ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
அரசியலமைப்பு வரைவுக்கு சுவிஸ் தென்னாபிரிக்க நிபுணர்கள் உதவி! [Sunday 2016-01-17 09:00] உத்தேச அரசியலமைப்பை வரைவது தொடர்பில் ஆலோசனை வழங்கும் நடவடிக்கையில் சுவிட்ஸர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க நாடுகளைச் சேர்ந்த அரசியலமைப்பு நிபுணர்கள் குழு பங்குகொள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது. சுவிட்ஸர்லாந்து ப்ரீபேர்க் பல்கலைக்கழக சமஷ்டி கற்கைபீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஈவா மாரியா மற்றும் தென்னாபிரிக்க வெஸ்டன் கேப் பல்கலைக்கழக பேராசிரியர் தெஷோ ஸ்வேட் லர், ப்ரிபுக் பல்கலைக்கழக பேராசிரி யர் மாகெட்டி ஆகிய அரசியலமைப்பு துறைசார் வல்லுநர்கள் குறித்த குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர். உத்தேச அரசியலமைப்பை வரைவது தொடர்பில் ஆலோசனை வழங்கும் நடவடிக்கையில் சுவிட்ஸர்லாந்து மற்றும் தென்னாபிர…
-
- 0 replies
- 394 views
-
-
யாழ் நல்லூர் ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் தமிழர் கலாச்சார ஆடைகளுடன் வெள்ளைக்காரப் பெண்கள் வலம் வருவதை காணக்கூடியதாக உள்ளது. இதிலிருந்து வெள்ளைக்காரப் பெண்கள் தமிழ் கலாச்சாரத்தை மதிப்பது புலப்படுகின்றது. தமிழர் சலாச்சாரத்தை அழித்து வரும் நிலையில் இதற்கு தமிழர்களும் உடந்தையாக உள்ள காலத்தில் தமிழரின் பிரதான நிகழ்வான தைப்பொங்கல் நாளில் யாழில் சேலை உடுத்தி ஆலய வழிபாடுகளில் வெள்ளைக்காரப் பெண்கள் ஈடுபடுகின்றமை பலர் திருந்த வாய்ப்பாக அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/show-RUmuyBSaSWisyH.html
-
- 1 reply
- 558 views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சீர்திருத்த திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் தை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. இதன்படி பாலியல் துஸ்பிரயோகத்தினால் 149 சிறுவர்களும் பாலியல் சேஷ்டைகளினால் 18 சிறுவர்களும், மற்றும் உடல் சம்மந்தமான துஷ்பிரயோகத்தினால் 69 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்தில் ஏனைய நான்கு மாவட்டங்களை விடவும் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் 68 சம்பவங்கள…
-
- 1 reply
- 398 views
-
-
2015ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில், அகில இலங்கை அளவில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த அதிகளவு மாணவர்கள் சித்தியடைந்த மாகாணமாக வட மாகாணமும், சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாண மாவட்டமும் சாதனை படைத்துள்ளன. பரீட்சை திணைக்களத்தின் ஆய்வுகளின் அடிப்படையில் வட மாகாணத்தில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களின் வீதம் 65.23 ஆகும். பரீட்சை திணைக்களத்தின் ஆய்வுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களின் வீதம் 66.32 ஆகும். மாகாண மட்டத்தில் சபரகமுவ, மேல், ஊவா மற்றும் தென் மாகாணங்கள் முறையே 2ம், 3ம், 4ம் மற்றும் 5ம் இடங்களைப் பெற்…
-
- 6 replies
- 675 views
-
-
சிங்கப்பூரில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த மத்திய மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் சிங்கப்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் அண்மையில் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் சிங்கப்பூர் பெண்ணொருவரின் உடலை தகாத முறையில் ஸ்பரிசிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து சிங்கப்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த அரசியல்வாதி, பொலிஸ் நிலையத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். குறித்த மாகாண சபை உறுப்பினருடன் சிங்கப்பூர் சுற்றுலாவை மேற்கொண்டிருந்த ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள் இன்று நாடுதிரும்பியுள்ள போதிலும…
-
- 1 reply
- 520 views
-
-
தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் நிறை 4800 கரட் என்றும் 485 கிராம் எடை கொண்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் பெறுமதி தொடர்பான சரியான விபரங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை. இதற்கு முன்னர் அண்மையில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்கள் என அதன் உரிமையாளர் அறிவித்திருந்தார். அந்த நீலநிற மாணிக்கக் கல்லின் நிறை 1404.49 கரட் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதை விட அதிக நிறையுடைய மற்றொரு நீலநிற மாணிக்கக் கல்லே இவ்வாறு தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=…
-
- 3 replies
- 882 views
-
-
கிளிநொச்சி இரணைமடு குளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு 96 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு 96 பானைகளில் இன்று காலை கமக்கார அமைப்பினால் கனகாம்பிகை அம்மன் கோவிலில் 96 பானைகளில் பொங்கல் பொங்கி வழிபாடு நடத்தப்பட்டது. 1901 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரணைமடு குளம் 1920 ஆம் ஆண்டு விவசாயத் தேவைக்காக நீர் திறந்துவிடப்பட்டது. இதன் 96 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டே இரணைமடு குளத்தின் கீழான 22 திட்டக்குழுக்கள் கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் 96 பானைகளில் பொங்கல் பொங்கின. ஒவ்வொரு வருடமும் இரணைமடு குளத்தின் கீழான திட்டக்குழுக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு மூலகாரணமாக இருந்து வருகின்ற இந்த குளத்திற்கு பொங்கல் பொங்கி நன்றி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் கிளிநொச்சி…
-
- 2 replies
- 657 views
-
-
பாற்சோறு உணவை விட தைப்பொங்கல் உணவு சுவையானது ; ரணில் [ Saturday,16 January 2016, 03:52:14 ] பாற்சோறு உணவை விட தைப்பொங்கல் உணவு சுவையானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்’து தெரிவித்தார். தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதமர்; உலக சுற்றுச்சூழலில் மாற்றங்கள் நிகழ்வது போன்று உலக அரசியலிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அவ்வாறு மாற்றமடையும் சூரிய வெளிச்சம் தற்போது முழு இலங்கைக்கும் கிடைத்துள்ளதுடன், அனைத்து ஸ்ரீலங்கா பிரஜைகளும் தற்போது அனுபவிக…
-
- 1 reply
- 527 views
-
-
புலிகளைப் போன்று ஓய்வுபெறும் இராணுவத்தினருக்கும் புனர்வாழ்வு! [Friday 2016-01-15 19:00] விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டதை போல ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்களுக்கும் பயிற்சியளித்து சமூகத்துடன் இணைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் வைபத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கூறினார். தற்போது இராணுவத்தில் ஓய்வு பெறும் நிலையில் பெருமளவான இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்று சமூக நீரோட்டத்துக்கு செல்லும்போது அவர்களுக்கு பயிற்சி அளித்து சமூகத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் கூறினார்…
-
- 11 replies
- 998 views
-
-
நிலைப்பாட்டை மாற்றுவாரா விக்கி? வடக்கு - கிழக்கு தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற உண்மையை முன்னைய ஆட்சியாளர்கள் உதட்டளவில் ஏற்றுக்கொண்டார்களே தவிர அவற்றைத் தீர்ப்பதற்காக உணர்வுபூர்வமான நடவடிக்கைகள் எடுத்த வரலாறு கிடையாது. யுத்தம் முடிந்தால் தமிழர்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்ற நிலைப்பாட்டில் செயற்பட்ட அரசியல் தலைவர்கள் தான் அதிகம். அந்த யுத்தம் தான் தமிழர்களின் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருந்ததாக அவர்கள் கருதினார்கள். பிரச்சினைக்கான தீர்வைத் தேடித்தான் அந்த யுத்தம் உருவானது என்ற உண்மையை அவர்கள் ஏற்க மறுத்தனர். அந்த யுத்தம் 2009 இல் முடித்து வைக்கப்பட்டபோது தமிழர்களின் பிரச்சினைகள் உச்சத்தில் இர…
-
- 1 reply
- 541 views
-
-
பரந்துபட்ட சர்வதேச அர்ப்பணிப்பு காணப்பட்டிருந்தால் இலங்கையில் சமாதான முயற்சிகள் வெற்றியடைந்திருக்கும் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானபிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அட்லான்டிக் கவுன்சிலின் தென்னாசிய நிலையத்தின் கலந்துரையாடல் ஓன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான முயற்சிகளிற்கு இந்தியா, நோர்வே, ஜப்பான் ஆகிய நாடுகள் இராஜதந்திர உதவிகளை வழங்கின. ஆனால் சர்வதேச சமூகத்தின் பரந்துபட்ட வலுவான கூட்டமைப்பு அவசியமாக காணப்பட்டது. இலங்கையின் உள்நாட்டுமோதல் போன்ற ஓன்றை கையாள்வதற்கு ஆரம்பநாள் முதல் மிகுந்த பொறுமை அவசியமானதாக விளங்கியது. நீங்கள் பொறுமையா…
-
- 0 replies
- 287 views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நிபுணர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. இலங்கையின் முக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் 40 பேர் மற்றும் 11 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்பன இணைந்து இது தொடர்பான கடிதமொன்றை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் இந்த விசாரணைகளை நெறிப்படுத்தவுள்ளனர். வெளிநாட்டு நிபுணர்கள் சிலர் இவ்விசாரணைகளின் பார்வையாளர்களாகவும்,…
-
- 0 replies
- 336 views
-
-
6 மாதங்களில் மேலும் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படும்! அடுத்த ஆறுமாத காலப்பகுதியில் மேலுமொரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை, மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் மேலும் உரையாற்றுகையில், நீண்டகாலமாக தமிழ்மக்கள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக இந்நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள்.இது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. மூன்று தசாப்த யுத்தம் நிறைவுக்கு வந்துள்…
-
- 0 replies
- 268 views
-
-
சர்ச்சைக்கு அகப்பட விரும்பவில்லை - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சர்ச்சைக்கு அகப்பட விரும்பவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி.வடக்கில் விடுவிக்க ப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக வியாழக்கிழமை மாலை அப்பகுதிகளுக்கு வடமாகாண முதலமைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் சென்று இருந்தார். அதன்போது வலி.வடக்கு வீமன்காமம் பகுதியில் இராணுவத்தினரின் வதை முகாம் இருந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற இரு வீடுகளுக்கு அருகில் முதலமைச்சர் நின்றிருந்த வேளை மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் அந்த இரு வீடுகளுமே இராணுவத்தின் வதை முகாம் என சந்தேகிக்க படுகின்றது எனவும் அதனை மிக அருகில் சென்று பார்வையிட வ…
-
- 18 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதியால் பொதுமன்னிப்பளிக்கப்பட்ட ஜெனீவனின் அனுபவப் பகிர்வு Published by Priyatharshan on 2016-01-16 10:50:45 சாப்தமொன்றை சிறையில் கழித்து விட்டேன். மீண்டுமொரு தசாப்தத்தை சிறையில் கழித்தாகவேண்டுமென உத்தரவிட்டுள்ளாள் நீதிதேவதை. பிறிதொரு வழக்கு ஆறாண்டுகளாக கிடப்பில் இருக்கின்றது. எனது எதிர்காலம் என்னாகப்போகின்றது? நமக்கு மட்டும் ஏன் தான் இந்த நிலையோ? இந்தப்பிறப்பில் வாழ்வும் சாவும் எனக்கு இங்கேதான்…! மேன்முறையீடு செய்யலாமா? எவ்வாறு செய்வது? யாரை பார்ப்பது? நடப்பது நடக்கட்டும்…! ஆயிரம் கேள்விகளும் பதில்களும் மனதுக்குள். ஜனவரி ஐந்தாம் திகதி. அன்றும் வழமைபோன்றே எனது மனதில் அதே கேள்விகளும் பதில்களும். வழமையான …
-
- 1 reply
- 586 views
-
-
தமது உரிமைகளைப் பெறவே தமிழர்கள் போராடினார்கள் (போர் அனைத்தையும் சிதைத்து விட்டது என்கிறார்: சந்திரிகா! இலங்கைக்கு சுதந்திரம் கிடைப்பதற்காக ஒற்றுமையாக போராடிய தமிழ் மக்கள் சுதந்திரத்தின் பின்னர் தமக்குரிய உரிமைகள் கிடைக்காத காரணத்தால் தான் தமது உரிமைக்காக போராடினார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட மாணவர் தைப்பொங்கல் விழா”நேற்றையதினம் யாழ். இராமநாதன் கல்லூரியில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பொங்கல் விழாவை இந்த வருடம் யாழில் கொண்டாடுவதில் இத்தினத்தை மிகவும் மகிழ்சியான நாளாக…
-
- 0 replies
- 371 views
-
-
காணாமல் போனோர் உயிரிழந்து விட்டனர்! : யாழ்.வந்த ரணில் கருத்து! காணாமல் போனோரில் பெரும்பாலானோர் உயிரிழந்ததாகவே கருதுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழில் தெரிவித்துள்ளார். மேலும் காணமால் போனோர் பிரச்சினை வடக்கில் மட்டுமல் தெற்கிலும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊடகங்களுக்கு அறிவுரை அரசியல் அமைப்பை திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் உள்வாங்கி அரசியல அமைப்பு சபையை உருவாக்க ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அவர்கள் வெளிப்படையாக செயற்பட வேண்டும். 18ஆவது சீர்திருத்தத்தை பேராச…
-
- 0 replies
- 435 views
-
-
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சிங்கப்பூரில் வழக்கு தாக்கல்? [ Saturday,16 January 2016, 03:42:03 ] ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக முன்னனி தனியார் நிறுவனம் ஒன்று சிங்கப்பூர் பங்கு பரிவர்தனை நிலையத்தில் முறைப்பாடு செய்ய தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறைப்பாட்டின் பின்னர் மான நஷ்ட வழக்கு தொடர்வதற்கும் அந்த நிறுவனம் ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை சிங்களப் பத்திரிகை ஒன்று இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் பங்கு பரிவர்தனை நிலையத்தில் இதற்கு முன்னர் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 306 கோடி ரூபாவை தனியார் வங்கி ஒன்றுக்கு நட்டஈடாக கடந்ம அரசாங்கத்தின் ஆட்சிகாலத்த…
-
- 0 replies
- 464 views
-
-
போர்க் குற்ற விசாரணை பொறிமுறை இவ்வருட நடுப்பகுதி ஆரம்பம் [ Saturday,16 January 2016, 03:11:00 ] போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை எதிர்வரும் ஜுன் மாதத்திற்கு முன்னராக ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய சர்வ மதத் தலைவர்கள், முன்னுதாரணம் கொண்ட சர்வதேச நாடுகள் மற்றும் அரச பிரமுகர்களுடனான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் பெப்ரவரி மாதமளவில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதேபோன்று ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனும் இந்த வருடத்தில் விஜயம் மேற்கொள்ளவ…
-
- 0 replies
- 476 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டம் என்பது காலாவதியான சட்டமாகும். அதனை அகற்றி பொதுநலவாய நாடுளின் சட்டத்துக்கு அமைவாக பயங்கரவாதத்திற்கு எதிராக சட்டம் எதிர்காலத்தில் நிறைவேற்றலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , பயங்கரவாத தடைச்சட்டம் என்பது காலாவதியான சட்டமாகும். அதனை அகற்ற எதிர்பார்த்துள்ளதுடன் சர்வதேச ரீதியில் தற்போது பயங்கரவாத பிரச்சினை இருப்பதன் காரணமாக தேவைப்பட்டால் அதற்கு தேவையான சட்டங்களை பொதுநலவாய நாடுளின் சட்டத்துக்கு அமைவாக எதிர்கால…
-
- 0 replies
- 473 views
-
-
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பின்கீழ் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று மீண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சர்வதேச பேரவையும் சர்வதேச தமிழ் இளைஞர் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தின்படி தமிழீழம் பிரகடனப்படுத்தப்பட்டு 40 வருடங்கள் கடந்துள்ளன. இந்த பிரகடனத்தின் மூலம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் தாயகம் என்பன அடிப்படையாக கொள்ளப்பட்டன. இந்தநிலையில் 1983ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆற…
-
- 0 replies
- 320 views
-
-
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், ஒருவருக்கொருவர் முகம்கொடுக்காத- கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பனிப்போர், நேற்று முடிவுக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேசிய பொங்கல் விழா நிகழ்வில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வுக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, வீரசிங்கம் மண்டபத்தின் வாயிலில் கைலாகு கொடுத்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி, தலைப்பாகை சூடி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, விழாவில் அவர்கள் இருவரும் அருகருகாக ஆசனங்களில் அமர்ந்திருந்ததுடன், விழா முடியும் வரையில் நீண்டநேரமாக உரையாடிக் கொண்டிருந்தனர். ரணில…
-
- 0 replies
- 685 views
-
-
வடக்கில் இருந்து சிறிலங்கா படையினர் படிப்படியாக குறைக்கப்படுவர் என்றும், காலாவதியாகிப் போயுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேசிய தைப்பொங்கல் விழாவில் உரையாற்றிய அவர், “தைப்பொங்கல் விழா என்பது யாழ்ப்பாணத்திற்கானதோ அல்லது இந்துக்களுக்கு மட்டுமானதோ அல்லது தமிழ் மக்களுக்கான நிகழ்வோ அல்ல. இது முழு நாட்டுக்கும் பொதுவான தேசிய நிகழ்வாகும். நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சூரிய பகவானை தரிசிக்கிறோம். ஆகவே இது ஒரு பொதுவான நிகழ்வு. தெற்கில் என்னை திட்டுவார்களோ தெரியவில்லை. இருப்பினும் நான் ஒரு விடயத்தை இங்கு கூறுகிறேன். பாற்சோறைவிடவும் பொங்கல்…
-
- 0 replies
- 458 views
-
-
கிளிநொச்சியில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ் மக்கள் பேரவை குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா இந்த விடயத்தைக் கூறியுள்ளார். எதிர்வரும் 21ம் திகதி கூட்டமைப்பின் மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. இதன்போது சமகால அரசியல் விடயங்கள் குறித்தும், 2016ம் ஆண்டுக்கான வடக்கு கிழக்க அபிவிருத்தி குறித்தும் மாத்திரமே பேசப்படும். தமிழ் மக்கள் பேரவை குறித்து இதன்போது பேசவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். http://www.whathits.com/eeladhesam
-
- 0 replies
- 367 views
-
-
ரோனி பிளேயரின் வகிபாகமும் தமிழருக்கு முன்னுள்ள சவாலும் – ச.பா.நிர்மானுசன் பிரித்தானியாவின் முன்னால் பிரதமர் ரோனி பிளேயர் அவர்கள் கடந்த ஐந்து மாதத்திற்குள் சிறீலங்காவுக்கான இரண்டாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார். தனது முதலாவது பயணத்தின் போது சிறீலங்கா சனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை ஒகஸ்ட் 24ம் திகதி சந்தித்த ரோனி பிளேயர், தனது இரண்டாவது பயணத்தின் போது இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களை கடந்த சனவரி 3ம் திகதி சந்தித்துள்ளார். சர்வதேச ரீதியில் சிறீலங்கா தொடர்பாக நிலவும் தவறான எண்ணங்களை களைவதற்கு தான் உதவத் தயார் என மைத்திரிபாலவுடனான சந்திப்பில் ரோனி பிளேயர் தெரிவித்திருந்தார். போர்க்குற்றச் சாட்டும், பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களும் இன்றுவரை சிறீலங்காவை சர்வதேச கவனத்திற்…
-
- 0 replies
- 404 views
-