Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரயில் மோதியதில் புலோலி பொறியியலாளர் சாவு! புகையிரதம் மோதியதில் பருத்தித்துறை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுக் காலை கொழும்பு பம்பலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. புலோலி மேற்கு, துலாவெட்டி வீதி முதலாம் கட்டை பருத்தித்துறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை வாசீகன் (வயது-27) என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த இளைஞர் அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராக கடமையாற்றி வந்த நிலையில் தனது விடுமுறையை களிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். பின்னர் அவுஸ்திரேலியா செல்வதற்காக பயணச்சீட்டை பதிவு செய்தவற்காக கொழும்புக்கு சென்றிருந்தவேளை பம்பலப்பிட்டி பகுதியில் இடம்…

  2. மைத்திரி அருகில் மகிந்த! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இன்று சந்தித்துக்கொண்டனர். அமரபுர மகாநாயக்க அதி.வண தவுல்தென ஞானிதிஸ்ஸரவின் 100 ஆவது பிறந்தநாள் வைபவம், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வைபவத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலில் வருகை தந்தார். அதன்பின்னரே மகிந்த ராஜபக்ச வருகைதந்தார். முதல் வரிசையில் அவ்விருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். http://onlineuthayan.com/news/5983

  3.  அடிக்கல் நாட்டிய கட்டடம் எங்கே -எம்.றொசாந்த் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கான சிகிச்சையியற் துறைக்கான கட்டடம் அமைப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள காணியில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டும் இன்னமும் கட்டடம் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, முன்னாள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இணைந்து இக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினர். கட்டடப் பணிகள் இன்னமும் அங்கு ஆரம்பிக்கப்படாமையால் காணியின் ஒரு பகுதியில் வாகனப் பாதுகாப்பு நிலையம் இடம்பெறுகின்றது. ஒரு பகுதியில் குப்…

  4. மக்களை முந்திய திருடர்கள் விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு முன்னராக அங்கிருக்கும் பொருட்களை திருடுவதற்காக செல்லுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக கடந்த 25 வருடங்களாக இருந்த வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கு காணிகள் செவ்வாய்க்கிழமை (29), இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு முன்னர், அங்கு செல்லும் சிலர் அங்குள்ள இரும்புப் பொருட்கள், வீடுகளில் எஞ்சியுள்ள பொருட்களை திருடுகின்றனர். இதேவேளை, மக்கள் தங்கள் காணிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் முன்னிலையில் அங்குள்ள பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. …

  5. சுழிபுரத்தில் புதிய நவீன மீன் சந்தை திறப்பு சங்கானை சுழிபுரம் பகுதியில் நவீன மீன் சந்தை நேற்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனால் புதிய கட்டடம் திரைநீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் புறநெகும திட்டத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடமானது வடமாகாண சபை முதல்வரினால் திறக்கப்பட இருந்த நிலையில் அவரது பிரதிநிதியாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்து கொண்டு திறந்து வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. …

  6. 45 சதவீத நிதியை 58 நாள்களில் செலவு செய்தது மாகாணசபை வடக்கு மாகாண சபையினால் 58 நாள்களில் 45 சதவீதமான நிதி செலவு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் 38 சதவீதமான நிதி கடந்த ஒக்ரோபர் 31 ஆம் திகதி வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக பிரதம செயலாளர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 83 சதவீதமான நிதி கடந்த 28 ஆம் திகதி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக, அதாவது 58 நாள்களுக்குள் 45 சதவீத நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சபையில் தெரிவித்தார். …

  7. இலங்கைக்கு JF17 தண்டர் போர் விமானங்களை விற்பதற்கான முயற்சிகளை பாக்கிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளது: 31 டிசம்பர் 2015 இலங்கைக்கு தனது ஜேஎவ் 17 தண்டர் போர் விமானங்களை விற்பதற்கான முயற்சிகளை பாக்கிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளதாக பிரிட்டனை சேர்ந்த பாதுகாப்பு சஞ்சிகையான ஜேன்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது குறிப்பிட்ட வகை விமானங்களை மியன்மாரிற்கு விற்பது குறித்த வெற்றிகரமான உடன்படிக்கைக்கு பின்னர் இலங்கைக்கு அந்த வகை விமானங்களை விற்பதற்காக உடன்படிக்கையொன்றை அந்த நாட்டுடன் செய்து கொள்வது குறித்து பாக்கிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இலங்கையுடன் அவ்வாறான உடன்படிக்கையொன்றை பாக்கிஸ்தான…

  8. யாழின் தேசிய பொங்கல் விழாவில் 701ஏக்கர் வலிவடக்கு காணிகளை மைத்திரி ரணில் உரிமையாளரிடம் கையளிப்பர்- 31 டிசம்பர் 2015 இந்த ஆண்டு தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. இதன்போது வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் இருந்து 701.5 காணி விடுவிக்கப்படுகின்றது. இதனை இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியொர் உரிமையாளர்களிடம் கையளிக்கின்றனர். இதேவேளை 701.5 ஏக்கர் காணிகளை கையளித்து மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமையை முன்னிட்டு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெறவுள்ளன. இந்தப் பூசை நிகழ்வுகளிலும் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதேவேளை குறிப்பிட்ட நிலப் பகுதிகளை மக்களி…

  9. ராஜபக்சே ஆட்சியில் மனித உரிமை மீறல்... வலுவான ஆதாரம் இருப்பதாக இலங்கை அரசு தகவல் Posted by: Jayachitra Published: Thursday, December 31, 2015, 9:04 [IST] கொழும்பு: ராஜபக்சே மற்றும் அவரது ஆட்சியில் அங்கம் வகித்த உறுப்பினர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சே தோல்வி அடைந்தார். சிறீசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியின் படி, ராஜபக்சேவின் ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணைகள் தொடங்கின. இதற்கென காவல்…

  10. தனியார் வைத்தியசாலைகளின் சிகிச்சைக் கட்டணத்திற்குக் கட்டுப்பாடு விசேட வைத்திய நிபுணர்களினால் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்திற்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு தனியார் சுகாதார சேவை கட்டுப்பாட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய நோயாளர் ஒருவருக்கு சிகிச்சை வழங்குவதற்கு 2,000 ரூபாவை அதிகபட்சமாக அறவிடமுடியும் என கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் டொக்டர் காந்தி ஆரியரத்ன தெரிவித்துள்ளார் . மேலும் தனியார் வைத்தியசாலை மற்றும் மருந்தகங்களில் சிகிச்சை வழங்கும் போது அறவிடக்கூடிய நிர்ணய விலைகளும் அறிவிக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஒரு நோயாளரை 10 நிமிடத்திற்குள் பரிசோதனைக்குட்படுத்தி சிகிச்சை வழங்க வேண்டும் எனவும…

  11. ஒதுக்கிய நிதியை நாம் தீட்டிய திட்டங்களுக்கு செலவு செய்யவில்லை : வடக்கு முதலமைச்சர் ஒப்புதல் வடக்குக்கு ஒதுக்கிய நிதியைச் செலவு செய்து முடிக்கவேண்டும் என்பதற்காக, தீட்டிய திட் டங்களை விடுத்து வேறு திட்டங்களுக்குச் செலவிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு இவ்வாறு இடம்பெறாது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஒன்றுகூடல் கிறீன்கிறாஸ் விடுதியில் நேற்று மதியம் இடம்பெற்றது. மாகாண சபைக்குட்பட்ட அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட சகலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூ…

    • 0 replies
    • 348 views
  12. வடமாகாணத்தின் வர்ண இரவு நிகழ்வில் வடக்கின் நட்சத்திரமாக டினேயா தெரிவு December 31, 2015 பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடரில் வெண்கலப் பதக்கத்தையும் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தொடரில் தங்கப் பதக்கத்தையும் வென்ற வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவியான ஜே.ஜே.பி.டினேஜா வடமாகாணத்தின் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டு வர்ண இரவுகள் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரினால் நேற்று கௌரவிக்கப்பட்டார். வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய 6ஆவது வர்ண விருது வழங்கும் நிகழ்வு நேற்று நெல்லியடி மத்திய கல்லூரியின் கலையரங்கில் இடம்பெற்றது. வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளார் இ…

    • 0 replies
    • 451 views
  13. கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு எரிச்சலூட்டினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது! - முதலமைச்சர் [Wednesday 2015-12-30 20:00] தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் இரா.சம்பந்தனுக்கு தெளிவுபடுத்தினேன். அதற்குப் பின்னர் மக்கள் பேரவை ஒரு ஜனநாயக ரீதியான அமைப்பு என சம்பந்தன் என்னிடம் கூறினார் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு இது எரிச்சலூட்டினால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் அவை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் முதலமைச்சரிடம் கேள்வி ஒன்றை எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்…

    • 0 replies
    • 338 views
  14. அரசியலமைப்பு மாற்றத்துக்கு 11 சர்வஜன வாக்கெடுப்புகள் தேவையில்லை! - ஜயம்பதி விக்கிரமரட்ண [Thursday 2015-12-31 07:00] அரசியலமைப்பின் சரத்துக்களை மீறாமல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். இதில் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு புறம்பாக எந்தவொரு மாற்றத்தையும் அரசாங்கம் முன்னெடுக்காதென பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அரசியலமைப்பு நிபுணரான முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் திருத்தம் செய்யப்படவுள்ள 11 சரத்துக்களுக்காக 11 தடவைகள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03ஆம…

    • 0 replies
    • 355 views
  15. போருக்குப் பின்னரும் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு! - கேள்வி எழுப்பும் சர்வதேச ஊடகம். [Thursday 2015-12-31 08:00] போர் முடிந்து ஐந்து வருடங்கள் கழித்தும் இலங்கை அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் அதிகளவான நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளமை, பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்தும் அதன் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக த டிப்ளொமெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இறுதிப் போருக்காக இலங்கை அரசாங்கம் பாதுகாப்புக்காக 175 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்திருந்தது. அது 2011ல் 194 பில்லியன்களாக அதிகரித்தது. 2013ம் ஆண்டு 235 பில்லியன் ரூபாய்களாக இருந்த அந்த ஒதுக்கீடு 2016ம் ஆண்டுக்காக 307 பில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 347 views
  16. "தமிழ் மக்கள் பேரவை மீது அரசியல் சாயம் பூச வேண்டாம்" தமிழ் மக்கள் பேரவை மீது அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று அந்த அமைப்பின் இணைத்தலைவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். தமிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் இயக்கம் என்றும் ஓர் அரசியல் கட்சியாக இயங்குவதற்கோ அல்லது தேர்தல்களில் போட்டியிடுவதற்கோ அதற்கு எண்ணமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது அமர்வு ஞாயிறன்று யாழ் பொது நூலக மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும…

    • 16 replies
    • 1.3k views
  17. தமிழ் மக்கள் அவைக்குள் அங்கத்துவம் பெற்றிருப்பவர்கள் எவரும் பின்கதவு வழியாக வந்தவர்கள் இல்லை. எல்லோரும் முன்கதவால் வந்தவர்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்துள்ளார். இன்றைய தினம் தமிழ் மக்கள் அவை 2ம் அமர்வின் நிறைவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் மக்கள் அவைக்குள் மக்களால் அங்கீகரிக்கப்படாதவர்கள், அங்கீகரிக்கப்படாத கொள்கைகளுடன் நுழைந்து அவற்றை மீண்டும் முன்கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என கூறிய கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் முதலமைச்சரும், மக்கள் அவை இணை தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரி…

  18. 2016ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு சரித்திரம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் பிறக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு சரித்திரம் வாய்ந்த ஒரு வருடமாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில். 2016 ஆம் ஆண்டிலே அரசியல் தீர்வு கிடைக்கும். அதற்கு ஜனாதிபதி அவர்களின் யோசனையின் கீழ் புதியதொரு அரசியல் சட்ட பொறிமுறையினை முன்வைக்க இருக்கின்றார். அந்த ஜனாதிபதி அவர்களின் யோசனையிலே மூன்று விடயங்கள் முக்கியமாக கூறப்பட்டிருக்கின்றது. அதில…

  19. அரசியல் சாசனத் திருத்தங்கள் குறித்து TNAக்கும் SLMCக்கும் இடையில் பேச்சுவார்த்தை அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் இன்றைய தினம் இரு கட்சிகளினதும் முக்கியஸ்தர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் முதல் கட்டமாக இன்றைய பேச்சுவார்த்தை கருதப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரும் இந்த சந…

  20. விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களில் மக்கள் வழிபாடு -செல்வநாயகம் கபிலன் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து செவ்வாய்க்கிழமை (29), விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களில் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். பலாலி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் 1990ஆம் ஆண்டு விட்டுச் சென்ற பூஜைப் பொருட்கள் அப்படியே இருந்துள்ளன. அங்கு பொதுமக்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதேவேளை, இன்னமும் விடுவிக்கப்படாமல் உயர்பாதுகாப்பு வலய வேலிக்குளம் அமைந்துள்ள பலாலி அம்மன் கோவிலை, முட்கம்பி வேலி எல்லையில் கற்பூரம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். - See more at:…

  21. நீதிபதி வாகப்தீனின் காலம் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும் : நீதிபதி இளஞ்செழியன் புகழாரம் கிளிநொச்சி மாவட்ட மக்களை அடிமைப்படுத்தியிருந்த கசிப்பு, மது, போதைவஸ்து போன்ற குற்றச்செயல்களை அடியோடு அழித்து, அவற்றில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குக் கொடூரமான தண்டனைகள் வழங்கி, நீதிபதி வகாப்தீன் நீதியை நிலைநாட்டியிருந்தார் என்று கிளிநொச்சியில் இருந்து இடம்மாற்றம் பெற்றுச் செல்லும் நீதிபதி வகாப்தீனுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் புகழாரம் சூட்டியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாகக் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றி, பொத்துவில் பிரதேச நீதிபதியாக இடம் மாற்றம் பெற்றுச் செல்லும் நீதிபதி வாகப்தீனுக்…

  22. நிலையான சமாதானத்தையும், புரிந்துணர்வையும் நிலைநாட்டி புதிய ஆண்டை சிறப்பாக மாற்றுவோம்! நிலையான சமாதானத்தையும் புரிந்துணர்வையும் நிலைநாட்ட இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் முன்வரவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் எம்.பி. அவர் விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிய எதிர்பார்ப்புக்களைக் கொண்டு வந்திருக்கும் இந்தப் புதிய வருடத்தில் இலங்கை மக்கள் அனைவருக்கும் இது ஒரு வளம் நிறைந்த இனிய புத்தாண்டான அமைய எனது வாழ்த்துக்கள். …

  23. தமிழ்மக்கள் பேரவையில் இணைய அனைவரும் அணி திரண்டு வாருங்கள் - ஏற்பாட்டுக்குழு அறைகூவல் அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் உரிமைகளை, நலன்களை வென்றெடுப்பதற்காக மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் பேரவைக்கு தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தமிழ் உறவுகள் வாழும் இடங்களிலும் பலத்த ஆதரவு கிடைத்து வருகிறது. நாளுக்குநாள் தமிழ்மக்கள் பேரவைக்கு வருகின்ற தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் செய்திகள், குறுஞ்செய்திகள், முகநூல் கருத்துக்கள் தமிழ்மக்கள் பேரவை மிக விரைவில் அனைத்துத் தமிழ் உறவ…

  24. வலி வடக்கில் 700 ஏக்கர் காணியை ஒப்படைக்க முடிவு' இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். 'வலி வடக்கில் 700 ஏக்கர் காணியை ஒப்படைக்க முடிவு' தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும், வளலாய், பலாலி கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள கிராமங்கள் என்பவற்றிலேயே இந்த 700 ஏக்கர் காணிகளையும் உரியவர்களிடம் கையளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. திங்களன்று கொழும்பில் ஜனாதிபதி செ…

  25.  அரசியலமைப்புச் சபை வரும் போது கூட்டமைப்பு பிளவுபடுவதா? வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் கடந்த 19ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, மக்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும். இது அரசியல் கட்சியா, இல்லையென்றால் இவ்வாறானதோர் அமைப்பு எதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கங்களும் இந்த புதிய அமைப்பின் நோக்கங்களும் ஒன்றா, ஒன்றாக இருந்தால் இரண்டு அமைப்புக்கள் எதற்கு, நோக்கங்கள் முரண்படுவதாக இருந்தால் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அதில் இயங்குவது எவ்வாறு? இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகள் எழும் என எதிர்பார்த்து, பேரவையின் சில தலைவர்கள் அவற்றுக்குப் பதிலளித்துள்ள…

    • 4 replies
    • 644 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.