Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனித உரிமை ஆணையாளர், பிரிட்டன் பிதமரின் விஜயம் இன்னும் உறுதியில்லை? [ Tuesday,1 December 2015, 03:42:57 ] ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைனின் விஜயம் தொடர்பாக இதுவரை தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும், அவரது உயர்மட்டக் குழுவினரும் அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கருத்து வெளிட்டுள்ள கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலக அதிகாரிகள், இதுபற்றிய தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என்று கூறியுள்ளனர். இதேவேளை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அடுத்த ஆண்…

  2. தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை [ செவ்வாய்க்கிழமை, 01 டிசெம்பர் 2015, 04:02.28 AM GMT ] இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளில் சில படகுகள் ஏலவிற்பனை செய்யப்படவுள்ளன. இலங்கையின் கடற்றொழில் திணைக்களத்தினர் இதனை அறிவித்துள்ளனர். 2014ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் தமிழகத்தின் 61 படகுகள் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் இயற்கை காரணங்களினால் சேதமடைந்த படகுகளே ஏலவிற்பனை செய்யப்படவுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை தடுப்பதற்காகவே இந்திய படகுகள் தடுத்து வைக்கப்படுகின்றன. எனினும் அத்துமீறல்களில் குறைவு ஏற்படவில்லை என்று…

  3. கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு [ Tuesday,1 December 2015, 03:19:49 ] திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் தொடர்பான செயற்குழுவின் பிரதிநிதிகள் அண்மையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அவர்களின் விஜயத்தின் ஒருகட்டமாக திருகோணமலை கடற்படை முகாமிற்கும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது முகாமுக்குள் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் இரகசியத் தடுப்பு முகாம்கள் மறறும் சித்திரவதைக் …

  4. புலிகளின் சர்வதேச திறைசேரியில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி? [ செவ்வாய்க்கிழமை, 01 டிசெம்பர் 2015, 03:11.54 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய திறைசேரியில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கனேடிய பாதுகாப்பு முகவர் நிறுவனமொன்று அண்மையில் வெளியிட்ட இரகசிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கனேடிய நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கையில் புலிகளின் இந்த நிதி பற்றி முதல் தடவையாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனேடிய கோயில் ஒன்றில் அர்ச்சகராக செயற்பட்ட நபர் ஒருவர் தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு இந்த இரகசிய…

  5. எமது சமூகத்தைப் புகலிடமற்றவர்கள் ஆக்கவே பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன: சீ.வி.விக்னேஸ்வரன் [ திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015, 03:38.25 PM GMT ] காணிகளை இராணுவம் கையேற்று வைத்திருப்பதை நான் காலத்தின் கோலமாகக் கருதவில்லை. காலாதிகாலமாக கரவாகக் கடையப்பட்ட கருத்துக்களின் கடை நிலையாகவே அவர்களின் நடவடிக்கைகளைக் காண்கின்றேன். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க முன்னரே அரசகுடியேற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன. அதன் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்தோமானால் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களில் இன அமைப்பில் மாற்றங்களை இழைக்க வேண்டும் என்ற இழிவான கரவெண்ணமே அக்குடியேற்றங்களின் காரணம் என்பது தெரியவரும். மேற்கண்டவாறு வடமாகாண முதல…

  6. வர வேண்டாம்: தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- நேற்று (29/11/2015) யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த புத்தகங்களின் வெளியீட்டு விழா ஒன்றிற் கலந்து கொள்வதற்காக இலங்கை வருவதற்குப் பயண அனுமதிக்கு விண்ணப்பித்திருந்த புகழ்பெற்ற ஈழக்கவிஞரான திரு வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களுக்கு அவ்வனுமதி வழங்கப்படவில்லை என JDSLanka இணையத்தளம் தெரிவித்துள்ளது. திரு வ. ஐ. ச. ஜெயபாலன் அவர்களின் மூன்று குறுநாவல்களின் சிங்கள மொழிபெயர்ப்பான 'செக்கு கொனா' என்ற நூலும் சாமிநாதன் விமல் அவர்கள் மொழிபெயர்த்த, உபுல் சாந்த சன்னஸ்கலவின் 'அம்மா' என்ற நாவலும் இன்று யாழ்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன. யாழ்ப்பாணப் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ்வைபவத்திற் சிங்களக் கலை இலக்கியவாதிகளும் புத்திசீவிகள…

  7. இனப்படுகொலை நடைபெறவில்லை: விளக்கமளிக்க ரணில் தீவிர ஏற்பாடு [ Sunday,29 November 2015, 02:01:19 ] புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் அல்லது அதுகுறித்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா அரசு என்ற கட்டமைப்புக்கு பாதிப்பில்லாத வகையில் புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார் என்பதையே அவருடைய நகர்வுகள் எடுத்துக்காட்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் கொழும்பு…

  8. பொலன்னறுவை அருகே விழுந்த விண்கல்லில் பல அரிய உலோகங்கள் காணப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் பொலன்னறுவைக்கு படையெடுத்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு பொலன்னறுவை திம்புலாகல பிரதேசத்தில் விண்கற்கள் விழுந்திருந்தது. இதனை சேகரித்திருந்த வானியல் ஆய்வாளர்கள் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையம் ஒன்றுக்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்காக அனுப்பி வைத்திருந்தனர். குறித்த ஆராய்ச்சியில் விண்ணிலிருந்து விழுந்த கற்களில் டைட்டானியம், தோரியம், யுரேனியம் போன்ற அரிய வகை உலோகங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அடையாளம் காணப்படாத நுண்ணுயிர்கள் மற்றும் இரண்டு வகையான பக்டீரியாக்களும் குறித்த விண்கற்களில் உயிர்வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடு…

  9. கைதிகள் விடுதலை விடயத்தில் மௌனம் காப்பது சிறந்ததல்ல தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இனியும் மௌனம் காப்பது அரசாங்கத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையில் பாரிய விரிசலை ஏற்படுத்தும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சமாதான சூழ்நிலையில் தமிழ் கைதிகளை சிறையில் தடுத்து வைத்திருப்பது அர்த்தமற்ற செயல் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார். புலம் பெயர் அமைப்புக்களின் தடை நீக்கம் நாட்டை பாதுகாக்கலாம் என தெரிவித்த அவர், அரசாங்கம் பாதுகாப்பு விடயத்தில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என எண்ணம் ஒரு நிலைப்பாடு தம்மிடம் இருந்ததாக தெரிவித்த அவர், நாட்ட…

  10. 2009 ஆண்டு வரை வரவு செலவுகள் இல்லாமல் கொண்டாடப்பட்ட மாவீரர் பிரித்தானியா மாவீரர் தினத்தின் கணக்குகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தச் செலவு அண்ணளவாக ஒரு லட்சம் பவுண்ஸ்கள். இலங்கைப் பேரினவாத அரசினால் தெருவில் விடப்பட்டு சமூகத்தால் வெறுத்து தனிமைப்படுத்தப்பட்ட போராளிகளின் சுய பொருளாதாரத் திட்டத்தை உருவாக்க இத் தொகை போதுமானது, கடந்த ஆறு வருடங்களை இத் தொகைக்கு அண்ணளவாகக் கணக்குப் போட்டால் அரை மில்லியன் பவுண்ஸ்களுக்கும் அதிகமானது. இத் தொகை மாதிரிக் கிராமம் ஒன்றை அமைப்பதற்குப் போதுமானது. இத் தொகையில் பெரும் பகுதி அவலத்தில் வாழும் மக்களுக்குச் சென்றடையவில்லை. அது நமது போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆவணப்படுத்தலுக்குப் பயன்படவில்லை. போராட்டத்தின் நி…

    • 6 replies
    • 1.7k views
  11. போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு! [Monday 2015-11-30 09:00] போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள உள்நாட்டு பொறிமுறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கமாட்டாது என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள உள்நாட்டு பொறிமுறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கமாட்டாது என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது கடந்த வார இறுத…

    • 3 replies
    • 681 views
  12. மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட சிவஞானம் வீதியில் வசித்துவரும் கந்தையா மரகதம் என்பருக்கு சொந்தமான வீட்டுத் தோட்டத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த ஒரு மரவள்ளி செடியில் இருந்து 35 கிலோ எடை கொண்ட கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட வீட்டு உரிமையாளர், தங்களது வீட்டுத் தோட்டத்தில் பேராதனை வகையினைச் சேர்ந்த 8 மாத காலத்திற்குட்பட்ட மரவெள்ளி இனம் செய்கை பண்ணப்பட்டதாகவும் அதன் விளைவு மிகச்சிறந்த விளைச்சலைத்த தந்துள்ளது- என்றார். மரவள்ளி நடுகை செய்யப்பட்டது முதல் இதுவரை எவ்வித இரசாயன பசளைகளுமின்றியே அவை வளர்ந்ததாகவும் உரிமையாளர்கள் மேலும் குறிப்பிட்டனர். …

  13. இந்திய இராணுவம் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க இணக்கம்: குளோபல் தமிழ் செய்தியாளர்:- 30 நவம்பர் 2015 இந்திய இராணுவம் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் டால்பீர் சிங் சுஹாக், இலங்கை இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வாவை சந்தித்த போது அதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பாதுகாப்பு உறவுகள் குறித்து இராணுவத் தளபதிகள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சிகளை வலுப்படுத்திக் கொள்ளவும் இ…

  14. "இலங்கை நிலைப்பிரச்சனை: இராணுவமும், ஜாதியும் காரணம்" இராணுவம் வெளியேறுவதே நிலப்பிரச்சனைக்கான தீர்வாக அமையும் என்கிறது ஆய்வு இலங்கை யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளான பிறகும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு வடபகுதியில் இலங்கை இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டிருப்பது முக்கிய காரணம் என்று மாற்றம் என்ற தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட மாற்றம் நிறுவனத்தின் இணை இயக்குனரான சிங்கம், இராணுவத்தினர் தொடர்ந்து வடக்கில் நிலைகொண்டிருப்பது, தம…

  15. 85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க அனுமதி 85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் அளித்துள்ளது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்தின் நிறைவில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் அளித்துள்ளது. அதில் பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. 85 பேரில் மூவருக்கு உடனடியாக புனர்வாழ்வு அளிக்கக் கூடியதாக இருந்தது. அந்த விடயத்தினை உடனடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், புனர்வாழ்வு மற்று…

  16. முல்லைத்தீவு நகரிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு புதிய இரு மாடிக்கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலின் நிர்வாக சபைத் தலைவர் அப்துல் சலாம் மஹ்ரூபின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர் கலந்துகொண்டதுடன், மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆப்பள்ளிவாயலின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 1896ஆம் ஆண்டு முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்ட மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலில் காணப்பட்ட இடப்பற்றாக்குறை தொடர்பில் தெளிவுப்படுத்தியதுடன், புதிய கட்டடம் அமைப்பதன் அவசியம் பற்றியும் த…

  17. அரசியல் கைதிகளின் விடுதலையில் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க த.தே.கூ தயக்கம் அரசாங்கத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தும் கைதிகளின் பொதுமன்னிப்பு விடயத்தில் கரிசனை கொள்ளாதது வேதனைக்குரிய விடயமாகும். நல்லாட்சிக்கு முக்கியமானர்கள் சிறுபான்மை இனத்தவர்கள் என்பதை வலியுறுத்தி அழுத்தங்களை பிரயோகிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயங்குவதன் காரணம் தமிழ் மக்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி. அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு, அரசியல் கைதிகள…

  18. அரசியல் கைதிகளுக்கு இனி விடுதலையில்லை : அரசாங்கம் உறுதிப்படத் தெரிவித்ததாக ராவணா பலய சுட்டிக்காட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மேலும் விடுதலை செய்யப்போவதில்லை என்று அரசாங்கம் உறுதிப்படத் தெரிவித்துள்ளதாக ராவணா பலய அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பெறும் நிலையில் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவினரும், படை அதிகாரிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் ராவணா பலய அமைப்பு முன்வைத்துள்ளது. ஜனாதிபதி செயலாளரை …

  19.  வீட்டுப் பெண்கள் மீது குத்துச்சண்டை ஒத்திகை கி.பகவான் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியை மேற்கொண்ட பின்னர் வீட்டுக்குச் சென்றவர்கள், வீட்டிலிருந்த பெண்கள் மீது குத்துச்சண்டை ஒத்திகை பார்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற இந்த சம்பவத்தால், இரண்டு பெண்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடற்பயிற்சி கூடத்தில் செய்து பார்த்த உடற்பயிற்சியை, மதுபோதையில் வீட்டுக்குச் சென்று அங்குள்ள பெண்கள் மீது அதனைச்செய்து பார்த்தமையாலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது. நாவற்குழி மற்றும் பெருங்குளம் பகுதியில் உடற்பயிற்சி…

  20. மாவீரர் தினத்துக்கு விளக்கேற்றியதாக விசாரணை? மாவீரர் தினமான கடந்த 27ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாண ஊழியர்கள் இருவர், விளக்கேற்றியமை தொடர்பில் அந்த இரு ஊழியர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது. மேற்படி இரண்டு ஊழியர்களும், யாழ்ப்பாண வளாகத்துக்குள் விளக்கேற்றியதாக கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமது சகோதரர்கள் உயிர்நீர்த்ததாகவும் அதனால் தான் விளக்கேற்றியதாகவும் அதற்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த இரு ஊழியர்களும் கூறியுள்ளனர். ஆனால், விசாரணை மேற்கொண்டது தொடர்பில் பொலிஸ் தரப்பு எவ்வித கருத்துக்களையும் தெரிவி…

  21. யாழ்ப்பாணத்தில் மிளகாய் ரூ.1,000, கீரை ரூ.60 - குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணத்துக்கு சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. 1 கிலோகிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகளில் கறிமிளகாய் 1 கிலோகிராம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், 1 பிடி கீரை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போதும், கீரையை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. கத்தரிக்காய் 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், பயிற்றங்காய் 1 கிலோகிராம் 240 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோகிராம் 160 ரூபாய்க்கும், வெண்டி 1 கிலோகிராம் 160 ரூபாய்க்கும், கரட் 1 கிலோகிராம் 350 ரூபாய்க்கு…

  22. திருமலை வதை முகாம் இரகசியங்கள்... "அது சிறை­யல்ல வதை முகாம். நிலத்­துக்கு அடி­யி­லேயே அது அமைந்­துள்­ளது. நான் உள்­ளிட்ட எனது குழு மிகுந்த சிர­மத்­துக்கு மத்­தி­யி­லேயே அங்கு சென்றோம். அதற்குள் கொடிய விஷப்­பாம்­புகள் இருந்­தன. ஆயி­ரக்­க­ணக்­கான வௌவால்கள் இருந்­தன. உள்ளே செல்ல முடி­ய­வில்லை. ஒரு வகை­யான வாயு வெளி­வந்து கொண்­டி­ருந்­தது. எல்­லோ­ருக்கும் இருப்­பது ஒரே ஒரு மல­ச­ல­கூடம். அது வர்த்­த­மா­னிப்­ப­டுத்­தப்­பட்ட சிறையும் அல்ல. மனிதன் ஒரு­வனை தடுத்து வைக்க எந்த வ…

  23. ஐ.நா உயர்குழு விரைவில் இலங்கைக்கு : மூன், ஹுசைன் பெப்ரவரியில் வருவர் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் உள்ளிட்டோரைக் கொண்ட ஐ.நாவின் உயர்மட்டக் குழுக்கள் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் ஆகியோர் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் கடந்த செப்டெம்பர் மாத ஜெனிவா கூட்டத் தொடருக…

  24. தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் மலையக மக்கள்! நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடரும் அவலம் [ திங்கட்கிழமை, 30 நவம்பர் 2015, 05:17.16 AM GMT ] மலையக மக்களின் காணி மற்றும் வீடமைப்பு பிரச்சினையில் அம்மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காலத்துக்குக் காலம் மலையக மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வீடமைப்புத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. ஆனால் வெறும் கடதாசி ஒன்றில் கையொப்பமிட்டுக் கையளிக்கப்பட்டது தவிர இதுவரை எந்தவொரு மலையக தமிழ்க்குடும்பத்துக்கும் காணி உறுதிகள் வழங்கப்படவில்லை. வழங்கப்படும் வீடுகளின் உரிமை …

  25. அரசியல் கைதிகளுக்கான விசேட மேல் நீதிமன்றம் இன்று முதல் செயற்படும்! [Monday 2015-11-30 08:00] தமிழ் அரசியல் கைதிகளை விசாரணை செய்வதற்கென அமைக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றம் இன்று முதல் செயற்படவுள்ளது. பயங்கவரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்கான மேல் நீதிமன்ற ஆணையாளராக ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விசாரணை செய்வதற்கென அமைக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றம் இன்று முதல் செயற்படவுள்ளது. பயங்கவரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.