Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனித உரிமை ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட 15 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை [ Wednesday,20 January 2016, 03:40:47 ] ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம உள்ளிட்ட ஆணைக்குழுவின் 15 உறுப்பினர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் கல்வி அமைச்சின் முன்பாக உயர் கணக்கீட்டு டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் செயற்பட்ட விதம் மாணவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளதாக தமது அறிக்கை ஊடாக மனித உரிமைகள் ஆணைக் குழு தெரிவித்ததை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டு…

  2. ஜூன் மாதத்துக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் : ஏப்ரலுக்குள் எல்லை நிர்ணயம்-அரசாங்கம் [ Wednesday,20 January 2016, 03:31:06 ] எல்லை நிர்ணய செயற்பாடுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பூர்த்தி செய்து ஜூன் மாதத்துக்கு முன்னர் உள்ளூராட்சிசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், எல்லைநிர்ணய செயற்பாடுகள் தாமதமடைந்தமைக்கு தானோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால ச…

  3. இந்தியா, பாகிஸ்தானை திருப்திபடுத்த ஜப்பான், இஸ்ரேல் நாடுகளை நாடுகிறது ஸ்ரீலங்கா [ Wednesday,20 January 2016, 03:15:22 ] இந்தியாவின் அழுத்தத்தை அடுத்து போர் விமானங்களை கொள்வனது செய்யும் பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஸ்ரீலங்கா அரசாங்கம், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை திருப்திபடுத்தும் வகையில் வேறு நாடுகளிடம் இருந்து விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது. இதற்கமைய தாக்குதல், இடைமறிப்பு மற்றும் கண்காணிப்பு என பலநோக்குப் பயன்பாடுகளுக்கு உகந்த வகையில் போர் விமானங்களை விமானப் படைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அந்த வகையில் சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஜே.எவ்.17 ரக போர் விமான…

  4. எனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை. ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை உரித்துக்களை, அவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முன்வராவிட்டால் அதனைச் சுட்டிக்காட்டாது என்னால் இருக்க முடியாது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். பிரதம மந்திரியின அமைச்சு, இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சு, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சு இணைந்து நடாத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 2016ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் அன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் உரை கௌரவ பிரதம மந்திரி அவர்களே, வெளிநாட்டுப் பொதுநலவாய அலுவலகங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வையர் அவர்களே, கௌரவ சுவாமிநாதன் அமைச்சர் அவர்களே, வடக்க…

  5. தமிழரின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்! தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். இன்று பத்தரமுல்லையில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு எட்டப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனி ஒருபோதும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார். காலத்தை க…

  6. புலி ஆதரவு புலம்பெயர் சமூகம் ஈழக் கனவை கைவிடவில்லை – ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் சமூகம் ஈழக் கனவை கைவிடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெஹிவலை அத்திடிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது விசேட நீச்சல் தடாகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இராணுவத்தை மறுசீரமைக்குமாறு எந்தவொரு நாடும் அழுத்தம் கொடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தை மறுசீரமைக்குமாறு உலகின் எந்தவொரு நாடும் இலங்கைக்கு அழுத்…

  7. பெப்ரவரியில் இலங்கை வருகிறார் சுஸ்மா (லியோ நிரோஷ தர்ஷன்) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்று மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை வருகின்றார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரையும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சந்தித்திக்கவுள்ளார். http://www.virakesari.lk/article/2188

  8. பஷில் நாமல் கோத்தபாய துள்ளினாலும் மஹிந்த துள்ளமாட்டார் (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தனித்து பயணிக்க எவரும் விரும்பப்போவதில்லை. பஷில், கோத்தபாய, நாமல் என மூன்று ராஜபக் ஷவினரும் வெளியில் இருந்து துள்ளினாலும் மஹிந்த ராஜபக்ஷ துள்ள மாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். இம்முறை தேர்தலில் இனவாதிகள் எவருக்கும் கட்சியில் இடம் வழங்கப்படப்போவதில்லை. இது தொடர்பில் கட்சி கூட்டத்தில் ஜனாதிபதி ஆணித்தனமாக முடிவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர…

  9. புதிய கட்சி தொடர்பில் ஊடகவியலாளர்கள் செய்தி உருவாக்குகின்றனர் – மஹிந்த புதிய கட்சி தொடர்பில் ஊடகவியலாளர்கள் செய்தி உருவாக்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். புதிய கட்சி பற்றிய செய்திகள் ஊடகவியாளர்களினால் உருவாக்கப்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டாரகம சுதர்சனாராமயவில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கட்சி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, அது ஊடகவியலாளர்களினால் உருவாக்கப்பட்ட செய்தி என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளை அப்பாவிகளாகவும், அப்பாவிகளை குற்றவாளிகளாகவும் ஊடகங்கள் சித்தரித்து வருவதாகக் அவ…

  10. பல்கலைக்கழக நுழைவுக்கு யாழ்.மாணவர்களே அதிகளவு தகுதி 2015ஆம் ஆண்டு நடந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில், யாழ்.மாவட்ட மாணவர்களே அதிகளவில் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதியைப் பெற்றுள்ளதாக இலங்கையின் தேர்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 7,346 மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்தனர். இவர்களில் 4,872 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளனர். இது 66.33 வீதமாகும். குறைந்தபட்சமாக, பொலநறுவை மாவட்டத்தில் இருந்து 56.76 வீதமான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இங்கிருந்து 3,455 மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றிய போதும், …

  11. இந்திய மீனவர்கள் 29 பேர் விடுதலை -எஸ்.சசிக்குமார், எப்.முபாரக் திருகோணமலை வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 29 பேரும் இன்று செவ்வாய்க்கிழமை (19) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி, 03 படகுகளுடன் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காக துறைமுக பொலிஸாரிடம் மறுநாள் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். பொலிஸார் இம்மீனவர்கள் 29 பேரையும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில், கடந்த 01ஆம் திகதி ஆஜர்படுத்தியதையடுத்து நீதவான் ஈ.சரவணராஜா, இம்மீனவர்களை கடந்த 11ஆம் திகதி வ…

  12. தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர்- சம்பந்தன் சந்திப்பு இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் ஜெப் டொஜ், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, உத்தேச அரசியல் யாப்பு மற்றும் நல்லிணக்கம் உள்ளடங்கலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பொறுப்புகூறல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து விலக முடியாது எனவும் அந்த பிரேரணையிலே குறிப்பிடப்…

  13. மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்க பிரதமர் மறுப்பு யாழ்ப்பாணத்தில் படையினர் வசம் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுப்புத் தெரிவித்துள்ளார். பலாலி படைத்தலைமையகத்தில் நேற்றுமுன்தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை சிறிலங்கா படையினர் விடுவிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.அந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகவே நிராகரித்துள்ளார். பலாலி விமானப்படைத் தளத்தின் ஓடுபாதைக்கு நெருக்கமாக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் இரு…

  14. நாட்டில் மீண்டும் போர் தலைதூக்காமல் அடித்தளம் அமைக்க அனைவரும் ஒன்றிணைக! : ஜனாதிபதி அழைப்பு! இலங்கையின் தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டங்களைப் பலப்படுத்தி மீண்டும் நாட்டில் ஒரு போர் ஏற்படாத வகையில் அடித்தளத்தை அமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டு மக்களிடம் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு சட்டத்தால் மட்டும் முடியாது என்றும், அதனை சமய தத்துவங்களுக்கேற்பவே மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டிலுள்ள சகல இனங்களுக்கு மத்தியிலும் அச்சம், சந்தேகத்தை இல்லாதொழித்து சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவ…

  15. ஜனாதிபதி வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் தேர்தல் திணைக்களத்தில் இருந்து வெளியேறு முன் மகிந்த மைத்திரிக்கு கைலாகு கொடுக்க நீட்டியபோது மகிந்தவின் கையில் இருந்த மந்திர சாவிக்கு பயந்த மைத்திரி இரு கரம் கூப்பி வணக்கம் வைத்தார். இருந்தும் மகிந்த மைத்தியின் தோள் தட்டி சென்றார். கை கொடுப்பதை தவிர்த்ததால் மகிந்தவின் கையில் இருந்த மந்திர சாவி மைத்திரியின் தோளில் மட்டும் பட்டதால் அதன் தாக்கம் ஏற்படாது வென்றுவிட்டார் என மகிந்தவின் கேரள மாந்திரீகர் சொன்னதாக ஒரு செய்தி உண்டு. தான் சொல்லாததை சொன்னதாக கூறிய விக்னேஸ்வரன் ஒரு பொய்யர் என ஒரு பேட்டியில் பிரதமர் ரணில் சொன்னதால் சினமுற்ற முதல்வர் பிரதமரின் யாழ் வருகையை புறக்கணித்தார். மீண்டும் ஜனாதிபதியுடன் பிரதமர் …

  16. 1983ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட தமிழ்க் கைதிகள் 53 பேர், இரண்டு கட்டங்களாக சிறிலங்கா இராணுவத்தினரால் பொரளை மயானத்தில் மூன்று பாரிய குழிகளில் புதைக்கப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார் அனீஸ் துவான் என்ற மயானக் காவலாளி. கொழும்பு மாநகரசபையில் தொழிலாளியாகப் பணியாற்றிய அனீஸ் துவான், 1980களில், பொரளை மயானத்தில் தொழிலாளியாகப் பணிபுரிந்தார். இரவுக் காவலாளியாகவும் அவர் அப்போது பணியாற்றியிருந்தார். 1983ஆம் ஆண்டு ஜூலை இறுதி வாரத்தில் நடந்த இனக்கலவரங்களை அடுத்து, பொரளை மயானத்தில் இரண்டு தடவைகள் பாரிய குழிகளில் 53 பேரின் சடலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் கொண்டு வந்து புதைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். “ஜுலை ம…

    • 0 replies
    • 434 views
  17. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வை நோக்கி இராஜதந்திர ரீதியில் நகரும் போது எமது மக்களை பிளவு படுத்துவதற்காக தமிழ் மக்கள் பேரவை என்ற நச்சுமரம் முளைத்திருக்கிறது. என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ( ஜனா ) தெரிவித்தார். திம்புப் பேச்சுவார்த்தை முதல் ரணில் காலத்தில் இருந்து சமாதான உடன்படிக்கை வரை கடந்த காலங்களிலே எங்களது பிரச்சினைகள் பூகம்பமாக வெடித்தாலும் அரசியல் ரீதியாக நாங்கள் பல தவறுகளை விட்டிருக்கிறோம். எங்களுக்கு ஏற்படவிருந்த சந்தர்ப்பங்களை அரசியல் ரீதியாகத் தவறவிட்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அமரர் நல்லையாவின் நினைவாக வெளியிடப்பட்ட வாழும் மனிதம் எனும…

    • 0 replies
    • 536 views
  18. குமார் குணரத்தினத்தின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் குமார் குணரத்தினத்தின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு தொழில்நுட்ப கல்லூரி சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டமானது, அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் குமார் குணரத்தினத்தின் விடுதலையை வலியுறுத்தியுள்ள அதேவேளை, கடந்த அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை நல்லாட்சி அரசாங்கம் இதுவரை வெளியிடாததையும் சுட்டிக்காட்டி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். …

  19. யாழ்.பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா! யாழ். பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்றது. இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய இப்பட்டமளிப்பு விழாவில் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.பத்மநாதன் மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கி வைத்தார். முதலாவது அமர்வில் 170 மாணவர்களுக்கும், முற்பகல் 10.45 மணிக்கு ஆரம்பமாகிய 2 ஆவது அமர்வில் 193 மாணவர்களுக்கும், பிற்பகல் 1.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 3ஆவது அமர்பில் 196 மாணவர்களுக்கும், 3.30 மணிக்கு ஆரம்பமாகும் 4ஆவது அமர…

  20. பரணகமவின் சிரிப்புக்குப் பின்னால் ஒளிந்திருந்தது என்ன ? 2009ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காணாமற் போனவர்கள், பல வந்தமாகக் காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நிறுவப்பட்ட ஆணைக் குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம விசாரனைகள் இடம்பெற்றபோது ஒரு நாள் சிரித்தார். அவரின் சிரிப்புக்குப் பின்னால் பல விடயங்கள் அடங்கியிருக்கின்றன. சரி முதலில் அவர் சிரித்த சூழ்நிலையைப் பார்ப்போம். காணாமற்போனோர் பற்றிய முறைப்பாடுகள், விசாரணைகள் பற்றி எத்தனை விதமான கதைகள், அழுகைகள், கதறல்கள்.. கேட்டுக் கேட்டு அங்கே இருக்கும் அறிவுசார்ந்த பெரியவர்கள், புத…

  21. இராமேஸ்வர மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் விரட்டியடிப்பு கச்சத்தீவு அருகே மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இராமேஸ்வர மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அச்சுறுத்தியதாக இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் துறைமுகத்திலிருந்து 1200 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமது படகுகளை தடுத்து நிறுத்தியதுடன், இரும்புக் குண்டுகள் மற்றும் கற்களால் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இராமேஸ்வர மீனவர்கள் குற்…

  22.  புதிய அரசியலமைப்பு: மக்களின் பொறுப்பு என்ன? மொஹமட் பாதுஷா சிங்களத் தீவு என்று பாரதி கூறிய, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பின் மீது, மீண்டும் மீண்டும் பல திருத்தங்களை கொண்டு வந்த காலங்கள் முடிவுக்கு வந்து, இப்போது புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. அரசியலமைப்பில், தொடர்ச்சியாக திருத்தங்களை மேற்கொண்டு, நாட்டை முன்கொண்டு செல்வதைக் காட்டிலும், எல்லா எதிர்பார்ப்புக்களையும் திருப்திப்படுத்தும் புத்தம்புதிய ஓர் அரசியலைப்பை உருவாக்குவது நல்லதென கருதியே, நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான முன்முயற்சியை மேற்கொண்டிருக்கின்றது. மாற்றத்துக்குப…

  23. பேய்களுக்கான கொட்டு முழுக்கம் மப்றூக் பேரினவாதத்தின் வாய்களுக்கு இந்த நாட்களில் கொஞ்சம் அதிகமாகவே 'அவல்' கிடைத்திருக்கிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய பேச்சுத்தான் அந்த அவலாகும். ஒருபுறம், இலங்கையிலுள்ள இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், நாட்டிலுள்ள அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதற்கும் புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவை அவசியமாகிறது என்று ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதன் மூலமாக இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தப் போகின்றார்கள், பௌத்த மதத்துக்கான மரியாதை இழக்கப்படும் நிலை உருவாகப் போகின்றது என பேரினவாதிகள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வானதொரு நிலையில், பு…

  24. அஞ்சலோ மெத்தியூஸ் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலை [ Tuesday,19 January 2016, 06:23:53 ] ஸ்ரீலங்கா அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் சற்று முன்னர் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணி ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வேளை, தம்மை பணத்துக்காக சூதாட்டத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா அணியின் வீரர்களான குஷல் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் முறைப்பாடு செய்திருந்தனர். இந்த விடயம் தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே அவர் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.