Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதே அரசின் நோக்கம் : நிதி அமைச்சர் தெரிவிப்பு நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று சமர்ப்பித்துள்ளார். நாடாளுமன்றம் சபாநாயகரால் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியது. வரவு - செலவுத்திட்ட அறிக்கையின் முதலாவது வாசிப்பை அமைச்சர் ரவி கருணாநாயக்க சபையில் சமர்ப்பித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் உட்பட அரச தரப்பு எதிர்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் சபைக்கு சமூகமளித்திருந்தனர். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹ…

  2. ஐ.நா.சபையின் இலங்­கைக்­கான 20 பரிந்­து­ரை­களில் எவ்­வி­ட­யத்­தையும் நீக்க வேண்­டுமென்ற பேச்­சுக்கே இட­மில்லை. அவை­ஒவ்­வொன்­றையும் எவ்­வாறு நிறை­வேற்ற முடி­யு­மென்ற ஆலோ­ச­னை­க­ளையே கட்­சிகள் முன்­வைக்க வேண்­டு­மென வெளி­வி­வ­கார அமைச்சர் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் கூறினார். ஐ.நா.சபையின் தீர்­மானம் தொடர்பில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஜனா­தி­ப­தியால் கூட்­டப்­பட்ட இரண்­டா­வது சர்­வ­கட்சி மகா­நாட்டில் பேசப்­பட்ட விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், ஒக்­டோபர் மாதத்தில் கூட்­டப்­பட்ட முத­லா­வது சர்­வ­கட்சி மகா நாட்­டுக்குப் பிறகு கடந்த செவ்­வ…

    • 4 replies
    • 742 views
  3. திருமலை கடற்படை முகாமில் ஐ.நா. ஆணைக்குழு சோதனை! கடற்படை கடும் அதிருப்தி [ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2015, 04:44.21 AM GMT ] திருகோணமலை கடற்படை முகாமில் ஐ.நா. சபையின் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு சோதனை மேற்கொண்ட சம்பவம் குறித்து கடற்படையினர் கடும் அதிருப்தியுற்றுள்ளனர். கடற்படையினரை மேற்கோள்காட்டி இது தொடர்பான செய்தியொன்றை சிங்கள ஊடகம் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை ராணுவ வரலாற்றில் முதல் தடவையாக ராணுவ முகாம் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்குழுவினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்படை முகாமுக்கு அவ்வாறு சோதனையிடுவதற்காக ஐ.நா. ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை புலனாய்…

  4. தமிழ்ப் பெயர்கள் அகற்றப்படும் : ராவணாபலய ஆவேசம் யாழ்ப்பாணத்தில் நாகதீப என்ற பெயரை, நயினாதீவு என்று பெயர்மாற்றம் செய்தால், கண்ணில் தென்படுகின்ற அனைத்து தமிழ் வீதிகளின் பெயர்ப் பலகைகளையும் தகர்த்தெறிவோம் என்று ராவணாபலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தன்கந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். பௌத்தர்களின் புனித தீவான யாழ்ப்பாணம், நாகதீப என்ற பெயரை நயீனாதீவு என்று பெயர் மாற்றம் செய்ய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முயற்சித்து வருகிறார். தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தாம் சிறை செல்லக் காரணமானவர்களை கொலை செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர். குறிப்பாக, யுத்தத்தை முன்னின…

  5. தமக்கிடையில் ஏற்பட்டுள்ள சில முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, வடமாகாண சபை விடயங்கள் உட்பட்ட பல்வேறு அம்சங்கள் ஆராயப்படவுள்ளன. இந்த சந்திப்பின்போது பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=145237&category=TamilNews&languag…

  6. அவன்ட் கார்ட் கப்பலில் இருந்த ஆயுதங்களை கடற்படையினர் பொறுப்பேற்ற போது கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் கப்பல்களிலிருந்து 2410 ஆயுதங்கள் தற்போது கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் இரவில் முற்றுப் பெற்றிருந்தது. இந்நிலையில் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மஹநுவர கப்பலில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக அந்த நிறுவனம் கடற்படையினர் மீது குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து கப்பலை மீண்டுமொரு தடவை முழுவதுமாக பரிசோதித்து, அதில் எதுவித ஆயுதங்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு தென்பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி காலி …

  7. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் இலங்கைக்கு வருவதற்கு சட்டரீதியான சிக்கல் காணப்படுவதாகவும், அதனைத் தீர்ப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தடைசெய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் இலங்கைக்கு வரமுயற்சிப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரிக்கப்படாத ஒன்றிணைந்த இலங்கைக்கு ஆதரவு வழங்கும் எந்தவொரு நபரும் இலங்கைக்கு வந்துசெல்ல முடியும்.அருட்தந்தை இமானுவேல் இலங்கை வருவதற்கு சட்டச்சிக்கல் உள்ளது. எனவே அவருக்கு சட்டரீதியான நிவாரண மொன்றைப் பெற்றுக்கொடுப்பது பற்றி அரச…

  8. தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்க்கப்படும். இலங்கைக்கு புதியதொரு ஆரம்பமாக அமையவிருக்கும் இந்த வரவு செலவுத்திட்டத்தில், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் நாட்டின் அபிவிருத்தி ஆகிய இரண்டு முக்கிய விடயங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரவு செலவுத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூனா மகேந்திரன் ஆகியோர் நேற்று கலந்துரையாடியிருந்தனர். புதிய அரச…

  9. காடுகளை பாதுகாக்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். ஆனால் முல்லைத்தீவில் அவரிடம் முறையிட்ட பின்னரும் காடழிப்பு நடைபெறுகிறது. இது குறித்து தமிழ் நாளிதழ்களின் செய்திகளை முன்வைத்து உலகத் தமிழ் வானொலியான GTBC.FM இன் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் ஆராயப்பட்டது. நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டவை- அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முல்லைத்தீவு குமுழுமுனையில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் அதனை நிறுத்த தான“ நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டதன் பின்னரும் காடழிப்பு நடைபெறுவதை குறித்து வட மாகாண சபைய…

  10. ­ கிளிநொச்சி, உமையாள்புரம் கால் ஏக்கர் பகுதியில் கசிப்புக் காய்ச்சல் மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் சிறுவர்களும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் அபிவிருத்திச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பல இடங்களில் இருந்து வருபவர்கள், இந்தப் பகுதிக்கு வந்து கசிப்பை நுகர்வதால் பல்வேறு குற்றச் செயல்களும் இடம்பெற்று வருகின்றன. 18 வயதுக்கு குறைந்தவர்களும் இதற்கு அடிமையாகி வருகின்றனர். மேலும், தர்மபுரம் பகுதியிலிருந்து கசிப்பு எடுத்துவரப்பட்டு இப்பகுதியிலே காணப்படுகின்ற ஆட்கள் குடியிருக்காத 19 வரையான காணித்துண்டுகளில் கசிப்பு விற்பனைகள் இடம்பெற்று வருகின்றன. கிராம அலுவலர், மாதர் அபிவிருத…

  11. கூகுளின் போக்குவரத்து விபரத் தகவல் இலங்கையிலும் கூகுள், போக்குவரத்து விபரங்கள் தொடர்பான தகவல் வழங்கும் சேவையைத் தற்பொழுது இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்த வீதிகளை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள கூகுள் வரைபடத்தின் மூலம் இதனை அவதானிக்க முடியும்.ஸ இந்த வரைபடத்தில்அதிக வாகன நெரிசல் கொண்ட பாதைகள் சிவப்பு நிறத்தாலும், வாகன நெரிசல் குறைந்த பாதைகள் பச்சை நிறத்தாலும் காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் வாகன ஓட்டுநர்கள் பெரியளவில் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.கூகுள் தேடுபொறியில…

  12. 2ஆம் இணைப்பு - ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார் மஹிந்த - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 20 நவம்பர் 2015 பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஆஜராகியுள்ளார். அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கட்டணம் வழங்காமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அத்தியவசிய ஆவணங்கள் சிலவற்றை பிரதிவாதி தரப்பிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டமையால் நேற்று இடம்பெற இருந்த சாட்சி விசாரணைகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவி…

  13. வடமாகாண சபையில் எதிர்க்கட்சி தலைவரின் கேள்வியால் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளால் வடமாகாண சபையில் பேரும் அமளி ஏற்பட்டது. வடமாகாண சபை அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்க என ஒரு பிரதான கேள்வியும் ஐந்து துணைக்கேள்விகளும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் கேட்க என 4 பிரதான கேள்விகளும் 14 துணை கேள்விகளும் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவால் முன் வைக்கப்பட்டது. அக் கேள்விகளை சபையில் முன் வைக்க ஆரம்பித்த வேளை ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் சபை ஒழுங்கு பிரச்சனையை முன் வைத்தார். சபையில் ஒரு உறுப்பினர் மூன்று பிரதான கேள்வியினை தான்…

  14. தேசியக் கொடியில் மஹிந்தவின் உருவம்! - சட்ட நடவடிக்கை குறித்து பொலிஸ் ஆலோசனை [Friday 2015-11-20 09:00] மல்வானை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் உருவம் அடங்கிய தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். மல்வானை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் உருவம் அடங்கிய தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷவின் பிறந்த தினம் நேற்ற…

  15. நயினாதீவை நாக தீப என பெயர் மாற்றம் செய்ய முடியாது: – சிவாஜிலிங்கம் [Thursday 2015-11-19 22:00] ஆங்கிலம் மற்றும் தமிழில் நயினா தீவு என அழைக்கப்படும் யாழ் குடா நாட்டில் காணப்படும் தீவின் பெயரை நாக தீப என பெயர் மாற்றம் செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதேவேளை சிங்கள மக்கள் அத்தீவை நாக தீப என அழைப்பதில் தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். ஆங்கிலம் மற்றும் தமிழில் நயினா தீவு என அழைக்கப்படும் யாழ் குடா நாட்டில் காணப்படும் தீவின் பெயரை நாக தீப என பெயர் மாற்றம் செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதேவே…

  16. by Jathindra - on November 8, 2015 தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவரும், கூட்டமைப்பின் சார்பில் அதன் சர்வதேச விவகாரங்களை கையாளும் அதிகாரம்மிக்கவருமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனின் கருத்துக்களை அடியொற்றியே வட்டமிடுகின்றன. இதற்கு என்ன காரணம்? ஏன் அண்மைக்கலாமாக சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் மட்டுமே சர்ச்சைக்குரியவையாக நோக்கப்படுகின்றது அல்லது சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றது. சுமந்திரன் சொல்ல முற்பட…

  17. கடந்த 2 ஆம் திகதியன்று ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட “To End a Civil War: Norway’s Peace Engagement with Sri Lanka” (உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொணர்தல்: ) என்கிற நூல் ஒரு முக்கியமான நூல். சிறிய எழுத்துகளைக் கொண்ட 550பக்கங்களுடன் பல தகவல்களை உள்ளடக்கிய இந்த நூலை எழுதியவர் மார்க் சால்டர் (Mark Salter). மார்க் சால்டர் இந்த நூலின் முதலாவது வெளியீட்டை ஏற்கெனவே கடந்த ஒக்டோபர் மாதம் 15 அன்று லண்டனில் வெளியிட்டுவிட்டார். Mark Salter இந்த நூலுக்காக கையாண்ட பல தகவல்கள்; மூலத் தகவல்களை உள்ளடக்கியது என்பதால் மிகவும் முக்கியத்துவமுடையது. குறிப்பாக எரிக் சுல்ஹைம், வீதார் ஹெல்கீசன் மற்றும் முக்கிய பலருடன் நட்புடையவர். இவர்கள் பொதுவாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக வெளியிடாத தகவல்கள் கூட இந்த …

  18. யுத்தக் குற்றச் செயல் விசாரணை குறித்து கண்காணிப்பதற்கு, நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் நிபுணர்குழுவொன்றை நியமித்துள்ளார். ஐந்து பேர் அடங்கிய நிபுணர்குழுவொன்றை அவர் அமைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் தீர்மானத்திற்கு அமைவான முறையில் இலங்கையில் விசாரணைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்கப்பட உள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள், இனச்சுத்திகரிப்பு மற்றும் மனிதாபிமான மீறல்கள் தொடர்பில் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறித்து கண்காணிப்பதற்காக “பொறுப்பு கூறுதல்களை கண்காணிக்கும் விசேட குழு” ஒன்றை நிறுவியுள்ளார். இந்த ஐ…

  19. "ஜனாதிபதி மைதிரியுடன் காணப்படுகின்ற காணமல் போன மகளை மீட்டுத்தாருங்கள்" 19 நவம்பர் 2015 ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களுடன் புகைப்படங்களிலும், அவரது நூறு நாள் தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரத்தில் காணப்படுகின்ற கானமல் போன் எனது மகளை மீட்டுத்தாருங்கள் என கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தாய் ஒருவர் அமைச்சர் மணோகணேசனிடம் கண்ணீருடன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியா வடக்கு நெடுங்கேணி பெரியமடு பிரதேசத்தை சேர்ந்த காசிப்பிள்ளை ஜெயலவதனி எனும் தாயே ஜனாதிபதியுடன் காணப்படுகிறன்ற தனது மகளை மீட்டுத்தாருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது மகள் காசிப்பிள்ளை ஜெரோமி கடந்த 2009-03-04 ஆம் திகதி இறுதி யுத்தம் இடம்பெற்ற இரட்டைவாய்க்கால் பகுதியில் வைத்து …

  20. ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் கதி இன்னும் தெரியவில்லை இலங்கையின் போர்ச் சூழலில் காணாமல் போயிருப்பவர்களின் பிரச்சினை ஒருபுறமிருக்க, இறுதி யுத்தம் நடைபெற்ற கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றவர்களில் பலரைக் காணவில்லை என்று அவர்களுடைய உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆஸ்திரேலியாவுக்கு ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டவர்களின் கதி என்ன ? அந்த வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இந்தியக் கடற்பரப்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற படகொன்றில் பயணம் செய்ததாகக் கூறப்படுகின்ற 52 பேருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் இதுவரை தெரியவில்லை. இதனால் அவர்களின் உறவினர்கள் அவர்கள் இருக்குமிடத்தை அறிவதற்க…

  21. இந்து சமயத்தில் ஆகமங்கள் வேதநூல்கள். கிறிஸ்தவத்தில் புனித விவிலியம். இஸ்லாத்தில் திருக்குர்ஆன். இவற்றை படிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படலாம்; மோட்சமும் பெறலாம். ஆனால், வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சி. வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம் விடுத்த அறி க்கையை வாசிக்காதவர்கள் மோட்சம் பெறுவது கடினமே. அந்தளவிற்கு அவரின் அறிக்கை அறம் தழுவியது. நீதியின்பாற்பட்டது. நேர்மையை எடுத்துக் காட்டுவது. நெஞ்சுரத்தை வெளிப்படுத்துவது. நேர்மையானவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் போக்கிரித்தனத்துக்கு தலைசாய்க்க மாட்டான் என்பதை இடித்துரைப்பது. ஆகையால், வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்த அந்த அறிக்கையை அனைவரும் வாசிக்க வேண்டும். அந்த வாசிப்பு மற்றவர…

    • 6 replies
    • 1.2k views
  22. போர்க்குற்றச் செயல் நீதிப் பொறிமுறைமையை கண்காணிக்க நாடு கடந்த தமிழீழ இராச்சியக் குழு [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015, 11:11.24 AM GMT ] இலங்கைப் போர்க்குற்றச் செயல்கள தொடர்பிலான நீதிப் பொறிமுறைமையை கண்காணிக்கும் நோக்கில் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் நிபுணர் குழு ஒன்றை பெயரிட்டுள்ளார். பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் சட்டம், மனித உரிமை விவகாரங்கள், போர்க்குற்றவியல் சட்டங்கள், மனிதாபின சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற விற்பன்னர்கள் ஐந்து பேர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்க உள்ளனர். பிரான்ஸைச் சேர்ந்த மேரி குய்ராட், பிரிட்டனைச் சேர்ந்த மஹாராணி சட்டத்தரணி பீற்றர் ஹெய்ன்ஸ், பிரி;ட்டன…

  23. இலங்கையின் மீன்பிடித்தரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் திருப்தி 19 நவம்பர் 2015 இலங்கையின் மீன்பிடித்தரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் திருப்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நியமங்களுக்கு புறம்பான வகையில் மீன்பிடியில் ஈடுபட்ட காரணத்திற்காக இலங்கை மீன் வகைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நிபந்தனைகளை அரசாங்கம் பூர்;த்தி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எஞ்சியுள்ள சில விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மீது விதிக்க…

  24. எமது மாவீர செல்வங்களை பூசிக்கும் இப்புனித மாதத்தில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் எதிர்வரும் சனிக்கிழமை 21.11.2015 அன்று மாவீரர் வாரம் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட இருக்கின்றது . யேர்மனியில் Essen நகரில் அமைந்திருக்கும் மாவீரர் நினைவுத் தூபிக்கு மாலை 4 மணிக்கு வணக்கம் செலுத்தி , உறுதி எடுக்கப்பட்டு மாவீரர் வாரம் தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்படும் வகையில் அமைகின்றது . அத்தோடு அன்றைய தினம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவீரர் வாரத்தை முன்னிட்டு Münster நகரத்தில் உள்ள வீடற்று தவிப்பவர்களுக்கான பராமரிப்பு மற்றும் குறிப்பிட்ட நகரத்தில் உள்ள அகதி இல்லத்துக்கு சென்று அவர்களுக்கான உணவு வழங்களும் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறன சமூக சேவை…

  25. மாதுலுவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அரச மருத்துவர் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சோபித தேரரின் மரணத்திற்கான காரணம் குறித்து திடமான தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. ஏனெனில் இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகின்றன. பாரதூரமான நோய்கள் எதுவும் சோபித தேரருக்கு இருக்கவில்லை. முன்னதாக தனியார் வைத்தயிசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று நலமாக வீடு திரும்பிய பின்னர் மீளவும் நோய்வாய்ப்பட்டு மற்றுமொரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார். தேரரின் உடல் விசக் கிருமிகள் உட்பிரவேசித்து அதன் மூலம் நோய் வாய்ப்பட்டிருக்கக் கூடிய சாத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.