Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில். வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 34 வயதான சுபாஷ் எனற் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே அவர் இன்றைய தினம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடலை மீட்ட கோப்பாய் பொலிஸார் அதனை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் ஒப்பட…

  2. பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் வாக்கை செலுத்திய 106 வயது முதியவர் ! ShanaNovember 14, 2024 106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் இன்று (14) பாராளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார். யாழ்ப்பாணத்தில் 18.11.1918 இல் தாம் பிறந்து, தமது 22 வயதில் திருகோணமலைக்கு வந்து தொடர்ந்து அங்கே வாழ்ந்து வருவதாகவும், இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் தாம் வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறினார். https://www.battinews.com/2024/11/106.html

  3. பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 8,352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன. …

  4. வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் November 14, 2024 வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டாலும் அது வாக்களிக்க தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.’உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.உங்களிடம் செ…

  5. வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி, நாகர்கோவில், வலிக்கண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த வீதி தடைகள் நேற்று காலை முதல் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, சட்டவிரோத மணல் அகழ்வு உட்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த போடப்பட்ட குறித்த வீதித்தடைகளால் மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/வடமராட்சி_கிழக்கில்_அகற்றப்பட்ட_வீதி_தடைகள்!

  6. (எம்.ஆர்.எம்.வசீம்) 2028ஆகும் போது கடன் மீள செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொள்வதே நாடு எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிவைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (13) இடம்பெற்ற பெண்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கும் பிரதான பிரச்சினை பொருளாதாரமாகும். 2022ஆம் ஆண்டு பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்தது. அதன் பிரகாரம் எமது நாடு வங்குராேத்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எமக்கு முதலாவதாக வங்குராேத்து நிலை…

  7. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் தெரிவு செய்யப்பட்ட 07 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் மூலம் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார் தூதரகங்கள், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், கனடாவின் டொரன்டோ, இத்தாலியின் மிலான் மற்றும் டுபாய் தூதரகங்கள் மூலம் இந்த முன்னோடித் திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப்…

  8. மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையிடினால் எட்டு வருடங்களாக கையளிக்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டினார்கள். நேற்று செவ்வாய்க்கிழமை (12) வட மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமது மேய்ச்சல் தரவை நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மஜகர் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நானாட்டான் பகுதியிலுள்ள மேய்ச்சல் தரவை நிலத்தை நம்பி 2,500 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. எமக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதனை கையெழுப…

  9. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகிகள் ஆகியோரின் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அவைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குறித்து விசாரித்து துப்பாக்கிகளை …

  10. வேட்பாளர் பட்டியலில் பெயர் ; பெண் முறைப்பாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் செவ்வாய்க்கிழமை (12) அன்று முறைப்பாடு செய்துள்ளார். அப்பெண் மேலும் தெரிவிக்கையில் , “சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை. நேற்றைய தினம் திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து , தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவ…

  11. புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு! புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் …

  12. யாழ்ப்பாணத்தின் தேர்தல் நிலவரம்! நாடாளுமன்றத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது. வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது…

  13. பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறும் என ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198542

  14. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையிலான விசேட படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. நாளை மறுதினம் வியாழக்கிழமை (14) காலை 06,30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு 07 படகு சேவைகள் இடம்பெறவுள்ளன. அதேபோன்று நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி காலை 06.45 மணி முதல் மலை 04.30 மணி வரையிலும் படகு சேவைகள் இடம்பெறவுள்ளன என நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. அதேவேளை நெடுந்தீவுக்கான வாக்கு பெட்டிகளை நாளைய தினம் புதன்கிழமை படகுகள் மூலம் உத்தியோகஸ்தர்கள் எடுத்து சென்று, நாளை மறுதினம் வியாழக்கிழமை வாக்களிப்பு நிறைவு பெற்றதும் விமான படையினரின் உ…

  15. யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார். ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் வேலணை மத்திய கல்லூரி விடுதி வாக்களிப்பு நிலையம் சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலய நால்வர் மணிமண்டபத்திற்கும் நாரந்தனை தெற்கு பொது நோக்கு மண்டப வாக்களிப்பு நிலையம் நாரந்தனை தெற்கு கிராம சக்தி பொது மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலய மண்டப இல 1 வாக்களிப்பு நிலையம் வடலியடைப்பு சனசமூக நிலையத்திற்கும் அராலி வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலை வாக்களிப்…

  16. எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் பின்வருமாறு; வாக்கெடுப்பு நிலையத்தினுள் தங்களது வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல சட்டரீதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வரத் தேவையான போக்குவரத்து வசதிகளை தங்களது தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலர் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும். வாக்கெடுப்பு நடைபெறுகின்ற கட்டிடத்தின் தூரம் 100 மீற்றருக்கும் அதிகமாக இருப்பின் வாக்கெடுப்பு நிலைய…

  17. சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்! வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை(11) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; குறித்த கூட்டத்தில் சுமந்திரன் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதன்போது கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. அங்கு முறுகல் நிலை ஏற்பட்டவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கேள்வி கேட்டவர்களை வெளியேற்றினர். அதன்பின்னர் சுமந்திரனை அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். (ச) https://newuthayan.com/arti…

  18. 1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ் adminNovember 11, 2024 விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை திட்டமிட்ட வகையில் ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது விடயம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது – விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங…

  19. இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் adminNovember 12, 2024 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 – 2025ம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார். கோபி சங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார். யாழ் போதானா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறான ஒரு சங்கத்திற்கு தலைவராக தெரிவு செய்யப்படும் முதலாவது வைத்திய நிபுணர் இவராவார். அத்துடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சத்திரசிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான பிரிவின் முதலாவது தலைவராகவும் கோபிசங்கர் செ…

  20. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது adminNovember 12, 2024 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் இன்று செவ்வாய்கிழமை (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டக்களப்பு வேட்பாளருமான பிள்ளையான எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நாஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு , மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் …

  21. தேர்தல் பிரச்சார நடவடிக்கை நிறைவு; அமைதியான காலம் அமுலில்! 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதியான காலம் அமுலில் இருக்கும். குறித்த காலப் பகுதியில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் வேட்பாளர்கள், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார். நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்…

  22. அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான திரான் அலஸ், மஹிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, நிமல் சிறிபால மற்றும் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய 18 பேரிடம் வாக்கு மூலங்களைப் பெறுவது அவசியம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜர…

  23. தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு வந்த ஜனாதிபதி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி அனுர குமா…

  24. சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார். இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக குழந்தைகளுக்கு இடையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இது இருமல் மற்றும் சளியுடன் கூடிய காய்ச்சலாகும். மேலும், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி இருந்தால் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறியாகும். எனவே, மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உரிய…

  25. (இராஜதுரை ஹஷான்) விடுதலை செய்யும் தமிழ் அரசியல் கைதிகளின் பெயரை ஜனாதிபதி குறிப்பிட்டால் அவர்கள் செய்த பயங்கரவாத செயற்பாட்டை நான் குறிப்பிடுவேன். பிரபாகரனின் நோக்கத்தை புதிய அரசியலமைப்பால் நிறைவேற்ற இடமளிக்க முடியாது. நாட்டின் ஒற்றையாட்சியை கருத்திற் கொண்டு மக்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015 முதல் 2019 வரை ஆட்சியில் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.