ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
சற்றுமுன் தமிழீழ தாயகத்தில் தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் தமிழீழ மக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலகட்டங்களில் தமிழீழ தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழீழ மக்களாலும், தமிழீழ அரசாலும் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டுவந்துள்ளது. எமது தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய், எமது மக்களின் உரிமைகளுக்காய், எதிர்காலத் தலைமுறையின் வாழ்விற்காய், தமிழ் மொழியினதும் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்பிற்கும் இருப்பிற்குமாய் தங்கள் உன்னத உயிர்களை எதிரியுடன் போராடி ஈகம் செய்த மாவீரர்களின் வீரவரலாறு என்பது உலகத்தமிழர்களைப் பொறுத்தவரையில், ஓர் வீரவணக்க நிகழ்வு என்பதற்கு அப்பால் அவர்களது தொடர…
-
- 1 reply
- 656 views
-
-
இராணுத் தளபதியாக 57ம் படைப் பிரிவின் முன்னாள் கட்டளைத் தபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜகத் டயஸ் ஜெர்மனி மற்றும் வத்திக்கானுக்கான பிரதித் தூதுவராகவும் கடயைமாற்றியுள்ளார். தற்போதைய இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வாவி;ற்கு அடுத்த நிலையில் ஜகத் டயஸ் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணவத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் ஜகத் டயஸ் பதவி உயர்த்தப்பட்டு இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக ஜகத் டயஸ் தற்போது கடமையாற்றி வருகின்றார். 1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி இராணுவத்தில் இணைந்து கொண்டார…
-
- 0 replies
- 534 views
-
-
செந்தூரனின் முடிவை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது : நாடாளுமன்றில் சம்பந்தன் எடுத்துரைப்பு அரசாங்கத்தின் நம்பிக்கையீனப் போக்குகளின் மீதான வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வெறுப்புத் தன்மையையும் அவர்களது மனதளவிலான உளைச்சல்களையும் பிரதிபலித்து நிற்பதாகவே யாழ். மாணவன் செந்தூரனின் முடிவு சுட்டி நிற்கின்றது. இந்த செயற்பாட்டின் பிற்புலங்களை விளங்கிக்கொள்ள வேண்டும். இதனை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே செந்தூரனின் முடிவு தொட்டுக்காட்டியுள்ள விடயம் சம்பந்தமாக தாமதமில்லாத முடிவொன்றை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார். வடக்கு, கிழக்கு தம…
-
- 1 reply
- 611 views
-
-
பொதுநலவாய அமைப்பின் செல்வாக்கானது உறுப்பு நாடுகளின் அரசியல் மற்றும் சமூக நடத்தைக்கு வழிகாட்டியாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை கடந்த இரண்டு வருடங்களாக இவ்வமைப்பின் தலைமைப் பதவியை வகித்ததுடன். இக்காலப்பகுதியில் தாம் மேற்கொண்ட பணிகளில் திருப்த்தியடைவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். மோல்டாவில் நேற்று ஆரம்பமான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் ஆரம்ப நிகழில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- "பொதுநலவாய அமைப்பு 2 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சனத்தொகையைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அபிவிருத்தி …
-
- 0 replies
- 652 views
-
-
அதிகாரிகளின் உணவில் இரும்புக்கம்பி செல்வநாயகம் கபிலன் பாவனை அதிகாரசபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் இரும்புக்கம்பிகள் இருந்தமை வெள்ளிக்கிழமை (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பாவணை அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் இடம்பெற்றமை பாவனை அதிகார சபை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. யாழ். நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்ட பாவனை அதிகார சபை அதிகாரிகள் மதியம் உணவு உண்பதற்கு யாழ். நகரங்களில் உள்ள குறித்த கடைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட புரியாணியில் சிறிய இரும்பு கம்பிகள் காணப்பட்டுள்ளத…
-
- 1 reply
- 706 views
-
-
முப்படையினரையும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற எந்தவொரு தருணத்திலும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இலங்கை பொலிஸுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்கு தயாராக இருக்குமாறு முப்படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற சமாதானமான சூழ்நிலை சீர்குலைக்கப்படும் எந்தவொரு தருணத்திலும் நாட்டில் அமுலில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக பேணுவதற்காக ஸ்ரீ லங்கா பொலிஸின் கோரிக்கைக்கு அமைவாக தேவையான ஒத்துழைப்பை நல்குவதற்கு முப்படையினரும் தங்களுடைய முகாம்களின் சுற்றுச்சூழலில் தயாராக வைக…
-
- 1 reply
- 698 views
-
-
யாழ்ப்பாணத்தில் மாக்சிசம் பேசிய பேராசிரியர் ஒருவர் தன் வீட்டுக்கு வருகிறவர்களை முற்றத்தில் நல்ல நிலா வெளிச்சம்; அங்கிருந்து கதைக்கலாம் என்று கூறி முற்றத்திலேயே இருத்தி விடுவாராம். பேராசிரியரைச் சந்திக்கச் சென்றவர்கள் அடடா! பேராசிரியரின் மாக்சிசக் கொள்கை எத்துணை உயர்வுடையது என்று மகிழ்ந்து கொள்வர். என்ன செய்வது? உள்ளொன்றும் புறமொன்றுமாகப் பேசு கின்றவர்களோடு எதுவுமே செய்ய முடியாது. அத னால்தான் இராமலிங்க வள்ளலார் “... உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்...” என்று பாடினார். நேற்றுமுன்தினம் (நவம்பர் 26) செந்தூரன் என்ற மாணவன், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு ஓ…
-
- 0 replies
- 551 views
-
-
யுத்தகாலத்தில் அரசாங்கத்தால், அரச அதிகாரிகள் மூலம் திரட்டப்பட்டு வெளியிடப்பட்ட தரவுகள் பிழையாகவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்;டிக்காட்டினார். மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் முதலமைச்சரிடம் கருத்துக்கேட்டபோதே முதலமைச்சர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் தொடர்ந்து கூறுகையில், 'யுத்தத்தால் வடக்கில் 7,235 பெண்களே விதவையாகியுள்ளனர் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களின் தொகையானது அதனைவிட அதிகமாகும். 47 ஆயிரத்து 391 பெண்கள் கணவன் இயற்கை மரணம் ஏய்தியதால் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர் எனக்கூறப்படுகின்றது, கணவன் இயற்கை …
-
- 0 replies
- 601 views
-
-
யாழ்.மறைமாவட்ட ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார் ஜஸ்ரின் ஆண்டகை யாழ்.மறைமாவட்ட புதிய ஆயராக ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் சடங்கு இன்று 28ஆம் திகதி யாழ்.புனித மரியன்னை மரியன்னை பேராலயத்தில் காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. குறித்த திருநிலைப்படுத்தல் சடங்கிற்கு இலங்கையின் அனைத்து மாவட்டங்களினதும் ஆயர்கள்,கர்தினால்மார்கள், குருக்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரமுகர்கள்,அனைத்து மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பெருந்திரளான பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இதேவேளை இவர் யாழ்.மறை மாவட்டத்தின் 11 ஆவது ஆயர் என்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/388…
-
- 0 replies
- 1.1k views
-
-
ரயில் கடவையில் அவசரப்படவேண்டாம் -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பான ரயில் கடவைகள் ரயில் வருவதற்காக மூடப்படும் போது, ரயில் கடவையானது எப்போது திறக்கப்படும் என்ற அவசரத்தில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் வீதியை முழுமையாக ஆக்கிரமித்து நிற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இரட்டை வீதிகள் என்பது இல்லாமல், இருவழிக்கு ஒரே வீதியில் நடுவில் வெள்ளைக் கோடு அடிக்கப்பட்டு, போய் வருவதற்கு வீதி பிரிக்கப்பட்டு இருக்கும். ரயில் கடவையில் கடவை மூடப்படும் போது, கடவை திறக்…
-
- 0 replies
- 695 views
-
-
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற அரசியல் மொஹமட் பாதுஷா யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது இன்னும் இழுபறியாகவே நீண்டு கொண்டிருக்கின்றது. வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டுமென்ற இலட்சக்கணக்கான மக்களின் மூன்று தசாப்தகாலக் கனவு இன்னும் வெறுங் கனவானவே இருக்கின்றது. அங்கு சென்று குடியேறிய சிறிதளவான முஸ்லிம்களும் தம்முடைய தாய் மண்ணில் அகதிகள் போலவே, அடிப்படை வசதிகளற்று வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள், இவர்களை மீள்குடியேற்றுவதற்குக் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதைவிடுத்து பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கண்ணீரில் அரசியல் செய்து கொண்டிருப்பதை நன்றாகக் காணக்கூடியத…
-
- 0 replies
- 591 views
-
-
மாவீரர் நாள்- உணர்வு ரீதியாக அணுகப்படுமா? இன்று நவம்பர் 27ஆம் திகதி- மாவீரர் நாள். விடுதலைப் புலிகள் இயக்கம், முள்ளிவாய்க்கால் மண்ணில் தோற்கடிக்கப்படும் வரை, மாவீரர் நாள் சர்வதேச எதிர்பார்ப்புக்குரிய ஒரு நாளாகவும் இருந்து வந்தது. அன்று தான், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைப் பிரகடன உரை இடம்பெறுவது வழக்கம். அந்த உரையை, சர்வதேச இராஜதந்திரிகள் கூர்மையாக அவதானித்தும் வந்தனர். 2008ஆம் ஆண்டு வரை, இந்த நிலை நீடித்தது. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னர், ஆண்டுக்கு ஒருமுறை இடம்பெறும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உரை இடம்பெறுவதில்லை. ஆனாலும், மாவீரர்களை நினைவு கூரும் மரபு மட்டும் தமிழர்களை விட்…
-
- 0 replies
- 595 views
-
-
கைதிகளை விடுவித்தால் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவோம் : எச்சரிக்கும் ராவனா பலய தமிழ் அரசியல் கைதிகள் சிலரை விடுவித்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராவனா பலய அமைப்பு தமது கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி உரிய பதிலை அளிக்காத பட்சத்தில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடப் போவதாகவும் எச்சரித்துள்ளது. சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சிலர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ராவனா பலய அமைப்பு கடந்தவாரம் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று மகஜர் ஒன்றை கையளித்திருந்தது. அரசியல் கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் …
-
- 0 replies
- 553 views
-
-
திருகோணமலை நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது: கடற்படைத் தளபதி [ சனிக்கிழமை, 28 நவம்பர் 2015, 12:22.28 AM GMT ] திருகோணமலை நிலக்கீழ் முகாம் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது என கடற்படைத் தளபதி விளக்கம் அளித்துள்ளார். திருகோணமலை கடற்படை முகாமில் காணப்படும் நிலக்கீழ் முகாம் தொடர்பில் இலங்கை கடற்படையினர் தெளிவுபடுத்தியுள்ளனர். திருகோணமலை கடற்படை முகாமில் இரகசிய சிறைக் கூடமொன்று அமைக்கப்பட்டு இயங்கி வந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இலங்கை பிரிட்டன் காலணித்துவ ஆட்சியில் இருந்த போது இந்த நிலக்கீழ் முகாம் நிர்மானிக்கப்பட்டது. பிரிட்டன் ஆட்சியாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட நான…
-
- 0 replies
- 464 views
-
-
விசாரணையற்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்க ; மனித உரிமைகள் ஆணைக்குழு [ Saturday,28 November 2015, 03:45:54 ] எந்தவித வழக்குகளும், விசாரணைகளும் இன்றி நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு நேற்று வெள்ளிக்கிழமை கடிதமொன்றை அனுப்பியுள்ளது. சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உரிமை விடயத்தில் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டுவருவதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, கைதிகள் விடயத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்…
-
- 0 replies
- 517 views
-
-
இஸ்ரேல் தூதரகம் அமைக்கப்படுவதனை எதிர்க்கின்றோம்: கூட்டு எதிர்க்கட்சி [ சனிக்கிழமை, 28 நவம்பர் 2015, 02:15.42 AM GMT ] இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் நிறுவப்படுவதனை எதிர்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சயிட் சாகீல் ஹுசெய்னிடம் தெரிவித்துள்ளது. அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளனர். இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவதனை நம் எதிர்க்கின்றோம் என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து நாம் வருத்தமடைகின்றோம். எமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீனம் சுயாதீனமான நாடாக இயங்குவதனை விரும்பி செயற்பட்டோம். பலஸ்தீன மக்களி…
-
- 0 replies
- 622 views
-
-
6.6மில்லியன் பவுண்ட்ஸ் நிதியுதவியை வழங்குவதாக மைத்திரியிடம் டேவிட் கமரன் உறுதி! [Saturday 2015-11-28 09:00] போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பிரித்தானிய அரசு நிதி உதவி செய்யவுள்ளது. இலங்கைக்கு எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு 6.6மில்லியன் பவுண்ட்ஸ்களை பிரித்தானியா உதவியாக வழங்கவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார். மோல்டோவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பிரித்தானிய அரசு நிதி உதவி செய்யவுள்ளது.…
-
- 0 replies
- 700 views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்னமும் 9700 ஏக்கர் நிலம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்! [Saturday 2015-11-28 09:00] யாழ்.மாவட்டத்தில் தமிழ் மக்களின் சுமார் 9700 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் மீள்குடியேற்ற நிலமைகள், மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து மத்திய அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்யும் நோக்கில் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது சுட்டிக்காட்டப்பட்டது. யாழ்.மாவட்டத்தில் தமிழ் மக்களின் சுமார் 9700 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் மீள்குடியேற்ற நிலமைகள், மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராய்ந…
-
- 1 reply
- 957 views
-
-
நோபல் பரிசுக்கு மைத்திரியின் பெயர் சிபார்சு? [Saturday 2015-11-28 09:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சர்வதேச ரீதியில் ஆலோசனை இடம்பெற்று வருவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தகவல் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தகவலை வெளியிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சர்வதேச ரீதியில் ஆலோசனை இடம்பெற்று வருவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தகவல் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவா…
-
- 0 replies
- 623 views
-
-
தலைமைச் செயலகம். தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2015. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும... தலைமைச் செயலகம். தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2015. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காகவும் எமது இனத்தின் இருப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த உத்தமர்களை நெஞ்சுருகிப் பூசிக்கும் புனித நாள். பூமிப் பந்திலே தமிழர்களின் சுதந்திர தாகத்தைப் பறைசாற்றிய புனிதர்களைப் போற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். இன்று,தமிழீழத் தேசம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சிகொள்ளும் உன்னத நாள். மனிதவாழ்வின் இயல்பான சமூக வாழ்வைத் துறந்து, சுயநல பூதங்களை ஒழித்து…
-
- 3 replies
- 1.1k views
-
-
யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளுக்கும் மாவீரர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் புகழாரம் சூடினார். நாடாளுமன்றில் வரவு செலவு திட்டத்தில், இன்று ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் உயிர் நீத்த உறவுகளுக்கு தன்னுடைய அனுதாபத்திற்குரிய உரையை நிகழ்த்தினார். தன்னுடைய உரையில், உயிர் நீத்த மாவீரர்கள் தன்னுடைய இளமைக் காலத்தையும் இன்ப துன்பங்களையும் தமிழ் மக்களுக்காக தியாகம் செய்ததனால் தமிழ் மக்கள் அனைவரும் இந்த வீரர்களை சிரம் தாழ்த்தி நினைவு கூற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். http://www.tamilwin.com/show-RUmtzBRbSWmo5C.html
-
- 1 reply
- 671 views
-
-
புலனாய்வாளர்கள் மத்தியில் தாயக விடுதலைக்காய் உயிர் நீத்தவர்களுக்கு நல்லூரில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி [ வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015, 05:39.39 AM GMT ] தாய விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர் தினமான நவம்பர் 27ம் திகதி இன்று மாவீரர்களுக்கு புலனாய்வாளர்கள் சூழ்ந்திருக்க யாழ். நல்லூர் ஆலயம், பெரிய தேவாலயம் ஆகியவற்றில் ஈகை சுடர் ஏற்றபட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த அஞ்சலியை செலுத்தியுள்ளார். காலை 9 மணிக்கு நல்லூர் ஆலயத்தில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் தொடர்ந்து யாழ்.பெரிய தேவாலயத்திலும் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். இதன்போது கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவ…
-
- 6 replies
- 635 views
-
-
செந்தூரா உன் உடல் கருகிய தீச் சுவாலையில், இரும்பாய் போன இதயங்கள் இழகட்டும், ஈரம் கசியட்டும்… நடராஜா குருபரன்:- உன் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அப்பனே… உன் உயிரை தற்கொடையாக கொடுத்ததன் ஆழ அகலம் பற்றி ஒன்றும் அறியேன்… உன் மரணத்திற்கு பலரும் பல்வேறு கற்பிதங்களை மெருகேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்…. மாவீரர் வாரத்தில் நவம்பர் 27ஆம் நாளுக்கு அண்மித்த உன் மரணம், வீர மரணம் என்கிறார்கள்… தற்கொடை என்கிறார்கள்… வீர மறவன், தமிழர் மானம் காக்க புறப்பட்ட வீரத் தமிழன், மாவீரன் என்றெல்லாம் புகழாரங்கள் சூட்டுகின்றார்கள்… இணையங்கள் சமூக வலைத்தளங்கள் யாவற்றிலும், நீ வியாபித்து இருக்கிறாய்… உன் வயதில் எனக்கோர் மகன் இருக்கிறான்.…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உள்ளிட்டஉலகில் தமிழர் வாழும் இடங்களில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழர் உரிமைக்காக போராடி மடிந்தவர்களை நினைவுகூருவதற்காக, மாவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழர் தாயகப் பிரதேசத்தில் மாவீரர் நாள் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கமும் மாவீரர் தின அனுஷ்டானங்களுக்கு தடை விதித்துள்ளது. எனினும் தடைகளையும் மீறி சில தரப்பினரால் இந்த மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தினமும் மாவீரர் தின நிகழ்வுகளை அனுஸ்டிக்குமாறு வடக்கில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
லங்கா ஈநியூஸ் இணையத்தளம் இப்படி கேள்வியை எழுப்புகிறது - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் சீலா ஜெயா:- வடக்கில் ரயிலில் மோதுண்டு நேற்று உயிரிழந்த 18 வயது மாணவனை, ரயிலில் தள்ளியது வாசுதேவ நாணயக்காரவின் மைத்துனர், வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் கல்வி கற்ற ராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவன் நேற்று ரயிலில் மோதுண்டு உயிரிழந்தார். மரணம் தொடர்பில் விசாரணை நடத்திய காவல்துறையினர் தகவல் வெளியிடுவதற்கு முன்னதாகவே, வடக்கு அரசியல்வாதிகள் மாணவர் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக உயிரிழந்ததாகத் தெரிவித்திருந்தனர். வடக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கடித…
-
- 0 replies
- 878 views
-