாணசபைகள் தேர்தல் சட்டம் திருத்தப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளது. கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட இணை அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக, “வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 30 சதவீத இடமளிக்கும் வகையில், 1988ஆம் ஆண்டின் 2ஆவது இலக்க மாகாணசபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பான சட்டமூலத்தின் வரைவு மா…
-
- 1 reply
- 318 views
-
-
இலங்கை மீதான தடையை முற்றாக நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியத்தால் நாட்டின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட முழுமையான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கும் சந்தர்ப்பத்தில் சர்வதேச சட்டங்களை மீறுவதாக கூறி மீன் ஏற்றுமதி தடையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 3 வருடங்களாக விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7661
-
- 0 replies
- 329 views
-
-
போர் நடந்த காலகட்டத்தில் வட மாகாணத்தில் கல்வி நிலை முன்னேற்றம் கண்டிருந்து, எனினும் தற்போது கல்வி நிலை வீழ்ச்சி கண்டு வருகிறது என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பரந்தன் தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். வட மாகாணத்தில் கல்வி நிலை வீழ்ச்சியடைவதானது கவலைக்குரிய விடயம். அத்துடன் வடக்கில் கலாச்சார சீரழிவு மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுகிறது. வடக்கில் அதிகளவான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள போதிலும், படையினரால் மக்கள் பாதுகாக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=…
-
- 3 replies
- 577 views
-
-
மாணவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு, கல்குடாக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அல்லது அவர்களுக்கு பதிலீடாக ஆசிரியர்களை இவ்வித்தியாலயத்தில் நியமிக்க வேண்டும் என்று கோரி அவ்வித்தியாலய மாணவர்களும் பெற்றோரும் இன்று காலை வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான நெடுஞ்சாலையை வழிமறித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதால், சிறிது நேரம் இந்நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. குறித்த பாடசாலையில் கற்கின்ற 425 மாணவர்களுக்கு ஒன்பது ஆசிரியர்களே கற்பித்து வந்தனர். இந்நிலையில், இந்த ஆசிரியர்களில் இரண்டு பேருக்…
-
- 2 replies
- 590 views
-
-
கடந்த 13ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா.மனித உரிமை சபை 32வது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பில், ஈழத் தமிழர்கள் தொடர்பில் பேசப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அங்கு ஈழத் தமிழர்கள் பற்றிய நிகழ்ச்சிநிரல் காணப்படவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் இலங்கை சென்றிருந்த, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்துக்கான ஐ . நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசேட பிரதிநிதி மொனிக்கா பின்ரோ அவர்கள் நேற்றைய தினம் உரையாற்றுகையில், தன்னுடைய இலங்கை விஜயம் சிறப்பாக அமைந்ததாகவும், தனது விஜயத்தில் சித்திரவதை மற்றும் கொடூரமான அல்லது மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் தண்டனைத் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜுஹான…
-
- 0 replies
- 201 views
-
-
கைபேசி பாவனையில்முன்னுதாரணமான ஜனாதிபதி! நாட்டில் ஜனாதிபதி மட்டுமே கையடக்கத் தொலைபேசியை சரியான முறையில் பயன்படுத்துவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்தே இதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடற்றொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கலந்துரையாடல்களுக்கு வரும் போது ஒரு சிலருடைய தொலைபேசிகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக கலந்துரையாடல்களை மேற்கொள்வது கடினம். ஜனாதிபதி தனது அலுவலகத்துக்கு வந்தவுடன் தனது கையடக்கத் தொலைபேசியை நிறுத்தி வைத்து வி…
-
- 0 replies
- 312 views
-
-
அமைச்சர்களின் வாகனங்களை மறித்து அரநாயக்கவில் ஆர்ப்பாட்டம் மண்சரிவால் பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என கோரி,அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா,கபீர் ஹாசிம் ஆகியோரின் வாகனங்களை மறித்து அரநாயக்க பகுதியில் வைத்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த அமைச்சர்கள்,அரநாயக்க சுகாதார வைத்திய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற போதே அரநாயக்க மண்சரிவால் பாதிக்கப்பட்ட நபர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை காணப்பட்டதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டது. http://www.virakesari.lk/article/7654
-
- 0 replies
- 187 views
-
-
சோமவன்ச அமரசிங்கவின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது (படங்கள் இணைப்பு) மறைந்த முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் உடலை அவரது உறவினர்களிடம் கையளிக்க வேண்டுமென கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். வெலிக்கடை பொலிஸாருக்கு குறித்த உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளார். இவரது இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிஸ கட்சி மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றன. இதேவேளை சோமவன்ச அமரசிங்கவின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்லி செலுத்தி வருகின்றனர். http://www.virakesari.lk/article/7655
-
- 0 replies
- 1.2k views
-
-
பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் பிரதமர் பதிலளிப்பார் வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தை மாகாணசபை தீர்மானித்திருந்தாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒருவாரத்தில் பதில் அளிப்பாரென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்தின் இடத்தெரிவு குறித்து பேசப்பட்ட போதே இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், மத்திய அரசாங்கத்தினால் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க வடக்கு விவசாய அமைச்சு அனுமதி மறுத்துள்ளது. இதனால் அத…
-
- 0 replies
- 349 views
-
-
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு தமது நாடு உதவும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. பிரான்ஸின் தூதுவர் ஜீன் மரின் செக்குஹ் Jean Marin Schuh. இதனை தெரிவித்துள்ளார் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம்,: மனித உரிமை தொடர்பான விடயங்களில் கவனம்செலுத்தி வருகிறது. இந்தநிலையில் அந்தநாட்டுடன் உறவுகளை விருத்தி செய்து கொள்ள விரும்புவதாக பிரான்ஸ்தூதுவர் குறிப்பிட்டுள்ளார். வாக்குறுதிகளை எழுத்தில் மாத்திரமல்லாமல் இலங்கை அரசாங்கம் செயலிலும் காட்டுகிறது. இதற்கு காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் ஒன்றை அமைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளமையும் ஒன்று உதாரணம் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/politics/01/107849
-
- 2 replies
- 367 views
-
-
காளி கோவிலை பிள்ளையார் கோவிலாக மாற்றிய இராணுவம் யாழ்.காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி வளாகத்தினுள் இராணுவத்தினர் புத்தர் சிலையினை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர். அத்துடன் அங்கு இருந்த காளி கோவிலையும் பிள்ளையார் கோவிலாக மாற்றி உள்ளனர். யாழ்.நடேஸ்வரா கல்லூரி மற்றும் யாழ்.நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைககளும் 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி முதல் உள் நாட்டு யுத்தம் காரணமாக சொந்த கட்டடங்களில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அப்பகுதியினை கடந்த 26 வருடகாலமாக இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பு வலயமாக பிரடகனப்படுத்தி இருந்தனர். அதன் போது பாடசாலை வளாகத்தினுள் இருந்த காளி கோவிலின் பின்புறமாக இருந்த அரச மர…
-
- 0 replies
- 645 views
-
-
கடுமையான நடவடிக்கை எடுங்கள் : நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் ஒழிந்து அமைதி நிலவுகின்ற இக்காலப்பகுதியில் அமைதியை சீர்குலைப்பதற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிதாக கடமையேற்றுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கோரிக்கை விடுத்தார். யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையேற்றுள்ள கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ், நீதிபதி முன்னிலையில் ஆஜராகிய போதே நீதிபதி இளஞ்செழியன் மேற்படி கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த நீதிபதி, யாழ்ப்பாணத்தில் கடந்த மாதங்களாக குற்றச் செயல…
-
- 0 replies
- 504 views
-
-
நீதிமன்றத்தில் மீன் ஏல விற்பனை -செல்வநாயகம் கபிலன் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் இன்று வியாழக்கிழமை (16) தீர்ப்பளித்தார். அத்துடன், இந்த மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 384 கிலோகிராம் மீன்கள், நீதவானின் உத்தரவுக்கமைய, நீதிமன்றத்தில் வைத்து நீதவான் முன்னிலையில் ஏல விற்;பனை செய்து, 64,500 ரூபாய் வருமானமும் பெறப்பட்டது. குருநகர் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்களும் 3 நாட்டு படகுகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி வேலணை கடற்பரப்பில் புதன்கிழமை (15) இரவு மீன்பிடித்துக்கொண்…
-
- 0 replies
- 591 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை எனவும் ஆனால் நாட்டில் நிலையான தீர்வை எட்டுவதற்கு தமிழ் மக்களின் தனிப்பட்ட அடையாளங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவின் வடக்கிற்குப் பயணம் செய்த ஐ.நாவிற்கான அமெரிக்காவின் தூதுவர் சமந்தா பவர் தனது அரசாங்கத்தின் பூகோள அரசியல் நலன்களின் மீதே அதிகம் கவனம் செலுத்துவதாகவும், ஆனால் நோர்வே நாடானது தமிழ் மக்களின் துன்பங்களை நன்கு புரிந்துள்ளதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சண்டே ஒப்சேவர் ஊடகத்திற்கு மின்னஞ்சல் மூலம் சி.வி.விக்னேஸ்வரன் ந…
-
- 0 replies
- 299 views
-
-
ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களை மேற்கொள்ள போதியளவு பணம் உள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது. அந்நிய செலாவணி ஒதுக்கம் குறைவடையவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் பணம் வரவுள்ளது. நாட்டுக்கு வரும் ஒவ்வொரு சதமும் நாட்டின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தப்படும். இதனிடையே, ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது, தற்போது அமெரிக்க டொலரின் பெறுமதி 144 ரூபாவாக காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http:…
-
- 0 replies
- 326 views
-
-
துருக்கியிடமிருந்து ரூ.4,999 கோடி கடனுதவி துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 350 மில்லியன் டொலர் (4,999.75 கோடி ரூபாய்) வழங்குவதற்கு துருக்கி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. துருக்கியின் எக்ஷிம் வங்கியின் ஊடாக இந்த கடன்தொகை வழங்கப்படும் என்றும் அதற்கான ஒப்பந்தம் இலங்கை - துருக்கிக்கு இடையில் விரைவில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவுலட் கவுசோக்லு மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இதுதொடர்பில் …
-
- 0 replies
- 326 views
-
-
சுவிட்ஸலாந்து நாட்டின் ஆட்சி முறை போலவே இலங்கையிலும் ஆட்சி முறைஅமைக்கப்பட வேண்டும் என வட மாகாண முதல்வர் சீ;வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த நாட்டில பெரும்பான்மையினரைப் போலவே சிறுபான்மையினருக்கும்அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அவ்வாறான ஆட்சி முறையே இங்கும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் சுவிட்ஸலாந்து மக்கள் தமது விருப்பத்தின் படி வாழ்வதற்கான சூழ்நிலைஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சுவிட்ஸலாந்தின் உயர்ஸ்தானிகர் ஹென்ஸ் வோக்கருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/polit…
-
- 1 reply
- 404 views
-
-
மட்டக்களப்பு- மாவடிவேம்பில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இராணுவ முகாமில் நேற்றுமாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த சுமார் 15 குண்டுகள்வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மாவடிவேம்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட இராணுவ முகாமில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக இராணுவத்தினரால் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடித்ததாகவும், முகாமை சுற்றி பெரும் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், குறித்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 300 views
-
-
ஆண்டுதோறும் நான்கு லட்சம்இலங்கையர்கள் இரத்ததானம் வழங்குவதாகவும், நாட்டின் சனத்தொகையில் நூறில் இரண்டு பேர் இரத்தம் வழங்குவதற்கு முன்வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். "உங்கள் ஒரு துளி இரத்தம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும்" எனும் தொனிப்பொருளின் கீழ் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உலகிலேயே இரத்த தானம் செய்பவர்களுள் இலங்கையர்கள் முன்னிலையில் உள்ளதாகவும், இதனால் இலங்கைக்கு அதிகம் கௌரவம் கிடைப்பதாகவும், இரத்த தானம் செய்வதற்கு சிங்களம், முஸ்லிம், தமிழ் என அனைத்து இனத்தினரும் ம…
-
- 0 replies
- 225 views
-
-
நீதிமன்ற உத்தரவை மீறி கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது கோட்டை லோட்டஸ் சந்தியில் வைத்து பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் தண்ணீர்தாரைப் பிரயோகம் மேற்கொண்டதில், பாதிக்கப்பட்ட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மூன்று மாணவிகள் கைது செய்யப்பட்டனர். களனி பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பிற்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்த போதும் கொழும்பு கோட்டையை நோக்கி பேரணி மேற்கொண்ட மாணவர்கள் மீது கோட்டை லோட்டஸ் சந்தியி…
-
- 3 replies
- 227 views
-
-
ஜெனீவா விவகாரத்தில் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை - ராஜித்த சேனாரட்ன ஜெனீவா விவகாரத்தில் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் இம்முறை ஜெனீவா விவகாரத்தை மிகவும் இலகுவாக கையாள்வோம். இலங்கையில் தற்போது சிறந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். எனவே ஜெனீவாவில் இம்முறை இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவிதமான நெருக்கடியும் ஏற்படாது. நாங்கள் அனைத்து விடயங்களையும் உரிய முறையில் கையாள்வோம். ஐக்கிய நாடுகள் சபை எமக்கு கால அவகாசத்தை வழங்கும் என நம்புகிறோம். நாம் சரியான முறையில் நல்லிணக்க வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல்…
-
- 1 reply
- 377 views
-
-
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் இன்னுமொருவர் இரகசிய சாட்சியம் கூற இருப்பதாகவும், சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் குறித்த மாணவியை 9வது சந்தேகநபர் கடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தமை தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக இவ் வழக்கை விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் குறித்த மாணவியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொண்ட போதே குற்றப்புலனாய்வு பிரிவினர் இவ்வாறு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது மன்றில் மாணவியின் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சுகாஸ், கடந்த இரு வழக்கு தவணைகளுக்கு முன்னர்…
-
- 0 replies
- 294 views
-
-
முன்னாள் பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாமின் வாழ்வு தொடர்பான வரலாற்றுப் பதிவான 'ஆறிப்போன காயங்களின் வலி' என்ற நூல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிடப்படவுள்ளது. போரில் விழுப்புண் அடைந்து ஒரு கண்ணையும், ஒரு கரத்தையும் இழந்த பெண் போராளியான வெற்றிச்செல்வியின் பட்டறிவுப் பகிர்வாக மலரும் இந்த நூலின் வெளியீட்டு விழாவில் வடக்கு மாகாண சபையின் போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். ஆசிரியை தனலெட்சுமி கிறிஸ்துராஜன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் போராளி மருத்துவர் தனேஸ்குமார் சத்தியபாமா சிறப்பு விருந்தினராகவும், சட்டத்தரணி ஆறுமுகம் ரக…
-
- 1 reply
- 449 views
-
-
சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் இதுவரையில் வழங்கப்படவில்லை என பொதுநிர்வாக அமைச்சின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் வீடுகள் உள்ள சில அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களையும் பயன்படுத்தி வரும் நிலையில், சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் சம்பந்தனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 100000 ரூபா முதல் 250000 ரூபா வரையிலான மாத வாடகையின் அடிப்படையில் அரசாங்கம் பல அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு வீடுகளைப் பயன்படுத்தும் பல அம…
-
- 3 replies
- 443 views
-
-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை பகுதியில் வைத்து பிரயாண பையில் மறைத்து வைத்த நிலையில் 06 கிலோ கிராம் கஞ்சாவுடன் பதினெட்டு (18) வயது இளைஞர் நேற்று (14.06.2016) இரவு 09.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.எஸ்.ஹேரத் தெரிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நேர கடமையில் பிறைந்துரைச்சேனை பகுதிக்குள் சென்ற பொலிஸ் குழுவினர் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய வீதியில் பிரயாண பொதியுடன் இளைஞர் ஒருவரை கண்டு சநதேகத்தின் பேரில் அவரது பிரயாணப் பையை சோதனையிட்ட போது அவரது பையில் பொதி செய்யப்பட்ட நிலையில் கஞ்சா இருந்ததைக் கண்டு குறித்த இனைஞனை கைது செய்துள்ளதுடன் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். கல்முனை – சாய்ந்த…
-
- 0 replies
- 222 views
-