ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
குமார் குணரத்னமின் கைதை கண்டித்து யாழில் சுவரொட்டி January 7, 2016 04:51 pm முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழுத் உறுப்பினர் குமார் குணரத்தினம் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களாகியுள்ள நிலையில், அதனை கண்டித்து யாழின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டபட்டுள்ளன. குடிவரவு, குடியகல்வு சட்ட விதிமுறைகளை மீறி இவர் இலங்கையில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் குமார் குணரத்தினம், கேகாலை அங்குருவெல்ல பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குமார் குணரத்தினம் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=75855
-
- 0 replies
- 403 views
-
-
புலம்பெயர் விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்துவதற்காகவே ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வாளர்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது என்று விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இராணுவ புலனாய்வு அதிகாரிகளையும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவாவையும் நேற்று சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார். இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் கொடஹேவாவும் கைது செய்யப்பட்டமைக்கு சட்ட அடிப்படையில்லை. இராணுவ புலனாய்வாளர்கள், புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்தவும், அரசாங்கத்தை விமர்சனம் செய்தமைக்காக நாலக கொடஹேவாவும் கைது செய்யப்பட்டனர…
-
- 1 reply
- 454 views
-
-
நோர்வே வெளிவிவகார அமைச்சருக்கு செங்கம்பள வரவேற்பு அளித்த இலங்கை ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்த நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போகே பிரன்டேவுக்கு, செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க, மலர்மாலை அணிவிக்கப்பட்டு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவால் வரவேற்கப்பட்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர், அமைச்சிலுவுள்ள நினைவுப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். இதனையடுத்து, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்ததோடு, தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரிடம் இருதரப்பு பேச்சு…
-
- 0 replies
- 337 views
-
-
புதிய அரசியல் அமைப்பு தனிஈழத்தை அமைக்கும் அடிப்படையில் அமையும் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும் இன்றுவரை அந்த மாற்று அரசியல் திருத்தம் குறித்து எந்தவித வரைபுகளையும் முன்வைக்கவில்லை. ஆனால் எவ்வாறான மாற்றம் வரும் என்பது தொடர்பில் எமக்கு நன்றாகவே தெரியும். இப்போதே இவர்கள் மாற்று அரசியல் அமைப்பு திருத்தத்தை தயாரித்து விட்டனர். இந்த வரைபில் பிரிவினைக்கான அனைத்து கொள்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்…
-
- 4 replies
- 571 views
-
-
இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை இலங்கை இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது. எல் நினோ எனப்படும் இந்த காலநிலை மாற்றத்தால் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைவடைவதால் கடலின் வெப்பநிலையில் அதிகரி்ப்பு ஏற்படும் எனவும், இதனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=148756&category=TamilNews&am…
-
- 0 replies
- 626 views
-
-
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு பயணித்த புகையிரதத்தில் மோதி புகையிரத வீதி பாதுகாப்பு கடவையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புதுக்கமம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட -------வாடி மதுரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் சிவகுமாரன்(வயது-36) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் உயிலங்குளம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட -------வாடி மதுரங்குளம் பகுதியில் அமைந்துள்ள புகையிரத வீதி பாதுகாப்புக் கடவையில் காவலாளியாக கடமையில் ஈடுபட்டு வருகின்றார். உயிலங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள குறித்த புகையிரத கடவையில் கடந்த காலங்களில் பொலிஸார் பாதுகாப்புக்கடமையில் ஈட…
-
- 0 replies
- 459 views
-
-
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது பலியான படையினரின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கமும் மக்களும் தமது அனுதாபத்தை தெரிவிப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. பிராந்தியத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்படுவதற்கு இலங்கை தொடர்ந்தும் தயாராகவுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=148748&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 337 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்து பாதுகாப்பு படையினர் மிகவும் உன்னிப்பாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தமது செயற்பாடுகளை இலங்கையில் ஆரம்பிப்பது மற்றும், இலங்கையில் தோற்றம் பெறுவது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில், அவர்களின் எச்சரிக்கை குறித்து, இலங்கை பாதுகாப்பு படையினர் உஷாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=148746&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 216 views
-
-
நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத வகையில், மேலும் பல இடங்களை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளது என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். வடக்கு-கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 65,000 வீடுகளை கட்டும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளின் தேவை என்பது இதைவிட இருமடங்கு அதிகமாக இருந்தாலும் முதல் கட்டமாக இதை முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளது. அந்தப் பகுதிகளின் அரசாங்க அதிபர்களின் அறிக்கையின்படி குறைந்தது 135,000 வீடுகள் தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது, அதில் பாதியளவுக்கான வீடுகளை கட்டும் பணிகளைத் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 477 views
-
-
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைமை அடுத்த வாரம் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வேயின் வெளிவிகார அமைச்சர் போர்கே புரென்டேவுடன் சந்திப்பு நடத்தியதனைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால சம்பவங்களுக்கு தீர்வு காணும் நோக்கில் விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை ஒட்டுமொத்த பாராளுமன்றையும் அரசியல் சாசனப் பேரவையாக…
-
- 0 replies
- 268 views
-
-
வடமாகாணம் மறுமலர்ச்சி பெறுகின்றது - வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் றிது சிறிதாக வடமாகாணம் மலர்ச்சி பெற்று வருகின்றது. தற்போது வெளிப்படைத் தன்மை, தகைமை அடிப்படை, நேர்மையான நிர்வாகம் போன்றவற்றை உள்ளடக்கி எமது மாகாணம் முன்னோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 640 பேருக்கான நியமன கடிதங்கள் இன்றையதினம் வழங்கி வைக்க பட்டுள்ளது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 466 views
-
-
சித்திரவதை முகாம் கிடையாது என்கிறார் : அமைச்சர் ராஜித்த வடமாகாணத்திலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சித்திரவதை முகாம் காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இராணுவத்தினரால் நடாத்தி செல்லப்பட்ட இராணுவ வைத்தியசாலையின் புகைப்படங்களே அவ்வாறு வெளியாகியிருந்ததாகவும், அது இராணுவ சித்திரவதை முகாம் அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு காரணங்களின் நிமிர்த்தமே …
-
- 0 replies
- 311 views
-
-
உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் யாழ். அரச அதிபர் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த 701.5 ஏக்கர் காணிகள் கடந்த 29ஆம் திகதியன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் யாழ்.அரச அதிபர் வேதநாயகன். இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த வீமன்காமம் வடக்கு , தையிட்டி வடக்கு, மயிலிட்டி வடக்கு என்பன கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளை யாழ். அரச அதிபர் வேதநாயகன் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் இதில் யாழ். மாவட்ட காணி மேலதிக செயலர் எஸ்.முரளிதரனும் குறித்த பகுதிக்குச் சென்றிருந்தமை …
-
- 0 replies
- 360 views
-
-
சி.வி.க்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை? சொர்ணகுமார் சொரூபன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியொன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையொன்றை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக, நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் அறிந்து கொண்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/163191/%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AE-%E…
-
- 2 replies
- 757 views
-
-
உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவம் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளது உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்ட வலி.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினர் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை வரைபடங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த 701.5 ஏக்கர் காணிகள் கடந்த 29ஆம் திகதியன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினர் விட்டுச் சென்ற சில அடையாளங்கள் காணப்படுகின்றன. விடுவிக்கப்பட்ட பகுதியில் இராணுவத்தினர், பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்தமைக்கான வரைபடமும் இவற்றில் உள்ளது. மேலும் இந்தப் பகுதிக்கான …
-
- 0 replies
- 419 views
-
-
இந்திய எதிர்ப்பை மீறி பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்குகிறது இலங்கை! [Wednesday 2016-01-06 07:00] எட்டு ஜே.எப்-17 போர் விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் இலங்கை விஜயத்தின் போது இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக இந்த ஜேஎப் 17 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யாது என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. எட்டு ஜே.எப்-17 போர் விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் இலங்கை விஜயத்தின் போது இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியாவின் அழு…
-
- 1 reply
- 445 views
-
-
மைத்திரி, சம்பந்தன், சந்திரிகாவுடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் இன்று முக்கிய பேச்சு! நோர்வே - இலங்கை இடையே மீண்டும் அரசியல் உறவுகளை மீளப்புதுப்பித்துக்கொள்ளும் நோக்குடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் ஒருநாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று கொழும்பு வருகின்றார். 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல்தடவையாகும். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பல தரப்பினருடன் பேச்சுகளில் ஈட…
-
- 1 reply
- 316 views
-
-
இம்மாதம் யாழ்ப்பாணத்தில் இலவச கல்வி மற்றும் களிப்பாட்ட அம்சங்கள் January 7, 2016 11:07 am நாட்டின் முன்னணி இலக்கியசார்ந்த கொண்டாட்ட நிகழ்வான Fairway Galle Literary Festival இன் இறுதியானதும் மூன்றாவதுமான வார நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த கொண்டாட்டத்தில் பிரத்தியேகமான மற்றும் பரந்தளவு சர்வதேச கலைஞர்கள் பங்கேற்கவுள்ளதுடன், உள்நாட்டு திறமைசாலிகளும் பங்கேற்கவுள்ளனர். சகல நிகழ்ச்சிகளும் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்படவுள்ளன. களிப்பான அம்சங்களை வழங்குவதற்கு மேலாக, சகல நிகழ்வுகளும் சர்வதேச சிந்தனைகளுடன் கலந்து கல்விசார் உளளம்சங்களை புகட்டும் வகை…
-
- 0 replies
- 341 views
-
-
யாழ்.நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இருவர் பல்கலைக்கு தெரிவு! யாழ்.நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர கலைப்பரிவில் பரீட்சைக்குத் தோற்றிய 15 பேரில் 13 பேர் சித்தியெய்துள்ளனர். அதில் இருவர் பல்கலைக்கழகத்துக்கும் தெரிவாகியுள்ளனர். தேவகீர்த்தனா ஜக்கறிஜாஸ் கலைப்பிரிவில், A.2B , யாழ்.மாவட்ட நிலை 48 அதேபோல கலைப்பிரிவில் மேரி வினு ஜேசுதாஸ் A.2B யாழ்.மாவட்ட நிலை 82. ஆகிய இரு மாணவர்களுமே பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பாடசாலை சமூகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். http://onlineuthayan.com/news/6359
-
- 0 replies
- 438 views
-
-
புலிகள் அமைப்புடன் அரசியல் தீர்வு குறித்தே பேசினேன், தாக்குதல் நடத்துவது தொடர்பில் அல்ல [ Tuesday,5 January 2016, 17:14:38 ] தன்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக பொதுமக்களும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தலைமை பொறுப்பை பொறுத்தவரை தனக்கு யாரும் போட்டியில்லை எனவும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், ஆதரவாளர்களும் விரும்பும் பட்சத்தில் தலைமைப் பதவிலிருந்து விலகத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தான் ஒருபோதும் புலிகள் அமைப்பின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை ஆதரிக்கவ…
-
- 42 replies
- 1.9k views
-
-
சிங்களே அமைப்பினால் இன முரண்பாடுகள் ஏற்படக்கூடும்- மங்கள சமரவீர சிங்களே அமைப்பினால் இன முரண்பாடுகள் ஏற்படக் கூடுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில் சிங்களே அமைப்பு தொடர்பில் முகநூல் உள்ளிட்ட சமூக வலையத்தளங்களிலும், இணையத்திலும் ஏனைய ஊடகங்களிலும் பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சிங்களே அமைப்பின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் செயற்பாடுகள் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க வழியமைக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அமைப்ப…
-
- 0 replies
- 519 views
-
-
வடக்கு கிழக்கு மக்கள் இணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு காலத்தின் தேவையாகும். இந்த அமைப்பிற்கு எனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் மேதகு யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார். இன்றைய தினம் (06.01.2016) தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா, ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் அலன் சத்தியதாஸ் ஆகியோர் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் மேதகு யோசப் பொன்னையா ஆண்டகையைச் சந்தித்தபோதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு கட்டாயமானதாகும். அதிலும் வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் இணைந்து இந்த அமைப…
-
- 1 reply
- 586 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாக யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் தெரிவித்த கருத்து தொடர்பில் ஆராயப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகள் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது முகாம்களுக்கு சென்ற வேளை நெல்லியடியில் வைத்து ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் அந்தக் குழுவிடம் விடுதலைப் புலிகளிடமிருந்து திருடப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் ரி. துவாரகேஷ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பொங்கல் விழா பலத்த பாதுக…
-
- 0 replies
- 462 views
-
-
காயப்பட்ட பெண் யானையை ஆண் யானை காப்பாற்ற முயற்சி எடுத்த சம்பவம் ஒன்று வாழைச்சேனை வாகனேரி குளத்துமடு கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. வாகனேரி காட்டு பகுதியில் பெண் யானை ஒன்று இனந்தெரியாதோரால் சுடப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி வருகின்றது. சுடப்பட்ட யானையை காப்பாற்றும் நோக்கில், ஆண் யானை மனித நடமாட்டம் உள்ள பிரதேசத்திற்கு பெண் யானையை தள்ளிக்கொண்டு வந்துள்ளது. காயப்பட்ட பெண் யானை நான்கு வயது மதிக்கத்தக்கதாக இருக்கலாம் என்றும் காயப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பொலனறுவை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தில் இருந்து மருத்துவர்கள் இன்று (06) வருகை தரவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள கிரான் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 637 views
-
-
இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளயர், எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனை சந்தித்து உரையாடியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விமர்சனம் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது இலங்கையின் பொறுப்புக்கூறல் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது குறித்து கருத்துரைத்துள்ள கோத்தபய, 2009ஆம் ஆண்டு ஈராக்கில் இடம்பெற்ற பிரித்தானியாவின் அட்டூழியங்கள் குறித்து பொறுப்புக்கூறலை இன்னும் பிரித்தானியா நிறைவேற்றவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்த பிரித்தானிய பிரதமராக அப்போது இருந்த டோனி பிளயர் முயற்சித்தார். இதற்காக பிளயர், வெளியுறவ…
-
- 4 replies
- 797 views
-