ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
சாதனை படைத்துள்ள அம்பேவெல பால் பண்ணை. அம்பேவெல பண்ணை நாளொன்றுக்கு 62,000 லிட்டர் பாலை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. அதன்படி, இது நாளொன்றுக்கு 3,000 லிட்டரில் இருந்து 60,000 லிட்டராக பாரிய அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. 2001ல் பொதுப்பணித்துறை கையகப்படுத்தியபோது, தினசரி உற்பத்தி 3000 லிட்டர் பால் குறைவாக இருந்தது. தற்போது இந்த பண்ணையானது இலங்கையின் தேசிய விநியோகத்திற்கு வருடாந்தம் 20 மில்லியன் லீற்றர் பாலை வழங்குகிறது. 2019 இல் 5 பில்லியன் ரூபாய் முதலீடு மற்றும் நவீனமயமாக்கல் மூலம், உற்பத்தி திறன் இரண்டு ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மேலும், மேம்பட்ட இனப்பெருக்கத் திட்டங்கள் உள்நாட்டில் அதிக மகசூல் தரும் மாடுகளை உற்பத்தி செய்வதை சாத்தியமாக்…
-
- 0 replies
- 396 views
-
-
SJP இன் தேசியப் பட்டியலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்காமல் ஐக்கிய மக்கள் சகதியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு பெயர்களை அனுப்புவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. https://athavannews.com/2024/1411921
-
- 0 replies
- 418 views
-
-
அசாத் சாலியின் கைது சட்ட விரோதமானது – உயர் நீதிமன்றம்! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் 2021 ஆம் ஆண்டு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் நட்டஈடாக பிரதிவாதிகள் 75,000 ரூபா செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரதிவாதிகளில் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஆகியோர் அடங்குவர். ஆசாத் சாலி 2021 மார்ச் 9 அன்று செய்தியாளர் சந்திப்பில் மதங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டுக்காக 2021 மார்ச் 16 அன்று கைது செய்யப்பட்டார். …
-
- 0 replies
- 540 views
-
-
இந்தியாவின் உதவி எப்போதும் தேவை – வடக்கு ஆளுநர் வேதநாயகன் December 12, 2024 11:44 am இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, மகாகவி சுப்பிரமணியம் பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு ஆளுநர் உட்பட அதிதிகள் மலர்மாலை அணிவித்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், எங்கள் சேவைகள் மெருகூட்டப்படுவதற்குப் பயிற்சிகள் முக்கியம் என்று குறிப்பிட்டா…
-
- 0 replies
- 385 views
-
-
அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் இன்று புதன்கிழமை(11) காலை 11.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த மவட்ட செயலர்; வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சவால்களை ஏற்று தற்துணிவின் அடிப்படையிலும் செயற்பட்ட மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாள…
-
- 0 replies
- 355 views
-
-
பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்று புதன்கிழமை(11) பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. "பால்நிலையை முதன்மைப்படுத்துவதற்கான பல்துறைசார்ந்த மற்றும் ஒன்றிணைந்த முன்னோக்குகள்" என்ற தொனிப்பொருளுடன் இடம்பெற்ற இந்த "வியோமம்" சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையப் பணிப்பாளரும், சந்தைப்படுத்தல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ்.சிவாணி தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் பேராசிரியர் சி.சிற…
-
- 0 replies
- 150 views
-
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலைக்குள் சரஸ்வதி சிலைக்கு முன்பாகவே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே பௌத்த மாணவர்கள், தாதியர்கள், வைத்தியர்களின் வழிபாட்டுக்காக பௌத்த விகாரையொன்று உள்ள நிலையில் தாதியர் பாடசாலைக்கு முன்பாகவும் புத்தர் சிலையொன்றை நிறுவியுள்ளமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தர் சிலை தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு முன்பாக அது தொடர்பிலான நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் முன்னெடுக்கவேண்டும் என கோ…
-
- 1 reply
- 506 views
- 1 follower
-
-
12 DEC, 2024 | 10:04 AM கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் குறித்து தம்மால், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். அதேவேளை இந்திய உயர்ஸ்தானிகர் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துவதாகத் தெரிவித்ததுடன், ஜனவரியில் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்வதாகத் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில்…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
‘அந்தஸ்து அல்லாது ஒருவருடைய செயற்பாடுகளே விழுமியத்தைத் தீர்மானிக்கிறது’ – சுரேன் சுரேந்திரன் அமரபுர மஹாநாயக்கர் நியமன வைபவத்தில் பேச்சு அமரபுர மஹா நிக்காயா பீடத்தின் அதிபதியாக வணக்கத்திற்குரிய கலாநிதி மதம்பகம அஸாஜி திஸ்ஸ தேரர் நியமனம் பெற்ற வைபவம் டிசம்பர் 07, 2024 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. மத மற்றும் மதிப்பிற்குரிய சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட இவ்வைபவத்தில் லண்டன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு சுரேன் சுரேந்திரன் அவர்கள் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இவ்வைபவத்தில் உரையாற்றிய திரு சுரேந்திரன் “ஒரு பெளத்த அதியுயர் பீடத்தின் மஹாநாயக்கராக எமக்கு மிக நெருங்கிய தேரர் நியமிக்கப்பட…
-
- 1 reply
- 343 views
-
-
வடக்கு மாகாணத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 …
-
- 0 replies
- 386 views
-
-
கொழும்பு 1 மணி நேரம் முன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு! 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசியப்பட்ட சம்பவத்தையடுத்து பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மனு எஸ். துரைராஜா …
-
- 0 replies
- 244 views
-
-
உள்ளூர் செய்திகள் 1 மணி நேரம் முன் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் :அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட வாக்குறுதி எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரம் அல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகம் சார்ந்த ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக நாம் கடந்த காலங்களில் கருத்துக்களை வெளியிட்டு இருந்தோம். ஊடகவியலாளர்கள…
-
- 0 replies
- 189 views
-
-
கொழும்பு 41 நிமிடம் நேரம் முன் சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனி இடம்- சீனத் தூதுவர் கீ சென் ஹொங் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு தேவையான சீருடைகளை சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளித்தது. இதற்கான நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் நேற்று நடைபெற்றது. இலங்கை மாணவர்களின் நூறு வீதத் தேவையை பூர்த்தி செய்வதற்காக 5.2 பில்லியன் பெறுமதியான பாடசாலை சீருடைகள் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சீனத் தூதுவர் கீ சென் ஹொங், சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனித்துவமான இடம் உள்ளது என குறிப்பிட்டார். 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை ச…
-
- 1 reply
- 226 views
-
-
உள்ளூர் செய்திகள் 2 மணி நேரம் முன் ஆபாச புகைப்படங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞன் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் புத்தளம், முந்தல் , பத்துலுஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம், முந்தல், பத்துலுஓயா பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞன் ஆவார். இது தொடர்…
-
- 0 replies
- 193 views
-
-
கொழும்பு 1 மணி நேரம் முன் தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான் அண்மைக்காலமாக இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் விலையும் உயர்வடைந்துள்ளமை குறித்து முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படிஇ வருடாந்தம் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமாகஇ இலங்கையின் குரங்குகளை சீன மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். ஆனால்இ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று த…
-
-
- 25 replies
- 2.3k views
-
-
தளபாடங்களை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பெருமளவான பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்று புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், 20 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களை தருவதாகக் கூறி, வவுனியாவில் உள்ள நபர் ஒருவரை ஏமாற்றி பணத்தினை பெற்றுக்கொண்டு ஒரு மாதகாலமாக தலைமறைவாக இருந்துள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழில் 20 இலட்சத்துக்கு அதிகமான பண மோசடி - ஒருவர் கைது! | Virakesari.lk
-
- 1 reply
- 399 views
-
-
(செ.சுபதர்ஷனி) நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10 ஆயிரத்துக்கும் அண்ணளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் குமுது வீரகோன்ன் தெரிவித்தார். எலிக்காய்ச்சல் பரவல் குறித்து புதன்கிழமை (11) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த வருடம் மாத்திரம் நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சலால் பா…
-
- 2 replies
- 297 views
-
-
மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் நீக்கம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேற்று (10) வழங்கிய கடிதம் மூலம் பிரதி பொலிஸ் மா அதிபர் (மனித வள முகாமையாளர்) அறிவித்துள்ளதாக சட்டத்தரணி ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அந்தப் பாதுகாப்புப் பிரிவில் இருந்…
-
-
- 6 replies
- 590 views
- 1 follower
-
-
யாழ் . போதனா மகப்பேற்று விடுதியில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை adminDecember 11, 2024 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக சமூக நல அமைப்பு ,யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடந்த திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். இதன் போது இது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா மற்றும் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் உறுதி அளித்துள்ளனர் கையளிக்கப்பட் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ…
-
- 1 reply
- 205 views
- 1 follower
-
-
11 DEC, 2024 | 05:27 PM புதிதாக மறுசீரமைக்கப்பட்ட பழைய கண்டி அரசர்களின் அரண்மனை மற்றும் தொல்பொருள் நூதனசாலை ஆகியவற்றினை மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வை கலாச்சார அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் பங்காண்மையுடன் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையுடன் கொண்டாடியது. அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் பேராசியர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர். கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியத்தினால் வழங்கப்பட்ட 265,000 அமெரிக்க டொலர்கள் (ரூ.77 மில்லியனுக்கும் அதிகமான) மானியத்தின் காரணமாக இந்த முக்கியமான கலாச்சாரப் பாதுகாப்புச் செயற…
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, அரிசி, வெங்காயம், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன் பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இலங்கையில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காலப் பகுதியில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு, தட்டுப்பாடு நிலவிவந்த பின்னணியில், கடந்த இரண்டு வருடங்களில் பொருட்களின் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்தது. விலைகளிலும் வீழ்ச்சி காணப்பட்டது. இந்தநிலையில் தற்போது மீண்டும் விலைவாசி உயந்துள்ளது. குறிப்பாக அரிசி, வெங்காயம், தேங்காய்…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
11 DEC, 2024 | 09:55 AM (இராஜதுரை ஹஷான்) பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பன தொடர்பில் அவசியமான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தான் வலுவாக நம்புவதாக தெரிவித்துள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தாம் பெரும்பான்மை ஆணையை பெற்றிருப்பதை காரணம் காட்டி தன்னிச்சையாக செயற்பட மாட்டோம் எனவும், சகல தரப்பினரதும் ஆலோசனைகளை பெற்று முன்னகர்வோம் எனவும் குறிப்பிட்டார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 'சர்வஜன நீதி' அமைப்பினால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
11 DEC, 2024 | 06:58 AM வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழ் அமுக்கப் பிரதேசமானது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி தொடர்ச்சியாக பயணம் செய்து அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு இன்று மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். வடக்கு, கிழக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூ…
-
- 1 reply
- 271 views
- 1 follower
-
-
10 DEC, 2024 | 06:38 PM (செ.சுபதர்ஷனி) அடுத்த வருடத்துக்கு தேவையான மருந்து கொள்வனவு இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்குள் நிறைவு பெற்றிருப்பது அவசியம். எனினும் சுகாதார அமைச்சு இது குறித்து ஆர்வம் செலுத்தாமையினால் அடுத்த வருடம் பொதுமக்கள் கடுமையான மருந்து தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள வேண்டியேற்படலாம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார். மருந்துதட்டுபாடுத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருடத்துக்குள்ள நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட…
-
- 0 replies
- 391 views
- 1 follower
-
-
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்! சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது. அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இந்த சந்தேகத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. சபாநாயகர் அசோக ரன்வல நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, அவரைப் பற்றிய அறிமுகங்களில் கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டது. அவர் சபாநாயகரான பின்னரும், இலங்கை நாடாளுமன்ற இணையதளத்தில் அவரது பெயர் கலாநிதி அசோக ரன்வல என்று பதிவு செய்யப்பட்டது. எனினும், அவருக்கு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கலாநிதி பட்டம் வழங்…
-
-
- 23 replies
- 1.4k views
- 1 follower
-