Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து, உத்துரு கடற்படையினரின் டோறா (சிங்கி) படகை மோதிச் சேதமாக்கியதாக பளைப் பொலிஸாரால், கிளிநொச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் சந்தேகநபர்களான 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எம்.ஐ.வகாப்தீன், வியாழக்கிழமை (05) உத்தரவிட்டார். ஏற்கெனவே, எல்லை மீறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 10 இந்திய மீனவர்களே இந்த வழக்கிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27ஆம் திகதி காங்கேசன்துறை கடற்பரப்பில் வெற்றிலைக்கேணி உத்துரு கடற்படை முகாமுக்குச் சொந்தமான டோறாவை, இந்திய மீனவர்களின் றோலர் மோதியதாக கடற்படையினர், பளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். றோலர் மோ…

    • 2 replies
    • 519 views
  2. வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் சங்கிலியன் பூங்காவில நேற்று வியாழக்கிழமை (05) ஆரம்பமான மலர்க்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள், தங்கள் சட்டைகளில் கார்த்திகைப் பூவை குத்தியிருந்தனர். கார்த்திகை மாதத்தில் மாத்திரம் பூக்கும் இந்தப் பூ, தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய மலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/158493/வ-ர-ந-த-னர-கள-ன-சட-ட-ய-ல-க-ர-த-த-க-ப-ப-#sthash.UCrlzZip.dpuf

    • 1 reply
    • 1.2k views
  3. உள்ளுராட்சி சபைகளின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பானது- வவுனியா மாவட்டம்: உள்ளுராட்சி,மாகாண சபைகள் அமைச்சருக்கு ஓர் கடிதம்: கௌரவ பைசர் முஸ்தபா அவர்கள், உள்ளுராட்சி,மாகாண சபைகள் அமைச்சர், உள்ளுராட்சி அமைச்சு, இல 330, டொக்டர்.கொல்வின் ஆர்.சில்வா மாவத்தை (யூனியன் பிளேஸ்) கொழும்பு 02 உள்ளுராட்சி சபைகளின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பானது- வவுனியா மாவட்டம் மேற்படி விடயம் தொடர்பாக வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் பின்வரும் விடயங்களை தங்களின் மேலான கரிசனைக்காக தயவுடன்; முன்வைக்கின்றேன். முறைகேடாக நடைபெற்ற எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் குழுவொன்றை நியமித்தமைக்காக நல்லாட்சி அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்  மேற்…

  4. மலையகத்தில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் Nநுற்று மாலை பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மேற்படி தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததால் வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் உட்புகுந்ததால் 70 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். எனினும் நீர் வடிந்து சென்றதன் பின் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விட்டனர். இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு ஹட்டன்…

  5. வடக்கு - கிழக்கு ஊடகர்கள் மீதான தாக்குதல்களையும் விசாரிக்க வேண்டும் 'உதயன்' மீதான தாக்குதல் உட்பட வடக்கு - கிழக்கைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் - கொலை - கொலை முயற்சிகள் தொடர்பில் நல்லாட்சி அரசு விசாரணை நடத்தவேண்டும் எனக் கோரும் பிரேரணை வடக்கு மாகாண சபையில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தென்னிலங்கை ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பாக விசாரிப்பது போன்று வடக்கு - கிழக்கைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என்று நீதி அமைச்சர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஆகியோரைக் கோரும் பிரேரணையே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 37 ஆவது அமர்வு நேற்று இடம்பெற்றது. இதில் ஆளுங்கட்சி உறுப்பினர்களான அ.பரஞ்சோதி மற்றும் விந்தன…

  6. நாளாந்தம் 4பேருக்கு யாழில் டெங்கு : விழிப்படையுமாறு எச்சரிக்கிறார் சுகாதாரப் பணிப்பாளர் மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளாகி நாளாந்தம் 4பேர் வரையில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.எனவே டெங்கு நோய்த் தொற்று பற்றிய விழிப்புடன் அதிலிருந்து பாதுகாப்பாக இருங்கள்.இவ்வாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் க.நந்தகுமாரன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மழைகாலம் ஆரம்பித்துள்ளதை அடுத்து வழமையாக டெங்குத் தொற்று அதிகரிப்பு இருக்கும்.எனவே தான் ஏனைய காலங்களைவிட மழைகாலத்தில் டெங்கு பற்றிய விழிப்புணர்வு தேவையாகவுள்ளது. வீட்டில் டெங்கு பரவாதவாறு சுகாதாரமான சூழலை எப்பொழுதும் பேணுங்கள்.சிறுவர்க…

  7. உதயனை வசைபாடினார் பிரதி அவைத் தலைவர் 10 ஆயிரம் ரூபா எனக்குப் பிச்சைக் காசு என்று வடக்கு மாகாண சபையில் தெரிவித்த பிரதி அவைத் தலைவர் ம. அன்ரனி ஜெகநாதன், 'உதயன்' பத்திரிகையையும் காரசாரமாக விமர்சித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவினால் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. முதலமைச்சர் - அமைச்சர் ஆகியோரின் சம்பளங்கள் தொடர்பில் குறித்த கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதன்போதான விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அவைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சித் தலைவராகச் சி.தவராசா இந்தச் சபைக்கு வந்ததில் இருந்து எங்களுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அமைச்சர்கள் ஒவ்வொரு ந…

  8. யாழ். தீவகத்துக்கு அம்பியூலன்ஸ் படகு யாழ். தீவக பகு­தி­யி­லுள்ள மக்­க­ளுக்கு அம்­பி­யூலன்ஸ் படகுச் சேவை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டவுள்ளது. கேலன் பாலேந்திரா அன்பளிப் புச் செய்த இந்த படகு மூலமான அம்பியூலன்ஸ் சேவையை கடற் படையினர் நடத்துகின்றனர். வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் படகை கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=13122#sthash.L8ybX0cv.dpuf

  9. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை எவராலும் எதிர்க்கவே முடியாது 'தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார். 'நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படாது, கைது செய்யப்பட்டு, விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க, சட்டத்தில் உள்ளது. கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் அவரால் கைதிகளை விடுவிக்க முடியும். அதனை யாரும் தடுக்க முடியாது' என அவர் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளரொருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை கூறினார். ஆயுதக்கப்பல் இதேவேளை…

  10. அமரசிங்கவை அரவணைத்து அடுத்த தேர்தலில் குதிப்பேன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுடன் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுக்கப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு சகல கிராமங்களையும் உள்ளடக்கி புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வேலைத்திட்டம், இம்மாதம் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் ச…

  11. தமிழ் மக்கள் இப்போது தமிழ் அரசியல் தலைமையினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் இன அழிப்பு இலங்கையில் நடைபெறவில்லை என்று கூறியிருந்தார். அந்தக் கூற்றுத்தான் சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்தது என்பதை எம் இனம் அறியாமல் இருந்தால் அது பெரும் அபத்தமாகும். வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த மிகப்பெரும் கொடூரப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட நிட்டூரம் பற்றி இம்மியும் சிந்திக்காது, இலங்கையில் தமிழின அழிப்பு நடை பெறவில்லை என்று தமிழ் அரசியல் தலைமை கூறுமாக இருந்தால், இதைவிட அக்கிரமம் வேறு எதுவுமாக இருக்காது. எது எவ்வாறாயினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட்ட தீ…

  12. உள்­ளக விசா­ர­ணையில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. எனினும் குறித்த விசா­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களைக் கொண்ட குழுவே இடம்­பெ­ற­வேண்­டு­ம் என்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்­கொண்ட இலங்­கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுக­னு­மா­விடம் வலியுறுத்தியதாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். இதே­வேளை வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கம் எம்மை முன்கூட்டியே அறிவுறுத்துவது பயன்தருவதாக அமையும் எனவும் முத­ல­மைச்சர் குறிப்பிட்டார். ஆனால் வட மாகா­ணத்தில் மேற்­கொள்­ளப்­படும் திட்­டங்கள் தொடர்­பான முழு­மை­யான தர­வுகள் எங்­க­ளுக்கு தரப்­ப­டு­வ­தில்லை. நேர­டி­யா­கவே மத்­திய அரசு பல திட்­டங்­களை செய்­கின்­…

  13. "தமிழ் அரசியல் கைதிகள் நவம்பர் 7 ஆம் திகதிக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசால் உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. எனினும், உறுதியளித்தபடி வெளிப்படையான நடவடிக்கைகள் இன்னும் இடம்பெறவில்லை. எனவே, அரசின் உறுதிமொழி நிறைவேற்றப்படுமா?" - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.எ. சுமந்திரன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். அத்துடன், தமிழர்கள் என்பதாலா தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாகுபாடு காட்டப்படுகின்றது என்றும் கேள்வி எழுப்பிய அவர், ஊழல் மோசடிக்கு எதிரான நடவடிக்கை உட்பட வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த அரசு ஒருவருடத்துக்கு நீடிக்குமா என்பது சந்தேகமே என்றும் அவர் முன்னெச்சர…

  14. யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூற நினைவுச்சின்னம் வேண்டும் - குணசேகரன் சுரேன் யுத்தத்தில் இறந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவு கூறுவதற்கு நினைவு சின்னமொன்று வடமாகாணத்தில் அமைக்கப்பட்டு, நினைவு கூறுவதற்கு ஒரு திகதியும் ஏற்படுத்தப்படவேண்டும் என நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். 'யுத்தத்தில் இறந்தவர்களை, அவர்களது உறவுகள் நினைவுகூர முடியாத நிலையுள்ளது. அதனை மாற்றி, அவர்களுக்கு பொதுவான நாளொன்றில் நினைவு கூறுவதற்கு சந்;தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரேரணையை முன்வைக்கவுள்ளேன்' என்றார். 'அத்துடன், வடமாகாணத்திலுள்ள யுத்தப் பாதிப்பு அடை…

  15. 62 அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் விடுதலை செய்யப்படலாம் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும் 30 பேர் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னதாக விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=74159&mode=lead

  16. டக்ளஸிற்கு எதிராக சரவணபவன் முறைப்பாடு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவிற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இன்று பாரிய ஊழல் மோசடிகளையும் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஊடாக ஒலிபரப்பான நிகழ்ச்சி ஒன்றிற்காக ஒன்றரை கோடி ரூபாவை அவர் செலுத்த வேண்டும் என கூறியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஊடாக டக்ளஸ் தேவாநந்தா இந்த பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 2010ஆம் ஆண்டுக்கு பின்னரான மோசடிகள் குறித்தே, இந்த ஆணைக்குழு விசா…

  17. இலவச கைத்தொழில் கண்காட்சி நாளை ஆரம்பம் கிழக்கிலங்கை கைத்தொழில் துறையின் ஒரு புதிய யுகம் எனும் தொனிப்பொருளிலான இலவசக் கைத்தொழில் கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை (07) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண கிராமிய தொழில்துறை திணைக்களமும் கிராம அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெய்னுலாப்தீன் நஸீர் அகமட்டின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைப்பார். இதன்போது, மரவேலை, வனைதல், துணிவர்ணமிடல், நெசவு, கடைச்சல், மோட்டார் திருத்தம், நிறமூட்டல்…

  18. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாபெரும் மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் பங்கேற்கும் இம்மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்க உள்ளார். வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் தாவர உற்பத்தியாளர்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியில் நல்லின பழ மரக்கன்றுகள், நிழல் மரக்கன்றுகள், வெட்டு மரக்கன்றுகள், அலங்காரத் தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட இருப்பதோடு விற்பனையும் செய்யப்படவுள்ளன. நாளை வியாழக்கிழமை இக்கண்காட்சி எதிர்வரும் புதன்கிழமை வரை …

  19. வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஓர் இனச்சுத்திகரிப்பு எனக்கூறி சிலர் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிரந்தர பிளவை ஏற்படுத்த சதி செய்கின்றனர். ஆனால், முஸ்லிம் மக்களை முழுமையாக இந்த மண்ணில் இருந்து அகற்றும் எண்ணம் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்ததில்லையென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், '2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் பின்னர் முஸ்லிம் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது வடக்கு மற்றும் கிழக்கு என்பது முஸ்லிம் மக்களுக்கும் உரிய தாயகம்…

  20. கோதபாய கைது செய்யப்படுவதனை நான் தடுத்தேன் - நீதி அமைச்சர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படுவதனை தாம் தடுத்து நிறுத்தியதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அவர் நேற்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவன்ட் கார்ட் வழக்குத் தொடர்பில் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படவிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தாம் அந்த விடயத்தில் தலையீடு செய்து கோதபாய கைது செய்யப்படுவதனை தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். கோதபாயவை கைது செய்யக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தாம் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தாம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கூறியதாகவும் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறு அ…

  21. போர்க்குற்றங்களுக்கு மஹிந்தவும், கோத்தாவுமே பொறுப்பு! - தான் நாட்டில் இருக்கவில்லை என்கிறார் பொன்சேகா [Thursday 2015-11-05 07:00] போரை நெறியாள்கை செய்தமை, உத்திகளை வகுத்தமை ஆகியவற்றுக்கான பொறுப்பை நான் ஏற்கின்ற போதும், போரின்போது எவரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் - குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கு மஹிந்த ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவுமே பொறுப்பேற்க வேண்டும். அவர்களை யாரும் தண்டிக்க முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். போரை நெறியாள்கை செய்தமை, உத்திகளை வகுத்தமை ஆகியவற்றுக்கான பொறுப்பை நான் ஏற்கின்ற போதும், போரின்போது எவரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் - குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கு மஹிந்த…

    • 2 replies
    • 470 views
  22. வட மாகாணத்தில் லங்கா பெற்றோல் சராசரி நாளாந்த பாவனையானது கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரையில் அதிகரித்த வண்ணமுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 92 ஒக்ரேய்ன் பெற்றோல் 2011ஆம் ஆண்டு நாளாந்தம் 70,122 லீற்றர் நுகரப்பட்டது. இது 2012ஆம் ஆண்டு 84,751 லீற்றராகவும் 2013ஆம் ஆண்டு 88,946 லீற்றராகவும், 2014ஆம் ஆண்டு 91,098 லீற்றராகவும் அதிகரித்து, 2015ஆம் ஆண்டு நாளாந்தம் 119,750 லீற்றர் நுகரும் அளவுக்கு உயர்வடைந்துள்ளது. 95 ஒக்ரேய்ன் பெற்றோலானது, 2011ஆம் ஆண்டு 940 லீற்றராகவும் 2012 ஆம் ஆண்டு 1,735 லீற்றராகவும், 2013ஆம் ஆண்டு 1,934 லீற்றராகவும், 2014 ஆம் ஆண்டு 2,133 லீற்றராகவும் இருந்து 2015ஆம் ஆண்டு 3,200 லீற்றராக அதிகரித்துச் ச…

  23. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை கல்வியை பூர்த்திசெய்த தமிழ் மாணவர்களை சட்டத்துறையில் பயில்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் இது தொடர்பில் ஆர்வமுள்ள மாணவர்களை தொடர்பு கொள்ளுமாறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். இது தொடர்பில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமிழ் இளைஞர் யுவதிகளுக்கிடையில் சட்டத்துறை கல்வி தொடர்பான ஆர்வம்,புரிதல் என்பன மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளதாக கருதப்படுகின்றது. தமிழ்த் தேசியத்துக்காக இளமையில் ஈர்க்கப்பட்டு கல்வியை துறந்தவன் என்ற அடிப்படையிலும் கல்விதொடர்பான ஆர்வம் கொண்டவன் என்றவகையிலும் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத்தினை உரமூட்ட சட்டக்கல்வியின் தேவையினை உணர்கின்றேன். அந…

  24. இலங்கையின் முன்னணி பெண் தொழிலதிபர் சோமா எதிரிசிங்க காலமானார். அவர், 76 வயதில் இன்று காலை காலமானார். ஈ.ஏ.பீ. குழும நிறுவனத்தின் தலைவரான சோமா எதிரிசிங்க இலங்கையின் முதனிலை பெண் தொழிலபதிர் மற்றும் வர்த்தகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1974ம் ஆண்டு ஈ.ஏ.பி. எதிரிசிங்க திடீரென உயிரிழந்தனைத் தொடர்ந்து அவர் சோமா எதிரிசிங்க வர்த்தக நடவடிக்கைகளை பொறுப்பேற்று அபிவிருத்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி, வானொலி, நகை அடகுபிடித்தல், தங்க ஆபரண விற்பனை, வாகன குத்தகை, ஏற்றுமதி, ஹோட்டல்துறை, காப்புறுதி, வாகன இறக்குமதி, திரைப்பட விநியோகம், திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட 25 நிறுவனங்களை சோமா எதிரிசிங்க வழி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamil…

  25. முன்னாள் புலிகள் 20 பேருக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு: 05 நவம்பர் 2015 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேருக்கு புனர்வாழ்வளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட புலிச்சந்தேகநபர்கள் 20 பேரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு பிரதான நீதவான் உத்தவிட்டுள்ளார். இதேவேளை, நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்ட ஏனைய 18 பேர் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.