ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இலங்கையர் கடத்தல்! ஜப்பானியர்கள் உட்பட்ட இலங்கையர்கள் கைது [ வியாழக்கிழமை, 03 டிசெம்பர் 2015, 03:02.25 AM GMT ] இலங்கையர் ஒருவரை கடத்திய குற்றத்துக்காக மூன்று இலங்கையர்களும் நான்கு ஜப்பானியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜப்பான் யோக்காகாமவில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 28வயதான சாலிஹு முகமாது என்பவரே கடத்தப்பட்டவராவார் கடத்தப்பட்டவரின் சகோதரர் தமக்கு செலுத்த வேண்டிய 3.18 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய கடனை, இரண்டு வாரத்துக்குள் செலுத்த வேண்டும் என்று கோரியே ஜப்பானியர் ஒருவரால் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது. இந்த கடத்தலின்போது அவர் இலங்கையர் சிலரையும் உதவிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்தநிலையில் குறித்த கடத்தல் குற…
-
- 0 replies
- 674 views
-
-
சம்பந்தனின் மௌனத்திற்கு காரணம் என்ன? புலம்பெயர் புலி அமைப்புகளின் தேவைகள் சரியாக நிறைவேற்றப்பட்டு வருவதனால் அரசாங்கத்தின் எந்தவொரு செயற்பாட்டையும் எதிர்க்காது பாராளுமன்றத்தில் வாய்மூடி மௌனமாக இருக்குமாறும் புலம்பெயர் புலி அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. புலம்பெயர் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே சம்பந்தன் செயற்படுகின்றார் என்று மஹிந்த ஆதரவு அணியினர் குற்றம் சுமத்தினர். கொழும்பி…
-
- 4 replies
- 1.5k views
-
-
குளோபல்தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு உறுப்பினர்கள் ஏகமனதாக இந்த தீர்மானத்தை எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 பேர் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றனர். இதேவேளை, ஜே.வி.பி.யின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக வாக்களிக்கத் தீர்மானித்திருந்தனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126508/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 585 views
-
-
யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களாகியும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. அதிவேக நெடுஞ்சாலைகள், யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் என அளவில்லாமல் வாய் கிழியும் அளவுக்கு மேடைகளில் பேசிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் கண்களுக்கு வவுனியா, நெல்வேலிக்குளம் மக்களின் அவலம் எட்டவில்லை. இந்தப் பெரும் தலைவர்களின் அசமந்தப் போக்கினால் இரு சிறார்களின் உயிர்களை தாரை வார்த்துள்ளனர் இக்கிராம மக்கள். தற்காலிக வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து சிறுவர் ஒருவர் மரணம். கட்டுக்கட்டப்படாத கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் மரணம் என அடுத்தடுத்து இரு உயிர்கள் பலியாகியுள்ளன. இரண்டு உயிர்கள் பறிபோயுள்ள நிலையிலும் இவர்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் தேடிப்பார்க்கவோ …
-
- 0 replies
- 791 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் விதமாக வடமாகாண விவசாய அமைச்சால் ரூபா 5 மில்லியன் பெறுமதியான நவீன நெல்அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான குறைதீர் நடமாடும் சேவை முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01.12.2015) நடைபெற்றது. இதன்போது, நெல்அறுவடை இயந்திரத்தை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஒட்டுசுட்டான் ஒருங்கிணைந்த பண்ணையாளர் சங்கத்திடம் கையளித்துள்ளார். மனிதவலுவைப் பயன்படுத்தி நெல் அறுவடை செய்வதற்கு முல்லை மாவட்டத்தில் வேலையாட்களுக்குப் பற்றாக்குறைவு உள்ளது. அத்தோடு அதிக காலம் எடுப்பதாகவும் அதிக செலவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்து வந்துள்ளனர்…
-
- 0 replies
- 797 views
-
-
"யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாளாந்தம் பெரும் துயரில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய பல பணிகள் உள்ளன" யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாளாந்தம் பெரும் துயரில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய பல பணிகள் உள்ளன. இதை விடுத்து, உட்கட்சி மோதல்கள், கருத்து முரண்பாடுகளினால் எமது செயற்பாடுகள் வேறு வழிகளில் திசை திருப்பப்படுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சமூகத்தில் முக்கியஸ்தராக உள்ளார். அவர் நம்பிக்கைக்குரியவர். இதனால் கட்சியை ஏற்பதற்கு அவர் தயாரானால் இந்த நிமிடமே அதனை ஒப்படைப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். நல்லதொரு மனிதரை முதலமைச்சராக்கி…
-
- 0 replies
- 984 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இப்போது இரு தரப்புக் கொள்கைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்று விடுதலைப்புலிகளின் கொள்கையை அப்படியே பின்பற்றுகின்ற தரப்பு. மற்றைய தரப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் நிலைமைகளுக்கு ஏற்பவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகின்றவர்கள். இந்த இரண்டு தரப்பில் யார் சரியான கொள்கை உடையவர்கள் என்று ஆராய்வது நன்மை தரக்கூடியதன்று. மாறாக தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை வாழவேண் டும். அந்த நிம்மதி என்பது எக்காலத்திலும் குழப்ப முறாமல் நிரந்தரமானதாக இருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொள்வதே இங்கு பொருத்து டையது. அப்படியானால் இத்தகையதோர் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியவர்கள் அரச தரப்பாகவே இருக்கமுடியும். எனினும் இலங்கையின் ஆட்சிப்பீடங்களைப் பொறுத்தவரை கா…
-
- 2 replies
- 1.4k views
-
-
முதலமைச்சர் சம்மதித்தால் கட்சியை ஒப்படைக்கத் தயார் : ஆனந்தசங்கரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் படித்த பண்புள்ள நம்பிக்கையானவர். அவர் ஏற்பாரேயானால் எமது கட்சியை இந்த நிமிடமே அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக உள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் :- ‘என்னுடன் செயற்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். புனிதமான இந்த கட்சியை எதிர்காலத்தில் வீதியில் விட்டுச் செல்ல முடியாது. மாசுபடாத இயக்கமாக எமது கட்சி திகழ்கின்றது. இந்த நிலையில் அனைவரும் எமது கட்சியில் இணைந்து கொள்ளவேண்டும். வடமாகாண முதலமைச்சர் சி…
-
- 1 reply
- 1.3k views
-
-
குப்பைகளால் நிறைந்து வழியும் யாழ்ப்பாணம் யாழ். ஜிம்மா பள்ளிவாசல் லேனில் மட்டுமல்ல பல இடங்களில் வீசி எறியப்படும் குப்பைகளால் பாரிய தொற்று நோய் அபாயமும், சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவற்றுக்கான தீர்வுகள் எட்டப்படாமலே இருக்கின்றன. வீடுகளில் சேரும் கழிவுப் பொருட்களை மாநகர சபை உரிய முறையில் அகற்றாத காரணத்தால் சிலர் தமது வீட்டு கழிவுகளை பைகளில் கட்டி வீதிகளில் வீசி எறிகின்றனர். தமது வீடு துப்பரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம் வீட்டு கழிவுகளை மற்றவர்களின் வீடுகளுக்கு முன்பாக வீசி எறிகின்றனர். இதற்கு 'மாநகர சபை ஒழுங்காக குப்பை எடுக்க வாறதில்லை' என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்…
-
- 18 replies
- 3.6k views
-
-
ராஜபக்ஸ குடும்பம் தொடர்பிலான 25 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பம் தொடர்பிலான 25 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கி வைத்துள்ளமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்கு பல்வேறு வழிகளில் தடைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்ட பணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வது சுலபமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடாத்த அந்தந்த நாடுகளுடன் அரசாங்கம் ப…
-
- 0 replies
- 863 views
-
-
பிரித்தானியாவிடமிருந்து கற்றுக்கொண்டவற்றில் பெரும்பாலானவற்றை எமது ஆட்சியாளர்கள் மறந்துபோய்விட்டாலும், “பிரித்தாளும்” உபாயத்தை மட்டும் மறக்காமல் சிறப்பாகக் கையாள்கின்றார்கள். அதிலும் ரணிலுக்கு இது கைவந்த கலைதான். கருணாவைப் பிரித்த பழைய கதையை நாம் இப்ப சொல்ல வரவில்லை. இப்போது நடப்பதைத்தான் சொல்கின்றோம். பிரதான தமிழ் அணியிலிருந்து ‘விக்கி’யை தனியாகக் கொண்டுவந்தாச்சு. இப்ப பலமாக இருப்பது தமிழ் “டயஸ்பொறா”தான். அதில் ஒரு பகுதியினருக்கு தடையை நீக்கி, “செங்கம்பளத்தை”யும் விரித்தால் “டயஸ்பொறா”வின் பலம் குறைக்கப்பட்டுவிடும். ஒரு தரப்பினர் நாட்டுக்கும் வந்து போக புலத்திலும் விரிசல்கள் அதிகமாகிவிடும் என்பதுதான் ரணிலின் கணிப்பு என்கிறார் விஷயமறிந்த ஒருவர். தடை தளர்த்தப்ப…
-
- 1 reply
- 1.5k views
-
-
குளோபல் தமிழ் விசேட செய்தியாளா் சாவகச்சேரி டச்சு வீதியில் உள்ள வீடொன்றிக்கு செவ்வாய்க்கிழமை இரவு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் சென்று வீட்டின் உரிமையாளரிடம் சாராய போத்தல்கள் கேட்டுள்ளனர். உரிமையாளர் சாராய போத்தல் கொடுக்காததால் வீட்டின் கேற்றினை அடித்து உடைத்ததுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான சுப்பிரமணியம் நிதிகேசன் என்பவர் தெரிவிக்கையில், சாவகச்சேரியில் ரெஸ்ரோறன் ஒன்றினை நடத்தி வந்தேன். கடந்த 2014 ம் ஆண்டு 7ம் மாதம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பூச…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையின் இனங்கள் மற்றும் மத, மொழிகள் மத்தியில் சகவாழ்வு என்பது அமெரிக்க அரசின் இலங்கை தொடர்பான கொள்கையில் மிக முக்கியமான ஒரு கருப்பொருள் ஆகும். எனவே தமிழ், சிங்கள மொழிகள் இரண்டு ஆட்சி மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் நடைமுறை ஆக்கப்படும் அதிகாரத்தையும், அதேபோல் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் மத்தியிலான சகவாழ்வை உறுதிப்படுத்தும் அதிகாரத்தையும், கொண்டுள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சை, ஒரு முக்கியமான ஓர் அமைச்சாக நாம் கருதுகிறோம். இந்த பின்னணியில் உங்கள் அமைச்சின் செயற்பாடுகளுக்கு அமெரிக்காவின் நல்லெண்ண ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதுல் கெசாப், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ கணேசனுக்கும், அ…
-
- 1 reply
- 661 views
-
-
எமது வடபகுதியின் மூலதனமாக விளங்கக் கூடிய கல்வியைக் குழப்புவதற்கு திட்டமிட்ட பல சதிகள் நடைபெற்று வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து;ளார். மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்பப் பீடக் கட்டடத் தொகுதி திறப்பு விழா நேற்றைய தினம் நடைபெற்றது அதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததர். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் பாடசாலை மாணவர்களிடையே தற்போது துர்ப்பழக்கங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தி அம் மாணவர்களைக் கல்வியறிவில் மிகப் பின்தங்கியவர்களாக மாற்றுவதற்கு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். கல்வி நடவடிக்கைகளை குழப்பி அதன் மூலம் எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகம…
-
- 0 replies
- 507 views
-
-
சென்னையில் தொடரும் கடும் மழை காணரமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வீதி, ரயில் போக்குவரத்து மற்றும் விமானம் போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை பெய்துள்ளதால்,விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கான இலங்கையின் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலுமே சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. கடும் மழை காரணமாக சென…
-
- 0 replies
- 625 views
-
-
உணர்ச்சிவசப்பட்ட அஞ்சலிக்குப் பதிலாக அறிவு பூர்வமான அஞ்சலி கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன், அரசியல் கைதிகளின் பிரச்சினைக்காக உயிர் தியாகம் தெய்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை பலர் எழுப்புகிறார்கள். அவரது கோரிக்கையில் எவ்வித பிழையும் இல்லை. அது, நூறு சதவீதம் சரி தான். அவரது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதிலோ, அவற்றைப் பாராட்டுவதிலோ எவருக்கும் தடை இருக்க முடியாது. ஆனால், அவர் இந்த விடயத்தில், அதிலும் இந்த சந்தர்ப்பத்தில் உயிர் தியாகம் தெய்திருக்க வேண்டுமா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் அரசியல் கைதிகளையும் போரின் இறுதிக் கட்டத்தில் இடம் பெயர்ந்த தமிழர்கள், புலிகளின் வங்கிகளில் வைப்பீடு செய்திருந…
-
- 0 replies
- 928 views
-
-
செந்தூரனின் மரணமும் சில செய்திகளும்! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டான். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களில் தமது உயிர்களை நீத்த மாவீரர்களுக்கான நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே, செந்தூரனின் மரணம் நிகழ்ந்திருக்கின்றது. செந்தூரனின் மரணத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தமிழ் மக்களும், அவர்கள் சார்புத் தளங்களும் குழம்பி நின்றன. வழமையாக எல்லா விடயங்களுக்கும் உணர்வூட்டி அதில் குளிர்காயும் தரப்புக்களைத் தவிர, தமிழ் மக்களில் பெரும்பான்மையினரால் இந்த மரணம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆனால், இந்த மரணம் முன…
-
- 0 replies
- 688 views
-
-
இலங்கைப் பொலிசாருக்கு கலகம் அடக்கப் பயிற்சி கொடுக்கிறது ஸ்கொட்லன்ட்யார்ட்! [Wednesday 2015-12-02 07:00] போராட்டங்கள், கலகங்கள் போன்றனவற்றை தடுப்பது குறித்து ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸ் அதிகாரிகள், இலங்கைப் பொலிஸாருக்கு பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் கலகங்களின் போது மனித உரிமை மீறல்கள் இன்றி எவ்வாறு கலகங்களில் ஈடுபடுவோரை கலைப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கும் நோக்கில் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸ் ஆலோசகர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. போராட்டங்கள், கலகங்கள் போன்றனவற்றை தடுப்பது குறித்து ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸ் அதிகாரிகள், இலங்கைப் பொலிஸாருக்கு பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் க…
-
- 2 replies
- 530 views
-
-
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டுமென ஆஸி செனட்டர் கோரிக்கை: 02 டிசம்பர் 2015 வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்த இராணுவத்தினரை அகற்ற வேண்டுமென அவுஸ்திரேலிய செனட்டர் கோரிக்கை விடுத்துள்ளார். மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென அவர் கோரியுள்ளார். கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மாவீர தின கொண்டாட்டங்களில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் பாடசாலை மாணவர் ஒருவர் தற்கெலை செய்துகொண்டமை குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திரம் மற்றும் நீதிக்காக எந்தவொரு தமிழரும் இனியும் உயிர்த்தியாகம்செய்யக் கூடாது என அவர் வலியுறுத்த…
-
- 3 replies
- 552 views
-
-
தமிழ் எழுத்து பிழையுடனான துண்டு பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பகிரங்க மன்னிப்பு கோரினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது வெளியிடப்பட்ட துண்டு பிரசுரமொன்றில் எழுத்து பிழை காணப்பட்ட நிலையில், அதனை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார். இலங்கையிலுள்ள பிரதான அரச நிறுவனங்களில் தமிழ் உத்தியோகத்தர்களின் பற்றாகுறையே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இது கடந்த 50 வருடங்களாக காணப்பட்ட பாரிய பிரச்சினை எனவும், அதற்கான தீர…
-
- 4 replies
- 1.3k views
-
-
இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தண்டனை வழங்க கோரிக்கை விடுக்கப்படுமாயின், அதேபோல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கத்திற்கான இறுதித் தீர்வு என்பது, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் தீர்வாகும். இதன்மூலம் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியும். எனது அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட அதிகார பரவலாக்க யோசனையில் இருந்து தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உதலாகம அறிக்க…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஈழத் தமிழரை புகலிடமற்றவராக்க முயற்சி- வடக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு- குளோபல் தமிழ் செய்தியாளர்:- “நிலமும் நாங்களும்” வட இலங்கையின் போரின் பின்னரான காணிப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளல் ஈழத் தமிரை புகலிடற்றவராக்கி அவர்களது தாயகத்தை அபகரிக்க முயற்சிகள் மெற்கொள்ளப்பட்டு வருவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தள்ளார். மாற்றம் பவுன்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் போரின் பின்னரான காணிப் பிணக்குகள் என்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் உரை வருமாறு- மாற்றம் நிதி ஏற்பாட்டு நிறுவனம் “நிலமும் நாங்களும்” வட இலங…
-
- 1 reply
- 905 views
-
-
யாழ். பல்கலை மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை! புலோலியில் சம்பவம்! பகிடிவதை காரணம் என சந்தேகம் [ புதன்கிழமை, 02 டிசெம்பர் 2015, 04:03.28 AM GMT ] யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் தனது வீட்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பருத்தித்துறை, புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. யாழ்.பல்கலைக்கழகத்தின் பெளதிக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்ற 21 வயதுடைய தவராசா குபேரன் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில், தற்கொலைக்கான காரணம் தொடர்பில் உறுதியாக தெரியவரவில்லை என பொல…
-
- 0 replies
- 691 views
-
-
வடக்கிற்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தக் கூடிய 10திட்டங்கள்- அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது: 02 டிசம்பர் 2015 இலங்கையின் மீள் குடியேற்ற அமைச்சு வடமாகாண ஆளுநர் முதலமைச்சர் மற்றும் வடமாகணசபையின் திட்டமிடல் அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனைகளுடன் வடக்கிற்;கு பாரிய நன்மைகளை ஏற்படுத்த கூடிய 10 திட்டங்களை இணங்கண்டுள்ளதுடன் அவற்றை 2000மில்லியன் செலவில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. வடபகுதி மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தக்கூடிய இந்த திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான அனுமதியை பெறுவதற்காக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார். அமைச்சின் செயலாளர் வி சிவசோதி இதனை தெரிவித்துள்ளர். ஊர்காவற்துறை காரைநகரி…
-
- 0 replies
- 338 views
-
-
மகிந்த கோத்தாவிற்கு 2 யானைக்குட்டிகளை வழங்கியது தொடர்பாக முழுமையான விசாரணை ஆரம்பமாகியுள்ளது: 02 டிசம்பர் 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு இரு யானைக்குட்டிகளை வழங்கியது தொடர்பாக முழுமையான விசாரணை ஆரம்பமாகியுள்ளதாக சட்ட மா அதிபர் கொழும்பு பிரதானநீதிமன்ற நீதவான் ஜிகான் பலப்பிட்டியவிற்கு தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஸ்டசட்டத்தரணி தீலிபா பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் சட்டங்களின் படி நிறைவேற்று அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதிக்கு தனது விருப்பங்களிற்கு ஏற்ப யானைகளை வழங்குதவதற்கான அதிகாரங்கள் இல்லை. நிறைவேற்று அதிகாரங்களைகொண்ட ஜனாதிபதி அதனை செய்திருந்தால் அது சட…
-
- 0 replies
- 192 views
-