ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
யாழில் தாடிவளர்த்ததால் பொலிசாரால் தாக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் எதிர்கட்சித் தலைவர் தவராசாவின் மகன் யாழில் இரு இளைஞர்கள் தாடியுடன் வீதியில் நடந்து சென்றமையால் அவர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் மகனின் நண்பர் ஆகிய இரு இளைஞர்களுமே அவ்வாறு கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்கானவர்கள் ஆவார்கள். இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில், நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் எனது மகன் உட்பட இரு இளைஞர்கள் மானிப்பாய் பகுதிக்கு தமது சொந்த அலுவல் காரணமாக சென்று இருந்தனர். நவாலி முருக மூர்த்தி ஆலயத்திற்கு அருகில் வைத்த…
-
- 5 replies
- 755 views
-
-
போர்க்குற்றம் குறித்த உள்நாட்டு விசாரணையின்போது, தமிழ் மக்களின் சந்தேகங்களை நீக்கவே வெளிநாட்டு நீதவான்களை உள்ளடக்கக் கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். ''ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய போர்க்குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் போது வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது. எனினும், உள்ளக விசாரணையில், சர்வதேச நீதவான்கள் பங்களிப்புச் செய்வதனை சிங்கள மக்களும் படையினரும் விரும்பவில்லை. இதன்மூலம் தமக்கு அநீதி இழைக்கப்படும் என அஞ்சுகின்றனர். போர்க்குற்றச்செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான நீதிமன்றில் சிங்களவர்கள் மட்டும் விசாரணை நடாத்துவதனை தமிழர்கள் விரும்பவில்லை. அவ்வாறு …
-
- 2 replies
- 731 views
-
-
மன்னாரில் முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் மரணம் [ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 01:49.43 PM GMT ] மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மூன்றாம் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று காலை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவருடைய வீட்டு முற்றத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியான வீரசிங்கம் தனபாலசிங்கம்(வயது-40) மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வந்துள்ளது. குறித்த குடும்பஸ்தர் கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று காலை கடற்தொழிலுக்குச் செல்லுவதற்காக வீட்டினுள் உறங்கிக்கொண்டி…
-
- 2 replies
- 804 views
-
-
சம்பந்தனின் தோளில் தட்டிய மஹிந்த தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன் போது முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ மாலை 4.55 மணியளவில் சபைக்கு வந்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது வரவு – செலவு திட்டத்தை 2.00 மணிக்கு ஆரம்பித்து உரையாற்றிக் கொண்டிருக்கையில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் கழிந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சபைக்கு சமுகமளித்தார். முன்னைய ஆட்சிய…
-
- 2 replies
- 818 views
-
-
கிளிநொச்சி கோரக்கன் கட்டு வை.எம்.சீ.ஏ குடியிருப்பு பகுதியில் நுழைந்த கொள்ளைக் கும்பல் ஒன்று பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டது. வை.எம்.சீ.ஏ குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர் ஒருவரின் நடமாட்டம் சில தினங்களாக இருந்துள்ளது. இந்த நிலையில் குடியிருப்பு மக்கள் குறித்த நபரை வழிமறித்து விசாரிக்க முற்பட்ட போது, அவர் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். குறித்த நபர் தப்பிச் சென்றதன் பின்னர், இன்றைய தினம் அதிகாலை 1.30 அளவில் குடியிருப்பு பகுதிக்குள் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வாள்கள், கம்பிகளுடன் நுழைந்துள்ளதாக அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். இவ்வாறு நுழைந்தவர்கள் மக்களின் வீடுகளுக்குள்ளும் நுழைய முற்பட்ட…
-
- 1 reply
- 669 views
-
-
நயினாதீவு பெயர் விவகாரத்தில் மூக்கை நுழைத்திருக்கும் இராவண பலய என்ற தீவிரவாத அமைப்பினர், முதலில் தங்கள் அமைப்பின் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- இராவண வேந்தன், இலங்கை தீவின் விபூதி தரித்த பண்டைய திராவிட சைவ மன்னன் என்பது வரலாறு சொல்லும் உண்மை. தங்கள் அமைப்பின் பெயரையே ஒரு தமிழ் மன்னனின் பெயரில் வைத்துக் கொண்டு இருக்கும் இந்த குழுவினர் எவ்விதம், இந்நாட்டின் அனைத்து தமிழ் ஊர்களின் பெயர்களையும் மாற்றப் போகின்றார்கள் என எனக்கு தெரியவில்லை. நாகபூஷணி அம்மன் ஆலயமும், நாகவிஹாரையும் அமைந்துள்ள தீவின் பெயர் என்ன என…
-
- 0 replies
- 613 views
-
-
2016ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை 74 ஆயிரம் கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின்படி 2016 ஆம் ஆண்டுக்கான வருமானம் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 700 கோடி ரூபா, செலவீனம் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 700 கோடி ரூபாவாகும். இதன்படி துண்டுவிழும் தொகை 74 ஆயிரம் கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை 2015ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பிடும்போது துண்டுவிழும் தொகை 6 ஆயிரத்து 500 கோடி ரூபாவால் அதிகரித்துள்ளது. எனினும் 2015ஆம் ஆண்டைக் காட்டிலும் வருமானத்துக்கான பற்றாக்குறை 2016 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. 2015இல் அது ஆ…
-
- 0 replies
- 487 views
-
-
முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று விசாரணை நடத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்ட ரக்னா லங்கா நிறுவனத்தில் நடைபெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக முன்னைய அரசாங்கத்தில் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக செயற்பட்ட கபில ஹெந்தவிதாரணவிடம் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணிநேரம் வரை இந்த விசாரணை நீடித்துள்ளது. ரக்னா லங்கா நிறுவனத்தின் பொறுப்பில் இருந்த ஆயுதங்கள் முறைகேடான முறையில் அவண்ட் கார்ட் நிறுவனத்துக்கு வாடகைக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்…
-
- 0 replies
- 489 views
-
-
அலங்கோலமான பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டு அலங்கரித்து விட்டதைப் போன்று வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் அமைந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கடுமையாக விமர்சித்துள்ளார்.இந்த வரவு செலவுத் திட்டம் வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எதுவித சலுகைகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் நெல் மற்றும் றப்பர் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவித நிவாரணங்களும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. சுருக்கமாக சொல்வதானால், இந்த வரவு செலவுத்திட்டம் அலங்கோலமான பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டு அலங்கரித்து விட்டதைப் போன்றது என்றும் பந்துல குணவர்த்த…
-
- 0 replies
- 252 views
-
-
பயங்கரவாதம் குறித்து பயங்காட்டும் இனவாதம் மொஹமட் பாதுஷா சிங்களத் தீவின் காவல் பிராணி போல தன்னைக் காட்டிக் கொள்ளும் இனவாதம், எப்போதும் உற்றுநோக்கிக் கொண்டே இருக்கின்றது. வானிலை அவதான நிலையத்தின் அறிக்கை போல, 'இதோ அடிப்படைவாதிகள் உருவாகிவிட்டார்கள், அதோ பயங்கரவாதிகள் நாட்டை அழிக்கப் போகின்றார்கள்' என்று அச்சமூட்டி, எச்சரிக்கை செய்யும் வேலைகளை அவர்களே பொறுப்பெடுத்து இருக்கின்றார்கள். ஒருவேளை, இடியுடன் கூடிய மழைபெய்யும் என்ற எதிர்வுகூறல்கள் எல்லாமே மெய்யானாலும், இனவாதிகளின் முன்னறிவிப்புக்கள் இயல்பாக…
-
- 0 replies
- 643 views
-
-
ஆட்டம் காண்கிறதா அரசாங்கம்? அமைச்சர்களுக்குள் அதிகரித்து வரும் உள்முரண்பாடுகளும், அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்தல் அதிகரித்துள்ளதும், தற்போதைய அரசாங்கத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதையடுத்து, நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றது. ஆனால், இப்போது நடப்பது நல்லாட்சியா என்று அரசாங்கத்துக்குள் இருக்கும் அமைச்சர்களே கேள்வியெழுப்பும் அளவுக்கு, உள்முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், ஐ.தே.கவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த கூட்டு அரசாங்கம், …
-
- 0 replies
- 647 views
-
-
வடக்கு மாகாணத்தை விட்டு எமது சகோதர மக்களாகிய முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் முடிவுற்றுள்ள நிலையில், அம் மக்களுக்கான இழப்புகள் தொடர்பில் பரிகாரங்களைக் காண்பதற் கான நடவடிக்கைகளுக்கு முயலாமல், சுயலாப நோக்கிலும், இனங்களுக்கிடையில் தற்போது ஏற்பட்டு வரும் சுமுகமான உறவுகளைக் குழப்பும் நோக்கிலும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவித்துள்ளார். அன்றைய கால கட்டத்தில் இம் மக்களது துயர்துடைக்க முன் வராதவர்கள், இன்று மீண்டும் இரு சமூகங்களுக் கிடையிலும் விரிசல் நிலையை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை முன்வைத்து வருவது ஆரோக்கியமான விடயமல்ல. …
-
- 7 replies
- 880 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமக்கிடையில் ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடுகளை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிக்கும்செயற்பாடுகளை கைவிட வேண்டுமென தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் அவற்றை நியாயப்படுத்தியும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு வெளியிட்டு வரும் கருத்துக்களால் எழுந்துள்ள முரண்பாடுக…
-
- 8 replies
- 1.3k views
-
-
லெப் கொமாண்டர் வெலெகெதரவே இரகசிய வதைமுகாமில் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவுகளை வழங்கினார்: 21 நவம்பர் 2015 லெப் கொமாண்டர் வெலெகெதர என்பவரே விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை வழங்கியதாக, இலங்கையின் இரகசிய வதைமுகாம்களில் இருந்து உயிர் தப்பி வெளிநாடுகளில் வாழ்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 2009 முதல் 2012 ம் ஆண்டிற்கு இடைப்பட்ட பகுதியில் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள வதை முகாமில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஓருவர் தாங்கள் மேற்கொண்ட ஆய்வின் போது தங்களிடம் இதனை தெரிவித்துள்ளார் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எங்களை முதன்முதலில் அந்த இரகசிய முகாமிற்கு அவர்கள்…
-
- 0 replies
- 479 views
-
-
13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்: கொழும்பும் அப்பட்டியலில் சேரும் அறிகுறி [ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 04:03.09 AM GMT ] நாட்டின் 13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவிவருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்திலும் இந்த மண்சரிவு அபாயம் விரைவில் தோன்றக்கூடிய அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு அபாய வலயங்கள் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார். நுவரெலியா, பதுளை, கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் மொனராகலை ஆகிய 13 மாவட்டங்களும் ஏற்கனவே மண்சரிவு அபாய வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும்…
-
- 0 replies
- 571 views
-
-
வரவு செலவுத் திட்டத்தில் 11 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு! [Friday 2015-11-20 20:00] நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றில் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் குறைப்பட்டுள்ளது. மேலும் 425 கிராம் டின் மீனின் விலை 125 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் சமையல்…
-
- 0 replies
- 573 views
-
-
இலங்கையின் அபிவிருத்திக்கு 10 பில்லியன் டொலர் பங்களிப்பு செய்துள்ளதாம் சீனா! [Saturday 2015-11-21 07:00] இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா இதுவரைக்கும் 10 பில்லியன் டொலர்களை பங்களித்துள்ளது என்று சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தின் மத்திய பிரதேசத்தில் இலங்கை அமைந்துள்ளது. எனவே முதலீடுகளுக்கு முக்கிய இடமாக இலங்கை கருதப்படுகிறது. இலங்கை காரணமாக ஏனைய நாடுகளும் நன்மைகளை பெறுகின்றன. இந்தநிலையில் இலங்கை சீன உறவு அவசியமாகிறது என்று சீன தூதுவர் யி.சியாங்லியாங் தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா இதுவரைக்கும் 10 பில்லியன் டொலர்களை பங்களித்துள்ளது என்று சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தின் மத்திய பிரதேசத்தில் இலங்கை அமைந்துள…
-
- 0 replies
- 505 views
-
-
இலங்கைக் கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யக் கோருகிறது சர்வதேச அமைப்பு! [Saturday 2015-11-21 08:00] திருகோணமலை கடற்படைத் தளத்தில் வதைமுகாம் ஒன்றை ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு கண்டுபிடித்துள்ளதையடுத்து இலங்கை கடற்படையுடனான ஒத்துழைப்புக்கள் குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று, சர்வதேச நாடுகளிடம் உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலை கடற்படைத் தளத்தில் வதைமுகாம் ஒன்றை ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு கண்டுபிடித்துள்ளதையடுத்து இலங்கை கடற்படையுடனான ஒத்துழைப்புக்கள் குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று, சர்வதேச நாடுகளிடம் உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு கோரிக்கை விடுத…
-
- 0 replies
- 531 views
-
-
கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று யாழ். குடாநாட்டில் உள்ள முருகன் ஆலயங்களில் சூரன் போர் மிக விமர்சையாக நடைபெற்றது. நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடந்த சூரன் போரில், பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேவேளை சுதுமலை அம்மன் ஆலயத்தில் சூரன் போர் வெள்ளத்தில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. http://www.seit…
-
- 8 replies
- 2.3k views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடுமையான தொனியில் எடுத்துரைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கான வெகுமதியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் பதவிக்கு வந்து ஒருவருடமாகும் நிலையிலும் ஜனாதிபதியின் குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதியுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்போது கடுமையான தொனியில் இந்த விவகாரத்தை ஜனாதிபதியிடம் முன்வைக்கவும் கூட்டமைப்…
-
- 10 replies
- 1.3k views
-
-
முல்லைதீவு மற்றும் மன்னாரில் 20000 வீடுகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது - 20 நவம்பர் 2015 -வடகிழக்கின் அபிவிருத்திக்கான நிதியை திரட்டுவதற்காக 2016 இல் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தை கூட்டவுள்ளதாக அறிவித்துள்ள நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க, முல்லைதீவு மற்றும் மன்னாரில் 20000 வீடுகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று தேசியஅரசாங்கத்தின் 2016 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அதிக கரிசனை கொண்டுள்ளது,வடகிழக்கு மக்கள் கடந்த பல வருடங்களாக தங்களிற்கு அத்தியாசிய சேவைகளை …
-
- 1 reply
- 690 views
-
-
தமிழ் மக்களின் தலையாய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைப்பதற்கான சதித்திட்டங்களிற்கு ஆளாகாமல் எமது மக்களின் விடிவிற்காகவும் நலன்களுக்காகவும் உழைக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும், என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சுமந்திரன் குறித்து வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாகவே இவ்வறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவடிவம், நேற்றைய தினம் வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்த அறிக்கையில் பொதுத்தேர்தல் நேரத்தின் போது கட்சிக்கு எதிராக செயற்பட்டார் என்கின்ற குற்றச்சாட்டிற்கு தன்னுடைய நீண்ட விளக்கத்தை கொடுத்திருக்…
-
- 11 replies
- 1.3k views
-
-
Live Blog - தேசிய அரசின் முதலாவது வரவு–செலவுத் திட்டம் 02.00 PM - தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் நிதி ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது. 02.02 PM - சபாநாயகர் கருஜயசூரிய மன்றுக்கு வருகை 02.03 PM - 2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பிக்கின்றார். 02.0…
-
- 3 replies
- 1.5k views
-
-
சாரதியின் கவனயீனத்தால் முதியவர் சாவு :சாரதிக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது 97 வயதுடைய முதியவர் ஒருவருக்கு விபத்து மரணம் ஏற்படுத்திய சாரதியான கணபதிப்பிள்ளை ரகுநாதன் என்பவருககு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் இரண்டரை லட்ச ரூபா தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில், சின்னத்தம…
-
- 0 replies
- 565 views
-
-
வடமுனைக் கடலில் பாரிய புத்தர் சிலை! நாகதீப விகாரை பிக்குவின் ஏற்பாடு [ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2015, 05:00.10 AM GMT ] வடமுனைக் கடலில் பாரிய புத்தர் சிலையொன்றை நிர்மாணிப்பதற்கு யாழ்ப்பாணம் நாகதீப விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமதிஸ்ஸ தேரர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். உத்தேச புத்தர் சிலை நாகதீப விகாரையை அண்மித்த கடற்பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. சுமார் 110 அடி உயரத்தில் உட்கார்ந்த நிலையில் இருக்கும் புத்தரின் வடிவம் இங்கு சிலையாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதன் மூலம் வடக்கு கடலின் பல கிலோமீற்றர் தூரத்துக்கு இந்த புத்தர் சிலை கண்ணுக்குத் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு இதுபோன்ற சி…
-
- 7 replies
- 907 views
-