Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் சனிக்கிழமை அதிகாலையிலிருந்து இறந்த நிலையில் சிறிய ரக மீன்களும், உயிருடன் கடல் பாம்பு ஒன்றும் கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர். சில கடல் வாழ் உயிரினங்களும் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. கடலில் இருந்து பல கழிவுப்பொருட்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருவதனால் காத்தான்குடி கடற்கரை பகுதி குப்பை மயமாக காட்சியளிக்கின்றது. காத்தான்குடி கடற்கரையில் கடந்த 26-10-2014 திகதி அன்று இறந்த நிலையில் சிறிய ரக மீன்கள் மற்றும் நண்டுகள் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=152893&category=TamilNews&language=tamil

  2. மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் பெற்ற 8,47,500 கோடி ரூபா கடனை செலுத்த வேண்டிய கடப்பாடு தற்போதைய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார். அரச நிறுவனங்கள் தொடர்பான அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மாத்திரம் ஆயிரத்து 142 பில்லியன் கடனை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். ஆட்சிமாற்றத்தின் பின்னர் நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்ட நல்லாட்சி அரசாங்கம் மஹிந்த அரசின் கடனில் 100 பில்லியன் ரூபாவை கடந்த வருடத்தில் மீளச் செலுத்தியது. மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி கொண்டு கடந்த அரசாங்கம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. தனது அமைச…

  3. தேசியக் கொடி ஏற்றினார் விக்கி! வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆண் மாணவர் விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கடந்த காலப் போர் நடை பெற்றவேளை பெற்றோரை இழந்த பொருளாதார ரீதியில் பாதிப்புற்ற வடக்கு - கிழக்கு - மலையக, தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் சர்வதேச பழைய மாணவர் ஒன்றியத்தினால் 80 மில்லியன் ரூபா செலவில் ஆண்கள் விடுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று இட…

    • 18 replies
    • 1.4k views
  4. காட்டு யானைகளின் அட்டகாசம் : மக்கள் கவலை முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஜயன்கட்டு, ஜீவநகர் முத்துவிநாயகபுரம், தட்டயர்மலை, சாளம்பன், அம்பகாமம், மாங்குளம் பனிக்கன்குளம், கரிப்பட்டமுறிப்பு உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்தத்தினால் உடமைகளை இழந்து மீள்குடியேறி பலத்த துன்பங்களின் மத்தியில் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதாகக் குறிப்பிட்ட இப்பகுதி மக்கள், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செய்யும் விவசாயத்தை காட்டு யானைகளும் பல த…

  5. சிறைச்சாலை பஸ்களுக்கு கறுப்புக் கண்ணாடி! சிறைச்சாலை பஸ்கள் அனைத்துக்கும் கறுப்புக்கண்ணாடி பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான பஸ்கள், முக்கியமான சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம், தெமட்டக்கொடை பகுதியில் வைத்து சிறைச்சாலை பஸ்ஸொன்றின் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டதனாலேயே இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://onlineuthayan.com/news/10184

  6. புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றதும், இதில் மக்கள் மிகவும் உட்சாகத்துடன் பங்குபற்றுவதும் மிகவும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கின்றது. ஈழத்தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் புலம்பெயர்ந்துள்ள எங்கள் உறவுகளின் வகிபங…

  7. நல்லிணக்கத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டு மகா சிவராத்திரி! மனிதன் மேற்கொள்ளும் தெய்வீக சமயா சாரங்கள், அனுஷ்டானங்களின் ஊடாக முழு பிரபஞ்சத்தினதும் நன்மை, நன்நெறிகள் மீதான அவனது எல்லையற்ற பக்தி வெளிப்படுகின்றதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சிவராத்திரி தின செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலுமுள்ள இலட்சக் கணக்கான இந்து பக்தர்கள் தங்களிடம் ஆன்மீக நல்லொழுக்கப் பெறுமானங்களை வளர்த்துக் கொள்ளவும் லௌகீக வாழ்க்கையை மிகச் சிறப்பான முறையில் அமைத்துக்கொள்ளவும் அனுஷ்டிக்கின்ற மகா சிவராத்திரி தினத்தின் ஊடாக வெளிப்படுவது நன்மைகளின் மீதான மனிதனது உயர்ந்த ஈடுபாடும் பிணைப்புமாகும். இந்நன்னாளில் இந்து பக்தர்கள…

  8. எங்கள் மீது அதிக அக்கறையும், கரிசனையும் கொண்டு நலன் விசாரிப்பவர்கள் அரச புலனாய்வாளர்களும், இராணுவத்தினருமே தவிர வேறு எவரும் இல்லை என இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட சுப்பிரமணியம் இலிகிதர் தெரிவித்துள்ளார். திருக்கோயில், விநாயகபுரம் பழைய தபாலக வீதியில் வாழ்ந்துவரும் சுப்பிரமணியம் இலிகிதர், தான் வறுமையின் பிடியில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 34 வயதான தான் அயல்வர்களின் மாடுகளை கூலிக்கு மேய்ப்பதுடன் அவர்களது வயல்களிலும் வேலைசெய்து வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், யுத்த காலத்தில் தனது கை மற்றும் கால்களில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக தனக்கு கடினமான வேலைகளில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

    • 0 replies
    • 317 views
  9. நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரதமர் அறிவிப்பார் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். இந்த அறிவிப்பு நாளை செவ்வாய்க்கிழமை அல்லது நாளை மறுதினம் புதன்கிழமையன்று விடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் கடன்சுமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, கடந்த வெள்ளிக்கிழமையன்று விசெட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இதன்போது, மீண்டுமொறு வரித் திருத்தம் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்…

  10. மைத்திரியே! ரணிலே! நல்லாட்சி வேடமிட்டு உலகை ஏமாற்றாதீர், எம் உறவுகளை சிறையில் சாகடிக்காதீர்! அகில இலங்கை மக்கள் முன்னணி, மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று யாழ். முனிஸ்வரா கோயில் முன்றலில் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் புத்தாண்டுக்குள் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும், மைத்திரியே, ரணிலே நல்லாட்சி வேடமிட்டு உலகை எமாற்றாதீர் எம் உறவுகளை சிறையில் சாகடிக்காதீர், இலங்கை அரசே லட்சம் மக்களை போரில் கொண்றது போதாதா எம் உறவுகளையும் சிறையில் கொல்லாதீர் உடனே விடுதலை செய், மைத்திரி …

  11. வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டிகளின்போது வன்செயல்களுக்கு இடமில்லை! யாழ். நகரப் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளின்போது, மைதானங்களில் எந்தவிதமான வன்செயல்களையும் அனுமதிக்க முடியாது, அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என, யாழ் குடாநாட்டில் கிரிக்கட் போட்டிகளின்போது, கடந்த காலங்களில் இரண்டு கொலைகள் இடம்பெற்றதை சுட்டிக்காட்டி நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். பத்து கிலோவுக்கு மேற்பட்ட அளவு கேரளா கஞ்சா உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கான பிணை வழக்கொன்றிலேயே இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி தனது எச்சரிக்கையில் மேலும் தெரிவித்துள்ள…

  12. அரசிற்கு எதிராக முறையிட சுவிஸ் பயணமாகும் மகிந்த அணி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து முறையிடுவதற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் சுவிட்சர்லாந்திற்கு செல்லவுள்ளனர். சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் மார்டின் சோன்கோனை எதிர்வரும் 31ஆம் திகதி நேரில் சந்தித்து இந்த முறைப்பாட்டை செய்வதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைமை தங்களுக்கு பதவி வழங்கப்படாமை, விவாதம் மற்றும் உரை நிகழ்த்துவதற்கான நேரம் மட்டுப்படுத்தப்பட்டமை, தங்களை ஓர் எதிர்கட்சியாக நோக்காமை போன்ற அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு விடயங்களை முன்வைத்து அவர்கள் இந்த முறைப்பாட்டை வழ…

  13. கடவுளின் மக்கள் என கருதப்படும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று நடுவீதியில் : மஹிந்த கடவுளின் மக்கள் என கருதப்படும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று நடுவீதியில் விடப்பட்டுள்ளனர். 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்று தொழிலாளர்களை கண்டுகொள்வதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அட்டன் - வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட்டத்தில் இன்று ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, எனது ஆட்சியின்போது மலையக மக்களுக்காக பல அபிவிருத்தித் திட்டங்களை நான் முன்…

    • 1 reply
    • 448 views
  14. இலங்கைக்கு சமஷ்டி பொருந்தாதாம்! - கோமின் தயாசிறி கூறுகிறார் [Sunday 2016-03-06 09:00] சமஷ்டி ஆட்சிமுறை இந்தியா போன்ற பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளுக்கே பொருந்தும் என்றும், இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்குப் பொருத்தமற்றது என்றும் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரும், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டநிபுணருமான கோமின் தயாசிறி. ''ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் போது அந்நாட்டுக்கு சமஷ்டி முறை அரசியலமைப்பு ஒன்றை அறிமுகம் செய்துவிட்டே சுதந்திரம் வழங்கியிருந்தனர். ஏனெனில் இந்தியா பல்வேறு மொழிகள் பேசப்படும் பாரிய நிலப்பரப்பைக் கொண்ட ஒருநாடாகும். அந்நாட்டுக…

  15. விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட சுமார் 150 பேர் வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைந்ததாகவும் அவர்களை பேருந்தில் ஏற்றிச் சென்றதை தாம் கண்டதாக பெண் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். கடந்தவாரம் கோப்பாயில் காணாமற்போனோர் குறித்து சாட்சியங்களைப் பதிவு செய்த மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவிடமே இதுபற்றிய சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத பெண் ஒருவர், இறுதிப் போர் பற்றிய சாட்சியத்தை அளித்திருந்தார். அவர் தனது சாட்சியத்தில், போரின் இறுதிக்கட்டத்தில் 2009 மே 16ஆம் நாள் நந்திக்கடல் வழியாக சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தோம். அங்கிருந்து நாம் ப…

  16. மட்டக்களப்பில் மிதி வெடிகள் அகற்றும் பணி தீவிரம் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய போர் அனர்த்தத்தின் போது புதைக்கப்பட்ட மிதி வெடிகள் அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுற்குட்பட்ட கும்புறுமூலை பாசிக்குடா வீதிக்கு அருகாமையிலுள்ள காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட மிதி வெடிகள் அகற்றும் பணிகள் நேற்று இடம்பெற்றது.மிதி வெடிகள் அகற்றும் பணிகளில் 231ஆவது இராணுவப் படைப் பிரிவின் மிதி வெடி அகற்றும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். குறித்த மிதி வெடிகள் அகற்றும் பகுதிகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் மிதி வெடி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை…

    • 2 replies
    • 230 views
  17. இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டு முறை நில அதிர்வு இரத்தினபுரி மாவட்டத்தில் சில பிரதேசங்களில் 06.03.2016 அன்று விடியற்காலை 3.15ற்கும், மதியம் 2.15 மணியளவிலும் இரண்டு சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நில அதிர்வு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசாரணைகளை தொடக்கியுள்ளது. பலாங்கொடை நகரை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். பல்லேகலையில் அமைந்துள்ள புவியியல் ஆய்வு மையத்தின் கட்டமைப்பில் சிறிய அளவிலான அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க ஆழப்படுத்தல் பணியகம் தெரி…

  18. 'சுதந்திர சதுக்கத்தில் சுதந்திரம் இல்லையா?': அமைதிப் போராட்டம் இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் அமர்ந்திருந்த இளம் ஜோடியை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பலவந்தமாக வெளியேற்றிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் இன்று அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நடத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர், சுதந்திர சதுக்கத்தில் அமர்ந்திருந்த இளம் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் காவல் பணியாளர்கள் வெளியேற்றியபோது, அவர்களிடையே நடந்த வாக்குவாதத்தின் வீடியோ காட்சி இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து சுதந்திர சதுக்கத்தில் அ…

  19. குளியாப்பிட்டிய சிறுவனின் கல்விக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஜனாதிபதி இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தியால் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கப்பட்ட சிறுவன், தனது கல்வியை தொடர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் கூறியுள்ளார். குளியாப்பிட்டியவில் பாதிக்கப்பட்ட சிறுவனுடன் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க. இந்தச் சிறுவனை பார்வையிடுவதற்காக குளியாப்பிட்டியவிலுள்ள அவரது வீட்டுக்கு சென்ற பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அங்கிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டபோதே, அவர் இவ்வாறு கூறினார் என அங்கு சென்றுள்ள எமது செய…

  20. தமிழக மீனவர்கள் 29 பேரை சிறை பிடித்து இலங்கை கடற்படை! ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 29 பேரை சிறை பிடித்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டு உள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று இரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து உள்ளனர். இன்று அதிகாலை இவர்கள் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சில விசைப்படகுகளை வழி மறித்து தாக்குதல் நடத்தி உள்ளனர். அதன் பின் தங்களிடம் சிக்கிய விசைபடகு ஒன்றினையும் அதில் இருந்த மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த அருளானந்தம் என்பவருக்…

  21. பாதாள உலகக்குழு : கட்டுப்படுத்துமாறு பொலிஸ் மற்றும் படையினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலகக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸ் மற்றும் படையினருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவுறுத்தல் வழங்கியுள்ளர். நாரஹேன்பிட்டிய அபேராமையில் அமைந்துள்ள சுசரித்த தம்மா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு குற்றவாளிகளால் தீங்கும் நிகழ்வதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அறநெறிப் பாடசாலைகள் ஊடாக வழங்கப்படும் வழிகாட்டல்கள் மற்றும் …

  22. போராட்டத்தைக் கைவிடுமாறு கூட்டமைப்பு கோரிக்கை உண்ணாவிரத போராட்டத்தினைக் கைவிடுமாறு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினைத் தொடர்ந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்துத் தெரிவிக்கையில், 'இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை நீண்ட நே…

  23. ஆஸி. செல்ல முற்பட்ட 17 பேரும் காலி பொலிஸார் வசம் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில், கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 17 இலங்கையர்கள் இவ்வாறு கைதாகியுள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் கடந்த முதலாம் திகதி நீர்கொழும்பு பகுதியில் இருந்து படகுகள் மூலம் வௌியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் படி, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=77705

  24. இன்று முதல் கொழும்பில் விஷேட சோதனை நடவடிக்கைகள்; காரணம் இதுதான் அண்மைய நாட்களாக தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை இல்லாதொழிக்கும் விசேட நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடி மேற்பார்வையின் கீ்ழ் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 102 தொலைபேசி வீதித் தடைகள் ஏற்படுத்தி ஆட்கள் மற்றும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று (05) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைகள் 03 மணித்தியாலங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஒவ்வொரு நடவடிக்கைகளினதும் அறிக்கைகள் மேல் மாகாணத்தி…

    • 1 reply
    • 414 views
  25. அடிக்கல் நாட்டி வைத்தார் மகிந்த வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட்டத்தில் ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது. முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகேவின் அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.பீ.ரத்நாயக்க, திலும் அமுணுகம மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.