ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில் உள்ள தடை என்ன என்பது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் விளக்கமளித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றுவரை பதிவு செய்யப்படாமலே இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டு காலமாகப் பதிவு தொடர்பாக எந்த முயற்சியும் எடுக்காதது அந்த அமைப்பினர் மீது பலத்த விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் உறுப்பினர்கள்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பதிவு செய்வதை தடுக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள செல்வராஜா கஜேந்திரன் இதற்குக் காரணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உள்ள …
-
- 10 replies
- 993 views
-
-
யாழில் மீள்குடியேற 6,266 முஸ்லிம்கள் காத்திருப்பு யாழ்ப்பாணம் பிரதேச செயலகப்பிரிவின் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பிரதேச ஒருங்கிணப்புக் குழுவின் இணைத்தலைவர்களான சி.வி.விக்னேஸ்வரன், விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) ஒன்றுகூட்டப்பட்டது. இதன்போது, பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் விஷேட வேண்டுகோளுக்கு அமைவாக, 'யாழ்ப்பாணம் பிரதேச முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்' என்னும் விடயம் தனியாக கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, யாழ்ப்பாணம் பிர…
-
- 6 replies
- 595 views
-
-
முதலமைச்சரின் தடை நீக்கம் AJ Pradhap கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட், முப்படை தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது. இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் ஜயநாத் ஜயவீர குறிப்பிடுகையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் முப்படை தளங்களுக்குள் இனி பிரவேசிக்க முடியும். மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்போவதில்லை என்ற முடிவினையும் திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். சம்பூர் மகா வித்தியாலயத்தில் வைத்து கடற்படை அதிகாரி ஒருவரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்ட காரணத்தால் பாதுகாப்பு அமைச்சு கிழக்கு மாகாண முதலமைச்சர் …
-
- 1 reply
- 420 views
-
-
படையினர் சிவில் விடயங்களில் தலையிட்டால் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்களைக் காட்டிக் கொண்டு படையினர் குறிப்பாக கடற்படையினர் சிவில் சார்ந்த விடயங்களில் நுழைய எத்தனிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதவை மாத்திரமல்ல எதிர் விளைவுகளை உண்டாக்க முயலும் செயற்பாடுகளாகும். இதுவே கிழக்கு மாகாண முதல் அமைச்சருக்கும் கடற்படை அதிகாரிக்கும் ஏற்பட்ட முரண்பாடு ஆகும் என்று எதிர்க்கட்சித்தலைவர். இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை கச்சேரி கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட இணைக்குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முதலமைச்சர் கௌரவம் அந்தஸ்து பதவி நிலை காப்பாற்றப்பட வேண்டும். கவனிக்கப்பட வேண்டும். அவரை …
-
- 1 reply
- 433 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முடிவடைந்து விட்டது என்று தெரிவித்து வெளியேறிய பின்னரும், மத்திய அரசின் பிரதிநிதியான இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தொடர்ந்தும் நடத்திய சம்பவம் நேற்று யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கேற்காத இணைத் தலைவர்களான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் பங்குபற்றியிருந்தார். இந்தக் கூட்…
-
- 0 replies
- 321 views
-
-
கண்டி, மெனிக்ஹின்ன பகுதியில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறச் சென்ற 3 வயது குழந்தைக்கு அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்டை, மருந்தாக குடிக்கக் கொடுத்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. தனது குழந்தைக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக தாயார் ஒருவர் அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த வைத்தியர் ஒருவர் காயங்களை சுத்தப்படுத்தும் “சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” என்ற மருந்துபொருளை குழந்தைக்கு வழங்குமாறு கொடுத்துள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்று குறித்த மருந்து தொடர்பில் பரிசோதித்த தாயாருக்கு அது“சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” என தெரியவந்துள்ளது. அதிர்ச்சிக்குள்ளான தாய் உடனடியாக மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தில் ம…
-
- 0 replies
- 358 views
-
-
யாழ். குடாநாட்டில் இடம்பெறும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நேரில் சென்று ஆராய அடுத்த மாதம் முதல் வாரத்தில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:- நேற்று ஜனாதிபதியின் ஒரு நிகழ்வில் நானும் பொலிஸ்மா அதிபரும் கலந்துகொண்டோம். இதன் போதே யாழ்.குடாநாட்டின் இன்றைய நிலைமை தொடர்பில்எடுத்துக் கூறியதோடு, இதுதொடர்பில் விசேட கவனம் செலுத்தி உடன் தீர்வு எட்டப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். அவ்வாறு தீர்வு எட்டுவதானால், நீங்களே நேரில் சென்று ஆராய வேண்டும் என பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டேன். இது தொடர்பில…
-
- 0 replies
- 251 views
-
-
ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள 11 அமைப்புக்களும் இணைந்து அரசியல் தீர்வு யோசனையை ஒன்றை உருவாக்கியுள்ளதாக, முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். இதனை விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இரண்டாவது ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=158525&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 246 views
-
-
இலங்கை முழுவதும் போலியோ ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக, தேசிய நோய்தடுப்பு தினமன்று நீங்கள் ஆயுதங்களை கீழே வைப்பதற்கு தயாரானால் நாமும் ஆயுதங்களை கீழே வைத்து போர்நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு தயார் என புலிகள் கடிதம் மூலம் அறிவித்திருந்தனர், என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் நேற்று இடம்பெற்ற ரொட்டறி கிளப் மாநாட்டில் உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் எமக்கு போலியோ நோய் அச்சுறுத்தல் இல்லை. இரண்டு தசாப்பதத்திற்கு அதிக காலமாக எமது நாட்டில் போலியோ நோய் கண்டறியப்படவில்லை. ஆயுதப்போராட்டத்தில் மூழ்கியிருந்த காலப்பகுதியிலே போலியோ நோயையும் இல்லாது ஒழித்தோம். ரொட்றிக்கழகத்தின் பங்களி…
-
- 4 replies
- 478 views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கலாசாரப் பேரவை நிகழ்வில் நடிகர் நாசர் 2016-05-30 21:59:55 (பாஸ்கரன் கதீஷன், பாரூக் ஷிஹான்) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வன்னி குறோஸ் கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் முத்தமிழ் கலைநிகழ்வு நேற்று முன்தினம் மாலை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்னிந்திய நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசர் கலந்து சிறப்பித்துள்ளதுடன் தென்னிந்திய நடிகர் சண்முகராசா, இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதி…
-
- 0 replies
- 394 views
-
-
கஞ்சா கடத்தலுடன் பொலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு -எஸ்.ஜெகநாதன் யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கஞ்சா கடத்தலுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கின்றது என வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் சண்முகலிங்கம் சஜீவன் குற்றச்சாட்டியுள்ளார். வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 'கீழ்நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கஞ்சா கடத்தலைக் கண்டுபிடித்தால், அந்த உத்தியோகத்தர்களை மேல்நிலை அதிகாரிகள் இடமாற்றம் செய்கின்றனர். இது பெரும்பாலும் இளவாலை பொலிஸ் பிரிவில் இ…
-
- 0 replies
- 242 views
-
-
நிதி மோசடி விசாரணைப் பிரிவு விரைவில் மூடப்படும்? AJ Pradhap நிதி மோசடி விசாரணைப் பிரிவு விரைவில் மூடப்படும் சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நிதி மோசடி விசாரணைப் பிரிவின் சிவில் உறுப்பினர்களின் அடையாள அட்டைகள் ஏப்ரல் 8 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இவர்களது அடையாள அட்டையின் நீடிப்பு காலம் ஜுன் 30 வரை மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களது அடையாள அட்டை நீடிப்புக்காலம் நிறைவுபெறும் பட்சத்தில் இவர்களது சேவை நடவடிக்கைகளை முன்னெடுப்பது கேள்விக்குறியாகியுள்ளது. குறித்த சிவில் அதிகாரிகளே நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு மக்களிடமிருந்து கிடைக்க பெரும் ஊழல் மோசடி மற…
-
- 0 replies
- 434 views
-
-
அரசியல் அனுபவம் இருந்தும் என்னை விமர்சிக்கின்றனர் : புரியவில்லை என்கிறார் முதலமைச்சர் நாங்கள் மக்களினால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சராக வந்துள்ளோம். ஜனநாயகத்தை மதிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அதனை நினைவுறுத்த வேண்டிய நிலைமை எங்களுக்கு இருக்கின்றது. அதனை அவர்கள் நினைவு கூர்ந்து செயற்படுத்த வேண்டும் என தெரிவிக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் , இன்று சிலர் இதனை தவறாக புரிந்து கொண்டு அவர்களுக்கு விளங்காத காரணத்தினால் எனக்கு எதிரான விமர்சனங்களை முன் வைக்கின்றனர். அவர்களுக்கு 30 வருட அரசியல் அனுபவம் இருந்தும் இதைப் பற்றி இன்னும் அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் மாடிக…
-
- 0 replies
- 179 views
-
-
இவ்வாரம் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் மூத்த சட்டவாளரும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் விளக்குகிறார். சிறுபான்மை மக்களை இராணுவம் ஒரு கிடுக்குப்பிடிக்குள் தொடர்ந்து வைத்திருக்கவே முயல்கின்றது, ஆளுநர் மூலமாக அரசு அதை நிறைவேற்றுகிறது. கிழக்கு முதல்வர் ஹாபீஸ் நஸிட் அஹமட் விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் மௌனம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரை அந்தப் பதவியிலிருந்து மாற்ற, அரச தலைவர்களுடன் இணைந்து செயல்படுவாரா என்பது பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டுள்ளார் அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன். …
-
- 0 replies
- 341 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நல்லறவு இருப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்புலிருந்து விலகி, புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போலத் தோன்றுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. புதிதாக உருவாகும் கட்சி கடும் போக்கு கொள்கையை பின்பற்றும் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் விக்னேஸ்வரனை சமாளிக்க முடியாத நிலை காணப்படுவதால், கூட்டமைப்பு இதற்கு அனுமதியளிக்கும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இ…
-
- 0 replies
- 433 views
-
-
மூன்று தசாப்த மோதல்கள் முடிவுற்ற நிலையில், சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதிலும், கல்விக்கு முன்னுரிமை அளித்து முன்னேற்றுவதிலும் இலங்கை முன்னோக்கி செல்வதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி உனா மெக்கலே தெரிவித்துள்ளார். வன்முறைகளும் மோதல்களும் இளம் பிள்ளைகளின் மூளை வளர்ச்சியை வெகுவாக பாதிக்கின்றதென குறிப்பிட்ட அவர், அவற்றை ஆரம்பத்திலேயே நிறுத்தாவிட்டால், பரம்பரையாகக்கூட தாக்கங்களை ஏற்படுத்தக்கூடுமென அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை அரசும் யுனிசெப் அமைப்பும் இணைந்து, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடத்திய, தெற்காசிய பிராந்தியத்தின் தொடர்ச்சியான சமாதானமும் கல்வியும் சம்பந்தமான ஆய்வரங்கில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே…
-
- 0 replies
- 312 views
-
-
பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மத்துகம நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஞானசார தேரர் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகியிருக்கவில்லை. கடந்த 2015ம் அண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி தேர்தல் சட்டங்களை மீறி வெலிப்பனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீகம அந்தாவல ஸ்ரீ மங்களாராமய விஹாரையில் அரசியல் கூட்டம் நடத்தியதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன என்ற க…
-
- 0 replies
- 226 views
-
-
முப்படைகளுக்கும் பொதுவான ஒரு ஊடகப்பிரிவை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை இராணுவம், கடற்படை, விமானப்படை போன்ற முப்படைகளுக்கும் தனித்தனியாகவே ஊடகப்பிரிவுகள் அமைக்கப்பட்டு செயற்பட்டு வந்தன.இனிமேல் இம் முப்படைகளுக்கும் சிவில் பாதுகாப்பு படைக்கும் தனித்தனியான ஊடகப்பிரிவுகள் என்ற முறை இல்லாமல் பொதுவான ஒரு ஊடகப்பிரிவு அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பொதுவான ஊடகப்பிரிவின் பேச்சாளராக நியமிக்கப்படும் ஒவ்வொரு அதிகாரிக்கும் ஆறு மாதங்கள் மாத்திரமே பதவிக்காலமாகும். ஆறுமாதம் நிறைவடைந்தவுடன் மற்றுமொரு அதிகாரி பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு ஊடகப்பிரிவு (NATIONAL SECURITY MEDIA) என்ற பெய…
-
- 0 replies
- 172 views
-
-
கேபி விவகாரம் - விசாரணைகளில் திருப்தியில்லை என ஜே.வி.பி தரப்பு தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலணைக்கு எடுப்பது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 25ம் திகதி குறித்த மனுவை பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதால், இதனால் பிரச்சினை இல்லை என, நீதிமன்றத்தில் இன்று அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 164 views
-
-
கஜதீபன், பரஞ்சோதி கடும் வாக்குவாதம் -எஸ்.ஜெகநாதன் தெல்லிப்பழை (வலிகாமம் வடக்கு) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், இன்று திங்கட்கிழமை (30), நடைபெற்றது. இதன்போது, உரும்பிராயில் தற்காலிகமாக இயங்கிவரும் பாடசாலையொன்றை, சொந்த இடத்தில் இயங்கவைப்பது தொடர்பில் பாலச்சந்திரன் கஜதீபன், ஆரியகுட்டி பரஞ்சோதி ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற மேற்படி சண்டையின் போது, குறுக்கிட்ட மாவை எம்.பி, 'மாகாண சபை உறுப்பினர்கள் சண்டையிடுவதற்கு தன…
-
- 0 replies
- 241 views
-
-
அவசர கூட்டத்துக்கு கிழக்கு முதலமைச்சர் அழைப்பு எம்.எஸ்.எம்.நூர்தீன் இன்று திங்கட்கிழமை மாலை அவசரக் கூட்டமொன்றை நடத்துவதற்காக, கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட், அம் மாகாண சபையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலக மண்டபத்தில் இந்தக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட், கடற்படை அதிகாரியொருவக்கு ஏசிப்பேசியதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு;ள்ளதாக தெரியவருவதாக மாகாண சபை உறுப்பினர் த…
-
- 0 replies
- 211 views
-
-
ஜப்பானில்... ஜப்பான் இசெசிமாவில் நேற்று (மே 27) நடைபெற்ற ஜி-7 எல்லை கடந்த உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன கலந்து கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள். - See more at: http://www.tamilmirror.lk/173246/ஜப-ப-ன-ல-#sthash.vpmoEI6c.dpuf
-
- 7 replies
- 607 views
-
-
4 வகையான அனர்த்தங்கள் குறித்து கடும் அபாயம் நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கின்ற மோசமான வானிலை தொடர்ந்து நீடிக்குமாயின், ஐந்து மாவட்டங்களில் உள்ள 26 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், நான்கு வகையான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே, இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன. மண்சரிவு, பாறை விழுகை, நில தாழிறக்கம், நிலவெட்டு சாய்வுகள் இடிந்து விழும் சாத்தியங்கள் தொடர்பிலேயே அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சகல…
-
- 0 replies
- 286 views
-
-
சம்பூரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்து கொண்ட விதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர், சம்பூர் கடற்படையின் கட்டளையிடும் அதிகாரி கப்டன் ரஞ்சித் பிரேமரத்னவை கடந்த 20ஆம் திகதி பகிரங்கமாக திட்டியுள்ளார். குறித்த சம்பவம் நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முதன்முதலாக இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து முதலமைச்சருக்கு எதிராக…
-
- 4 replies
- 738 views
-
-
ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளது குறித்துக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் தவறான புரிந்துணர்வுக்கு வாய்ப்புக்கள் இல்லை. இதனை விடுத்து ஜெனிவா தீர்மானத்தை தளர்வு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=158474&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 365 views
-