ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143450 topics in this forum
-
கிங் கங்கை பெருக்கெடுத்ததால் காலி மாவட்டத்தின் தாழ்வான பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உடுகம – பத்தேகம மற்றும் உடுகம – நெலுவ பாதைகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை, தவலம பிரதேசத்தில் உள்ள பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு அதிவேக பாதையில் வெலிப்பனை நுழையும் பாதையின் அருகில் உள்ள பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் வெலிப்பனை நுழையும் பாதையை மூடவேண்டிய நிலை ஏற்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனோடு அதிவேக பாதையில் வாகனங்களை ஓட்டும் சாரதிகள் வாகனத்தை கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் ச…
-
- 1 reply
- 720 views
-
-
கடற்படை அதிகாரி என்றும் எனது சகோதரர் ; இதற்கு கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் : கிழக்கு முதலமைச்சர் கடற்படை அதிகாரிக்கும் எனக்கு எந்தவித முரண்பாடுமில்லை. அந்த அதிகாரி என்றும் எனது சகோதரர். அவரை நான் பிழையாக பார்க்கவில்லை. இந்நிலைமைக்கு கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட் தெரிவித்தார். சம்பூரிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது கடற்படை அதிகாரியொருவரை திட்டிப்பேசிய சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 35 replies
- 1.5k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழரின் அடையாளமாக கருதப்படுதம் கொடியை பொது நிகழ்வுகளில் பயன்படுத்தவேண்டுமா இல்லையா என்பது பற்றிய விவாதம்: http://thuliyam.com/?p=28278
-
- 1 reply
- 418 views
-
-
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் அமைந்திருக்கும் நெளுந்தெனிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் இந்தக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறிய ரக பெட்டியொன்றுக்குள் மறைத்து வைத்து குண்டுவெடிக்க வைக்கப்பட்டிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மேலும் எதுவித தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களை அச்சுறுத்…
-
- 0 replies
- 304 views
-
-
புதிய கட்சியை ஆரம்பிப்பாராம் விக்னேஸ்வரன்! - இந்திய ஊடகத்தின் கணிப்பு [Saturday 2016-05-28 16:00] வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போல் தோன்றுகிறது என்றும், அந்தக் கட்சி கடும்போக்கு கொள்கைகளைப் பின்பற்றும் என்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் கொழும்பிலுள்ள மத்திய அரசுடன் மோதும் விக்னேஸ்வரனின் கொள்கைகள் கொழும்பு அரசுடன் இணக்கப்ப…
-
- 0 replies
- 370 views
-
-
சம்பூர் சம்பவத்திற்கு முதலமைச்சர் நசீர் வருத்தம் சம்பூர் சம்பவம் தொடர்பில் முதலமச்சர் நசீர் அஹமட் வருத்தம் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நசீர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். சம்பூர் மஹா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். எனினும், தாம் பங்கேற்கும் நிகழ்வுகளை முப்படையினரும் புறக்கணிக்கும் தீர்மானம் அரசியல் ரீதியானது எனவும் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானம் ஜனாதிபதி ஓர் தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாகவே, முப்படையினர் தாமகவே எடுத்த தீர்மானம் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 358 views
-
-
யுத்தத்தின் கொடூரம் கிளிநொச்சியில் 282 போ் கண்களை இழந்துள்ளனா். நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் விளைவால் தமிழ் மக்கள் அதிகளவுக்கு பல இழப்புக்களைச் சந்தித்துள்ள நிலையில் 282 போ் தங்களுடைய கண்களை இழந்துள்ளமை பதிவாகியுள்ளது. யுத்தம் பலரை பலியெடுத்துள்ள நிலையில் மிஞ்சியிருப்பவா்களில் பெரும்பாலானவா்கள் தங்கள் உடலின் ஏதோ ஒரு அங்கத்தை இழந்தவா்களாவும் காணப்படுகின்றனா். அத்தோடு பெரும்பாலானவா்கள் இரும்புத் துண்டுகளை உடலில் சுமந்தவாறும் வாழ்ந்து வருகின்றனா். இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு மாவட்டச்செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபர கணக்கெடுப்பின்படி 282 போ் தங்களுடைய கண்களை இழந்துள்மை பதிவாகியுள்ளது. இத…
-
- 0 replies
- 298 views
-
-
இருவருக்கும் வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்: விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா பதில் கடிதம் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வடக்கு - கிழக்கு மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் இலங்கைத் தமிழ் மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் ஒன்று எழுதி இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்து சி.வி. விக்னேஸ்வரன் எழுதிய கடிதத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய…
-
- 6 replies
- 645 views
-
-
மாகாண சபைக்கு அதிகாரமும் இல்லை அதனாலேயே 13வது திருத்தச் சட்டத்தினை பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை - கிழக்குமாகான முதல்வரின் கலகமும், அதனால் உண்டான நியாயமும் முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது:- கிழக்குமாகான முதலமைச்சர் நசீர் அஹமத் அவர்கள் கடற்படை அதிகாரியை சம்பூரில் நடைபெற்ற பாடசாலை நிகழ்வு ஒன்றில் அவமானப்படுத்தியுள்ளார் என்பதுதான் இந்த வாரம் அரசியலில் பேசுபொருளாக உள்ளது. இதனை போற்றியும், தூற்றியும் வெவ்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தினாலும், இதனைவிட பாரிய விடயங்கள் சந்திக்கு வராமல் இருக்கின்ற நிலையில், இந்த விடயத்தினை ஊதி பெருப்பித்து பூதாகரமாக்கி தென்னிலங்கை இனவாதிகளுக்கு தீனியாக அமைத்துக்கொடுத்த பெருமை எமது ஊடகவியலாளர்களையே சாரும்.…
-
- 0 replies
- 374 views
-
-
யாழ்ப்பாணம் கந்தரோடைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்றால் கைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவுமில்லை. இக் கைக்குண்டு தாக்குதலானது இன்றிரவு 8.30 மணியளவில் கந்தரோடை உடுவில் வீதி ஞான வைரவர் கோவிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் வசித்து வருகின்ற முரளி என்பவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இனந்தெரியாத கும்பலொன்றால் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இரவு மீண்டும் குறித்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் வகையில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் மூகத்தை முழுதாக மூடிய நிலையில் ஒன்பத…
-
- 3 replies
- 875 views
-
-
கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டியதாக கிழக்கு மாகாண அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏ. நாசீர் அஹமட் இவ்வாறு கடற்படை அதிகாரியை, அமெரிக்கத் தூதுவர் அதுல் காசியப் முன்னிலையில் இழிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரைமுறை தெரியாவிட்டால் இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கடற்படை அதிகாரியை முதலமைச்சர் கடுமையாக திட்டியுள்ளார். இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வு ஒன்றில் முதலமைச்சருக்கு முதல் அமெரிக்கத் தூதுவர் மேடைக்கு அழைக்கப்பட்டமையை பகிரங…
-
- 21 replies
- 1.5k views
-
-
10 வருடங்கள் வெளியுலகத் தொடர்பின்றி அஞ்ஞாதவாசம் புரிந்துவந்த பொறியியலாளர் : விசித்திரமான கிணறு வடிவ வீட்டில் மரணம் : காரைதீவில் சம்பவம் வெளியுலகத் தொடர்பின்றி மூன்று படை கிணற்று வீடொன்றினுள் சுமார் பத்து வருடங்கள் தன்னந்தனியாக வாழ்ந்து வந்த பொறியியலாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் காரைதீவில் இடம்பெற்றுள்ளது. காரைதீவைச் சேர்ந்த பவளன் என அழைக்கப்படும் செல்லத்துரை நடேசானந்தம் (வயது 57) எனும் பொறியியலாளரே இவ்விதம் மரணமானவராவார். இவர் இருவாரங்களுக்கு முன்பு மரணித்திருக்கலாமென நம்பப்படுகிறது. ஏனெனில் சடலம் உருக்குலைந்தநிலையில் காணப்பட்டது. இவரது சடலம் நேற்று முன்தினம…
-
- 1 reply
- 430 views
-
-
தமிழர் இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் இப்படுகொலை நடைபெற்றபோது ஐநாவின் அபிவிருத்தித் திட்டத்திற்கு தலைமைதாங்கிய ஹெலன் கிளார்க் ஐநா செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகின்றார். இதற்கு ஐநா அமைப்பின் சில அதிகாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் அதனை ஐநா தடுத்து நிறுத்தத் தவறியமைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஹெலன் கிளார்க் ஆகையால் அவருக்கு தற்போது கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது ஐநா செயலாளர் நாயகமாக இருக்கும் பான்கிமூன் அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில் அவரது பதவிக்கு தற்போது ஹெலன் கிளார்க் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். …
-
- 0 replies
- 444 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவன் தாக்கப்பட்டமையைக் கண்டித்து மட்டக்களப்பு மாணவ சமூகத்தினால் மட்டக்களப்பு திருகோணமலை வீதி சின்ன ஆஸ்பத்திரி அருகில் அமைதியான முறையில் தமது கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர் . குறித்த மாணவன் தனது முகபுத்தகத்தில் (முகநூல்) முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படம் ஒன்றைத் தரவேற்றம் செய்தமையைக் கண்டித்து குறித்த மாணவனை பெரும்பான்மையின மாணவர்களின் தாக்கப்பட்டுள்ளார் இந்தத் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனத் தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்த…
-
- 0 replies
- 346 views
-
-
கிழக்கில் உயர் கடற்படை அதிகாரி இடமாற்றத்திற்கும் சம்பூர் சம்பவத்திற்கும் தொடர்பில்லை கிழக்கில் உயர் கடற்படை அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவதற்கும் அண்மையில் சம்பூரில் இடம்பெற்ற சம்பவத்திற்கும் தொடர்பில்லை என தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கடற்படை இதுபற்றிய தகவல்களை அறிவித்துள்ளது. கிழக்கின் கடற்படைக் கட்டளைத் தளபதி கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சம்பூரில் இடம்பெற்ற சம்பவத்தின் அடிப்படையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார். இந்த இடமாற்றம் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண கடற்கடற்படைக் கட்டளைத்தளபதி நீ…
-
- 0 replies
- 212 views
-
-
ஊடக சுதந்திரத்திற்காக போராடிய நாம் மீண்டும் அதேபாதைக்கு செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றதா ? ( மயூரன் ) அழுத்தங்கள் ஊடாக ஊடகவியலாளர்களையும் ஊடகங்களையும் அடிபணிய வைப்பதென்பது முன்னைய ஆட்சியாளர்கள் காலத்தில் ஊடக சுதந்திரத்திற்காக போராடிய நாம் மீண்டும் அதே பாதைக்கு செல்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றதாவென்ற சந்தேகத்தை எழுப்புகின்றது என யாழ். ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ். ஊடக அமையம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனநாயகத்தின் 4 அவது தூணான ஊடகத்துறை கடந்த 3 தசாப்தங்களில் 41 தமிழ் ஊடகவியலாளர்களை வடகிழக்குமாகாணங்களில் ஊடகப்பணிக்காக பலி …
-
- 0 replies
- 145 views
-
-
முஸ்லிம்களை சரிசமமாக நடத்தாவிட்டால் சரியான தீர்வை எங்களால் எட்ட முடியாது எங்களைவிட எண்ணிக்கையில் குறைவாகவுள்ள முஸ்லிம்களை அடக்கி ஆளமுடியாது. அவர்களை சரிசமமாக நடத்தாவிட்டால் சரியான தீர்வை எங்களால் எட்ட முடியாது என்பதை திட்டவட்டமாக நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வடகிழக்கு என்பது தமிழ்பேசும் மக்களுடைய தாயக பூமி. அதில் தமிழ், முஸ்லிம், சிங்…
-
- 0 replies
- 202 views
-
-
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைகழகத்திற்குள் மகிந்த அரசாங்கத்தினால் திட்டமிட்டு அனுப்பிவைக்கப்பட்ட சிங்கள புலனாய்வு மாணவர்கள் கல்விகற்பது தெரியவந்துள்ளது. மகிந்தராஜபக்சவின் காலத்தில் கோதபாயராஜபக்சவின் தலைமையில் உருவாக்கப்பட்ட இனவாத மனநிலையை கொண்ட புலனாய்வு அணிகள் இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு மூலைச்சலவை செய்யப்பட்ட சிங்கள மாணவர்கள் கிழக்குப் பல்கலைகழகத்திற்குள் உள்வாங்கப்பட்டு இயங்கிவருகின்றனர். கொம்மாதுரை இராணுவமுகாமிற்குள் தங்கியிருக்கும் இந்த சிங்கள மாணவர்களுக்கு இங்குள்ள இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவதுடன் இவர்கள் பகல்நேரங்களில் சேகரிக்கும் செய்திகளை இரவுந…
-
- 2 replies
- 581 views
-
-
ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு தமது உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடக்கூடிய நாட்கள் வெகுதொலைவில் இல்லை. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.யாழ்.சென்.ரோக்ஸ் சனசமூக நிலையத்தினரால் கட்டப்பட்ட மறைந்த முன்னோடிகள் நினைவுத்தூபி இன்று புதன்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில் , அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஏனைய கட்சிகளைச் சார்ந்த அரசியல் தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகளில் மோதலுறுகின்றனர். மற்றையபடி அவர்களுடன் எந்தவிதமான தனிப்பட்ட கருத்துவேறுபாடுகளோ அல்லது கோபதாபங்களோ எங்களுக்குக் கிடையாது.…
-
- 31 replies
- 1.8k views
-
-
ஜெயலலிதா தொடர்பான சி.வி.யின் கூற்றுக்கு வடமாகாண சபையில் எதிர்ப்பு அண்மைக்காலமாக அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யாமல், தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயராம் ஜெயலலிதா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்ததை கண்டித்து, வடமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சபையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த சேவை காரணமாக ஜெயலலிதா, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற முடிந்ததையிட்டு இலங்கை தமிழ் மக்களும் மகிழ்ச்சியடைவதாக சி.வி விக்கினேஸ்வரன் கூறியிருந்தார். 'ஜெயலலிதா வெற்றியை கொண்டாடுவதற்கு பதிலாக, அண்ம…
-
- 5 replies
- 589 views
-
-
யாழ் நகர அபிவிருத்தி தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று முற்பகல் வடக்கு மாகாண ஆளுநர் இல்லத்தில் நடைபெற்றது. 55மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நகர அபிவிருத்தி சபையினூடாக இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே வடக்கு மாகாணசபையில் கலந்துரையாடப்பட்டது. இருப்பினும், இன்று இதுகுறித்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலை வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய வடக்குமாகாண சபையினரும் புறக்கணித்திருந்தனர். ஆனால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஈ.சரவணபவன், மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியயை …
-
- 3 replies
- 433 views
-
-
2016-0519 அன்று கிளிநொச்சி அம்பாள்குளத்தில் இருந்து இலக்கம் 105, ஆனந்தபுரம் மேற்கில் இருக்கின்ற நகுலேஸ்வரிக்கு அவரது தங்கையின் மகள் தொலைபேசியில் 'பெரியம்மா சதீஸின் படம் நெட்டில வந்திருக்கு கொஞ்சப் பேர் இறந்து கிடக்கிற படத்தில அவன்ர படமும் இருக்கு போல கிடக்கு ஒரு பாருங்கோ' என்று கூற பதறி அடித்துக்கொண்டு நகுலேஸ்வரி அம்பாள்குளம் விரைக்கின்றார். 2009 ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் யோகராசா சதீஸ்ரூபனை பார்த்ததாக பலர் நகுலேஸ்வரியிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் நகுலேஸ்வரியை 2009 ஆண்டு ஏப்ரல் மாதம் வலைஞர்மடத்தில் மகன் சதீஸ்ரூபன் சந்தித்து ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொண்டு தான் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்லப் போவதாக கூறிச் சென்றிருக்கின்றார். இதுவே தாய் தனது…
-
- 0 replies
- 431 views
-
-
ஒரு புரட்சிகரமான ஆட்சி மாற்றத்துடன், பல்லின சமூக சூழலில் நல்லிணக்கத்தையும் நிலையான அபிவிருத்தி சூழலுக்கான வழியையும் ஏற்படுத்துவதில் தமது அரசாங்கம் வெற்றி கண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பானில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. தற்போது எமது மக்கள் சுதந்தரமாகவும் மனித உரிமைகள் மதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளார்கள். ஊழலும் அநீதியும் அரசியல் வன்முறையைத் தோற்றுவிப்பதுடன் முதலீடுகள் பின்வாங்கப்படவும், ஸ்திரமற்ற பொருளாதார சூழல் உருவாவதற்கும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. விரிவான அபிவிருத்தி முயற்சிகளுக்கு எமக்கு நிதி பற்றாக்குற…
-
- 0 replies
- 298 views
-
-
படகு மூலம் கடந்த 2012ம் ஆண்டில் அவுஸ்ரேலியா சென்ற இலங்கை அகதி ஒருவரை நாடு கடத்துமாறு அவுஸ்ரேலிய மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை திரும்பினால் தண்டிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக புகலிடக் கோரிக்கையாளர் சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றிற்கு அறித்த போதிலும் அந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை இராணுவத்தினரால் தனது தந்தை சுட்டுக் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து தாம் அவுஸ்ரேலியா வந்ததாக குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தெரிவித்துள்ளார். தம்மையும் தமது குடும்ப உறுப்பினர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் பிடித்து தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்த குறித்த நபர் தமிழர…
-
- 0 replies
- 395 views
-
-
ஊடகச்செம்மல்திரு.வி.ஆர் வரதராஐா அவர்கள் யேர்மனி ஒபர் கவுசன் நகரில் மறைந்த செய்திகேட்டு கவலை அடைகின்றோம் தாயகத்திலும் யேர்மனியிலும் 40 ஆண்டுகளுக்குமேல் பத்திரிகையாளராகவும் ஊடகவியலாளராகவும் இவர் ஆற்றியுள்ள பணி மிகவும் மதிப்பிற்குரியதாகும். ரி.ஆர்.ரி ஐ.பி.சி வானொலி மற்றும் ரி.என்என் ஐிரிவி தொலைக்காட்சிகளில் யேர்மன் மற்றும் அரசியல் சமூக நிலவரங்களைத் தொகுத்து வழங்கியவர். உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொருளாளராகச் செயலாற்றியதுடன் ஜெனீவா பத்திரிகையாளர் சங்கத்தில் 35 வருட கால அங்கத்தவர். ஊடகத்துறையில் தனக்கென ஓர் இடம் பதித்தவர். பத்திரிகைத்துறையில் டப்ளோமா பட்டம் பெற்ற இவருக்கு பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம்2004ம் ஆண்டு ஊடகச்செம்மல…
-
- 0 replies
- 305 views
-