Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ். காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும், நடத்துனருமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வந்த மூன்று பேரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் யாழ்ப…

    • 0 replies
    • 362 views
  2. கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்! December 24, 2024 கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரனிடம் ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு மகஜர் ஒன்றும் கையளித்திருந்தமை இங்கு குறிப்ப…

  3. அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் பண மோசடி December 24, 2024 5:02 pm கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தனது பெயரில் மேற்கொள்ளப்படும் பண மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இன்று (24) பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் குறித்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி என அடையாளப்படுத்தப்படும் நபர் அல்லது குழு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இலக்கு வைத்து சமூக பராமரிப்பு சேவைகளுக்காக பணம் பெற்றுக்கொள்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி முறைப்பாடு செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை ஆதாரங்களுடன்…

  4. பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம் December 24, 2024 3:33 pm காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்று தையலகத்தில் பணிபுரியும் பெண்களுடன் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளா…

      • Like
      • Thanks
    • 11 replies
    • 914 views
  5. ஜனாதிபதி அநுரவுக்கு மனோ கணேசன் எம்.பி அவசர கடிதம் December 24, 2024 07:38 pm லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற, தோட்ட நிர்வாகங்களுக்கு உடன் தடை விதிக்குமாறு கோரி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளார். “ஜனாதிபதி அவர்களே, தோட்டங்களில் வாழும் மக்கள் இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்நிலையில், சுமார் 200 வருடங்களாக, தலைமுறை, தலைமுறையாக, லயன் குடியிருப்புகளில், வாழும் அப்பாவி ஏழை மக்களை தோட்ட நிர்வாகிகள், பல …

  6. மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்ட வகையில் தலையீடு செய்து வருவதாக தெரிவித்தார். பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆனால் இது ஒரு நிகழ்ச்சி மற்றும் இரண்டு வார நடவடிக்கைகளால் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் படிப்படியாக இதில் தலையிட்டு வருகின்றனர். தொடர்ந்து நடவடிக்கைகளை எட…

  7. 24 DEC, 2024 | 03:42 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவாட்சியைப் பலப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையின் போது இக்கருத்து வலியுறுத்தப்பட்டிருந்தது. அக்கருத்தின்படி சட்டவாட்சி பலமடைந்தால், பாரிய குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. என இலங்கத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஊடகங்கக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டடுள்ளார். அதில…

  8. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை பாரதூரமானது எனவும், அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாதுகாப்பை நீக்குவதற்கான பரிந்துரைகளை வழங்கிய குழுவிற்கு உண்மையில் தேசிய பாதுகாப்பு பற்றிய புரிதல் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். தலதா மாளிகைக்கு இன்றுவிஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளின் அடிப்படையில் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால், புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள் உட்பட தற்போதைய அரசாங்கமே விளை…

  9. பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல “போதைப்பொருளை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக” பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இதனைத் தெரிவித்த அவர்,புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் 2014 ஆம் ஆண்டு 352 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. தற்போது அங்குள்ள 92 கடைகளில் 80% கடைகள், சேதமடைந்து காணப்படுக…

  10. எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் adminDecember 24, 2024 யாழ் மாவட்டத்தில் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளாா். தற்போது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவா் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். மேலும் , தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால்தான் எலிக்காய்ச்சல…

    • 2 replies
    • 350 views
  11. வெளிமாவட்டங்களில் பணியாற்றாதவர்களுக்கு விரைவில் இடமாற்றம் adminDecember 24, 2024 ஒருபோதும் வெளி மாவட்டங்களில் பணியாற்றாதவர்களை விரைவில் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றவேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். அதன் போது, வெளிமாவட்டங்களில் தாம் நீண்டகாலம் பணியாற்றுகின்றோம், செல்வாக்குகளின் அடிப்படையில் சிலர் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர். எமக்குப் பின்னர் நியமனம் பெற்றவர்கள் கூட சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் …

  12. 23 DEC, 2024 | 08:12 PM பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும் இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினதும் நிதியியல் உளவறிதல் பிரிவினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சுக்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் முகவராண்மை நிறுவனங்கள் உள்ளடங்கலாக தொடர்புள்ள 24 நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட த…

  13. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 209.91 புள்ளிகள் அதிகரித்து புதிய வரலாற்றை பதிவு செய்திருப்பதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 15,020.61 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 8.44 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வரலாற்றில் முதற்தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 15,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314071

  14. 24 DEC, 2024 | 10:19 AM (நமது நிருபர்) பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் என்பன சார்ந்து வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது. ஆனாலும் அவர்களால் அதனைச் செய்ய முடியும் என நம்புகிறேன். ஏனெனில் இலங்கை மக்கள் இயல்பாகவே மீண்டெழக் கூடிய தன்மையினை கொண்டிருக்கிறார்கள். அத்தோடு அவர்களுக்கு உதவுவதற்கு இந்தியா போன்ற சிறந்த அயலக நாடு இருக்கிறது என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்த்தானிகர் யஷ்வர்தன் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய அரசமுறை விஜயம் தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலில் அவர் இவ்வாறு …

  15. முல்லைத்தீவிற்கு இடம் மாற்றப்பட்ட ரோஹிங்யா அகதிகள்! திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் – ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர். பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் குறித்த அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று (23) காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்கள் மிரிஹானை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டிருந்த நிலையில் கேப்பாப்பிலவு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (19) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 115 பயணிகளுடன்…

      • Like
    • 2 replies
    • 466 views
  16. பங்களாதேஷிக்கு செல்லும் மின்சாரத்தை இலங்கைக்கு விற்பனை செய்யும் வழிகளை ஆராயும் அதானி நிறுவனம்! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் அமைந்துள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பங்களாதேஷுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தை இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கனா வழிகளை அதானி பவர் (Adani Power) நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. 2X800 மெகாவாட் திறன் கொண்ட ஜார்கண்ட் ஆலை, பங்களாதேஷுக்கு மின்சாரம் வழங்க அதானி பவரின் அர்ப்பணிப்பு திட்டமாகும். பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக சில சிக்கல்களுக்கு மத்தியில் ஆலையில் இருந்து பங்களாதேஷிற்கு மின்சாரம் வழங்கும் அளவை நிறுவனம் குறைத்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தக்கவைக்க, உள்நாட்டுச் சந்தையில்…

  17. 23 DEC, 2024 | 04:46 PM வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாண மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச் சவாலான விடயமாகவே இருக்கிறது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும் “கரைஎழில்” நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (22) கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, கிளிநொச்சி மாவட்ட செயலராக நான் பணியாற்றியபோது இறுதி…

  18. Published By: DIGITAL DESK 2 23 DEC, 2024 | 04:39 PM இலங்கையில் 69 தொழில் வல்லுநர்கள் புலம்பெயர்வு சட்டம் மற்றும் கொள்கை பற்றிய முதலாவது சான்றிதழ் கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளமையை அறிவிப்பதில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) ஊடாக அமெரிக்கா பெருமை கொள்கிறது. ஆட்கடத்தலுக்கு எதிரக போராடுவதற்கென தமது சமூகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு கருவிகளையும் அறிவுகளையும் இந்த தொழில் வல்லுநர்கள் தற்போது கொண்டுள்ளனர். இந்த ஆறு மாத கால கற்கைநெறியானது, USAID இன் 'ஆட்கடத்தலுக்கு எதிராக போராடுவதற்கு சிவில் சமூகத்தை வலுவூட்டல்' திட்டம் (Empowering Civil Society to Combat Human Trafficking project – ECCT) மற்றும் இலங்கை திறந்த…

  19. யாழ்ப்பாணம் (Jaffna) சிறப்பு பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைப்பதற்கு வடக்கு மாகாண சபையின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொருளாதார மத்திய நிலையங்கள் முழுமையாக சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நோக்கங்களைக் கொண்டவை. ஆனாலும் அவை மொத்த சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகவும், உற்பத்திப் பிரதேசங்களை மையமாகவும் கொண்டவை. விவசாயப் பொருட்கள் உற்பத்தி சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை என்ற வகையில் தான் யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையமானது, யாழ்ப்பாணம் விவசாயிகள் தமது உற்பத்திகளை தகுந்த விலையில் விற்பனை செய்வதற…

  20. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம் சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்ப…

  21. ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024 ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி ச…

  22. மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024 09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு 25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக போராட்டத்தில் …

  23. 23 DEC, 2024 | 09:55 AM பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை (23) முதல் முன்னெடுப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாகன சாரதிகள் மது போதையில் வாகனத்தை செலுத்துவது தொடர்பில் சிறப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பஸ் சாரதிகளின் கவனக்குறைவு , அதிவேகமாக வாகனம் செலுத்துதல், போக்குவரத்…

  24. பழைய கட்டிடங்களைப் புனரமைக்க யாழ் . மாநகர சபை தீர்மானம்! யாழ் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்பட்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” யாழ்ப்பாணம் கடந்த காலங்களில்…

  25. மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல் (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.