Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தேர்தலில் களமிறங்கி இருந்தால் ஆரம்பத்திலேயே வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருப்பேன், ஆனால் தேசிய கட்சி ஒன்றின் ஊடாக போட்டியிட்டாலே மக்களிற்கான சேவையை செய்ய முடியும் என்பதற்காகவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை தெரிவு செய்ததாக பா.உறுப்பினர் அங்கஜன் லங்காசிறியின் மக்கள் பிரதிநிதிக்கு தெரிவித்தார். வடக்கில் இராணுவ முகாங்கள் குறைக்கப்பட வேண்டியதே காலத்தின் முக்கியம் எனவும் முற்றாக அகற்றப்படுவது அல்ல என்றும் கூறுகிறார். வடக்கில் இடம்பெறும் காணி விடுவிப்பு, மற்றும் இதர அபிவிருத்தி வேலைகள் தொடர்பான உண்மைக் கருத்துகள் தென்னிலங்கை மக்களிற்கு சென்றடைவதை தடுத்து, கருத்துக்களை இனரீதியாக திரிபுபடுத்தி, வடக்கு ம…

  2. இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் பல்வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றிருப்பதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்றில் வெளிவந்துள்ள இது தொடர்பான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகளின் முக்கிய படையணிகளில் பணியாற்றிய 54 முக்கியஸ்தர்கள் நான்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் முக்கியஸ்தரான யஸ்மின் சூக்கா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளின் முக்கிய படையணிகளான சோதியா, ராதா, இம்ரான் பாண்டியன் மற்றும் புலனாய்வுத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த முக்கியஸ்தர்களே இவ்வ…

  3. இந்தியாவின் நிதியுதவியில் சர்வதேச தரத்தில் புனரமைக்கப்பட்டுவரும் யாழ். துரையப்பா விளையாட்டரங்கை வடக மாகாண ஆளுநர் ரெஜிலோல்ட் குரே பார்வையிட்டார். விளையாட்டரங்கிற்கு நேற்று மாலை விஜயம் செய்த வடமாகாண ஆளுநர் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன் இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜாவிடம் புனரமைப்பு பணிகள் குறித்து கலந்துரையாடினார். இந்திய நிதி உதவியினூடாக 146 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இப்பணிகள் பூர்த்தியாகியுள்ளன. எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை துரையப்பா விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர். இந்திய பிரதமர் இந்த மைதானத்தை டெல்ல…

  4. தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம்... மு.இராமசந்திரன், ரஞ்ஜித்ராஜபக்ஷ உள்ளூராட்சிமன்ற தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினரொருவர், கினிகத்தேன பஸ் நிலையத்துக்கு முன்னால் தலைகீழாக நின்று, இன்று (14) ஆர்ப்;பாட்டத்தில் ஈடுபட்டார். உள்ளூராட்சி மன்றங்கள், நகரசபைகள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டதெனவும் இனியும் காலம் தாழ்த்தாது தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவருடன் இணைந்து ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைவிடுத்தனர். அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள்; உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர…

  5. VIP அட்டையை அகற்ற மறந்த உறுப்பினர் -எம்.றொசாந்த் ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் சென்றிருந்தார். அதன்போது, மிக முக்கிய நபர் என்பதை அடையாளப்படும் VIP அட்டையொன்று அவருக்கு வழங்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர், தனக்கு வழங்கப்பட்ட VIP அட்டையை தனது காரில் முன்புற கண்ணாடியில் ஒட்டினார். அதனையடுத்து, தனது குடும்பத்தினருடன சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தித்துவிட்டு ஊருக்கு திரும்பினார். இந்நிலையில், அவர் தனது காரில் ஒட்டிய VIP அட்டையை அகற்ற மறந்துவிட்டார் போலும். அன்று ஒட்டப்பட்ட VIP அட்டை இன்றும் அவரது கார…

  6. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மற்றும் பௌத்தவிகாரைகள் அமைக்கும் செயற்பாடுகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள சிலர் துணைபோவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்றுவருகின்ற சிங்கள குடியேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படுகின்ற தற்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்ட பல நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பின்னணியிலும் கூட்டு எதிர்க்கட்சிகளின் பின்னணியிலும் திட்டமிட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திடீரேன நீண்ட நாட்களுக்கு பின் இன்ற…

    • 0 replies
    • 268 views
  7. ஒரு புத்த துறவியின் வழிப்படுத்தலுடன் சிங்கள கிராமத்து மக்கள் பஸ் வண்டிகளில் வடபகுதிக்கு சுற்றுலா வருகின்றனர். வருகின்ற சுற்றுலாப் பயணிகள் வெளியிடத்தில் சமைத்து ஒற்றுமையாக இருந்து உண்டு மிக்க மகிழ்வுடன் தமது சுற்றுலாப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்கின்றனர். ஒரு கிராமத்து சிங்கள மக்கள் தங்கள் உறவுகள், அயல்வீடுகள், சுற்றம் என ஒன்று சேர்ந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு ஒரு இடத்தில் இருந்து சமைத்து எல்லோரும் ஒன்றாகக் கூடி உண்டு மகிழ்வது போல எங்களால் செய்ய முடியுமா? அவ்வாறு ஊர் கூடி சுற்றுலாச் சென்றிருக்கிறோமா? இப்படி கேள்வி எழுப்பினார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள். கிராம சேவையாளர் ஒருவரின் பிர…

    • 0 replies
    • 1.5k views
  8.  மாணவன் மீது தாக்குதல் : கூரையில் இருந்தவர் சிக்கினார் -செல்வநாயகம் கபிலன் மீசாலை - புத்தூர் சந்திப் பகுதியைச் சேர்ந்த பஞ்சாட்சரமூர்த்தி பரணிதரன் (வயது 17) என்ற மாணவன் மீது, கொடிகாமம், இராமாவில் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர், தன்னுடைய வீட்டின் கூரையின் மீதேறி ஒளிந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுளார் என்று கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க என் பண்டார தெரிவித்தார். குறித்த மாணவன் மீது இளைஞர் குழுவொன்று, திங்கட்கிழமை (13) தாக்குதல் நடத்தியுள்ளது. அதில், படுகாயமடைந்த மாணவன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

  9. பயன்தரு மரங்கள் களவாடப்படுகின்றன நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை மேற்கு பகுதியில் மக்கள் குடியேற்றம் செய்யப்படாத பகுதிகளில், மக்களின் காணிகளில் உள்ள வேப்பமரங்கள், பனைமரங்கள் போன்றவை வெட்டப்பட்டு களவாடப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதி அரியரட்ணம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'மிதிவெடிகள் உள்ள பகுதியென அடையாளப்படுத்தப்பட்டு மிதிவெடி அகற்றல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதியில் இவ்வாறு மரங்கள் களவாக வெட்டிச் செல்லப்படுவதால், மிதிவெடி அகற்றுபவர்களுக்கும் களவாக மரங்கள் வெட்டுபவர்களுக்கும் தொடர்புகள் உண்டா என்பது தொடர்பில…

  10. வவுனியா, ஓமந்தைப் பகுதியில் வசித்து வரும் என்.என்.ஜக்சன் (வயது 30) என்ற இளைஞனால் மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி இயங்கக் கூடிய தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது 10 வயதில் இருந்து சூழலுக்கு பாதிப்பில்லாத இயந்திரங்களை கண்டு பிடிப்பது தொடர்பில் ஆர்வம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளைஞன், இது வரை 21 கண்டுபிடிப்பிடிப்புக்களை செய்துள்ளதாகவும், அவற்றின் தொழில்நுட்ப உரிமத்தை விற்பனை செய்ய தான் ஆர்வமாக உள்ள போதும் நிறுவனங்கள் பல அதனை வாங்க முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை விசேட தேவைக்குட்பட்டோருக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட மலசலகூட தொகுதியின் தொழில்நுட்ப உரிமத்தை இந்திய நிறவனம் ஒன்று…

  11. ஜனாதிபதி ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என சிறீரெலோ இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்தும், இதுவரையில் அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நடைபெற்று முடிந்ததேர்தலின் போது, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும…

  12. இனப்படுகொலைக்கான நீதியில்தான் ஈழத் தமிழரின் இருப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்: (UNHRC இன் 32 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இலங்கை தொடர்பில் பேரவையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது பிரேரணையின் முக்கிய விடயமாக கருதப்பட்டது. இந்தப் பிர…

    • 0 replies
    • 371 views
  13. இலங்கை குறித்­த அறிக்­கையை எதிர்­பார்த்­தி­ருக்­கி­றோம் : ஜெனி­வாவில் ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை விவ­காரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை கள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் வாய்­மூல அறிக்­கையை நாங்கள் எதிர்­பார்­த்தி­ருக்­கின்றோம். அதன் பின்னர் ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை தொடர்­பான விப­ர­மான அறிக்­கையை முன்­வைக்கும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரொடரிக் ச்ரிவேன் தெரி­வித்தார். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 32 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­னது. அதில் உரை நிகழ்த்­து­கை­யி­லேயே ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரொடரிக் ச்ரிவேன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். …

  14. கரப்பான்பூச்சியை கண்டு பயந்த ஹொங்கொங் நாட்டு பெண்ணுக்கு உதவுவது போல் அவருடன் பாலியல் சேட்ட்டையில் ஈடுபட்ட ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. சுண்டுக்குழி பகுதியில் வங்கி முகாமையாளர் ஒருவர் வீட்டின் அறைகளை வாடகைக்கு கொடுத்துள்ளார். அங்கு தங்கியிருந்த ஹொங்கொங் நாட்டு பெண் ஒருவர் அறைக்குள் கரப்பான்பூச்சியைக் கண்டுள்ளார். அலறியடித்துக்கொண்டு அங்கிருந்த ஊழியரிடம் இதனை தெரிவித்துள்ளார். பின்னர் கரப்பான்பூச்சிக்கு மருந்து அடிக்க வந்த இளைஞர் பெண்ணை கட்டிப் பிடித்து தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த போது, அப் பெண்மணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அத்துடன், குறித்த வீட்டிற்கு பொலிஸார் …

  15. கூடிக் கலந்து தீர்மானங்களை எடுக்காமல் தான்தோன்றித்தனமாகத் தீர்மானங்களை எடுப்பதால் தான் சமூகம் மற்றும் கட்சிப் பிரிவினைகள் ஏற்படுகின்றது என தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாம் கூறுபவற்றை மற்றவர்கள் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இன்னொரு வரும் அவ் வாறே தீர்மானித்து எதிர்பார்க்கின்றார். இதுவே முரண்பாடுகளை அதிகம் வளர்க்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். வடலியடைப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையின் கீழ் இயங்கும் அறிவகம் கணனிக் கல்வி நிலையத்தில் கணனி மென்பொருள் ஆரம்பக் கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவ மாணவிகளு க்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் நேற்றைய தினம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெர…

    • 0 replies
    • 313 views
  16. முகப்புப் புத்தகம் மற்றும் கூகுள் நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சிறீலங்காவுக்குப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் சாலக ரத்நாயக்கவின் அழைப்பையேற்றே மேற்படி நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களான மார்க் சூக்கம்பேர்க் மற்றும் சுந்தர்ப்பிச்சை ஆகியோரே சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். http://thuliyam.com/?p=30175

    • 0 replies
    • 297 views
  17. 1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட போது, மேலிடத்து அரச உத்தரவின் பேரில் ஆயுதங்கள் தம்வசமிருந்தும் விடுதலைப்புலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடமிருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைத்து விட்டு, சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் தமிழ் பேசும் சமூகத்தைச்சார்ந்த முஸ்லிம்களாவார்கள். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச புதிய ஆயுதங்களை கிழக்கு பொலிஸ் நியங்களுக்கு வழங்கி, ஒரு வாரத்தில், கிழக்கு விடுதலைப்புலிகளின் கட்டளைத்தலைமைகளான கருணா அம்மான் மற்றும் கரிகாலன் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்க, 800 பொலிஸ் பாதுகாப்புப் படையினரின் உயிர் தாரை வார்க்கப்பட்டது. சரணடைந்தவர்கள் திருக்கோவில் பகு…

    • 0 replies
    • 345 views
  18. இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மறு சீரமைப்பு முயற்சியில் மக்கள் கருத்தறிவதற்காக உருவாக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பு பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி மக்கள் கருத்தறியும் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றதன் பின்னர் அரசாங்கம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சியினை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மக்களுடைய கருத்துக்கள் அறிந்து கொள்வதற்காக மக்கள் கருத்தறியும் குழு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த குழு தமது பணிகளை நிறைவு செய்து தமது இறுதி அறிக்கையை அரசியலமைப்பு பேரவையிடம்…

    • 0 replies
    • 279 views
  19. யாழ்ப்பாணம் - ஆவரங்கால் சிவன்கோவிலுக்கு அருகில் பருத்தித்துறை வீதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஊனமுற்ற வயோதிபர் உற்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வயோதிபர் ஒருவர் ஊனமுற்றோருக்கான மூன்று சில்லு சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும் சம்பவ இடத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவரும் படுகாயமுற்றதால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், வீதியோரம் காயங்களுடன் இருந்த ஊனமுற்ற வயோதிபருக்கு ச…

  20. (பிரான்ஸ் தமிழர் உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன், ஐரோப்பாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். கடந்த 25வருடங்களுக்கு மேலாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவங்களை உடைய கிருபாகரன் இலங்கை தமிழர் விடயத்தில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் அண்மைக்கால நிலைப்பாடுகள் பற்றி வழங்கிய விசேட செவ்வி ) கேள்வி - கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்பது மாதங்கள் கடந்துள்ளன. இதில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? பதில் - எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் சர்வதேச சமூகத்திற்கு ஏதோ செய்கிறோம் என்பதை காட்டுவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தந்த…

    • 0 replies
    • 312 views
  21. வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என கண்டி அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வராகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மகாநாயக்கரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று சந்தித்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியதனைத் தொடர்ந்து வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. எனினும் வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது. இராணுவ முகாம்களை அந்தந்த இடங்களில் பாராமரிப்பதன் மூலம் நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்து கொள்ள முடியும். நாட்டின் அனைத்து இன சமூகங்களுடனும் புரிந்துணர்வுடன் செயற்படுதல் உலக நாடுகளுடன் நட்புடன் செயற்படு…

  22. மேர்வினுக்கு 40 வருடங்கள் சிறை குடு மேர்வின் என்றழைக்கப்படும் வேலாயுதன் மெனியஸூக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக இனங்கண்டு, அவருக்கு தலா 20 வருடங்கள் என்றடிப்படையில் 40 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. - See more at: http://www.tamilmirror.lk/174594/ம-ர-வ-ன-க-க-வர-டங-கள-ச-ற-#sthash.GH2mxqn0.dpuf

  23. ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த அனைத்து இலங்கையர்களும் பங்களிப்பு செய்ய வேண்டும் - அல் ஹூசெய்ன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அனைத்து இலங்கையர்களும் அர்த்தபூர்வமான பங்களிப்பினை வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். தீர்மானங்களை அமுல்படுத்தும் போது அனைத்து இலங்கையர்களதும் பங்களிப்பது அவசியமானது என இன்றைய தினம் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகளின் ஆரம்ப உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால நீதி முழு அளவிலான தந்திரரோபய அடிப்படையில் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென தெரிவித்துள்…

  24. பசில் ராஜபக்ஸ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த கடந்த கால ஆட்சியின் போது, அவரது விலை மதிப்பான நாய்கள் இரண்டை பராமரிக்கும் பொறுப்பானது 6 இராணுவ சிப்பாய்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய்கள் பசிலின் நாய்களை பராமரித்தல், உணவுகளை வழங்குதல், மருந்து கொடுத்தல் சொல்லும் கட்டளைகளுக்கு கீழ் பணிய வைத்தல் போன்ற பயிற்சிகளை வழங்கி வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சிப்பாய்கள் 'நாய் அணி' என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பசில் ராஜபக்ஸ கோல்டன் ரிட்ரிவர் எனும் இனத்திலான நாயை அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் இதன் பெறுமதி 7 இலட்சம் ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில…

    • 0 replies
    • 334 views
  25. கடந்த சனிக்கிழமை இலங்கையில் இருந்து சென்ற 44 அகதிகள், தாம் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேஷியாவில் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்க இந்தோனேஷிய அதிகாரிகள் தீர்மானம் எடுத்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டுள்ளதாக லோக்ங்க (Lhoknga) மாவட்ட இராணுவத் தலைமை அதிகாரி தாருல் அமிக் தெரிவித்துள்ளார். குறித்த படகை சோதனைக்குட்படுத்திய போது முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய் ஒருவர் இருந்ததாகவும், தகுந்த பயணச்சீட்டுகள் கூட இவர்களிடம் இல்லை எனவும் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இல…

    • 0 replies
    • 359 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.