Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய வங்கியின் திறந்த சந்தை மத்திய வங்கியின் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் பணப்புழக்கத்தை வழங்குவது ஒரு சாதாரண மத்திய வங்கி நடவடிக்கையாகும். வட்டி வீதங்களை நிர்வகிப்பதன் மூலம் விலை ஸ்திரத்தன்மையை பராமரிக்க திறந்த சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை பணம் அச்சிடல…

      • Like
    • 3 replies
    • 935 views
  2. நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்ப்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எவ்வித தயக்கமும் இன்றி எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். இலங்கை வங்கிச் சங்கத்தின் பிரதிநிதிகளை செவ்வாய்க்கிழமை (29) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் வங்கிகளின் வகிபாகம் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவம் மற்…

  3. யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/311299

  4. (எம்.மனோசித்ரா) நிதி அமைச்சின் அறிக்கைக்கு அமையவே கடந்த அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்தது. எனவே திறைசேரியில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிதி ஒதுக்கப்படவில்லை என எதற்காக அரசாங்கம் பொய் கூறுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பினார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தலுக்கு முன்…

  5. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் இரண்டாவது ஈஸ்டர் வௌிப்படுத்தலின் ஊடாக ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்திருந்து கூட ஒரு அரசியல் காரணத்திற்காக. குறிப்பிட்ட சிலரைக் காப்பாற்றவே விசாரணை நடத்தாமல் இவ்வாறான ஒரு விடயத்தை கூறியதாகவும் தற்போத…

  6. இலங்கையில் அநுர அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாதத்தையும் கடந்து விட்ட நிலையில், மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது. நாட்டில் சடுதியாக அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. பணவீக்கம் குறைவடைந்துள்ளது என பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் மக்கள் வாழ்க்கை செலவு மட்டும் எந்தவித மாற்றமும் இன்றி அதிகரிப்பிலேயே உள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். பாதகமான விளைவு கடந்த ரணில் அரசாங்கத்தின் இறுதிக்காலப்பகுதி சுமுகமான நிலையில் இருந்த போதும், தற்போது அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக பலர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். இந்த மாதத்தில் பொருட்களின் விலைகளில் கணிசமான அதிகரிப்…

  7. தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை “அரசியல் ரீதியான அழுத்தங்களும், நெருக்கடிகளும் நிறைந்திருக்கும் சமகாலத்தில், அவை அனைத்தையும் எதிர்கொண்டவாறு எனது அரசியல் பயணத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்தவாறு தொடர்வதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் எனது பயணம் அமையும். கட்சியை விட்டு நான் ஒருபோதும் வெளியேறமாட்டேன். என் மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல…

  8. எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை – கருத்தை புறக்கணித்தார் விஜித ஹேரத். சமூக ஊடகங்களில் ஏனைய நாடுகளிடம் பணம் பெற்றதாகவும் , புதிய நாணயத்தாள்களை அச்சிட்டதாகவும் வெளியிட்ட கருத்தை அமைச்சரவை முழுமையாக புறக்கணித்துள்ளது. இன்று நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரைவ பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். புதிய அமைச்சரவை அமைக்கப்பெற்றதில் இருந்து எந்த நாட்டில் இருந்தும் கடனை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் , நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் நாணயத்தாள்கள் அச்சிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1406281

  9. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் (சட்டப்பிரிவு )சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார இதனை தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து எந்த விவகாரமும் இல்லை, ஆனால் அது சிவில் செயற்பாட்டாளர்களை பத்திரிகையாளர்களை ஏனையவர்களை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்படுவதே பிரச்சினைக்குரிய விடயம் என அவர் மோர்னிங் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். சிவில் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றமையே பிரச்சினைக்குரிய விடயம் அது இடம்பெற அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். நம்பகதன்மை மிக்க தகவல்களை அடிப்படையாக வைத…

  10. இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் எவரும் பார் லைசன்சை பெறவில்லை என்பதை சத்தியக் கடதாசியின் ஊடாக வெளிப்படுத்த முடியுமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் எம்.ஏ.சுமந்திரனிடம் சவால் விடுத்துள்ளார். கட்சியில் சிலர் பார் லைசனை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடியாக பதில்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “பார் லைசன்ஸ்சோ – சாராயக் கடைகளோ யாருக்கும் இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை எனச…

  11. (எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கம் ஆட்சியை கைவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டால், நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியுமான அணியொன்று பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். அவ்வாறான அனுபவமுள்ளவர்கள் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களாக களமிறக்கி இருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணியின் கம்பஹா மாவட்ட வேட்பாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது. எ…

  12. எதிர்கால பாராளுமன்றத்திற்கு மக்கள் தம்மை தெரிவு செய்தால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையை தயாரித்தல் மற்றும் முன்வைத்தல் ஆகிய இரண்டு பணிகளையும் தாம் மேற்கொள்வேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குழு அறிக்கைகள் தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக கொழும்பில் திங்கட்கிழமை 28) காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசத்திடம் மன்னிப்பு கோருவதற்கும், ரவி செனவிரத்னவை பதவியில் இருந்து நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு இன்னும் சந்தர்ப்பம் இருப்பதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்…

  13. (எம்.ஆர்.எம்.வசீம்) அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அரசாங்கம் பாரதூரமாக எடுக்கவில்லை. பிராந்திய நாடுகள் மற்றும் வெளிநாடுகளுடன் இருந்துவந்த தொடர்பு இல்லாமல் போயுள்ளதாலே இந்த புலனாய்வு தகவல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அறுகம்பை பிரதேசத்துக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறும் அங்கு தாக்குத…

  14. வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள், அயல் கிராம மக்களின் உதவியுடன் 78 இலட்சம் ரூபா செலவில் போடப்பட்ட கொடுக்குளாய்-இயக்கச்சி அபாயவெளி பாதை தற்பொழுது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. கையிருப்பில் உள்ள சிறு நிதியை கொண்டு பள்ளங்களை கிரவல் மூலம் மூடுவதற்கு தீர்மானித்து இரண்டு நாட்களுக்கு குறித்த அபாயவெளி பாதை முற்றுமுழுதாக மூடப்படுகின்றது. இது குறித்து ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டு கழக தலைவருமாகிய கணேஸ்வர…

  15. பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே ஜே.வி.பி முன்னெடுப்பதாக பொ. ஐங்கரநேசன் குற்றச்சாட்டு October 28, 2024 ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த…

  16. மன்னார் மாவட்டத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் வினியோகமானது இன்று திங்கட்கிழமை (28)காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரும் போகத்திற்கு 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் முதலாவது நீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் 2 வது பெரிய குளமான முருகன் கட்டுக்கரை குளம் பெரிய உடைப்பு துருசு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நீர்ப்பாசன பணிப்பாளர், முருங்கன் கட்டுக்கரை குளம் நீர்ப்பாசன பொறியியலாளர்…

  17. ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்…

  18. (எம்.ஆர்.எம்.வசீம்) வீதி தடைகளையும் பாதுகாப்பு அரண்களையும் நீக்கி, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த வீதிகளை திறந்து விட்டுள்ளதன் மூலம் நாடு பாதுகாப்பான நிலையில் இருப்பதாக அரசாங்கம் நினைக்கக்கூடாது. பாதுகாப்பு அரண்களை அகற்றுவதாக இருந்தால் நாட்டின் புலனாய்வு துறையை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும். அத்துடன் இந்த நாடு சுவிசர்லாந்து அல்ல என்பதை பிரதமர் புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு …

  19. இலங்கையில் அதிகளவில் வட்ஸ் அப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. ஹேக்கர்கள் சரிபார்ப்பு குறியீட்டு இலக்கத்தின் (verification code) மூலம் வட்ஸ் அப் கணக்கை ஹேக் செய்து உள்நுழைந்து தொலைபேசி தொடர்பு விபரங்களை பெற்றுக் கொள்கின்றனர். அண்மையில் இவ்வாறான சம்பவங்களுக்கு பலர் முகம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எதிர்பாராமல் வட்ஸ் அப் ஊடாக ஒரு தெரிந்த நபர்களிடம் இருந்து சரிபார்ப்பு குறியீட்டு இலக்கம் (verification code) அனுப்பப்படுகிறது. ஹேக்கர்கள் வட்ஸ் அப் ஊடாக தொடர்பு கொண்டு நண்பர்களாகவோ அல்லது அறிமுகமானவர்களாகவோ தம்மை காட்டுடிக்கொண்டு சரிபார்ப்பு குறியீட்டு இலக்கத்தை கோருகின்றார்கள். அந்த இலக்கத்தை கோரும் நபருக்கு ஒரு முறை அனுப்பியதும் வட்ஸ் அப் கணக்கு ஹ…

  20. இலங்கையின் நிலப்பரப்பு விரிவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் W.சுதத் எல்.சி. பெரேரா தெரிவித்துள்ளார். கடலாக இருந்த துறைமுக நகரம் தற்போது நிலமாக மாறி, நாட்டின் எல்லைக்குள் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சொந்தமான அனைத்து நிலப்பரப்புக்களையும் உள்ளடக்கிய வகையில் புதிய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை வரைபடம் சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கை வரைபடம் ஒன்று முதல் 50 ஆயிரம் வரையிலான அளவையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நில அளவைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் ஆய்வுகளின் மூலம் இலங்கையின் வரைபடங்கள் இற்றைப்…

  21. லண்டனிலிருந்து உறவினரைப் பார்க்க வந்தவர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு திடீரென உயிரிழந்துள்ளார். கணேசராசா தியாகராசா (வயது-56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டிலுள்ள உறவினரைப் பார்ப்பதற்காக லண்டனிலிருந்து வந்த இவர், கடந்த 17ஆம் திகதி பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் மயங்கிய நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, நேற்றுக் காலை (27) உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197314

  22. ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையானின் சகாவான அஸாத் மௌலானா தொடர்பில் வெளியான தகவல் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் (28.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரச புலனாய்வுத் துறையினர் திட்டமிட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்த…

  23. ஜனநாயக பெண் போராளி வேட்பாளர் தவமணி காட்டம்! October 28, 2024 மக்களுக்காக அன்று யுத்தத்தில் களம் ஆடினோம். இன்று 15 வருடங்களுக்கு பிறகு அதே மக்களுக்காக ஜனநாயக வழியில் அரசியலில் களமாட பிரவேசித்திருக்கின்றோம். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அம்பாறை மாவட்டம் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் தவமணி தெரிவித்தார் . காரைதீவைச் சேர்ந்த அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில் … அன்று அகிம்சை வழியில் போராடினோம் .பின்பு ஆயுத வழியில் போராடினோம்.இன்று அரசியல் போராட்டம் இடம்பெறுகின்றது. தென் இலங்கையில் அ…

  24. நாடாளுமன்றத் தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது: சிங்கள மக்களின் கருத்து… October 28, 2024 வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பில் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து, இலக்கு ஊடகத்திற்காக சில சிங்கள சகோதர்கள் வழங்கிய சிறப்பு செவ்வி…. (சிங்கள மக்களின் கருத்துக்களை அறியும் நோக்கில் இச் செவ்வி எடுக் கப்பட்டது) ‘வங்குரோத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி…’ எம்.ஜி..சமரவிக்கிரம, சமூக செயற்பாட்டாளர், கண்டி. இலங்கைக்கு இது தேர்தல் வருடமாகும்.இவ்வருடத்தில் முக்கியமான இரண்டு தேர்தல்கள் இடம்பெறுகின்றன.ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில் அட…

  25. பிரதமர் ஹரிணி அமரசூரிய வடக்குக்கு வருகை! October 28, 2024 பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி பிரதமர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார். நாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கவே அவர் வடக்குக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eelanadu.lk/பிரதமர்-ஹரிணி-அமரசூரிய-வ/

    • 1 reply
    • 597 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.