Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நியூஸிலாந்து பிரதமர் இலங்கை வரவுள்ளார் 12-02-2016 09:25 AM நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இம்மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கையிலுள்ள நியூஸிலாந்து உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/165837/-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%B8-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%B0-

  2. தந்தையின் பதவி நிரந்தரமில்லை என்கிறார் மைத்திரியின் மகள் சதுரிக்கா! [Friday 2016-02-12 07:00] தனது தந்தையின் பதவி நிரந்தரமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி இருந்தன.தந்தைக்கு இணையாக அவரது மகள் சத்துரிக்கா, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. தனது தந்தையின் பதவி நிரந்தரமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி இருந்தன.தந்தைக்கு இணையாக அவரது மகள் ச…

  3. வெலிக்கடைச் சிறைச்சாலையின் முக்கிய பிரபு பிரிவு, அவசர அவசரமாக புனரமைப்பு: 12 பெப்ரவரி 2016 வெலிக்கடைச் சிறைச்சாலையின் முக்கிய பிரபுப் பிரிவு அவசரமாக புனரமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபல கலைஞரும் அரசியல்வாதியுமான விஜயகுமாரதுங்க, பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வெலிக்கடைச் சிறைச்சாலையின் எஸ் பிரிவு அவசரமாக புனரமைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. நாட்டின் முக்கிய பிரபுக்கள் கைதாகிய போது இந்த பகுதியில் அவர்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் முக்கிய பிரபு ஒருவர் சிறையில் அடைக்கப்படக் கூடிய சாத்தியம் இருப்பதனால் இவ்வாறு சிறைச்சாலை புனரமைக்கப்படுவத…

  4. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை 2017ல் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படும் [ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016, 01:05.51 AM GMT ] இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் 2017ம் ஆண்டில் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த வருடம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு அமர்வுகளிலும் இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட மாட்டாது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் இதனை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுக…

  5. அரசாங்கத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைக; மஹிந்த ராஜபக்ச [ Friday,12 February 2016, 02:48:09 ] அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றுபடவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டையும் நாட்டை பாதுகாத்துவரும் இராணுவ வீரர்களையும் காட்டிக்கொடுக்க நல்லாட்சி அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோர் வழங்கிய வாக்குறுதி நாட்டை காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவ…

  6. தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடியமையானது பிரிவினைவாதத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தமையாகும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில், பல மொழிகள், பல இனங்கள் இருக்கும் இந்தியாவில் ஒரு தேசிய கீதமே உள்ளதாகவும் இதனை ஏன் இலங்கையில் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார். தேசிய கீதத்திற்கு மரியாதை வழங்கும் மனநிலை இல்லையென்றால், அங்கு நல்லிணக்கம் ஏற்படாது. அத்துடன் இது பிரிவினைவாதத்திற்கு உந்துசக்தியை கொடுப்பதாகவும் எனவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார். …

  7. பொன்சேகாவுக்கு எம்.பி பதவி: வாக்குறுதிக்கு முரணானதாகும் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவத்தின் முன்னாள் தளபதியை இலங்கை அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமை யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்காக கொடுத்த வாக்குறுதிக்கு முரணாக உள்ளதென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்களை அரசாங்கம் பாதுகாக்க உள்ளதை பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறிப்பாக உணர்த்துகின்றது என ஆசிய பணிப்பளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/165806/%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%9A-%E…

  8. முன்னாள் போராளி என்ற காரணத்தால் நிரந்தர வேலை வாய்ப்பு மறுப்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த காரணத்தால் நிரந்தர வேலைவாய்ப்பு தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாக முன்னாள் போராளியான பொன்னுச்சாமி கஜந்தன் கவலை வெளியிட்டுள்ளார். வவுனியா, புளியங்குளத்தைச் சேர்ந்த இவர் தற்காலிக புகையிரத கடவைக் காப்பாளராக பணியாற்றுகின்றார். இவர் தனது நிலை தொடர்பாக ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போது பொருளாதார ரீதியில் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டார். அத்துடன் 2012ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட இவர், நிரந்தர தொழில் வாய்ப்பைப் பெறுவதற்காக பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார். …

  9. மகிந்தவின் புதிய அலுவலகம் நாளை! எதிர்கால செயற்பாடு குறித்து அறிவிக்கிறார்! மகிந்தவின் புதிய அலுவலகம் நாளை! எதிர்கால செயற்பாடு குறித்து அறிவிக்கிறார்! குளோபல் தமிழ் செய்தியாளர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னுடைய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க புதிய அலுவலகம் ஒன்றை நாளை திறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுதந்திரக் கட்சியின் அலுவலகம் அல்ல என்றும் மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் என்றும் கூறப்படுகிறது. பத்திரமுல்ல ஜெயந்திபுர பகுதியிலேயே குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது. நிகழ்வில் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் என தம்மை அடையாளப்படுத்தும் மகிந்த ஆதரவு அணியினரும் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவ…

  10. அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுக்கின்றதாம்! மகிந்தவின் ஆதங்கம்! அரசாங்கம், நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக்கொடுக்க முயற்சித்து வருவதாகவும் அதற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது ஊடகப் பிரிவின் ஊடக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைனின் இலங்கை வருகை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதியும் பிரதமரும் அவரிடம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் நாட்டை காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கையை செய்துள்ளதாக கூறியுள்ள…

  11. யாழ்ப்பாணம் வந்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள! இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு ஜெற்விங் ஹோட்டலில் இடம்பெற்ற சிவில் சமூக அமைப்புகளுடான சந்திப்பிலும், அரச அதிகாரிகளுடான சந்திப்பிலும் கலந்து கொண்டார். அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை பார்வையிடும் நோக்குடன் இவரின் யாழ்.விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  12. காணாமல் போனவர்கள் போர்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர்-கோத்தபாய இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போன அனைவரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆட்சி புரிந்த மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளேயாகும் என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒவ்வொரு குடும்பமும் இணைந்து கொண்டதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அந்த குடும்பங்களுக்குத் தெரியும் என்றும் கோத்தாபாய குறிப்பிட்டுள…

  13. மகிந்த கண்ணீர் சிந்தியது ஏன்? தான் கட்டியெழுப்பிய குடும்ப ஆட்சி கடந்த ஒராண்டில் நிர்மூலமாக்கப்பட்டதையே மகிந்த ராஜபக்சவின் கண்ணீர் சிந்திய ஒளிப்படம் தெளிவாகக் காண்பிக்கின்றது. இவ்வாறு பிபிசியின் கொழும்பு செய்தியாளர் சாள்ஸ் ஹவிலாண்ட், பிபிசியில் எழுதியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. இந்துக்களின் காவியமான இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தற்போது சிறிலங்காவில் இடம்பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்காவில் நவீன இராமாயண இதிகாசம் உருவாகியுள்ளது. குறிப்பாக சிறிலங்காவின் ஆட்சியைத் தம் வசம் வைத்திருந்த ராஜபக்ச குடும்பத்தின் தற்போதைய நிலை நவீன இராமாயண இதிகாசத்தைத் தோற…

    • 3 replies
    • 634 views
  14. வெலிக்கடைச் சிறையில் கோத்தபாயவுக்காக அறை தயார்? [ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 06:30.00 AM GMT ] வெலிகடைச் சிறைச்சாலையில் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைக்கும் சிறை அறைகள் சில தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தடுத்து வைப்பதற்காக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறை தயார் செய்யப்பட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் யோஷித்த ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையறைக்கு அருகில் உள்ள சில சிறையறைகளே இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்…

  15. இந்திய மீனவர்கள் 12 பேர் கைது. -எஸ்.றொசேரியன் லெம்பேட் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களை நேற்று(10) புதன்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் தெரிவித்தள்ளது. 2 படகுகளில் வந்த 12 மீனவர்கள்,இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடல் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். அதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த மீனவர்களிடம் தலைமன்னார் கடற்படையினர…

  16. கவனக்குறைவாக வாகனம் செலுத்தி காலனின் கைப்பொம்மையாகாதீர்கள்! வடக்கு முதல்வர் அறிவுரை! மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுதல், போட்டிக்கு வண்டி ஓட்டுதல், திறமையைக் காட்ட வண்டியோட்டுதல் போன்றவை கவனக் குறைவை ஏற்படுத்தும். உங்கள் கவனக் குறைவு வண்டிக்கும், அதில் பயணிப்பவர்களுக்கும், தெருவில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள். காலனின் கைப்பொம்மையாகி விடாதீர்கள். இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். முழங்காவிலில் 9 மில்லியன் ரூபா செலவில் வடமாகாண சபையால் அமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையக் கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில…

  17. நாட்டில் ஒருமாதத்தில் மட்டும் 26 எயிட்ஸ் நோயாளிகள் [ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 05:21.21 AM GMT ] இந்த வருடத்தின் ஜனவரி மாத்தில் மாத்திரம் 26 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களில் அதிகமானோர் இளம் வயதினர் என்று சுகாதார அமைச்சின் எச்.ஐ.வி தொற்று நோய் எதிர்ப்பு பிரிவின் வைத்திய அதிகாரி சிசிர லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன் ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் எயிட்ஸ் பரவுவது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, இந்த வருடம் குருநாகல் மாவட்டத்திலும் நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக சுகாதார…

  18. கடுவலை நீதிமன்றில் யோசித! 25ம் திகதி வரை விளக்க மறியல்! [ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 04:30.04 AM GMT ] சி.எஸ்.என். தொலைக்காட்சி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ, புதல்வர் நாமல் ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட பலர் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளனர். பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படையினரோடு நீதிமன்ற வளாகத்தில…

  19. கலப்பு பொறிமுறை வேண்டும் - அல் ஹுசைன் ; வெளிநாட்டு நீதிபதிகள் வேண்டாம் - பரணகம [ Thursday,11 February 2016, 03:29:41 ] ஸ்ரீலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் தெரிவித்திருக்கும் நிலையில் உள்ளக விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை என்ற மாற்றுக்கருத்தை பரணகம ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தலைமைதாங்கும் முன்னாள் நீதியரசர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நீதிப்பொறிமுறையானது முற்றிலும் உள்நாட்டு விடயமாக இர…

  20. கட்டுநாயக்கவுக்கு வந்த விமானங்கள் மத்தளைக்கு திருப்பப்பட்டன [ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 03:12.40 AM GMT ] கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டமையால், அங்கு தரையிறங்கச் சென்ற மூன்று விமானங்கள் மத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டன. இன்று காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் சிரமங்களை எதிர்நோக்கின. இதனையடுத்தே மூன்று விமானங்களையும் மத்தல விமான நிலையத்திற்கு அனுப்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/show-RUmuyCSVSWgw0B.html

  21. கோத்தபாய ராஜபக்சவிற்கு 4 யானைக்குட்டிகள் வழங்கியது தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் 11 பெப்ரவரி 2016 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆணையொன்றின் மூலம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு 4 யானைக்குட்டிகளை வழங்கியது தொடர்பாக குற்றப்புலானய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.சட்டமா அதிபர் சார்பில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகிய சிரேஸ்ட வழக்குரைஞர் திலீபா பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் ஆணை மூலம் வழங்கப்பட்ட யானைகுட்டிகள் குறித்த விசாரணையை மேற்கொள்ளவேண்டியுள்ளது, குறிப்பாக இந்த யானைக்குட்டிகள் எவ்வாறு பெறப்பட்டன என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டி…

  22. ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைப்பெற இலங்கைக்கு ஜேர்மனி ஆதரவு! [Thursday 2016-02-11 07:00] ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை மீளவும் பெற்றுக்கொள்ள ஜெர்மனி அரசாங்கம் ஆதரவளிப்பதாக பிரதி வெளிவிவாகர அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. எதிர்வரும் நாட்களில் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பம் சமர்ப்பித்து எட்டு மாதத்திற்குள் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்த இறுதித் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் அறிவிக்கும். ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை மீளவும் பெற்றுக்கொள்ள ஜெர்மனி அரசாங்கம் ஆதரவளிப்பதாக பிரதி வெளி…

  23. பறிமுதலாகும் இந்திய மீனவப் படகுகளை விடுவிக்க முடியாது ; ஸ்ரீலங்கா அறிவிப்பு [ Thursday,11 February 2016, 03:41:13 ] ஸ்ரீலங்கா கடற்பரப்பில் கைதுசெய்யப்படும் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகளை ஒருபோதும் விடுதலைசெய்ய முடியாது என்ற எச்சரிக்கையை மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மீண்டும் வெளியிட்டுள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்படி எச்சரிக்கையை விடுத்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா – இந்திய மீனவர் பிரச்சினை பெரும் பிரச்சினையாகவுள்ள…

  24. வவுனியாவில் தமது ரியூசன் சென்ரருக்கு வராத மாணவர்களை பழிவாங்கும் ஆசிரியர்கள் [ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016, 05:53.30 AM GMT ] வவுனியா நகரப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களை தமது ரியூசன் சென்ரர்களுக்கு வருமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரப்பகுதியில் கல்வி கற்கும் பல ஆசிரியர்கள் நகரப் பகுதியில் உள்ள ரியூசன் சென்ரர்களிலும் கற்பிக்கின்றனர். இவர்கள் பாடசாலையில் தம்மிடம் கற்கும் மாணவர்களை தம்மிடமே ரியூசன் வரவேண்டும் என வற்புறுத்துவதுடன், அவ்வாறு வராத மாணவர்களை பரீட்சைகளில் பழிவாங்குவதாகவும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமது கல்வியை சுதந்திரமாக தமக்கு விளங்கக் கூடிய வகையில் இதன…

  25. இலங்கை தேசியக் கொடியை மாற்ற கோரிக்கை இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. கொடியிலுள்ள சிங்கத்தின் படத்தை நீக்க கோரிக்கை அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் மன்னாரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பெண்கள் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்கென சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயல்படக் கூடிய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்த புதிய அரச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.