Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்சர்களின் மலசல கூடங்களை மாதிரியேனும் தமிழ் மக்களின் வீடுகள் இல்லை அநுர குமார திசாநாயக்க:- அரசாங்கத்தின் அமைச்சர்கள் கட்டியிருக்கும் மலசல கூடங்கள் மாதிரியேனும் கூட தமிழ் மக்களின் வீடுகள் இல்லை என ஜேவிபியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். இன்று புதன் கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய நல்லிணக்கமும் நாட்டின் எதிர்காலமும் எனும் தொனிப்பொருளில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் அமைச்சர்களின் மலசலங்கள் கூட மிக தரமாக காணப்படுகிறது சிலரின் மலசல கூடங்களுக்கு ஏசி கூட பொருத்தி இருக்கிறார்கள்,…

  2. ஈழ அகதிகள் அனைவரையும் அழைத்துவர ஏற்பாடு தமிழக அகதி முகாம்களில் தங்கியுள்ள ஈழ அகதிகள் அனைவரையும் நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஈழ அகதிகள் இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன், இவர்களை விரைவில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தமிழகத்தில் அகதிகளான இருந்தவர்களில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் சு…

  3. கிளிநொச்சியில் மூன்று சிறுவர்களை காணவில்லை கிளிநொச்சி பரந்தன் பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்களை காணவில்லை என பெற்றோரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று புதன் கிழமை காலை பாடசாலைக்கு சென்ற மூன்று சிறுவர்களும் மாலை வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களால் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை இதனையடுத்து பெற்றோரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பரந்தன் 11 ஆம் ஒழுங்கையை சேர்ந்த தம்பிராசா ராகுலன், பிரபாகரன் பிரவீன், இந்திரன் இறைவாணன் ஆகிய சிறுவர்களே கானாமல் போயுள்ளனர். இவர்கள் தரம் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் கல்வி கற்கி…

  4. 'மங்கையற்கரசியின் மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பு' 'தாய்த் தமிழகத்தில் உள்ள எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு எமது மக்கள் மட்ட துன்ப துயரங்களை தெளிவாக எடுத்துக்கூறி அவர்களை எமது போராட்டத்தின்பால் ஈர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்த மங்கையற்கரசியின் மறைவு தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும்' என தமிழர் விடுதலை கூட்டணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று புதன்கிழமை கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'தமிழர் போராட்ட வரலாற்றின் முதற்கட்டமே தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்துதான் ஆரம்பமானது. 1972ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசம் எங்கும் தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்களின் விடிவுக்காக ஒ…

  5. ஆலோசனைக்கு அமைய பணியாற்றாவிடின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் -செல்வநாயகம் கபிலன் யாழ். மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை அதிகாரிகள் மாவட்ட செயலாளர், முதலமைச்சர், ஆளுநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கு அமையவே பணியாற்ற வேண்டும். இல்லையேல் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் பஸ், போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைந்த நேர அட்டவணை தயாரிப்பது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரினால் பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டு வந்த நிலையில், பிராந்திய முகாமையாளர் ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிப்பு செய்த…

  6. ரவிராஜ் கொலை வழக்கு: மேல் நீதிமன்றுக்கு மாற்றம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது சாரதி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான நீதவான் விசாரணை பூர்த்தியான நிலையில், மேலதிக விசாரணைக்காக மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில், கடற்படை வீரர்கள் உட்பட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குப் போதியளவான சாட்சிகள் உள்ளன என்றும் இவ்வழக்கை மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகவும், இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே குறிப்பிட்டார். அத்துடன், சந்தேகநபர்களை எதிரவரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான…

  7. இளைஞருக்கு பைக் வாங்கி கொடுத்த சித்தி கைது! வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த இளைஞனின் சித்தி (வயது-58) நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தட்டாதெருவில் நடைபெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது. தட்டாதெருவில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் நின்ற இளைஞர்களை மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று நடு வீதியில் கலைத்து கலைத்து வாளால் வெட்டிய சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்கள் சகிதம் வந்த இளைஞர்கள், விறகு காலையில் நின்ற இளைஞர்களை பலர் முன்…

  8. +4 · சிறிலங்கா : போர்க்குற்றவாளிகளின் கூடாரம் – அவுஸ்திரேலிய ஊடகம் ------------------------------------------------------------- மேற்குலகின் அதிகாரத்துவ நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள், தமது சொந்த பூகோள-அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காகவே இலங்கைத் தீவு தொடர்பாக பொய்ப் பரப்புரை செய்கின்றன என்பது வெட்கம்கெட்ட செயலாகும். இவ்வாறு அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட Red Flag ஊடகத்தில் Trevor R. Grant எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. …

  9. மஹிந்த ராஜபக்ஸ கால இரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு:- 17 மார்ச் 2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட இரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த உண்மைகளை அம்பலப்படுத்தும் நோக்கில் இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் பற்றி இதுவரையில் வெளிவாரத உண்மைகளை சரத் பொன்சேகா அம்பலப்படுத்தத் தீர்மானித்துள்ளார். பாராளுமன்றில் தனது முதலாவது உரையிலும் மஹிந்த ராஜபக்ஸவை சரத் பொன்சேகா கடுமையாக சாடியிருந்தார்…

    • 1 reply
    • 363 views
  10. நல்லிணக்கம் பற்றிய செய்தியை வடக்கிற்கு எடுத்துச் செல்வதனை விட, தெற்கை சென்றடைய வழியமைக்க வேண்டும் நல்லிணக்கம் பற்றிய செ;யதி தெற்கை சென்றடைய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கிற்கு இந்த செய்தியை எடுத்துச் செல்வதனை விடவும் தெற்கிற்கு இந்த செய்தி எடுத்துச் செல்லப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க முனைப்புக்களை தெற்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களுக்கான நல்லிணக்க முனைப்புக்களுக்கு தெற்கு மக்கள் உதவிகளையும் பங்களிப்ப…

  11. மின்சாரத்துக்கு இடையூறு விளைவிக்கும் மஹிந்தவின் அவதாரங்கள் விரைவில் வெளியில்..! நல்­லாட்­சியைத் தோற்­று­வித்த­தி­லி­ருந்து அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மந்தகதி­யி­லேயே உள்­ளன. ஆனால் அதன் பிர­தி­ப­லன்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீது நம்­பிக்கை கொண்டு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு வெகு­வி­ரைவில் கிடைக்கும். மக்­களை நாங்கள் மற­ந்­து­வி­ட­வில்­லை­யென டிஜிட்டல் தொழி­ல் நுட்பம் மற்றும் தொடர்­பாடல் வலு­வாக்கல் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நம்­பிக்கை வெளி­யிட்டார். மின் உற்­பத்திச் செயற்­பா­டு­களில் தமது நாச­காரச் செயற்­பா­டு­களை காண்­பித்து குழப்ப முற்­படும் மஹிந்­தவின் அவ­தா­ரங்கள் யார் என்­ப­தையும் விரைவில் நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­துவோம் எனவும் குறி…

  12. நாமலுக்கு டும் டும்! முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச திருமணம் செய்து கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பெண் மருத்துவர் ஒருவரையே திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் திருமணம் எங்கு, எப்போது நடைபெறும் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் மகிந்த ராஜபக்ச தம்பதியினர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றன. http://onlineuthayan.com/news/10993

  13. முல்லைத்தீவில் சிங்கள மீனவர்கள் தொழில் செய்ய இராணுவமே காரணம்! வடக்கு ஆளுநரிடம் முறைப்பாடு! முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களைக் கொண்டுவந்து மீன்பிடியில் திணித்தவர் 511 படையணியின் தளபதி என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்பின் பிரதிநிதி மரியதாசன் வடமாகாண ஆளுநரிடம் தெரிவித்தார். வட மாகாண கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகளிற்கும் வட மாகாண ஆளுநருக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் தமது மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தனித்தனியே ஆளுநரிடம் எடுத்துரைத்தனர். இதன்போது முல்லைத்தீவு மாவட்டப் பிரதிநி…

  14. 43.7 மில்லியன் யூரோ பெறுமதியான உதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் [ Thursday,17 March 2016, 04:23:57 ] ஸ்ரீலங்காவில் இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு 38 மில்லியன் யூரோ நிதியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கிராம பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கென 30 மில்லியன் யுரோ நிதி பயன்படுத்தப்படவுள்ளது. வர்த்தகம் தொடர்பான உதவியாக 8 மில்லியன் யுரோ நிதியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. அத்துடன் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிக்காலமைப்பு சபைக்கு 5.7 மில்லியன் பெறுமதியான தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றிய…

  15. ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றவேண்டும் என சிங்கள ராவய அமைப்பு மீண்டும் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது. இந்த தகவலை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அதேவேளை, இந்தப்பிரச்சினையை இனவாத அமைப்புக்கள் தொடர்ந்தும் பெரிதுபடுத்தி தெற்கு மக்களை குழப்பும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆகியோரது கவனத்துக்கு தனிப்பட்ட ரீதியில் தான் கொண்டுவரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். …

    • 0 replies
    • 597 views
  16. வடக்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஞானசார தேரர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் வடக்கிற்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கள கிராமமான கொக்கிளாய் - முத்துஆரம பகுதியில் வசிக்கும் மக்களின் குறைகளைக் கண்டறிவதற்காகவே அங்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு,அங்கு வசிக்கும் சிங்கள மக்கள் அரச அதிகாரிகளாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் தவறாக வழிநடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கமையவே அதனை ஆராய்வதற்காகவே தாம் அங்கு சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாரம்பரியமாகக் குறித்த நிலங்களுக்க…

  17. காரைநகர் கல்வன்தாழ்வு பகுதியில் கடந்த 4ஆம் திகதி மண்வெட்டியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னத்துரை தவமணிதேவி (வயது 56) சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இவரைத் தாக்கிய, இவரது சகோதரியின் கணவர் தலைமறைவாகியுள்ளார். மேற்படி பெண்ணுக்கும், அவரது தங்கையின் கணவருக்கும் இடையில் கடந்த 4 ஆம் திகதி பனங்கிழக்கு பிடுங்குவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, தங்கையின் கணவர் மண்வெட்டியால் அப்பெண்ணைத் தாக்கியுள்ளார். தலையில் படுகாயமடைந்த பெண் காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்…

  18. அரசாங்கத்தை பாதுகாக்கிறது கூட்டமைப்பு! எப்படியான சவால்கள் வந்தாலும் நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். திருட்டுத்தனமாக கடன் பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள மகிந்த ராஜபக்ச, திருட்டுத்தனமாக கடனை வழங்கும் நாடுகள் இருக்கின்றனவா என கேள்வி எழுப்பியுள்ளார். களுத்துறையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்…

  19. ஒழுக்காற்று குழுவின் அறிக்கைக்கு ஏற்ப வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை : முதலமைச்சர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயப் பணிப்பாளர் மாலினி வெலிங்ரன் தொடர்பான ஒழுக்காற்று குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். துணுக்காய் கல்வி வலயப் பணிப்பாளர் மாலினி தொடர்பான அதிகார துஸ்பிரயோகம், நிதி ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணை அறிக்கையை துரிதப்படுத்துமாறு கோரி 62 பாடசாலைகளை சேர்ந்த 350 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்று செவ்வாய்கிழமை வடமாகாண கல்வி அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட…

  20. அவுஸ்திரேலிய தூதுவர்-வடமாகாண ஆளுநர் சந்திப்பு! இலங்கைக்கான அவுஸ்திரேலியா தூதுவர் பீறீன் கஸ்சன் அடங்கிய ஐவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திப்பணிகள், மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்,மீள்குடியேற்ற, புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்க அவுஸ்திரேலியா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலியா தூதுவர் பீறீன் கஸ்சன் தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் …

  21. சிறுமியை தாயாக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு! முதியவர் மன்றிற்கு சமூகமளிக்கவில்லை! தீர்ப்பு பிற்போடப்பட்டது! பாடசாலை மாணவியாகிய 14 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு தீர்ப்பு எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. பாடசாலை மாணவியாகிய 14 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த சிறுமியை தாயாக்கிய முதியவர் இன்றைய தினமும் மன்றிற்கு சமூகம் தராததால் இந்த வழக்குக்கான தீர்ப்பை 30ஆ…

  22. மீண்டும் உடல் கருகிய நிலையில் நான்கு சடலங்கள் தெஹிவளையில் மீட்பு தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதில் இவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல்கள் கருகி இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறுகின்றது. இன்று காலை 10 மணியாளவில் தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. http:/…

  23. வட மாகாண அமைச்சருக்கு வெளிநாடு செல்ல அனுமதி -செல்வநாயகம் கபிலன் சுன்னாகம் மின்சார சபையால் வெறுமனவே நிலத்தில் விடப்பட்டு, பரவிய கழிவு எண்ணெயால் அப்பகுதி கிணறுகள் பாதிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் அழைப்பாணை விடுக்கப்பட்ட வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (15) மன்றில் ஆஜராகி, வியாழக்கிழமை (17) வழக்குத் தவணையில் கலந்துகொள்ள முடியாது, தனக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி தருமாறு மன்றில் கோரினார். கடந்த வழக்குத் தவணையில் (பெப்ரவரி 17ஆம் திகதி) மன்றில் ஆஜராகாமைக்கு அமைச்சரை எச்சரித்த மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், அமைச்சர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதாகவும் அடுத்த தவணையில் கண்டிப்பாக ஆஜ…

  24. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற நிலைப்பாட்டை பலப்படுத்துங்கள் : நிபுணர்குழுவிடம் ஜனாதிபதி ஐக்கிய இலங்கைக்குள் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என்ற பலமான நிலைப்பாட்டினையும் உணர்வையும் மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதுடன் பக்கசார்பான அரசியல் பிடியில் இருந்தும் நாடு விடுபட்டுள்ளது. ஆகவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் அமைப்பு மாற்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு திருத்தும் தொடர்பில் மக்களின் கருத்தறியும் நிபுணர்குழுவினரிடம் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நிபுணர்குழு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமது யோச…

  25. நிஷாந்தவுக்கு பிணை வழங்குவதில் சிக்கல் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நிதி கிடைத்த விதம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு தவறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த ரணதுங்கவுக்கு பிணை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவரது பிணை மனு மீதான விசாரணை, இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது, பிணைச் சட்டத்தின் பிரகாரம், அவருக்கு பிணை வழங்க முடியாது என தெரிவித்த நீதிபதி எம்.சி.பீ.எஸ்.மொராயஸ், பிணை தொடர்பான முடிவினை கடுவெல நீதவான் நீதிமன்றமே எடுக்க வேண்டும் என்றும் கூறினார். அத்துடன், அவரை பொதுச் சொத்துக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.