Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணம் முழுமையாக இந்தியா வின் 'றோ' உளவுப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டு அங்கு அரசியல் ஸ்திரமில்லா நிலைமையை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவ தாக குற்றம் சாட்டிய ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க, இந்தியாவோ அமெரிக் காவோ தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கப்போவதில்லை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக் கிழமை இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஐ.நா.அறிக்கை மற்றும் ஜெனிவா தீர்மானத் தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அநுர குமார திஸா நாயக எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற் றுகையில், ஐ.நா.இன்று அமெரிக்காவினதும் மேற்குலக நாடுகள…

  2. 16 கொலைகளுக்கு கோத்தாவும் கருணாவும் பொறுப்பு: கொலை செய்த பொலிஸ் அதிகாரி அவுஸ்திரேலியாவில்! [ சனிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2015, 01:59.07 AM GMT ] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ் அதிகாரி- பாபியன் ரோய்ஸ்டர் டௌஸியன்ட் உடந்தையாக இருந்துள்ளார். கொழும்பின் ஆங்கில செய்தி இணையம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. முன்னாள் பொலிஸ் அதிகாரியான பாபியனுக்கு வழங்கப்பட்ட பெரு…

  3. வெள்ளைக்கொடி விவகாரம் சரணடைந்தவர்கள் காணமற்போன சம்பவங்கள் யுத்தத்திற்கு வெளியே இடம்பெற்றசம்பவங்கள்: 24 அக்டோபர் 2015 சனல்4 இல் காண்பிக்கப்பட்டவைகள், வெள்ளைக்கொடிவிவகாரம் மற்றும் சரணடைந்தவர்கள் காணமற்போனது போன்ற சம்பவங்கள், யுத்தத்திற்கு வெளியே, இடம்பெற்ற தனித்தனி சம்பவங்கள், இவை குறித்து முழுமையான முடிவிற்கு வருவதற்கு ஆழமான விசாரணைகள் அவசியம். மேலும் இந்த தவறுகள் பாதுகாப்பு படையினரால் இழைக்கப்பட்டவை என்ற முடிவிற்கு நாங்கள் எந்த தருணத்திலும் வரவில்லை என மக்ஸ்வெல்பரணகம தெரிவித்துள்ளார். இலங்கையின் தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை அரசாங்கம் தான் உருவாக்கவுள்ள பொறிமுறையில் வெளிநாட்டவர்களிற்கு எத்தகைய பங்களிப்பை வழங்கவேண்டும் என்…

  4. வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு இருக்கவில்லை என்றும், உயர்மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படியே அவ்வாறு நடைபெற்றது என்றும் கூறப்படுகின்றது. கட்டளையிட்டவர்களை விசாரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் அவசியம். இதற்கான பரிந்துரையையும் பரணகம குழு முன்வைத்துள்ளது." - இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கைக்கே உரித்தான பாணியில் உள்ளக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும் என்றும், அத்தகைய விசாரணைப்பொறிமுறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் கூறினார். இலங்கை விவகாரம் தொடர்ப…

  5. “ஐரோப்பிய திரைப்பட விழா – 2015” மட்டக்களப்பில் நடைபெற உள்ளது: சு.சந்திரகுமார்- 23 அக்டோபர் 2015 The Black Brothers: (2013) எட்டுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற சுவிட்சாலாந்து நாட்டு திரைப்படம். 19ம் நூற்றாண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஒரு பின்தங்கிய மலைக்கிராமத்தில் 14 வயதான ஜியோர்ஜியோ கஸ்டமான ஆனால் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை அவனது தாய் கடுமையான ஒரு விபத்தை எதிர்கொள்ளும் வரை வாழ்ந்து வருகிறான். அவனது தாயின் மருத்துவச் செலவுக்குரிய கட்டணத்தை செலுத்துவதற்கு அவனது தந்தைக்கு இருந்த ஒரே வழி அவனை தழும்புள்ள ஒரு மனிதனுக்கு 40 பிராங்குகளுக்கு விற்பதாகும். தழும்புள்ள மனிதன் மீண்டும் ஜியோர்ஜியோவை மிலான் நகரைச் சேர்ந்த செல்வந்த புகைபோக்கி துப்பரவு செய்யும் ஒரு ஒப்பந்தகாரனுக்…

  6. யாழில் 13 சதவீதத்தினரிடம் கணினிகள் உள்ளன - குணசேகரன் சுரேன் யாழ்.மாவட்டத்தில் வசிப்பவர்களில் 13.1 சதவீதமானவர்களிடம் சொந்தமாக கணினிகள் உள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்;ப்பாணத்தில் தற்போது 1 இலட்சத்து 90,150 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 17,722 பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் தனிநபர்களிடத்தில் 13.1 சதவீதத்தினரிடம் கணினிகள் உள்ளன. இதேவேளை, கம்பனிகள் உள்ளடங்களாக 13.8 சதவீத இணைய இணைப்புக்கள் உள்ளன. 9.1 சதவீதத்தினர் மின்னஞ்சல் உபயோகிக்கின்றனர். அத்துடன், 18.6 சதவீதத்தினர் கணினி அறிவுள்ளவர்களாக இருக்கின்றனர் என யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்;ப்பாணத்தில் கணினி தொடர்பான அறிவு அதிகரித்து, கணினி பயன்பாடுகள் அதிகரித்துள்ள…

  7. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். வெளிநாடொன்றுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த விமல் வீரவன்சவை, குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் தடுத்து வைத்திருந்ததை அடுத்து அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும் இரு கடவுச் சீட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவரை கைது செய்ததாகவும் கூறிய பொலிஸ் பேச்சாளர், விமல் வீரவன்சவை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் கூறினார் - See more at: http…

  8. வடக்கில் 5 இலட்சம் மரக்கன்றுகளை கார்த்திகையில் நடுவதற்குத் திட்டம் வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.10.2015) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்போதே இதனைத் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கில் மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு மிகப்பொருத்தமான மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. கார் என்பது மழையைக் குறிக்கும். அந்தவகையில், மழ…

    • 4 replies
    • 1.3k views
  9. யானைகளுக்கான புனர்வாழ்வு மையம் உலகிலேயே முதன் முறையாக காட்டு யானைகளைப் பாதுகாத்துப் பராமரிக்கும் மையமொன்று ஹொரவப்பொத்தானை தேசிய வனத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யானைகளுக்குப் புனர்வாழ்வளிக்கும் மையமொன்றாகவும், யானைகள் மனிதர்களுக்கு இடையிலான மோதல்களுக்குத் தீர்வொன்றை எட்டும் முகமாகவும், காத்திரமான அபிவிருத்திகள் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சரான காமினி ஜயவிக்கிரம பெரேராவின் ஆலோசனைக்கு அமைவாக இது திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 300 ஏக்கர்கள் விஸ்தீரணம் கொண்ட பிரதேசமொன்றில் காட்டு யானைகளைப் பாதுகாக்கும் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளதோடு அழிவுகளை ஏற்படுத்தும் முரட்டு யானைகள் மாத்திரம் இங்கு கொண்டுவரப்படவுள்ளன. http://onlineuthayan.com/news/1701

    • 2 replies
    • 355 views
  10. பாபர் வீதி தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது சர்ச்சைக்கு உள்ளான பாபர் வீதி தேர்திருவிழா நேற்றுக் காலை நடைபெற்றது. குறித்த பகுதியில் வாழும் இந்துக்களும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து பேச்சு நடைபெற்றன. குறித்த கலந்துரையாடலுக்கு அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தலைமை வகித்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மாகாணசபை உறுப்பினர்கள் சண்.குகவரதன், கே.டி.குருசாமி, மாநகரசபை உறுப்பினர்கள் பிரியாணி குணரத்ன, இக் பால், எஸ்.மகேஸ்வரன், தேசிய நல்லாட்சி இயக்க தலைவர் நஜாமுஹம்மத், வழக்கறிஞர் ருஷ்டி ஹபீப், பசூல்ஹாஜி, ஜ.ம.க. தலைமையக பொறுப்பாளர் லயன் மனோகரன், உதவி நிதிசெயலாளர் ஆனந்தகுமார் ஆ…

    • 2 replies
    • 594 views
  11. கைகூப்பி கவலை தெரி­வித்­த­தை­ய­டுத்து உபாலியை பிணையில் செல்ல அனு­ம­தித்த மன்று ; வெளி­நாடு சென்­றேனும் சட்­டத்தின் அமு­லாக்கல் தொடர்பில் கற்று வரவும் - நீதிவான் பொலி­ஸாரின் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்­த­தாக கூறி கைது செய்­யப்­பட்டு விளக்­க­மறி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த மேல் ­மா­காண சபை ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் உபாலி கொடி­கா­ரவை பிணையில் செல்ல நீதி­மன்றம் நேற்று அனு­ம­தித்­தது. நடந்த தவ­றுக்­காக கைகூப்பி கிரு­லப்­பனை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் வருத்தம் தெரி­வித்­ததைத் தொடர்ந்து 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­க­ளிலும் செல்ல கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பிலப்­பிட்­டி…

  12. இந்திய அமைதிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள் யாழில் அனுஸ்டிப்பு இந்திய அமைதிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை 10 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்திய அமைதிப்படையினர் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் உட்புகுந்து மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68 பேர் உயிரிழந்தனர். அதில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்…

  13. ஜெனீவாவை விட பரணகம அறிக்கை கடுமையானது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையை விட, இலங்கையினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைகள், அதிகம் கடுமையானவை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்தோடு, மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை வெளியாகுவதற்கு முன்னதாக பரணகமவின் அறிக்கை வெளியாகியிருந்தால், நிலைமை இன்னமும் மோசமாக மாறியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜெனீவா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில…

  14. பட்ஜெட்டில் 3100 கோடி கோருகின்றது இ.போ.ச இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஊழியர்களுக்கான மாதாந்தச் சம்பளம், ஊழியர் சேமலாபநிதி மற்றும் பணிக்கொடை ஆகியவற்றை ஒழுங்காக வழங்கக் கூடிய வகையிலும், அரச போக்குவரத்துச் சேவையைப் பலப்படுத்தவும் 2016 ஆம் ஆண்டின் வரவு- செலவுத் திட்டத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு 3,100 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கைப் போக்குவரத்துச்சபை ஊழியர்கள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கைவிடுத்துள்ளது. 2010 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச்சபை ஊழியர்களின் சேமலாப நிதியை வங்கியில் இடுவது உதாசீனப்படுத்தப்பட்டதன் காரணமாகத் தற்போது அதற்கு ஆயிரத்து 80 கோடி ரூபா தேவைப்படுவதாகத் தெரிவிக்கும் மேற்பட…

  15. சிங்கள ராஜ்ஜியத்தை ஏற்படுத்தினால் தமிழீழ ராஜ்ஜியம் உருவாக வழி வகுக்கும் (ஜே.ஜீ. ஸ்டீபன். ப.பன்னீர்செல்வம்) சிங்கள ராஜ்ஜியத்தை ஏற்படுத்த முயற்சித்தால் அது சர்வதேச ஆதரவுடன் தமிழீழ ராஜ்ஜியத்தை உருவாக்க வழி வகுக்கும் என சபையில் சூளூரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதிராஜா ஐ.நா. அறிக்கை எமக்கு முழுமையாக நம்பிக்கை தராவிடடாலும் ‘கலப்பு' உள்ளக விசாரணை என வலியுறுத்தப்பட்டுள்ளமை ஆறுதலளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கை மற்றும் அமெரிக்க தீர்மானம் தொடர்பிலான விவாதத்தில் உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த 20…

  16. விமல் வீரவன்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்ற அவர் பழைய கடவுச்சீட்டை எடுத்து சென்றுள்ளார். அந்தக் கடவுச்சீட்டு காணாமல் போயுள்ளதாக ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதனால், விமான நிலைய அதிகாரிகளால் அவருக்கு உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் புதிய கடவுச்சீட்டை எடுத்துவருமாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததுள்ளனர். பின்னர் வீட்டுக்கு சென்று புதிய கடவுச்சீட்டை எடுத்து வந்த அவரிடம் குற்ற…

  17. டெஸ்மன் டி சில்வாவுக்கு வழங்கிய கடிதங்கள் திருட்டு பரணகம ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட டெஸ்மன் டி சில்வா தலைமையிலான சர்வதேச ஆலோசனைக் குழு எவ்வித அறிக்கைகளையும் வெளியிடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடுகையிலேயே இதனைத் தெரிவித்தார். உடலகம, பரணகம ஆகிய ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகளை நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். இந்த நிலையில், டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கையொன்றையும் நான் சமர்ப்பிக்கவுள்ளேன் என்று ஊடகமொன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. டெஸ்மன் டி சில்வா அறிக்கையென எதுவும் இல்லை. பரணகம குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே டெஸ்மன் டி சில்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இவர்களிடம் இருந…

  18. ஜெனிவா தீர்மானத்தை புறக்கணிக்க முடியாது: சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் புறக்கணிக்க முடியாது எனவும், இலங்கையின் அரசமைப்புக்கு அமைவாக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார். ஐ.நா. தீர்மானம் தொடர்பில் சர்வகட்சிகளினதும் கருத்துக்களைக் கேட்டறிந்து கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வ கட்சிக் கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மூலமாக இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப…

  19. புத்தளத்தில் கோர விபத்து : இருவர் சாவு, 33பேர் படுகாயம் புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது. வென்னப்புவ டிப்போவுக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த டிப்பருமே இவ்வாறு மோதிக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள…

  20. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று 23 ஆம் திகதி 76 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். 1939 அக்டோபர் 23 ஆம் திகதி பிறந்த இவர், கொழும்பு றோயல் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு சட்டக்கல்லூரியிலும் படித்தவர். 1979 இல் சட்டத்துறையில் இணைந்த இவர், நாட்டின் பல பகுதிகளிலும் நீதிபதியாகப் பணியாற்றினார். 2001 ல் உச்ச நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்ற இவர், 2004 ல் ஓய்வு பெற்றார். வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட இவர், 2013 அக்டோபரில் முதலமைச்சராகப் பதவியேற்றார். http://www.thinakkural.lk/article.php?local/kt3lsycexy1257cd758e8f5912834nmuutdfdf06a852adad277986cahoysl#sthash.O7T8xP57.dpuf

  21. வடக்கு மக்களின் பாரியளவிலான காணிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையை சிலர் குற்ற விசாரணையாக அடையாளப்படுத்துகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தற்போதைய அரசாங்கம் சுமூகமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் நல்லாட்சிக்கான முனைப்புக்களை ஆரம்பித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய பெருமளவு காணிகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். http://www.globaltamil…

  22. அம்பாந்தோட்டை துறைமுக ஆரம்பநிகழ்வுகளில் பாரிய மோசடிகள் - ஊழல்கள் - அதிகார துஸ்பிரயோகங்கள்: 23 அக்டோபர் 2015 பிரபல நடனகலைஞர்களிடம் விசாரணை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- அம்பாந்தோட்டை துறைமுக ஆரம்பநிகழ்வுகள் 2010ம் ஆண்டு இடம்பெற்றவேளை 15 மில்லியன் செலவில் நடனநிகழ்ச்சிகள் இடம்பெற்றது குறித்து பாரதூரமான மோசடிகள் மற்றும் ஊழல்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பான ஐனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. பிரபல நடனகலைஞர்கள் சன்னா, உபுலியிடம் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.இருவரும் தங்கள் வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர் . எதிர்காலத்தில் அவர்களை அழைக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். துறைமுக ஆரம்பநிகழ…

  23. மனிதஉரிமை கண்காணிப்பக உயர் அதிகாரிகள் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்: 23 அக்டோபர் 2015 மனித உரிமை கண்காணிப்பக உயர் அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த அதிகாரிகள், பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்துள்ளனர். இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன குறித்து பேசப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்கள…

  24. கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே என்றழைக்கப்படும் கதிர்காமம் ஆலய பொறுப்பாளர் டி.பி.குமாரகே என்பவருக்கு அதிர்ஷ்ட இலாபச்சீட்டில் கிடைக்கப்பெற்ற சுமார் 20 இலட்சம் ரூபாயை, ஆலயத்துக்கே ஒப்படைத்துள்ளார். மேற்படி ஆலயத்துக்கு முன்பாக இருந்து வரும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனை நிலையத்தில் குறித்த ஆலயப் பொறுப்பாளர் 'மஹாஜன சம்பத' தேசிய லொத்தர் ஒன்றைப் பெற்றுள்ளார். கடந்த 16ஆம் திகதி குழுக்கப்பட்ட சீட்டிழுப்பில் இவருக்கு 20 இலட்சம் ரூபாய்க்கான அதிர்ஷ்டம் கிடைக்கப்பெற்றுள்ளது. கதிர்காமம் ஆலய பொறுப்பாளர் டி.பி.குமாரகே இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது, 'எனக்கு கிடைக்கப் பெற்ற பணத்தை ஆலய அறக்கட்டளை நிதியத்துக்கு ஒப்படைத்துள்ளேன். இதன் மூலம் யாத்திரிகளுக்கு உதவிகளைச் செய்ய முன்வந்து…

  25. "இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளையும், அந்தப் பரிந்துரைகளை ஆதரித்து ஐ.நாவில் அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளையும் அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுங்கள்.'' - இவ்வாறு அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் நாயகம் மிரோஸ்லாவ் ஜென்காவிடம் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் வலியுறுத்தினர். அத்துடன், தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.