Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகன் பிடிக்கப்பட்டதன் பின்னணியில் ஈ.பி.டி.பி இருக்கலாம் : தாய் சாட்சியம் ஆயுதம் ஏந்திய நிலையில் தங்களை இராணுவத்தினர் என அடையாளப்படுத்தி வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த என் மகனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதுடன் என்னையும் ஆயுதம் காட்டி மிரட்டினர் என தாய் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது நாள் அமர்வு இடம்பெற்றது. இந்த அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கும் போதே தாய் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், என் மகன் முத்துலிங்கம் மலரவன் வயது 19( காணாமல் போகும் போது) 2007ஆம் ஆண்டு பங்…

  2. எனது கணவனும், மகனும் இராணுவ உடையில் நின்றனர்! தமிழ்வின் இணையத்தளத்தில் பார்த்தேன்! ஆணைக்குழு முன் தாய் ஒருவர் சாட்சி [ வெள்ளிக்கிழமை, 11 டிசெம்பர் 2015, 04:00.32 PM GMT ] 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் ஒப்படைத்த எனது கணவனும் மகனும் உயிருடன் இருக்கின்றார்கள். யாழ்.வலி,வடக்கு படைமுகாமில் அவர்கள் இராணுவ உடையில் நின்று கொண்டிருப்பதை தமிழ்வின் இணையத்தளம் புகைப்படமாக வெளியிட்டிருந்தது என ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக தாய் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். சண்முகநாதன் கௌரி என்ற குறித்த தாய் சாட்சியமளிக்கையில், 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் முல்லைத்தீவு வட்டுவாகன் பகுதியில் வைத்து வைத்திலிங்கம் சண்முகநாதன்(கணவன்) சண்முகநாதன் உமை…

  3. வராஹா கப்பல் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது! [ சனிக்கிழமை, 12 டிசெம்பர் 2015, 03:30.58 AM GMT ] “வராஹா” என்ற பெயரைக் கொண்ட இந்திய கரையோர காவல் கப்பலை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக இந்திய லோக்சபாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுபாப்பு ராஜாங்க அமைச்சர் ராவ் இந்தேர்ஜித் சிங் இந்த தகவலை எழுத்துமூலம் நேற்று அறிவித்துள்ளார். 2006ஆம் ஆண்டு முதல் இந்தக்கப்பலை இலங்கை குத்தகைக்கு பெற்று வந்துள்ளது. காலத்துக்கு காலம் இந்தக்குத்தகை நீடிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் 2015 ஆகஸ்ட் மாதம் இந்த கப்பல் இலங்கைக்கு நல்லெண்ண நன்கொடையாக வழங்கப்பட்டது என்று ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த கப்பல் விடயத்தில் எதிர்க்கட்சிக…

  4. வடக்கிலிருந்து அனுப்பி வைக்கப்படும் நிவாரணங்களை தமிழ்நாடு நிராகரித்துள்ளது? [ சனிக்கிழமை, 12 டிசெம்பர் 2015, 12:30.47 AM GMT ] வடக்கிலிருந்து அனுப்பி வைக்கப்படும் வெள்ள நிவாரணங்களை தமிழ்நாடு அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வட மாகாணசபை மற்றும் ஏனைய சில அமைப்புக்களினால் திரட்டப்பட்ட பணம் மற்றும் பொருள் உதவிகளை ஏற்றுக்கொள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. தமிழக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்வதில்லை என இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய பிரதி உயர…

  5. ரயிலுடன் கார் மோதியதில் இருவர் பலி ராகமை பகுதியிலுள்ள ரயில் கடவையொன்றில், கல்கிஸை நோக்கிப் பயணித்த ரயிலிலுடன் காரொன்று மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமிக்ஞை மற்றும் எச்சரிக்கை ஒலி என்பன இயங்கிய போதும் கார், ரயில் கடவையூடாக பயணித்தமையாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/161262/%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-#sthash.DQKCPr3h.dpuf

  6. தமிழ்க் கைதிகளை பார்வையிட்டார் சரவணபவன் எம்.பி மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் இருவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த சில தினங்களாக அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதன் காரணமாக சோர்வடைந்த நிலையில் இருக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார். சிவராஜா ஜெனிற்றன் (வயது 38), முருகையா கோமகன் (வயது 33) ஆகியோரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை மகசின் சிறைச்சாலையில் தற்போது முன்னெடுத்து வருகின்றனர். ஜெனிற்றன் கடந்த திங்…

  7. 2020 இல் இலங்கை கண்ணிவெடிகளற்ற நாடாக மாறும் இலங்கையில் போர் இடம்பெற்ற வடக்கு பகுதிகளில் சுமார் 200,000 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், 2020ஆம் ஆண்டு இலங்கை கண்ணிவெடிகளற்ற நாடாக மாறும் என உலகில் மிகப்பெரிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம்,நேற்று தெரிவித்துள்ளது. ."இலங்கையை முற்று முழுதாக கண்ணிவெடிகள் அற்ற நாடாக 2020ஆண்டளவில் மாற்றுவதே எமது இலக்கு" என ஹலோ ட்ரஸ்ட் அமைப்பின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாகவும் நிதி கிடைக்காமையே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், 90சதவீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடி அ…

  8. மன்னார் ஆயருக்கு ஓய்வு தேவை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தற்போது நாடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மன்னார் ஆயர் இல்லத்தில் தற்போது நலமுடன் இருப்பதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அ.விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார். ஆயரின் நிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நல்ல சுகத்துடன் நாடு திரும்பியுள்ளார். …

  9. விசாரணைக்குழுவிற்கு சாட்சியம் அளிக்க வந்தவர்களில் சிலருக்கு மரண சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன யாழில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவிற்கு சாட்சியம் அளிக்க வந்தவர்களில் சிலருக்கு அவர்களின் உறவினர்கள் மரணித்து விட்டார்கள் என கூறி மரண சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன. குறித்த மரண சான்றிதழ்கள் தமக்கு கட்டாயப்படுத்தியே கொடுக்கப்பட்டதாகவும் ஆனாலும் தாம் தொடர்ந்து தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்கள் என நம்புவதாகவும் சாட்சியம் அளித்தனர். கோண்டாவில் வடக்கு, கோண்டாவிலை சேர்ந்த காந்தி யாழினி என்பவர் சாட்சியம் அளிக்கையில், அல்லைப்பிட்டி பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற…

  10. இலங்கையில் 4 பெண்களில் ஒருவர் 18 வயதையடைய முன்னரே துஷ்பிரயோகம்..! Published by MD.Lucias on Sat, 12/12/2015 - 02:15 இலங்கையில் நான்கு பெண்களில் ஒரு பெண் 18வயதினை அடையும் முன்னர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம் என்னும் தலைப்பிலான பெண்கள் 10நாள் செயற்பாட்டு வாரத்தின் இறுதி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அதிகாரசபை, பால்நிலை அடிப்படையிலான வன்முறையை குறைக்கும் செயலணி ஆகிய இணைந்து அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு …

  11. சில வெளிநாட்டு தூதரங்கள் மூடப்பட உள்ளன - குளோபல் தமிழ் செய்தியாளர் கொழும்பு:- 12 டிசம்பர் 2015 சில நாடுகளில் இயங்கி வரும் இலங்கைக்கான தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். சில நாடுகளில் வதிவற்ற தூதுவர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு தேவையற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள தூதரகங்களை குறைப்பதனாலும் மாற்று வழிகளை பயன்படுத்துவதனாலும் செலவுகளை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜதந்திர சேவைகள் நாட்டுக்கு காத்திரமானதாகவும் பயனுள்ள வகையிலும் அமையக்கூடியதாக வடிவமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்…

  12. நீக்கப்படவுள்ள சட்டத்தின் கீழ்தமிழ் கைதிகளை எப்படி விசாரிக்கலாம்? - சுமந்திரன் கேள்வி [Saturday 2015-12-12 09:00] பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் சர்வதேசத்திடம் உறுதியளித்துள்ள நிலையில், அச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை எவ்வாறு துரிதப்படுத்த முடியும் இவ்வாறு கேள்வியெழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் சர்வதேசத்திடம் உறுதியளித்துள்ள நிலையில், அச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை எவ்வாறு துரிதப்படுத்த முடியும் இவ்வாறு கேள்வியெழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். …

  13. முள்ளியான் காட்டுப் பகுதியில் யாழ்ப்பாண இராசதானி காலக் குடிமனையின் அழிபாடுகள் கண்டுபிடிப்பு! [ வெள்ளிக்கிழமை, 11 டிசெம்பர் 2015, 03:52.57 PM GMT ] கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட இயக்கச்சிக் கோட்டையில் இருந்து தென்கிழக்கே ஏழு கிலோமீற்றர் தொலைவில் உள்ள நித்தியவெட்டை, முள்ளியான் என அழைக்கப்படும் காட்டுப்பகுதியில் அழிவடைந்த புராதன வீடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியற் சிறப்புக்கலை மாணவர்களுக்கு அவ்வூர் மக்கள் அங்குள்ள காட்டுப் பகுதியில் அழிவடைந்த அரண்மனை ஒன்று இருப்பதாகக் கூறப்பட்ட தகவலை அடுத்து அவ்விடத்திற்குச் சென்று தொல்லியல் ஆய்வினை மேற்கொண்டோம். இக்கட்டிட அழிபாடுகளை அவ்வூர் …

  14. பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஐ.நா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாது! - ஹர்ஷ டி சில்வா [Saturday 2015-12-12 09:00] பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்படமாட்டாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ.டி.சில்வா தெரிவித்தார்.பிரதமருக்கோ வெளிவிவகார அமைச்சருக்கோ சுயமாக செயற்பட எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. மதத் தலைவர்கள் இணைந்து கருணை சபையொன்றை அமைத்தே முதல் பேச்சு நடத்தப்படும் என அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், …

  15. தாஜுதீன் பற்றிய உரையால் இலங்கை நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் வாஸிம் தாஜூதீனின் மர்மமான மரணம் தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகின்றது இலங்கையில் ரக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் பற்றிய விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் உரையாற்ற முயன்ற வேளையில், அங்கு ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக சபை நடவடிக்கைகள் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டன. தாஜுதீனின் மரணம் தொடர்பில் தான் உரையாற்ற முற்பட்டபோது, அருகில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் தன்னைத் தாக்க வந்ததாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். சபை நடவடிக்கைகள் வழமைபோல சபாநாயகர் தலைமையில் இன்று காலை ஆரம்பமானதை அட…

  16. எமக்கு இழப்பீடுகள் வேண்டாம் எமது உறவுகளே வேண்டும் - காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் எமக்கு இழப்பீடுகள் வேண்டாம் எமது உறவுகளே வேண்டும் என ஜானதிபதி ஆணைக்குழு முன்பாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை காலை காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவால் பரணகம தலைமையில் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி அமர்வுகள் இடம்பெற்றன. அதன் போது காணாமலாகப்பட்டவர்களின் உறவுகளிடம் விசாரணை நடாத்தியவர்கள் வாழ்வாதார உதவி தேவையா ? இழப்பீடு தேவையா ? மரண சான்றிதழ் தேவையா ? என கேள்விகளை கேட்டு…

  17. யாழில் காணாமல் போன எனது மகனை கொள்ளுப்பிட்டியில் ஈ.பி.டி.பி. உறுப்பினருடன் கண்டனா் 1 யாழில்.காணாமல் போன எனது மகனை கொள்ளுப்பிட்டியில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவருடன் வீதியில் கண்டுள்ளனர் என மகனை பறிகொடுத்த தந்தையர் ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் சாட்சியம் அளித்துள்ளார். திருநெல்வேலி தெற்கை சேர்ந்த நாகலிங்கம் சத்தியவாகீஸ்வரன் என்பவரே அவ்வாறு சாட்சியம் அளித்தார். அது தொடர்பில் தொடர்ந்து தெரிவிக்கையில், எனது மகனான சத்தியவாகீஸ்வரன் இரஜீவன் (காணாமல் போகும் போது 32 வயது , திருமணமாகி 15 நாட்கள்.) என்பவர் தகவல் தொழினுட்ப பூங்காவில் (IT Park ) உதவி தொழினுட்ப உத்தியோகஸ்தராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2006ம் ஆண்டு…

  18. மன்னார் புதைகுழியின் எலும்புகளை வெளிநாட்டில் பரிசோதிக்க அனுமதி திருக்கேதீஸ்வரம் புதைகுழியிலிருந்து 88 பேருக்குரிய எலும்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன (கோப்புப் படம்) இலங்கையின் வடமேற்கே மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளை வெளிநாடொன்றில் பரிசோதனை செய்வதற்கு மன்னார் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கின்றது. தேவார பாடல்பெற்ற திருத்தலமாகிய திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் குடிநீர்க் குழாய் பதிப்பதற்காக வீதியோரத்தில் நிலத்தை தோண்டியபோது அங்கு மனித எலும்புகள் முதலில் கண்டெடுக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அந்தப் ப…

  19. யானையால் சேதமடைந்த ரயில் ... -சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன் வவுனியா, கனகராஜன்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) மாலை 6.30 மணியளவில் யானையொன்றில் மீது ரயில் மோதியதில் யானை உயிரழந்துள்ளதுடன் ரயிலும் பலத்த சேதமடைந்துள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடுகதி ரயிலே இவ்வாறு மோதியுள்ளது. ரயில் பாரிய சேதமடைந்தமையால் அதில் பயணித்த பிரயாணிகள், புகையிரதத் திணைக்களத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட பஸ்கள் மூலம் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இதனால், யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவையானது இரவு தடைப்பட்டது. சேதமடைந்த ரயில் திருத்தப் பணிகளுக்காக கொழும்புக்கு எடுத்து வரப்பட்டு…

  20. வடக்கு- கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு இந்தியா உதவுகிறது' வவுனியா மாவட்ட-பொது மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளைக் கொண்ட நோயாளர் விடுதி திறந்துவைக்கப்பட்டது இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் மலையகப் பிரதேசங்களிலும் இந்திய அரசாங்கம் வீட்டு வதிகளையும் மருத்துவமனை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா வெள்ளியன்று வவுனியாவில் தெரிவித்தார். இந்திய அரசின் நிதியுதவியில் வவுனியா மாவட்ட-பொது மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளைக் கொண்ட கட்டடத்தின் திறப்புவிழாவில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மலையகத்தில் 4000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்க…

  21. இலங்கையில், கடந்த சில தினங்கள் பெய்த பெருமழைக்கு எல் நினோ காலநிலையே காரணமாக இருக்க முடியுமென ஐ.நாவினால் விடுக்கப்பட்ட ஆசிய பசுபிக் நாடுகளுக்கான எல் நினோ மீதான 3 ஆவது ஆலோசனைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய எல் நினோ தாக்கம், 1997- 1998இன் பின்னர் காணப்பட்ட மிகப் பலமாக எல் நினோ தாக்கங்களில் ஒன்றாக இருக்கலாம் என எச்சரித்த இக்குறிப்பு, இது 2016ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுவரை நீடிக்கலாம் என தெரிவித்துள்ளது. 2014இன் பிற்பகுதியில், பசுபிக்கில் ஆங்காங்கே மெதுவாகத் தாக்கத் தொடங்கிய இது, ஆசிய மற்றும் பசுபிக் பெரும் பகுதிக்கு வியாபித்துள்ளது. இது, சில இடங்களில் மேலும் தீவிரமடையலாம். பல நாடுகளில் மழைவீழ்ச்சி, விவசாயத்தைத் தாக்கி வருமான இழப்…

    • 1 reply
    • 535 views
  22. வடக்கில் அடையாளம் காணமுடியாத புலனாய்வுப் பிரிவினரால் மக்களின் உளநலம் பாதிக்கப்படுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோது மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார். அவர், மேலும் குறிப்பிடுகையில், "வன்னி மாவட்டத்தில் மக்களின் உளநல பாதிப்புப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக தலைதூக்கியுள்ளது. எனவே, அங்கு உளநல வைத்தியர்களின் தேவை அதிகரித்துள்ளது. எமது மக்கள் முள்ளிவாய்க்கால் வரை பலாத்காரமாக அடைக்கப்பட்டு, கொலைகளைத் தங்களது கண்களால் கண்டவர்கள். அவ்வாறு கொலைசெய்யப்பட்ட சட…

  23. வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அமளிதுமளி ஏற்பட்டதை அடுத்து, பாராளுமன்ற நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உரை நிகழ்த்தியதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தனது உரையை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இந்த சபையில் அமர்ந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்தே பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் …

  24. சவூதி அரேபியாவின் றியாத் நகருக்கு பணிப்பெண்ணாகச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த, ராஜ்மோகன் ஜெனிட்டா (29) என்ற பெண் அங்கு மரணமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவரது கணவர் சிவலிங்கம் சிவகுமர் தெரிவித்தார். மட்டக்களப்பு, கல்குடா கிராம சேவகர் பிரிவில் புவுணு வீதியில் வசித்து வந்த குறித்த பெண், கடந்த 29.10.2015ம் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் மூலமாக சவுதி அரேபியாவின் றியாத் நகருக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார். வெளிநாட்டுக்குச் சென்ற அன்று தொலைபேசியில் குடும்ப உறவினர்களுடன் தொடர்பு கொண்டு, தான் சவுதி வந்து சேர்ந்து விட்டதாகவும் பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் போது கதைப்பதாகவும் கூறி, தொலைபேசி இணைப்பைத் துண்டி…

  25. எச்சரிக்கை ! நாட்டில் ஒருவித தோல் நோய் பரவுகிறது பூச்சிகளால் பரவும் ஒருவிதமான தோல்நோய் நாடளாவிய ரீதியில் பரவிவருவதாக பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் எஸ்.ஏ.எம்.குலரத்ன தெரிவித்தார். " லீஸ் - மெனய்சிஸ்" எனப்படும் குறித்த நோய் குணப்படுத்த சில நாட்களாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இந்த தோல் நோய் இந்தியாவில் பொதுவாக காணக்கூடியதாக உள்ளதாகவும், அண்மைய காலங்களில் இதன் தாக்கம் இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/955

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.