Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து எந்தவித மக்கள் அபிமானமும் அற்ற நிலையில் நீக்கப்பட வேண்டும் என்று சில தரப்புக்கள் விரும்புகின்றன. அது, மிக அவசரமாக நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கருதுகின்றன. அதன்போக்கிலான நகர்வுகளின் பிரதிபலிப்புக்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் வெகுவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதிக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ மின்னஞ்சல் பரிமாற்றங்கள் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. வழமைபோல, தமிழ் ஊடகப் பரப்பு தன்னுடைய சார்பு நிலையினைப் பொறுத்து குறித்த விடயத்தைக் கையாண்டிருந்தது. அதாவது,…

  2. கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோருவதாக அப் பகுதி பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட கணவன்மாரை இழந்த பெண்களை பாலியல் ரீதியாக சுறண்டி அவர்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கும் இந்த நடவடிக்கை குறித்து பிரதேச பெண்கள் ஆவேசத்துடன் முறைப்பாடுளை மேற்கொண்டுள்ளனர். முழங்காவில் பகுதியில் இந்திய வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக தெரிவித்து பெண் ஒருவர் கிளிநொச்சி செஞ்சிலுவை சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் இணைந்து செயற்படுகின்றது. கடந்த 2012முதல் கிளிநொச்சி மு…

    • 7 replies
    • 579 views
  3. நாங்கள் குற்றவாளிகள் அல்ல - பிணையில் செல்ல அனுமதியுங்கள் மாணவி கொலை சந்தேக நபர்கள் நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜார் படுத்தப்பட்டனர். அதன் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என கேட்டே போதே அவர்கள் அவ்வாறு கோரிக்கை விடுத்து இருந்தனர். அது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் குற்றவாளிகள் அல்ல நாம் தொடர்ந்து கடந்த 5 மாதகா…

  4. யாழ். நீதிமன்ற முன் வீதி பாவனைக்குத் தடை யாழ் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் முன் வீதியினை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவிட்டார். யாழ் நீதிமன்ற கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான பிணை மனு விண்ணப்பம் கடந்த 7ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்த வீதியினை 150 மீற்றர் வரை மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தமுடியாது எனவும் நீதிமன்ற பகுதியில் 200 மீற்றர் பகுதிக்குள் பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு நீதிபதி ம…

  5. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு பொது மன்னிப்பு அளிக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் நேற்று திங்கட்கிழமை காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையிலேயே நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதியை சந்தித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அரசியல் கைதிகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆதரவளித்துள்ள நிலையில் அவர்களுக்காக போர…

    • 3 replies
    • 1k views
  6. வடக்கில் 78.4 சதுர கிலோ மீற்றர் பரப்பில் இன்னமும் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை வடக்கில் 78.4 சதுர கிலோ மீற்றர் பரப்பில் இன்னமும் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் முகாமையாளர் டேமியன் பிரான்ஸிஸ் ஓ பிரெய்ன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக ஜப்பான் 108 மில்லியன் ரூபாவினை உதவியாக வழங்கியுள்ளது. இந்த உதவி வழங்கும் நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகானுமாவும் பங்கேற்றிருந்தார். இந்த உதவியைக் கொண்டு தமது நிறுவனம் வடக்கில் 200,000மாம் நிலக்கண்ணி வெடியை அகற்றும் என பிரெய்ன் தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டு அளவில் நிலக்கண்ணி வெடியற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கு எடுக்கப்பட்டு வரும் முனைப்புக்கள்…

  7. மரபணு சோதனை அறிக்கையினை விரைவாக மன்றில் சமர்பிக்க சந்தேக நபர்கள் கோரிக்கை புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பலர் குற்றவாளிகளாக உள்ளதால் தான் மரபணு சோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்க தாமதமாவதாக நீதவான் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜார் படுத்தப்பட்டனர். அதன் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என கேட்ட போது சந்தேக நபர்களில் ஒருவர் ' எமது மரபணுக்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டு பின்னர் மீண்டும் இரண்டாம் தரமாக கடந்த ஒரு மாத காலத்திற்கு ம…

  8. மஹிந்தவுடனான உறவுகளைத் தொடரும் சீனா - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சீனா தொடர்ந்தும் உறவுகளைப் பேணி வருகின்றது. ராஜதந்திர ரீதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அண்மையில் சீனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு ஸென்மின், சீனாவின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியாக அங்கம் வகித்த வேளையில் சீன அதிகாரிகள் ராஜதந்திரிகள், இவ்வாறான சந்திபுக்களை நடத்தவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது. எனினும், இதனை நட்பு ரீதியான சந்திப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பேச்சாளர் ரொஹா…

  9. தம்புள்ள வங்கியில் எட்டு இலட்சம் ரூபாவைக் கொள்ளையிட்ட நபர் அதிகாரி ஒருவரையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் தப்பினார்! 2015-10-13 19:54:07 தம்புள்ள நகரின் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகிலுள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு, இன்று தலைக்கவசம் அணிந்து வந்த நபரொருவர் கைக்குண்டை காட்டி, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி சுமார் எட்டு இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். அத்துடன் வங்கி அதிகாரி ஒருவரையும் குறித்த நபர் கடத்திக் கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=12659#sthash.NYzZLMEA.dpuf

  10. மத்திய கொழும்பின் பாபர் வீதி இந்து கோவிலின் தேர்த்திருவிழா இடைநிறுத்தம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை இன்று இந்த குறிப்பிட்ட மகாவித்தியாலய மாவத்தை பிரச்சினை என்ற நிலைமாறி ஒரு தேசிய பிரச்சினையாக உருமாறி வருகிறது. இத்தகைய நிலைமை இன்று இந்த நாட்டுக்கு உகந்தது அல்ல. இந்த சூழலில் இது தொடர்பில் நாம் ஏட்டிக்கு போட்டியாக செயற்பட கூடாது. எனவே இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொறுப்பை நான் தற்போது கொழும்பு மாநகர முஸ்லிம் சமூக தலைவர்களிடம் விட்டுள்ளேன். இதுவே கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் இன, மதங்கள் இடையே தேசிய சகவாழ்வுக்கு பொறுப்பான தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சரவை அமைச்சர் என்ற முறையிலும் தற்போது நான் எடுக்க கூடிய பொறுப்புள்ள நிலைப்பாடு என…

  11. கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக அபகரிக்கப்படுவதற்காக 27 ஏக்கர் நிலப் பகுதியை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களும் மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். குறித்த பொதுமக்களின் காணியை இராணுவத்தினருக்காக சுவீகரிப்பதற்காக நாளை நில அளவை திணைக்களத்தினர் அளவீடு செய்யவுள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்புப் போராட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமிக்கவுள்ளமை தொடர்பிலும் இதற்கான அளவீடுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் பூநகரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்துள்ளனர். இதேவேளை பூநகரி பரமன்கிராய் வெட்டுக்காட்டுப் பகுதியில் சுமார் 17 ஏக்கர் நிலப்பகுதியை கட…

    • 2 replies
    • 1.3k views
  12. ஐ.நா தீர்மானத்தை செயற்படுத்த சாதகமாக பங்களிப்போம் - குளோபல் தமிழ் செய்தியாளர் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைத் தீர்வுத் திட்டம் தொடர்பில் அரசு தம்முடன் தனிப்பட்ட ரீதியில் பேசியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த விடயம் குறித்து உத்தியோகபூர்வமாக அரசுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதன் போது சமஷ்டி ஆட்சிமுறையின் அவசியம் குறித்தும் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். பல நாடுகளில் சமஷ்டி முறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதாக கூறியுள்ள இரா.சம்பந்தன் இலங்கையின் பார்வையில் சமஷ்டி என்ற பதம் சில …

  13. தென்னாபிரிக்கா பயணமாகிறது அரச உயர் குழு இலங்கையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறையின் ஒரு அங்கமான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய இலங்கை அரசின் உயர்மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்லவுள்ளது. தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னர், அமைக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவே அரசின் உயர் மட்டக்குழு அங்கு செல்லவுள்ளது. இலங்கையில் உருவாக்கப்படவுள்ள இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில், மதத் தலைவர் களைக் கொண்ட ஒரு கருணைச் சபையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடுகளை வழங்குவதற்கான ஒரு குழுவும் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் இந்த உண்மை மற்றும்…

  14. நெடுந்தீவுச் சிறுமி கொலை வழக்கு: மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமி வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான மரபணுப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்குத் தற்போது கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை நீதிமன்றில் அந்த வழக்குத் தொடர்பில் சுருக்க முறையற்ற விசா ரணை இடம்பெற்று வருகிறது. நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி 2012 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவ தினம் சந்தைக்குச் சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை. அதன் பின்னர் வெற் றுக்காணி ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சம்பவத்துட…

  15. யாழ்.மறைமாவட்ட ஆயராக ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் நியமனம் யாழ்.மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை ஜஸ்ரின் பி.ஞானப்பிரகாசம் பாப்பாண்டவரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனம் குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் வைத்த ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். யாழ்.மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி ஆகியவற்றின் அதிபராகக் கடமையாற்றியதுடன் யாழ்.ஆயர் இல்லத்தின் குருமுதல்வராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/1173

  16. அரசியல் கைதிகளின் விடுதலை நல்லிணக்கத்திற்கான முதல் அத்திவாரம் : சரவணபவன் எம்.பி பல வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பில் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என,யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். நல்லூர் முன்றலில் இன்றைய தினம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண இளையொர் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், அரசியல் கைதிகள் ஏதாவதொரு பொறிமுறையின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். அதில் முக்கியமாக பொதுமன்னிப்புத் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியதுமான சக்தியாக அமையும்.…

  17. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் யாழில் வடமாகாண இளையோர் அமைப்பால் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் நல்லூர் முன்றலில் காலை 8மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்தில் யாழ் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன், கஜதீபன், பரஞ்சோதி , அஸ்மின், மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான தவராசா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரத போரட்டத்தை நேற்று ஆரம்பித்து இன்று 2ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/…

  18. இலங்கை விசாரணைப் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது – பிரித்தானியா:- 13 அக்டோபர் 2015 இலங்கை விசாரணைப் பொறிமுறைமயில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பும் உள்ளடக்கப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அலுவலக அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பின் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்…

  19. குழப்பத்தின் உச்சத்தில் மஹிந்த! [ செவ்வாய்க்கிழமை, 13 ஒக்ரோபர் 2015, 02:27.46 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிடுகின்ற கருத்துக்களின் மூலம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மை தகவல்கள் வெளியாகும் நிலை உருவாகியுள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தன்னை காட்டிகொடுப்பதற்கு தன்னுடன் இருந்தவர்களே செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறிய அனைத்தும் சந்தேகத்திற்குரியவைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ச தவறு செய்யாதவர் என்றால் எதற்கு காட்டிகொடுப்பிற்கு பயப்பட வேண்டும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதுவரையில் கடந்த காலங்களில் மே…

  20. கோத்தபாயவின் வெள்ளை வான் கடத்தல்! அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம் [ செவ்வாய்க்கிழமை, 13 ஒக்ரோபர் 2015, 04:35.42 AM GMT ] கடந்த காலங்களில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் தெற்கில் செயற்படுத்திய வெள்ளை வான் கடத்தலுக்காக, 3 குழுக்கள் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மூன்று குழுக்களில் முதல் குழு, கடத்தி செல்லப்படும் நபர் தொடர்பில் தகவல் சேகரித்தல் மற்றும் புலனாய்வு செய்து கடத்தி செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல். அதற்காக பாதுகாப்பு புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் மற்றும் விடுதலை புலிகளில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது குழு கடத்தலை மேற்கொள்கின்ற குழுவாகும். வெள்ளை வான்களில் வரும் இந்தக் குழுக்குவுக்கு அதிகமான…

  21. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தம்மை அறிவித்துக்கொண்டுள்ள மஹிந்த ஆதரவு அணியினர் ஜெனிவா பிரேரணைக்கு எதிராக நாடு முழுவதும் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறப்போவதாகவும் மஹிந்த அணியினர் சூளுரைத்துள்ளனர். எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் அமெரிக்கப் பிரேரணைக்கு எதிராக பாரிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. மஹிந்த ஆதரவு அணியினர் நேற்று கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன விமல் வீரவங்ச மற்றும் உதய கம்ம…

  22. வட­ப­கு­திக்­கான ரயில் சேவை நேரங்கள் நேற்று முதல் மாற்­றப்­பட்­டுள்­ள­தாக ரயில்வே திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பாணம் செல்லும் யாழ். தேவி காலை 6.25 மணிக்கு கோட்­டை­யி­லி­ருந்து புறப்­படும். யாழ்ப்­பாணம் – கொழும்பு யாழ். தேவி ரயில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து காலை 6.25 மணிக்கு புறப்­படும். காங்­கே­சன்­துறை – கொழும்பு நக­ரங்­க­ளுக்­கி­டை­யி­லான ரயில் காலை 5.30 மணிக்கு புறப்­படும். கொழும்பு – தலை­மன்னார் ரயில் இரவு 7.15 மணிக்கு புறப்­படும். யாழ்ப்­பாணம் நோக்கிச் செல்லும் இரவு தபால் ரயில் இரவு 8.05 மணிக்கு புறப்­படும். திரு­கோ­ண­ம­லைக்­கான இரவு தபால் ரயில் இரவு 9.30 மணிக்கு புறப்படும். http://metronews.lk/article.php?category=news&n…

  23. தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு சர்வதேச சமூகம் தமிழ் தரப்புக்களும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணை எதுவமின்றி இலங்கைச் சிறைகளில் நீண்ட நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124804/language/ta-IN/articl…

    • 3 replies
    • 1.6k views
  24. ஐ.நா பரிந்துரைகளுக்கமைய விசாரணை நடைபெறுகின்றதா என்பதை கண்காணிப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கண்காணிப்புக் குழுவொன்றை உருவாக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'போரினால் வடமாகாண அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றவகையில், இந்தக் குழு, வடமாகாண முதலமைச்சரால் உருவாக்கப்படவேண்டும். பரிந்துரைகள் நடைபெறுவதைக் கண்காணிப்பதுடன், வெளிநாட்டு கண்காணிப்பாளர்களிடம், இங்குள்ள தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் தெரியப்படுத்த வேண்டும். தமிழர…

  25. மரண தண்டனை அமுலாக்கம் குறித்த யோசனையை ஹிருனிகா இன்று சமர்ப்பிக்க உள்ளார் மரண தண்டனை அமுலாக்கம் குறித்த யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இன்றைய தினம் பாராளுமன்றில் தனிப்பட்ட உறுப்பினர் யோசனையை சமர்ப்பிக்க உள்ளார். உத்தேச பிரேரணை இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த உத்தேச யோசனையை சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தமக்கு அழைப்பு விடுத்ததாக ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் அது பகிரங்க வாக்கெடுப்பாக அமைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். சேயா சிறுமி கொலை செய்யப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் மரண தண்டனையை மீள அமுல்படு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.