ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
தற்கொலை அங்கி சூத்திரதாரி பிரபாகரனின் நண்பர்? தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களுடன் சாவகச்சேரி பிரதேசத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி சந்தேநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, முக்கிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை, வாகனமொன்றிலிருந்தே பெற்றுக்கொண்டதாக, ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டனர். தான் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதால், மீ…
-
- 0 replies
- 338 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தமிழர்களின் உரிமை தொடர்பாக பேசுவதற்கு மாவடட்த்தில் சீ.யோகேஸ்வரன் மட்டுமா உள்ளார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் யோகேஸ்வரன் அவர்கள் சிறுபான்மையின மக்களுக்கு மட்டக்களப்பில் உள்ள அதிகாரங்களை விட பெரும்பான்மையின மக்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அதிகாரங்கள் மிகக்குறைந்தது எனவும் அதற்கு காரணமான அமைச்சர்கள் தொடர்பாகவும் பேசியிருந்தார். அதனை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர் அமீரலி மாகாணசபை உறுப்பினர் சிப்லிபாறுக் ஜீனைட் நளீமி போன்றவாகள் யோகேஸ்வரன் ஐயா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று ஒட்டுமொத்த தமிழர்களையும் மிகக்கேவலமாக பொதுநிகழ்வுகளிலும் செய்திமாநாட்டை கூட்டியும் பேசிவருகின்றனர். இது குறித…
-
- 1 reply
- 479 views
-
-
யாழ் நாகவிகாரையினால் கடற்கரையோரம் அல்லது கடலுக்குள் கட்டப்படவிருந்த புத்தர் சிலை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி வழங்கப்படாததால் நிறுத்தப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் கடற்கரையோரம் அல்லது கடலுக்குள் எந்தவித கட்டுமானமும் செய்ய முடியாது என்பது யாழ் நாகவிகாரை அதிபதிக்கு தெரிந்து இருக்க வேண்டும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது. புத்த விகாரை சிலை கட்டுமானம் தடை செய்யப்பட்டதானது, நாட்டின் இன மத சகவாழ்வுக்கு ஏற்பட்டுள்ள தடை என என்னிடம் முறையிட்ட ஜாதிக ஹெல உறுமய க…
-
- 0 replies
- 553 views
-
-
தெற்கிலிருந்து துருப்புகளையும் இராணுவ தளபாடங்களையும் சுமந்த புகையிரதம் ஒன்று வடக்கிற்கு சென்றுள்ளது: குளோபல் தமிழ் செய்திகள்:- பாதுகாப்புப் படையினர் சோதனை நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. காவல்துறையினரும் முப்படையினரும், புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணத்தில் சாவகச்சேரி மற்றும் மன்னாரில் ஆயுதங்கள், தற்கொலை குண்டு அங்கி போன்றன மீட்கப்பட்டதனைத் தொடர்ந்து இவ்hறு பாதுகாப்பு படையினர் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத சந்தேகத்திற்கு இடமான நபர்களை கைது செய்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு…
-
- 0 replies
- 281 views
-
-
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தனது பெயரிலிருந்து ஈழம் என்ற பதத்தை நீக்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிவினைவாத கோட்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் பழமையான தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பெயரில் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது தற்போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி இரண்டு பிரிவுகளளாக இயங்குகின்றன. இதில் ஒரு பிரிவினரான பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழம் என்ற பதத்தை நீக்கத் தீர்மானித்துள்ளதாகவும், தமிழ் மக்கள் சமூக ஜனநாயக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி அமைக்கப்பட உள்ளதாகவும், இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் …
-
- 11 replies
- 1.6k views
-
-
சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பான உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரம் புனேவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கு முன்னரும் இப்படியான வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. எனினும் இந்த விதமான வதந்திகள் பரவவில்லை. தற்கொலை அங்கி, சில குண்டுகள், தோட்டக்கள் மீட்கப்பட்டன. தோட்டாக்கள் இருந்தால், துப்பாக்கி இருந்திருக்க வேண்டும். ஏன் துப்பாக்கியை மறைத்தனர் என்பது எனக்கு தெரியாது. உண்மையை கூறாதவரை மக்கள் இது பற்றி பலவற்றை சிந்திக்க முடியும். மீட்கப்பட்ட வெடிபொருட்கள் பழையவை என சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் அவ…
-
- 1 reply
- 843 views
-
-
வவுனியாவில் நல்லிணக்க கிராமம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவக் குடியேற்றம் இன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது. வவுனியா, கொக்குவெளிப் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சினால் சத்விரு சங்ஹிந்த என்னும் பெயரில் அமைக்கப்பட்ட கி்ராமத்தில் உள்ள வீடுகளே இன்று கையளிக்கப்பட்டன. முதற்கட்டமாக இதில் 51 வீடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 6 வீடுகள் இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகளுக்கும், ஒரு வீடு இராணுவச் சிப்பாயைத் திருமணம் செய்த தமிழ் யுவதி ஒருவருக்கும் ஏனைய வீடுகள் இராணுவக் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவ் வீட்டுத்திட்ட கையளிப்பு நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசர் ருவான் விஜேயவர்த்தன, பாதுகாப்பு அமை…
-
- 0 replies
- 509 views
-
-
முப்படைகளில் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் பற்றிய தரவுகளை திரட்டிப் பேணுமாறும் தேவை ஏற்படும் போது பொதுத்துறை சேவைகளுக்காக ஓய்வுபெற்ற படையதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முடியும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கத்தில் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் திறமையுடையவர்களுக்கு நிலவி வரும் பற்றாக்குறையை நீக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 22 ஆண்டு சேவைக் காலத்தை பூர்த்தி செய்த தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் நிபுணத்துவமுடைய பல படையதிகாரிகள் ஆண்டு தோறும் ஒய்வு பெற்றுக்கொள்கின்றனர். பொறியில், மருத்துவம், அளவையியல், தொழில்நுட்பம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் நிப…
-
- 0 replies
- 316 views
-
-
தமிழ் மூதாட்டி ஔவையார் விக்னேஸ்வர பெருமானைப் பார்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும்தா என்று கேட்கிறார். முத்தமிழை தனக்குத் தருமாறு கேட்கின்ற ஔவைப்பாட்டி பால், தேன், பாகு, பருப்பு என்ற நிறை உணவுகளை தருவதாகக் கூறுகிறார். ஔவையார் கூறிய மேற்போந்த பாடல் மூளை வளர்ச்சி, கல்வி, கற்றல், ஞாபகசக்தி என்பவற்றுக்கு பால், தேன், பாகு, பருப்பு என்பன முக்கிய மான ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் பொருள்படுத்திக் கொள்ளலாம். சங்கத்தமிழ் மூன்றும்தா என்று கேட்ட ஔவையார் அறம்செய விரும்பு என்றார். அறம் செய விரும்பு என்று அட…
-
- 1 reply
- 712 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 4 ஆயிரம் போராளிகள் இறுதி யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் சரணடையாமல் வடக்கு மாகாணத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருவதாக தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹட்டியாராச்சி, இவர்கள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவ டிக்கைகளை பொலிஸாரே முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு பேட்டியளிக் கையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இவ்வாறு சரணடையாமல் இருக்கும் போராளிகளில் பெரும்பாலானோர் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இதர நாடுகளில் தஞ்சம்புகுந்துள்ளதாகவும், ஏனையோர் வட மாகாணத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார். சரணடையாதிருக்கும் முன்னாள் போராளிக…
-
- 7 replies
- 1.7k views
-
-
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட போதிலும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் அரசியல் மற்றும் தனிப்பட்ட பகை காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல கொலைகள் குறித்த தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொலைகளில் பிரபல இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் லக்கி அல்கம, சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரத்ன ஆகியோரின் கொலைகளும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் பலனாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் வழங்குமாறு அண்மைய…
-
- 0 replies
- 473 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் எரியூட்டப்படவில்லை என்றும்,அது புதைக்கப்பட்டதாகவும், முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் உடல் இறுதிப் போரின் முடிவில் நந்திக்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான தயா ரட்நாயக்க தெரிவித்திருந்தார். அத்துடன் பொட்டு அம்மானின் உடலமும் எரியூட்டப்பட்டு அதன் சாம்பல் கடலில் வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் தயா ரட்நாயக்கவின் தகவலை, சரத் பொன்சேகா மறுத்துள்ளார். ரட்நாயக்க, குறித்த நேரத்தில் போர்க்களத்தில் இருக்கவில்லை என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 539 views
-
-
தேசிய அரசிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இரகசியமாக பேச்சு நடத்தியுள்ளனர். கொழும்பில் கடந்த வாரம் நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பில் பொது எதிரணி உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர். சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக பேசப்பட்டுள்ளன. அத்துடன், ஆட்சிமாற்றம் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்பட்டாலும் இது குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அதிருப்திக் குழுவினரை இணைத்துக்கொண்டால், புதியதொரு ஆட்சியை உருவாக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் பிரதமர் பதவியை மஹிந்தவ…
-
- 0 replies
- 273 views
-
-
குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குங்கள்: வித்தியாவின் தாயார் ஜனாதிபதியிடம் கோரிக்கை எனது மகளின் படுகொலை விசாரணையை விரைவுபடுத்தி விரைவில் நீதியை பெற்றுத்தாருங்கள் என வித்தியாவின் தாயார் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். வவுனியா நகர்ப்பகுதியில் வித்தியாவின் குடும்பத்தினருக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று பகல் இடம்பெற்றபோதே வித்தியாவின் தாயார் இக்கோரிக்கையை முன்வைத்தார். யாழ்ப்பாணம் புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயாரை ஜனாதிபதி யாழ்ப்பணத்தில் சந்தித்திருந்தபோத தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கருத்தி வவுனியாவில் வீடொன்றை பெற்றுத்தருமாறு கோரியிருந்தார். இந்நிலையில் வவுனியா …
-
- 0 replies
- 287 views
-
-
பாதுகாப்பு தரப்பு முன்வைத்த கோரிக்கைகளை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ். விஜயத்தை மேற்கொண்டு அங்கு புதிதாக அமைக்கப்பட்ட ஹோட்டல் ஒன்றை திறந்து வைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் ஜனாதிபதியை இலக்கு வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் ஜனாதிபதி வடக்கு விஜயத்தை தவிர்க்க வேண்டும் என பாதுகாப்பு தரப்பினர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/4801
-
- 0 replies
- 323 views
-
-
வழிப்போக்கர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவசியமில்லை : வடக்கு முதல்வர் வடமாகாண தமிழ் மக்களின் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஹிக்கடுவ பகுதியில் இடம்பெற்ற 32 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை. இதனால், வடமாகாண முதலமைச்சர் பிரிவினைவாத மற்றும் இனவாத நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதாகவும், முதலமைச்சரின் செயற்பாடு தேசிய நல்லிணக்கத்திற்கு தடங்கலாக இருப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். …
-
- 1 reply
- 376 views
-
-
உள்ளூர்ப் பணியாளர்களுக்கும் சீனப் பணியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் சீனப் பணியாளர்கள் நால்வர் காயமடைந்து, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாந்தோட்டைப் பகுதியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றின் நிர்மாணப்பணியில் ஈடுப்பட்டிருந்த பணியாளர்களுக்கிடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள், வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/169388/%E0%AE%9A-%E0%A
-
- 0 replies
- 355 views
-
-
கொத்மலை நீர்த்தேக்கத்தினால் மூழ்கடிக்கப்பட்டிருந்த மொறபே நகரம் கடும் வரட்சியினால் வெளியே தெரிகிறது மலையகத்தில் வரட்சியான காலநிலை காரணமாக கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது. இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரில் மூழ்கியிருந்த மொறபே பழைய நகரின் சில பகுதிகள் வெளித் தெரிகின்றன. பௌத்த விகாரையொன்றும் 25 வருடங்களுக்குப் பின் தற்போது மீண்டும் வெளித்தெரிகிறது. இதனைப் பார்வையிடுவதற்குப் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் வருகின்றனர். அத்தோடு வழிபாடுகளில் …
-
- 2 replies
- 375 views
-
-
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தனது பெயரிலிருந்து ஈழம் என்ற பதத்தை நீக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக இந்திய ஊடகமான ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிவிணைவாத கோட்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் பழமையான தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்hறன ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பெயரில் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது தற்போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி இரண்டு பிரிவுகளளாக இயங்குகின்றன. இதில் ஒரு பிரிவினரான பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழம் என்ற பதத்தை நீக்கத் தீர்மானித்துள்ளதாகவும், தமிழ் மக்கள் சமூக ஜனநாயக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சிஅமைக்கப்பட உள்ளதாகவும், இன்றையதினம் யா…
-
- 1 reply
- 465 views
-
-
தமிழர்கள் சந்தோசமாக இருந்தால் மட்டுமே சிங்களவர்கள் சந்தோசமாக இருக்க முடியும் - ஜனாதிபதி தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே சிங்கள மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் சிங்கள மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என அவர் தெரிவித்துள்ளார். ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து இன சமூகங்களும் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/ar…
-
- 4 replies
- 604 views
-
-
ஜனாதிபதி தலைமையில் அரச சுற்றுலா விடுதி திறந்து வைப்பு சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ மத அலுவல்கள், மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளின் ஒன்றான சுற்றுலா பயணிகளின் கண்கவரும் வகையில் நவீனமயமாக்கப்பட்ட அரச சுற்றுலா விடுதி இன்று யாழ்.மணிக்கூட்டு வீதியில் அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டு அரச சுற்றுலா விடுதியைத் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்களாகிய உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா, விஐயகலா மகேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட் குரே, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய அங்கஐன் இராமநாதன், மற்றும…
-
- 0 replies
- 363 views
-
-
வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத்திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆதரவுடன் கட்டாயம் நடைமுறைப்படுத்தியே தீருவேன் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சர்வதிகாரமாகக் கூறுகின்றார். இது ஆரோக்கியமாக அமையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். மேற்படி வீட்டுத்திட்டத்தின் கீழ் உரும்பிராயில் அமைக்கப்பட்ட வீடொன்றை வெள்ளிக்கிழமை (01) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'இந்த வீடுகள் ஐந்து வருடங்களில் சகல நிலைமைகளையும் இழந்துவிடும். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மீள்குடியேறிய மக்கள், த…
-
- 1 reply
- 780 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு 150 படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் அன்பளிப்பாக வழங்கும் உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் நேற்றுக் கையொப்பமிட்டன. மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடல் நிகழ்வில் இந்திய அரசியல் சார்பில் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் வை.கே. சிங்ஹாவும், இலங்கையின் சார்பில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யு. எம்.எம். ஆர். அதிகாரியும் கையொப்பமிட்டனர். 150 மீன்பிடி படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் முல்லைத்தீவிலுள்ள 300 பயனாளிகள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - http://malarum.com/article/tam/2016/03/31/14186/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%A…
-
- 3 replies
- 323 views
-
-
தமிழ் மக்கள் மீ்ண்டும் ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை : சுமந்திரன் எம்.பி "ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்படுவது சர்வசாதாரண விடயம். ஆனால், சாவகச்சேரி சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், தமிழரின் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்கப் போகின்றது என்றும் தெற்கில் உள்ள சிலர் ஊளையிடுகின்றனர். மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடி உரிமைகளைப் பெறவே எமது மக்கள் விரும்புகின்றனர்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்ப…
-
- 0 replies
- 305 views
-
-
வவுனியா சிங்களப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு உலர் உணவுகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க பொதுபல சேனா அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. வவுனியா தெற்கில் வாழும் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் மற்றும் தமிழ் பேசும் அதிகாரிகள் கடும் பாரபட்சம் காட்டுவதாக பொதுபல சேனா அமைப்பு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது. குறித்த, பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு குறைந்த பட்சம் சுகாதார வசதிகள் கூட தமிழ் அதிகாரிகளால் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தியிருந்தது. இந்த நிலையில், வவுனியா தெற்கில் வாழும் சிங்கள மக்களுக்கு பொதுபல சேனா முன்னின்று சேகரித்த உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இன்று விநியோகம் செய்ய உள்ளனர். அதற்கான ஏ…
-
- 5 replies
- 635 views
-