Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் இணைந்திருக்கமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறினால் அது இலங்கைக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் 500 மில்லியன் நுகர்வோர் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கை விடவும் லண்டன் மிகப் பெரிய சந்தையாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது இலங்கை உள்ளிட்ட ஆசிய http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133136/language/ta-IN/article.aspx

  2. இளைஞன் மீது வாள்வெட்டு -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் வைத்து இளைஞர் மீது கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதலை செவ்வாய்க்கிழமை (14) மாலை மேற்கொண்டுள்ளது. அதில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்தனர். இராசாவின் தோட்டப் பகுதியைச் சேர்ந்த இராமசேகர் உசானந்தன் (வயது 19) என்ற இளைஞரே தலையில் படுகாயமடைந்துள்ளார். அரசடி பகுதியைச் சேர்ந்த குழுவொன்றுக்கும் கற்புலம் பகுதியைச் சேர்ந்த குழுவொன்றுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலே இந்த வாள்வெட்டுக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத…

  3. மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டி விஷேட பூஜை வலி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட மயிலிட்டி, ஊரணி, காங்கேசன்துறை, பலாலி, தையிட்டி ஆகிய பகுதிகளில் தற்போது மக்கள் மீள்குடியேற்ற வேண்டும் என்று வலியுருத்தி இன்று யாழ் வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இவ்வழிபாடு வலிவடக்கு பிரதேச மீள்குடியேற்றத்தலைவர் அ.குணபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் தழிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.சித்தார்த்தன் கலந்துகொண்டதுடன் மயிலிட்டி, ஊரணி, காங்கேசன் துறை, பலாலி, தையிட்டி ஆகிய பிரதேச மக்களும் கலந்துகொண்டனர். இதில் மக்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் எந்தியும் சிறப்பான வழிபாட்டினை செய்து…

  4. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், மலையக புதிய கிராமங்கள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.ஆறுமுகன் தொண்டமான் அரசாங்கத்தில் இணைந்து கொண்டாலும் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.நல்லாட்சி அரசாங்கத்தில் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப்பதவி வழங்கினால் அதனை தாம் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133148/language/ta-IN/article.aspx

  5. உலகில் இன்று பேசப்படுகின்ற தலைவர்கள் பலர் இருக்கின்றார்கள். அந்த வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆகியோரை குறிப்பிடலாம். அந்த வகையில் அதே நிலைமை எங்களுடைய வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸவரனுக்கு இருக்கின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படும் அருகில் உள்ள சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான தேசிய நிகழ்வு இன்று கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்கு முன்பதாக பரந்தன் தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகளில் பிரதம …

    • 0 replies
    • 364 views
  6. கந்தளாய் 98ஆம் குலனி பௌத்த விகாரையொன்றின் ஆறு வயதுடைய சிறிய பௌத்த துறவியொருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பௌத்த துறவி இருவரை இந்த மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் தம்மிக்க நேற்று (14) உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த 39 மற்றும் 17 வயதுடைய இரு பௌத்த துறவிகளே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கந்தளாய் 98ஆம் குலனி பௌத்த விகாரையில் ஆறு வயதுடைய பௌத்த துறவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக குறித்த துறவி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து குறித்த பெற்றோர் தம்பலகமம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று (14)காலையில் கைது செய்து அன்றைய தினமே பொ…

    • 0 replies
    • 284 views
  7. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். பகிடிவதை தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி இன்று களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடாத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டம் களனி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி ஜனாதிபதி செயலகம் வரை சென்றுள்ளது. இதன்போது ஜனாதிபதி செயலகத்தினுள் செல்ல முற்பட்ட வேளையிலேயே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதன்போது இரண்டு பெண்கள் உட்பட ஒரு ஆணுமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.…

    • 0 replies
    • 322 views
  8. இனவாதிகளுக்கு விக்கினேஸ்வரனே களம் அமைத்து கொடுக்கின்றார் விக்­கி­னேஸ்­வரன் தமிழ், சிங்­கள அடிப்­ப­டை வாதி­க­­ளுக்கு களம் அமைத்­துக் கொடுத்து பிரச்­சி­னை­களை சிக்­க­லாக்கும் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கிறார். வடக்கில் இரா­ணுவப் பிரசன்னம் படிப்­ப­டை­யாக குறைக்­கப்­படும். எதி­ர்­கா­லத்தில் அங்கு அகதி முகாம்­க­ளுக்கு இட­மில்லை. மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வார்கள் என்று சபை முதல்­வரும், உயர்­கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்­ச­ரு­மான லக்ஷ்­மன் கிரி­யெல்ல தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரி­விக்­கையில், நாட்டில் இன்று மனித உரி­மைகள், அடிப்­படை உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­கி­ன்­றன. அதே­வேளை கடந்த கால காட்டு தர்பார் இல்­லா…

    • 2 replies
    • 519 views
  9. சுமந்திரனும், சிறிலங்கா அரசின் தூதுவர் காரியவம்சமும் இணைந்து உத்தியோகபற்றற்ற குழு ஒன்றின் முன் பேச உள்ளார்கள். இந்த குழுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் தமிழருக்காக குரல் கொடுக்காமல் வழமைபோன்று சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குவார் என நம்பப்படுகின்றது. தமிழர் விடுதலைக்கு சுமந்திரன் புதியவர் என்பது எல்லோரும் அறிந்ததே. நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்து பங்காற்றியவர் மட்டுமன்றி சிங்கள அரசாங்கத்தினை பாதுகாப்பதில் முன்னணி வகித்ததுவும் எல்லோரும் அறிந்ததே. சுமந்திரனின் இந்த விஜயத்தின் போது இவர் சிறிலங்காவுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைப்பது மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விடை…

  10. வழக்கை முழுமையாக விசாரித்த பின்னரே டி.என்.ஏ அறிக்கை தொடர்பில் கூற முடியும் -எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அது பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே, மரபணு அறிக்கை தொடர்பில் கூற முடியும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் இன்று புதன்கிழமை (15) தெரிவித்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, கடந்த மே 18ஆம் திகதி வழக்கு தவணையில் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வழக்கின் மரபணு அறிக்கை தொடர்பில் விபரம் வெளியிடவேண்…

  11.  கல் வீசியவர்களுக்கு புதுமையான தண்டனை பொரளை பிரதேசத்தில் பள்ளிவாசல் மீது கல் வீசிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு 5 பேருக்கு புதுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பொரளை வஜீராராம விகாரையின் ஊடாக வழங்குமாறு 5 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி பொரளையிலுள்ள பள்ளிவாசல் மீது கற்களை வீசியதாக 5 நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்களிடம் இருந்து பெறப்படும் அபராதத் தொகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்;ட மக்களுக்கு நிவாரண பொருட்களை பெற்றுக்கொடுக்க பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது…

  12. சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல் -செல்வநாயகம் கபிலன் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுச் சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞனை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரீ.கருணாகரன், செவ்வாய்க்கிழமை (14) உத்தரவிட்டார். சிறுமியின் உறவுக்காரரான மேற்படி இளைஞடன் சிறுமிக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, இருவரும் பாலியல் ரீதியிலான உறவு வைத்துள்ளனர். இதனால் குறித்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். எனினும் சிறுமி கர்ப்பமடைந்து 4 மாதங்களுக்கு பின்னரே தெரியவந்துள்ளது. அதனையடுத்து, இது தொடர்பில் பிரதேசத்துக்கு பொறுப்பா…

  13. ஜோர்தான் பிரஜைக்கு மரணதண்டனை 16 கிராம் போதைப்பொருடன் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்ட, ஜோர்தான் பிரஜையை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்து இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது. ஜோர்தான் பிரஜையான அமிர் யுசூப் அல் சுதேன் என்பவருக்கே இவ்வாறு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. சந்தேகநபர், 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதியன்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.tamilmirror.lk/174754/ஜ-ர-த-ன-ப-ரஜ-க-க-மரணதண-டன-#sthash.Zmpz6B2j.dpuf

  14. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போது மஹிந்த ராஜபக்‌ஷ தரப்புக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் இந்த ஆதரவை விலக்கிக்கொண்டு தேசிய அரசாங்கத்துக்கு அக்கட்சி ஆதரவளிக்க தயாராகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டைமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியும் வேறொருவருக்கு பிரதியமைச்சர் பதவியும் வழங்கப்படவுள்ளன எனக் கூறப்படுகின்றது. தற்சமயம் 3 மாத விடுமுறையில் வெளிநாடு சென்றிருக்கும் தொண்டமான் விரைவில் நாடு திரும்பி ஜனாதிபதி, பிரதமரை சந்தித்துப் பேசிய பின்னர் அரசுடன் இணைவார் எனத் தெரிகிறது. இதேவேளை அண்மையில் நிதியமைச்சர் ரவி…

    • 0 replies
    • 344 views
  15. வெலே சுதாவுக்கும்-முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கும் இடையிலான தொடர்புசம்பந்தமாக மீள் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர்தெரிவித்துள்ளனர். போதைப் பொருள் வர்த்தகத்தில் பெரும்புள்ளியான வெலே சுதா பாகிஸ்தானில் வைத்துகைதுசெய்யப்பட்டு இங்கு அழைத்து வந்ததன் பிறகு குறித்த பொலிஸ்மா அதிபருடன்வெலே சுதாவுக்கு இருந்த தொடர்புகள் குறித்து தெரிய வந்ததாகவும், எனினும்குறித்த பொலிஸ்மா அதிபர் நாட்டை விட்டு தப்பிச்சென்று தற்போது இலங்கையில்சுதந்திரமாக உலாவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த பொலிஸ்மா அதிபருக்கு வெலே சுதா சொகுசு வீடொன்றை பெற்றுக்கொடுத்துள்ளமை தொடர்பில் அப்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். எனினும் க…

    • 0 replies
    • 223 views
  16. தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக, கடந்த மாதம் மீண்டும் பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா நேற்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். இதன்போது, 94 பக்கங்கள் அடங்கிய மனுவொன்றையும், இந்தியப் பிரதமரிடம் கையளித்தார். தமிழ்நாட்டின் தேவைகள், அளிக்கப்பட வேண்டிய வசதிகள், நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை உள்ளடக்கிய இந்த மனுவில், இலங்கைத் தமிழர் விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்…

    • 0 replies
    • 221 views
  17.  பலாலி பொலிஸ் நிலையம் மீள்குடியேற்ற பகுதிக்கு விரைவில் மாற்றப்படும் -செல்வநாயகம் கபிலன் தற்போது உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் அமைந்திருக்கும் பலாலி பொலிஸ் நிலையத்தை, இந்த வருட இறுதிக்குள் மக்கள் மீள்குடியேறிய பகுதிக்குள் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.டி.எஸ்.சி நிவுன்னில்ல தெரிவித்தார். சிவில் சமூகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் வசாவிளான் மத்திய மகாவித்தியாலத்தில் கிராமஅலுவலர் எஸ்.அனுரதன் தலைமையில், செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், …

  18. சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதில் எந்த பிரச்சினைகளும் எமக்கில்லை அரசு எமது உரிமைகளைத் தந்தால், சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதில் எந்த பிரச்சினைகளும் எமக்கில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜி ஸியாங் லியாங்கிடம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக சந்திப்பு நடைபெற்றது. இரண்டு நாடுகளுக்கிடையில் சரித்திர ரீதியாக நல்லுறவு பேணப்பட்டு வந்துள்ளது. இந்த உறவு தனித்து சில இனங்களுக்குள் இருக்காமல், முழு இலங்கையில் உள்ள அனைத்து இனங்களுக…

  19. வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுவைச் சோந்த 17 வயது மாணவி ஒருவரை காணவில்லை என நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலுமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரகுமார் கிருசாந்தினி (வயது 17) என்ற மாணவியே தனது தையல் பயிற்சி வகுப்புக்காக வவுனியாவிற்கு சென்று பொருட்களை வாங்கி வருவதாக கடந்த சனிக்கழமை சென்ற போதிலும் மீண்டும் வீடு வந்து சேரவில்லை என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு வரை சிறுமி வீடு வந்து சேராமையினால் தாம் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நெடுங்கேணி பொலி…

  20. இ.போ.ச. பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல்: மூவர் படுகாயம் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் பஸ்வண்டியில் பயணம் செய்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் தாளங்குடா பகுதியில் இடம் பெற்றுள்ளது. கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் மீதே தாளங்குடா பிரதான வீதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஸ் சேதமடைந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் சிலர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். காத்தான்குடி பொலிசார் விசாரண…

  21. இலங்கை புகலிட கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ள முகவர்கள் குறித்து ”கியூ” பிரிவு பெலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள இலங்கை புகலிட கோரிக்கையாளர் முகாம்களில் உள்ளவர்களை அவுஸ்திரேலியா அழைத்து செல்வதாகக்கூறி புதிய முகவர்கள் முகாம்களில் வலம் வருகின்றனர். அத்துடன், நள்ளிரவில் நாட்டுப்படகுகளில் புகலிட கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்று கச்சத்தீவில் இறக்கி விட்டு செல்வது வழக்கம். இவ்வாறு செல்கின்ற புகலிட கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியா செல்லும் திட்டத்தில் இருந்தார்களா? என்பது குறித்து கடலோர மாவட்டங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இலங்கை வழியாக எளிதில் அவுஸ்திரேலியா சென்ற…

    • 0 replies
    • 339 views
  22.  100 கிலோகிராம் கொக்கெய்ன் மீட்பு பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து, கொக்கெய்ன் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதைப் பொருட்களை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். மூன்று பயணப்பைகளிலிருந்து மீட்கப்பட்ட இந்த கொக்கெய்ன் 100 கிலோகிராம் நிறை கொண்டது என்றும் சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/174649/-க-ல-க-ர-ம-க-க-க-ய-ன-ம-ட-ப-#sthash.dZr72i0W.dpuf

  23. போர்க்குற்ற விசாரணையில் உள்நாட்டு நீதிபதிகளால் முன்னாள் ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர, ஈராக்கில் சதாம் உசைனை தூக்கு மேடைக்கு அனுப்பியது அவரால் நியமிக்கப்பட்ட உள்நாட்டு நீதிபதிகள் தான் என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மேற்குலக சதியாளர்களும், இந்தியாவும் அவர்களது அழுத்தங்களுக்கு கீழ்ப்படியும் ஸ்ரீலங்கா அரசாங்கமும் இணைந்து நாட்டை பிளவடையச் செய்வதற்கே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுகின்றது. இதுவே பிரதான இலக்காகும்.நல்லிணக்கம், சமாதானம் என்ற போர்வைய…

  24. "போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் " எனும் சொல்லுக்காக வடமாகாண சபையில் நீண்ட விவாதம்.. வடமாகாண சபையின் 53 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது முதலமைச்சரினால் , முதலமைச்சர் நிதி நியதி சட்டம் சபையின் அங்கீகாரத்திற்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நியதி சட்டம் தொடர்பில் விவாதங்கள் நடைபெற்று திருத்தங்களுடன் சபையில் எதிர்ப்பின்றி எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வழிமொழிய பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டது. குறித்த நியதி சட்ட விவாதத்தின் போது "போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் " என்னும் சொல்லுக்கு நீண்ட விவாதம் நடைபெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது. எம்.கே.சிவாஜிலிங்கதின் கருத்து . …

    • 3 replies
    • 254 views
  25. இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூற வேண்டுமென்பதே அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாடு என தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வால் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் பல விடயங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் உருவாக்கப்பட உள்ளமை வரவேற்கப்பட வேண்டியது. 2015ம் ஆண்டில் ஆட்சி அமைத்த புதிய அரசாங்கம் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கா…

    • 2 replies
    • 232 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.