Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம் ( ரி. விரூஷன் ) யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தனது கடமையை இன்று காலை பொறுப்பேற்றார். இன்றைய தினம் சனிக்கிழமை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் சர்வமத ஆசிர்வாதத்துடன் தனது கடமையை பொறுப்பேற்றார். இலங்கை முழுமைக்குமான ஒழுக்கம் நன்னடத்தைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் 34 வருடங்களிற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றியிருந்தார். சுமார் 30 …

  2. ஜனாதிபதி செயலக பாதுகாப்பு பிரிவு குழு யாழ் விஜயம் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பிரிவின் குழுவினர்கள் இன்று யாழ் மாவட்டத்திற்கு தீடிர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இவர்கள் இன்று காலை யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை பார்வையிட்டதை தொடர்ந்து அதற்கு முன்பாக உள்ள நவீன மயமாக்கப்பட்டுள்ள யாழ் தலைமை பொஸிஸ் நிலைய கட்டிடத் தொகுதியினையும் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து பொஸிஸ், இராணுவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலனிக் குழுவினர் சந்திப்பு மேறகொண்டனர். இச்சந்திப்பு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கு கலையரங்கில் நடைபெற்றது. இதில் யாழ் மாவட்ட பிரதிப் பொஸிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, சிரேஸ்ட பொஸிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளும் மாவட்ட அபிவிருத்தி செயலனிக் குழுவின் அ…

  3.  2 தேசிய அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது ஒலுமுதீன் கியாஸ் இரண்டு தேசிய அடையாள அட்டைகளையும் இரண்டும் வாகன அனுமதிப்பத்திரத்தையும் வைத்திருந்த ஒருவரை திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸார் இன்று (11) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். குறித்த நபர், மற்றுமொரு நபருடன்; திருகோணமலையில் இருந்து குச்சவெளிக்கு வந்துகொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த வானை நிறுத்தி சோதனையிட்ட போதே அதிலொருவரிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். ஒரு தேசிய அடையாள அட்டை குருநாகல் முகவரியையும் மற்றைய தேசிய அடையாள அட்டை பொல்கஹவெல முகவரியையும் கொண்டிருந்ததோடு அதிலொரு தேசிய …

  4. சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்த வெடிபொருட்களே சலாவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் நாசமாகியதாக, சிறிலங்கா இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி, சிங்கள ஊடகமான “ராவய” செய்தி வெளியிட்டுள்ளது. போரின் போது, சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள், பயன்படுத்தப்படாமல் இருந்தன. சிறிலங்கா போன்ற சிறிய நாடுகளில் இவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் வசதிகள் இல்லை. எனவே இவற்றை கொள்வனவு செய்த நாட்டிடமே அவற்றை திரும்பவும் கையளிக்கப்படவிருந்தது. சீனாவின் நொறிங்கோ நிறுவனம் இந்த வெடிபொருட்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு இணங்கியிருந்தது. அதுபற்றிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பயணமும் இடம்பெற்றிருந்தது. லங்கா லொஜிஸ்ரிக் அன்ட் ரெக்னொ…

  5. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து வருகின்றார். ஆனால் வவுனியாவில் மடுக்குளம் என்னும் இடத்தில் ஆயிரம் ஏக்கர் காடுகள் நீண்டகாலமாக அழிக்கப்பட்டு வருவதுடன் விமானப்படையினரால் பெருந்திரளான சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். http://www.seith…

  6. திருகோணமலையின் அபிவிருத்தித் திட்டமிடலை சிங்கபூரின் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு மாகாண சபைக்கும் சென்றிருந்தார். இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நசிர் அஹமட் மற்றும் மாகாணசபைத் தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி ஆகியோர் வரவேற்றனர். முதலமைச்சர் செயலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகையில், ‘இந்த நாட்டில் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என எல்லோரிடமும் எதிர்பார்ப்புள்ளது. அதனை எற்படுத்தும்…

  7. தேவைக்கு அதிகமாகவுள்ள ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்பதற்கும் பாவனைக்கு உதவாத ஆயுதங்களை அழிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். இதற்கமைய ஆயுதங்களை கொள்வனவு செய்த வெளிநாட்டு கம்பனிகளிடமே எஞ்சிய ஆயுதங்களை மீள ஒப்படைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் ஆயுதங்களின் பயன்பாடு அவசியமற்று இருப்பதனாலேயே அரசாங்கம் இத்தீர்மானத்துக்கு வந்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். http://www.seithy.com/breifNews.php?newsID=159312&category=TamilNews&language=tamil

  8. சாலாவ இராணுவ ஆயுதக் கிடங்கு வெடிப்புச் சம்பவத்தில் இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்ற குற்றஞ்சாட்டினார். ஆயுதக்கிடங்கு வெடித்தமைக்கான காரணம், சேத விவரம் உள்ளடங்களாக விரிவான அறிக்கையொன்றும் நாடளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். "ஆயுதக்கிடங்கு சம்பவத்தைத் தொடர்ந்து சாலாவ இராணுவ முகாமை சூழவுள்ள பகுதி யுத்தம் ஏற்பட்டது போன்று காட்சியளிக்கின்றது. இந்தப் பகுதி இன்னும் பாதுகாப்பற்ற பகுதியாகவே உள்ளது. வெடிபொருட்கள் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் அது வெடிக்கும் அபாய நிலை இன்னமும் உள்ளது. இந்த வ…

  9. டக்ளஸ் எம்.பி. க்கும் சுவாமிநாதனுக்கும் இடையில் சுவராஷ்ய வாத பிரதிவாதம் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கான அமைச்சரின் பதில் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையே சுவாரஷ்யமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 23 இன் கீழ் 2 என்ற பிரிவின் கீழ் டக்ளஸ் தேவானந்தா எம்.பி அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் ரி.எம். சுவாமிநாதனிடம் பல கேள்விகளைத் தொடுத்தார். இதற்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் சுவாமிநாதன் நீங்கள் இப்போது கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு 2 வ…

  10. போருக்கு பிற்பட்ட காலப்பகுதியில் திட்டமிட்டமுறையில் மதமாற்றத்தினூடாக கிழக்கு மாகாணத்தில் இனமாற்றம் நடைபெறுவதாக முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். துளியம் இணையத்துக்கு வழங்கிய நேர்காணலில் இவ்விடயத்தை தெரிவித்த மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், காத்தான் குடியை மையமாக வைத்து நடைபெறும் இந்த திட்டமிட்ட இனமாற்ற நடவடிக்கைக்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் மதப்போதகர்கள் அரபு நாடுகளிலிருந்து பெருந்தொகையான பணங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்றார். அரசியல்வாதிகளின் துணையுடன் கிழக்கில் நடைபெறும் நில அபகரிப்பு, முஸ்லிம் இனமாக்கப்படும் தமிழர்கள் மற்றும் அதைத் தடுப்பதற்கான வழிம…

  11. தமிழ் மக்கள் அழிந்தபோது தமிழ்த் தலைமைகள் துடிக்கவில்லை சாலாவ இராணுவ ஆயுதக்களஞ்சிய வெடிப்புச் சம்பவம் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை துவம்சம் செய்திருப்பதை எண்ணி கவலையடைகின்றேன். சாலாவ வெடிப்புச் சம்பவமானது தெரியாமல் நடந்த விபத்தொன்றாகவே கருதப்படுகின்றது. அந்த வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை துரிதமாக கட்டியெழுப்பி அவர்கள் சொந்த வீடுகளில் மீண்டும் குடியேற்றப்பட வேண்டும் என்பதற்காக தென் இலங்கை அரசியல் தலைமைகள் துடிக்கின்றன. பல முனைகளிலிருந்தும் குரல் கொடுக்கின்றன. அர்த்தபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இந்த இன அக்கறையை ஒரு படிப்பினையாக தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செ…

  12. தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் தொடக்கம் எல்லாவற்றையும் பிளவுபடுத்தி பழக்கப்பட்டவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் மாகாண சபையையும் குழப்பி பேரினவாதிகளுக்கு தீனி போடுவதற் வட மாகாண சபையில் சிலர் உடந்தையாக இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். வடக்கு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக வடமாகாண சபையில் உள்ள சுமந்திரன் ஆதரவு உறுப்பினர்கள் சிலர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள். இது தொடர்பாக யாழிலிருந்து வெளியாகும் யாழ். தினக்குரல் பத்திரிகைக்கு விந்தன் கனகரட்ணம் மேலும் தெரிவித்ததாவது, “முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக சில குழப்பங்களை செய்ய நினைக்கிறார்கள். மாகாண சபையைக் கு…

  13. காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாட்டு புள்ளி விபரங்களில் பாரிய முரண்பாடு: காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாட்டு புள்ளி விபரங்களில் பாரியளவு முரண்பாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போதல்கள் தொடாபில் அரசாங்கத்தின் புள்ளி விபரத் தகவல்களுக்கும், காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுகின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பில் 19000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு முதல் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆணைக்குழு நாடு முழுவதிலும் அமர்வுகளை நடத்தி விசாரணை மேற்கொண்டிருந்…

  14. தேர்தல்முறை, அதிகாரப்பகிர்வு, காணிப்பகிர்வு தொடர்பில் குழுக்களை த.மு.கூ. நியமித்தது - அமைச்சர் மனோ தேர்தல் முறை சீர்த்திருத்தம், அதிகாரப்பகிர்வு, ஏழு பேர்சர்ஸ் காணிப்பகிர்வு ஆகிய விவகாரங்கள் தொடர்பில் மூன்று ஆய்வு குழுக்களை தமிழ் முற்போக்கு கூட்டணியின் மத்தியக்குழு நியமித்துள்ளதாக என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். களுத்துறை வாதுவையில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டணியின் மத்தியகுழுக் கூட்டம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில், இந்த குழுக்கள் இம்மாத இறுதிக்குள் இவ்விவாரங்கள் …

  15. கடந்த 5 வருடங்களாக மாதவணை மற்றும் மயிலத்தமடு ஆகிய இந்த இரண்டு கிராமங்களும் மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்டதையடுத்து, இந்த கிராமங்களில் இராணுவம் நிலைகொண்டமையால் இந்த இரண்டு இடங்களும் அம்பறை மாவட்டத்துக்கு உட்பட்ட மகாஓயா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதி என வரையறுத்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பின் எல்லை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கைகள், குடியேற்றங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இன்று கருத்து வெளியிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ‘மட்டக்களப்பை பொறுத்தவரையில் கிரான், செங்கலட…

  16. "தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசு வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாளுகின்ற போதும், நல்லிணக்கம் உரிய முறையில் தென்படவில்லை. நீதி, சமத்துவம் , ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் அரசிடம் சரியான திட்டம் இல்லை. இதனால் எமது மக்கள் திருப்திகொள்ள முடியவில்லை." - இவ்வாறு நேற்றுச் சபையில் ஆதங்கம் வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் எதிர்வரும் 29 ஆம் திகதி வாய்முல அறிக்கையும், அடுத்த வருட முற்பகுதியில் முழுமையான அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் வடக்கு, கிழக்கின் நிலைமைகள் தொடர்பில் அரசு முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் என்றும் அரசிடம் சம்பந்தன் இடித்துரைத்தார். வடக்கு, கிழ…

    • 0 replies
    • 221 views
  17. அண்மையில் நடந்த குண்டுவெடிப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட வீடுகளை திருத்திக்கொடுக்கும்வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதிக்கான நிதியை கொடுக்கவேண்டாமென சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறைசேரிக்கு உத்தரவிட்டுள்ளார். நல்லாட்சி அரசுக்கான அடிப்படை அரசியற்கொள்கையின் அடிப்படையில் இவ்வறிவுறுத்தலை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகளாக தமது சொந்த வீடுகளுக்கு திரும்பமுடியாமலும் தமது சொந்தங்களை காணாமல்போனோர் பட்டியலில் தேடிக்கொண்டும் அரசியற்கைதிகளாக சிறையில் இருப்பவர்கள் பற்றியும் நல்லாட்சி அரசுக்கு ஏன் தெரியவில்லை என விமர்சனம் தமிழர் தரப்பில் முன்வைக்கப்படுகின்றது. http://thuliyam.com/?p=29957

    • 0 replies
    • 226 views
  18. கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆரம்பம் -சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (11) ஆரம்பமாகியுள்ளது. இணைத்தலைவர்களாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/174419/க-ள-ந-ச-ச-ஒர-ங-க-ண-ப-ப-க-க-ட-டம-ஆரம-பம-#sthash.7YbxOcKb.dpuf

  19. வடபுலத்தில் உள்ள பத்திரிகைகளுக்கு பூரண எழுத்துச் சுதந்திரம் உண்டு என்றும், எவரும் எதனையும் எழுதலாம் என்றும் குறிப்பிடும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, தேவை ஏற்பட்டால் பத்திரிகைகளை ஒப்பிட்டு பாருங்கள் என்றும் கூறினார். வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு, கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றபோது, அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”எங்களுடைய கல்வியின் நிலை தற்போது கீழே தள்ளப்பட்டுள்ளதாக சொல்கின்றார்கள். அதற்கு ஆதாரமாக புள்ளிவிபரங்களை காட்டுகின்றார்கள். ஒரு குடும்பத்தில் எட்டுப்பிள்ளைகள் இருந்தால் ஒருவர் கடைசிப்பிள்ளையாகத்தான் இருப்பார். நாட்டில் 98…

    • 0 replies
    • 391 views
  20. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யுமாறு சம்பந்தன் கோரிக்கை: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவர் என புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், சொற்ப அளவிலானவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொடர்ந்தும் இந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். …

  21. வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்ற கூடாது வடக்கிலிருந்து படை முகாம்களை அகற்றுவதற்கு இடமளிக்கக்கூடாது. புலிகள் தோல்வி கண்டு விட்டார்கள். ஆனால் பிரிவினைவாதம் இன்னமும் தோல்வி காணவில்லை. இது தான் கசப்பான உண்மையாகும். புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என அமெரிக்கா தெரிவித்துள்ளது என்று மஹிந்த ஆதரவு அணி எம்.பி. யான உதய கம்மன்பில தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே போதே உதயகம்மன்பில எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்…

  22. இலங்கையில் நில அதிர்வு எச்சரிக்கை இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 1000 கிலோ மீற்றர் தொலைவில் கண்டதத்தட்டு இயக்கவியல் செயற்பாட்டின் விளைவாக இலங்கையில் நில அதிர்வு ஏற்றபடக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனிய பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும், முன்னாள் உப வேந்தருமான அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் மண்சரிவு அச்சுறுத்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/7429

  23. அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா:-- அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல்லின மக்கள் வாழ்ந்து வரும் இலங்கையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி ஏனைய அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரிவிணைவாதத்திற்கு தீர்வு வழங்க முடியும் என நாம் நீண்ட காலமாக கூறி வருகின்றோம்என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அரசியல்தலைவர்கள் இதனை…

    • 0 replies
    • 214 views
  24. ' மக்களுக்கு வீடுகள் தேவையே தவிர இரும்புக்கூடுகள் அல்ல' சுவாமிநாதனிடம் கூறிய சம்மந்தன் மக்களுக்கு தேவை வீடுகளே தவிர இரும்புக்கூடுகள் அல்ல எனச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் குறித்து உரிய தீர்வொன்று எட்டப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கு பிரச்சனைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.