Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செல்பி வீடியோ மூலம் மஹிந்த இலங்கை மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து (வீடியோ இணைப்பு) சித்திரை புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் செல்பி வீடியோ மூலம் இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து வீடியோவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கூறியதாவது,இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியானதும் செழிப்புமிக்கதுமான புத்தாண்டு வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்துவதாக, சிங்கள மக்களும் தமிழ் மக்களும், ஒரே சுப நேரத்தில் பாரம்பரிய புத்தாண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காலம் இதுவாகும். புத்தாண்டென்பது, வடக்கு - தெற்கு ஒற்றுமையின் வருடாந்தக் கொண்டாட்டங்களென்பதோடு, இது,…

  2. சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மலர்ந்துள்ள சிங்கள தமிழ் புதுவருடத்தினை குடும்பத்தினருடன் மஹகம சேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (13) கொண்டாடினார். http://tamilleader.com/

    • 16 replies
    • 1.7k views
  3. கீரிமலையில் 6 ஏக்கரை விடுவித்தது கடற்படை! கீரிமலை நகுலேஸ்வரம் பகுதியில் 6.47 ஏக்கர் காணி கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்படைத் தளபதியினால், தெல்லிப்பழைப் பிரதேச செயலாளரிடம் இதற்குரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. கடற்படையினரின் கட்டுப்பாட்டில் கீரிமலை, நகுலேஸ்வரம் பகுதி கடந்த 26 வருடங்களாக இருந்து வருகின்றது. நகுலேஸ்வரம் கோயிலுக்கு முன்பாகவுள்ள இந்தப் பகுதியில், கடற்படையினர் தமது முகாம்களை அமைத்திருந்தனர். இந்தக் காணிகளைச் சுவீகரிப்பதற்குப் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பிம் மக்களின் எதிர்ப்பினால் கைவிட…

  4. வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தங்களால் அமைக்கப்பட்ட தற்காலிக வைத்தியசாலைகளை இனம் கண்டு அவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை தவிர்க்கும் பொருட்டு செஞ்சிலுவை சர்வதேச அமைப்பினால் இலங்கை இராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஜி.பி.எஸ் செய்மதி தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்தி வேண்டுமென்றே வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை பின்னர் ஐ. நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து புரிந்துகொள்ள முடிந்ததாக வைத்திய கலாநிதி வரதராஜா துரைராஜா தெரிவித்திருக்கிறார். பசி மற்றும் பல வாரங்கள் தொடர்ச்சியாக பணியாற்றியமை காரணமாக பலவீனம் அடைந்திருந்த நிலையில் பதுங்குகுழிக்குள் இருந்து தண்ணீர் அருந்துவதற்காக வெளியே வந்தபோது இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் காயம் அடைந்த…

  5. முல்லைத்தீவில் மக்களின் காணிகளில் 9 விகாரைகள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஒன்பது பௌத்த விகாரைகள் படையினரின் உதவியுடன் பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினா் ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தவொரு பௌத்த விகாரைகளும் இருந்ததில்லை என்றும் ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் படையினரின் உதவியுடன் பௌத்த விகாரைகள் பொது மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவா் குற்றம் சுமத்தினார். மாங்குளம், ஒட்டுசுட்டான், மன்னாகண்டல், வட்டுவாகல், கொக்குளாய் ஆகிய பிரதேசங்களில் பெரிய விகாரைகளும் மா…

  6. தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி (James Berry MP) அவர்கள் தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதுடன் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் என தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் இப் புது வருடத்தில் ஐ. நா சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி தொடர்பான பொறிமுறை நம்பகரமானதகவும் சுதந்திரமானதகவும் செயற்படுவதை உறுதிப்படுத்துவதுடன் தமிழர்களின் அரசியல் தொடர்பான அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிபர் மைத்திரி அவர்கள் தமிழர்களின் நிலங்களை மீள ஒப்படைத்தல் மற்றும் இரா…

    • 0 replies
    • 457 views
  7. 9 கைக்குண்டுகள் மீட்பு! மன்னார் நாயட்டு வெளிப்பகுதிக்கு அருகில் விடுதலைப்புலிகளின் காவலரண் அமைந்திருந்த இடத்தில் இருந்து 9 கைக்குண்டுகளை நேற்றையதினம் பிற்பகல் 12.30 மணியளவில் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் நாயட்டுவெளிசந்தியில் இருந்து பரபரப்புக்கடத்தான் வரையாக ஊடறுத்து செல்லும் பகுதியில் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு அரண் ஒன்று அமைந்திருந்த இடத்தில் கைக்குண்டு இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் அப்பகுதிக்கு பொலிஸார் சென்றுள்ளனர். குறித்த பகுதியில் பழைய உரப்பை ஒன்றுக்குள் காணப்பட்ட 9 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டதுடன் அவற்றை நீதிமன்றத்தின் கவனத்துக்கும் பாரப்ப…

  8. தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்! தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜேம்ஸ் பெரி தெரிவித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இப் புதுவருடத்தில் ஐ.நா சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி தொடர்பான பொறிமுறை நம்பகரமானதகவும் சுதந்திரமானதகவும் செயற்படுவதை உறுதிப்படுத்துவதுடன் தமிழர்களின் அரசியல் தொடர்பான அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு தமிழர்களுக்கான சுய நிர்ணய…

  9. யாழில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு களத்தில்; எதிர்காலத்தில் பலர் கைதாகலாம் [ Thursday,14 April 2016, 05:04:24 ] யாழ்ப்பாணத்தில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டதன் பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புலனாய்வில் ஈடுபட்டு வருவதோடு, எதிர்காலத்தில் மேலும் பலரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தலாம் என்ற ஊகத்தை சாவகச்சேரி பொலிஸார் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விவாரத்தில் நுணாவில் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டதோடு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். பூசா முகாமில் அவர் தடுத்து வைத்திரு…

  10. பரிசுப் பொருட்களை கைவிட்டுச் சென்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர்! முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தனக்குக் கிடைத்த அனைத்துப் பரிசுப் பொருட்களையும் கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு வெள்ளியினாலான கலசம் ஒன்றை பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் சங்கம் வழங்கியிருந்தது. அதனை உடனடியாக அவர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்துவிட்டார். என்.கே. இலங்கக்கோனின் பதவி ஓய்வை முன்னிட்டு வழங்கப்பட்ட அனைத்து பரிசுப் பொருட்களையும் அவர் பொலிஸ் தலைமையகத்துக்கு கையளித்துள்ளார். அத்துடன் அவரது பதவிக் காலத்தில் பல்வேறு ந…

  11. சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரம்: மேலும் எண்மர் கைது யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணிவந்த மேலும் 8 சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணிய ஐவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான சந்தேகநபரின் அலைபேசிக்கு உள்வந்த மற்றும் அலைபேசியிலிருந்து வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்ப…

  12. ஜனாதிபதியின் ஐரோப்பா விஜயத்தின் இறுதி நாள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐரோப்பாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதிநாள் இன்றாகும். ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாடுகளில் உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் இறுதி நாளான இன்று ஆஸ்திரியாவில் இருக்கும் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளார். முன்னதாக ஆஸ்திரியா நாட்டின் ஜானதிபதி மற்றும் அந்த நாட்டு முதலீட்டாளர்களுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=77242 …

    • 3 replies
    • 404 views
  13. புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி ; மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது [ Wednesday,13 April 2016, 05:01:30 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பி மீட்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மீது நடத்தப்பட்ட விசாரணையின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் வவுனியா பூவசரங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது. இவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நகுலன் என்ற குறித்த நபர் முன்னாள் போராளி என்று தெரி…

  14. கிளிநொச்சி மாவட்டத்தில், ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்குமாறு மாவட்ட அரச அதிபர் அறிவுறுத்திய போதும் அதிகாரிகள் மௌனம் சாதிப்பதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிடுகிறார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 52 வயதான நபர் ஒருவர் குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 16வயதிற்குட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது பாரதூரமான குற்றம் என்றும் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் பெண்கள் பொலிஸில் இணைவதில் அக்கறை காட்டுவது மிக கு…

    • 0 replies
    • 457 views
  15. விழுதுகள் நிகழ்ச்சியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்: சிங்கள மக்கள் ஒரு தேசமாக வாழ்கிறார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இலங்கைத் தீவில் ஒரு தேசத்திற்கு உரிய மக்கள் மட்டும் தான் இருக்கிறார்களா? இலங்கைத் தீவில் இரண்டு தேசங்களுக்கு உரிய அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பல தேசங்களுக்கு உரிய மக்கள் வாழ்கிறார்களா? முஸ்லீம்களோ மலையக மக்களோ தமது அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடாது என்றோ அல்லது நாம் கூறுகின்ற ஒரு நாடு இருதேசம் என்ற கோட்பாட்டுக்குள் தான் வாழ வேண்டும் என்று நாம் எந்த இடத்திலும் கூறவில்லை. இதுவரை தேசம் என்ற கோணத்தில் தங்களது அபிலாசைகளை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள் மட்டும்தான் என்றே நினைக்கிறேன். குறிப்பாக ஏனைய சிறுபான்மை இனங்கள் ஒரு தேசமாக தம்மை அடை…

    • 0 replies
    • 368 views
  16. நல்லாட்சி விடுதலை செய்த அரசியல் கைதி கிளிநொச்சியில் மீண்டும் கைது நல்லாட்சி அரசாங்கம் விடுதலை செய்த கிளிநொச்சியை சேர்ந்த விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற அரசியல் கைதி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த வருடம் பதினொராம் மாதம் பதின்மூன்றாம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட 39 அரசியல் கைதிகளுடன் விடுவிக்கப்பட்ட இவர் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் கிளிநொச்சி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரை பிணையில் விடுதலை செய்வதற்கு கையப்பமிட்ட நபரை காணவில்லை என்றே இவரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது குறித்த சம்பவம் தொடர்பாக அவரது தாயர் தெரிவிக்கையில் கடந்த வியாழகிழமையில் இருந்து தம…

    • 0 replies
    • 361 views
  17. கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி பொலீஸ் நிலைய பிரிவுக்குட்ப்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களில் நீதி மன்றில் குற்றவாளியாக இனம் காணப்பட்டு விதிக்கப்பட்ட தண்டப்பணம் ஒரு கோடியே 87 இலட்சத்து 2000 ரூபா என கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்எல்ஜேடி சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை கிளிநொச்சி பிரஜைகள் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 624 மொத்த வழக்குகளில் 382 வழக்குகள் நீதி மன்றினால் குற்றவாளிகளாக த…

    • 0 replies
    • 475 views
  18. முல்லைத்தீவு மாவட்டம், இலங்கையில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அடிப்படைவசதிகளற்ற நிலையில் இங்கு மக்கள் வாழ்கின்றனர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கையில் மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமொன்று காணப்படுகின்றது. மாந்தை கிழக்கு பிரதேசமே முல்லைத்தீவு மாவட்டத்திலேயே பின்தங்கிய பகுதி. மல்லாவியிலிருந்து சுமார் பதினொரு கிலோமீற்றர் தொலைவில் இருக்கிறது மாந்தை கிழக்கு. இந்தப் பிரதேசத்தில் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2009இல் மீள்குடியேற்றப்பட்டனர். யுத்தம் முடிந்தவுடன், முதன் முதலில் இந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். …

    • 0 replies
    • 528 views
  19. சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு சம்பவம்; வெளிநாட்டில் உள்ள இருவருக்கு பொலிஸ் வலை சாவகச்சேரி பிரதேசத்தில் அண்மையில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவருடனும் தொடர்பு பேணப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. அதன்படி இவர்களுக்கி…

  20. 65,000 வீட்டுத்திட்டம் இரண்டு மாதங்களில் ஆரம்பம்! போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கான 65,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். போரின் காரணமாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தினை ஆரம்பிதத்துள்ள இலங்கை அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கில் இந்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.இதற்கமைய, வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களிலும் யாருக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாகத் தீர்மானிக்கப்படவுள்ள…

  21. இராணுவ முக்கியஸ்தர்களுடன் பசில் இரகசிய சந்திப்பு இராணுவ உயரதிகாரி ஒருவர் உள்ளிட்ட இராணுவத்தின் முக்கியஸ்தர்கள் சிலரை இரகசியமாக சந்திக்க முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். தமக்கு நெருக்கமான உயர் இராணுவ அதிகாரியொருவர் மற்றும் இராணுவத்தின் சில உயரதிகாரிகளுடன் பசில் ராஜபக்ச இவ்வாறு இரகசிய சந்திப்பு நடத்த உள்ளார். இதற்கான திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சிரேஸ்ட உயர் இராணுவ அதிகாரி தொடர்ச்சியாக பசில் ராஜபக்சவுடன் இரகசிய தொடர்பாடல்களை பேணி வருவதாகவும் தொலைபேசி ஊடாக தொடர்பு பேணி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் பசில், இராணுவ உயர் அதிகா…

  22. ஐ.நா 32ஆவது கூட்டத் தொடரில் மங்கள விசேட உரை! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரின் போது, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறை குறித்த வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார். குறித்த கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ள உயர்மட்ட தூதுக்குழு உள்ளக விசாரணைப் பொறிமுறை குறித்து சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தவுள்ளது.அத்தோடு,உள்ளக விசாரணை பொறிமுறையின் வடிவத்தை …

  23. மன்மத வருடம் எங்களை விட்டுப் போக துர்முகி வருடம் இன்று ஆரம்பமாகின்றது! மன்மத வருடம் எங்களை விட்டுப் போக துர்முகி வருடம் இன்று மாலை ஆரம்பமாகின்றது. வருடங்கள் வந்து போனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தாமதங்களே மிஞ்சி நிற்கின்றன என வடமாகாண முதலமைச்சர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட எம்முடைய மக்களில் பலர் சொந்த வீடுகளுக்கும் காணிகளுக்கும் செல்லமுடியாது வேறு இடங்களில் பல சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். சிறையிலடைபட்ட எமது இளைஞர்கள் சிலரைத் தவிர மற்றையோர் இன்னமும் விடுபட்டபாடில்லை. போரின்போது தமது உற்றார் உறவினர்களை…

  24. இலங்கையை நெருங்கும் ஆபத்து!எச்சரிக்கிறது காலநிலை ஆய்வு மையம் எதிர்வரும் நாட்களில் இலங்கைத் தீவு மற்றும் தென்னிந்தியாவில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் என காலநிலை தொடர்பான ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் காற்றழுத்தம், தீவிரம் அடைந்து இலங்கைத் தீவு மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் இலங்கைத் தீவு முழுவதும் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட…

  25. வரதருக்கு நடந்ததே சீ.வி.க்கும் நடக்கும்! வடமாகாணசபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்கின்றது என்பதை மறந்து முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். முன்னாள் வட கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்போன்று செயற்படவேண்டாமென சீ.வி. விக்கினேஸ்வரனுக்கு நாம் கூறுகின்றோம். என்று பொது எதிரணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரா. சம்பந்தன் தலைவராக இருக்கின்ற நிலையில் அந்தக் கட்சியின் சார்பாக வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் எவ்வாறு தீர்வுத் திட்டங்களை முன்வைக்க முடியும். இது ஒரு குழப்பகரமான நிலையைக் காட்டுகிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.