Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்க முயற்சிக்கிறோம் : வூட்லர் சட்டவிரோத செயல்களற்ற அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கே தாம் முயற்சித்து வருவதாக, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார். யாழ். புனித மரியாள் வித்தியாலயத்தில், இடம்பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே, இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலை நிறைவடைந்ததும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும். தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடக்கூடாது. அவ்வாறு பிரச்சினைகள் ஏதும் இடம்பெற்று கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது. உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் குறிப்பிட்டார். மேலும், 'பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது …

    • 4 replies
    • 703 views
  2. இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அதியுச்ச தண்டனை : இளஞ்செழியன் மக்களையும் நாட்டையும் பாதுகாக்கச் சென்ற காவலர்களே குற்றம் புரிந்து இந்த வழக்கில் எதிரிகளாக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் இராணுவச் சிப்பாய்களாவர். இவர்கள் இந்தச் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில், கிளிநொச்சி விசுவமடு பிரதேசத்தில் நாட்டின் பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக,இராணுவ உத்தியோகத்தர்களாக கடமைக்காக அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டிருந்தார்கள். அவ்வாறாக தேசிய பாதுகாப்பு கடமைக்காக அனுப்பப்பட்டிருந்த போதே, இவர்கள் தங்களுடைய இராணுவ முகாமில் இருந்து வெளியேறிச் சென்று, கூட்டுப்பாலியல் மற்றும் பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்செயலைப் புரிந்திருக்கி…

    • 9 replies
    • 890 views
  3. ஆயுதங்களை ஏற்றிச்சென்ற கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் மீட்பு– மாலுமி இலங்கையர் என ஆவணம் தெரிவிப்பு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலொன்று இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார். இலங்கைக் கொடியுடன் இந்த கப்பல் பயணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிக்கிழமை காலி கடற்பரப்பில் வைத்து இந்தக் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. இலங்கைக் கொடியுடன் பறந்த இந்த கப்பலில் 810 ஆயுதங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கப்பல் காலி துறைமுகத்தில் தரித்து நிற்பதாகவும் விசாரணைகள் முடியும் வரையில் கப்பல் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கு…

  4. தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்து விட்டது - ரணில் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு, இலங்கை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல், நிறுவனக் கட்டமைப்பை பலப்படுத்துதல் என்பன அரசியல் நோக்கங்களின் பிரதானமாக காணப்படுகின்றது. எனினும், தேசிய ஒற்றுமை மற்றும் மத, இனப் பிரச்சினை தொடர்பாக விடயங்களுக்கு அரசியல் தீர்வுகளை தேடுவதே முக்கிய விடயமாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=73323

  5. யாழ்.புனித பொஸ்கோ வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு விழா யாழ். புனித பொஸ்கோ வித்தியாலத்தின் 60ஆவது ஆண்டு நிகழ்வுகள் நேற்று வித்தியாலய அதிபர் மரிய ஜீவந்தினி தலைமையில் நடைபெற்றது. புனித பொஸ்கோ வித்தியாலயம் 60 ஆவது ஆண்டில் காலடிபதித்துள்ள நிலையில் பல சாதனைகளையும் வரலாறுகளையும் படைத்த வித்தியாலயமாக காணப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் குறித்த நிகழ்வின் போது மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் 60ஆண்டில் காலடிபதித்துள்ள வித்தியாலயத்தின் மலர் வெளியீடும் இடம்பெற்றது.குறித்த மலர் வெளியீட்டை முதலமைச்சர் வெளியீட்டு வைத்தார். குறித்த மலரின் முதற்பிரதியை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக…

  6. சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு : நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம் இனந்தெரியாத ரௌவுடிக் கும்பலொன்று பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டிலிருந்தவர்களை தாக்கியமைக் கண்டித்து, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி, பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரண்டு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டிருந்ததுடன் அவர்களில் ஒரு தரப்பினர், சட்டத்தரணியின் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலுள்ளவர்களை துன்புறுத்தி, வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியிருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள், நீதிமன்றங்களுக்கு செல்லாது பணிப்புறக்கணிப்பு போராட…

  7. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோர் இராணுவ புலனாய்வுப் பிரிவினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்த விசாரணை அதிகாரி, ரவிராஜ் கொலையின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டுள்ள சரண் என்பவரை சுவிசர்லாந்திலிருந்து அழைத்துவருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குறித்த நபர் சுவிசர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியிருக்கின்றார். ஆனால் அவருக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவில்லை. அவரை இலங்கைக்கு அழைத்துவர நீதிமன்ற அழைப்பாணை தேவைப்படுகின்றது. இதேவேளை ஊடகவியலாளர் பிரகீத், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோர் பு…

  8. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான யோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் (பிள்ளையான் குழு) முக்கிய பிரமுகர்களான பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 25 ஆம் திகதி மட்டக்களப்பு சென். மேரிஸ் தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்றப்புலனாய்வுத் துறை கடந்த ஆட்சிகாலத்தில் விசாரணைகளை கைவிட்டிருந்தது. ஆட்சி மாற்றத்துடன் விசாரணைகள் மீளவும் …

  9. புலிகள் காலத்தில் வடக்கிலிருந்த பாதுகாப்பு இன்றில்லை : சித்தார்த்தன் எம்.பி வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இருந்த பாதுகாப்பு தற்போது இல்லை என்று தெரிவித்துள்ள புளொட் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் அப்போது சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அக்காலத்தில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கும் எந்த வித அச்சமுமின்றி பெண்கள் தனியாக செல்லக்கூடிய நிலமை இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர் அவர்களின் பாதுகாப்பு அன்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நிலமை இன்று இல்லாமைக்கு வடக்கில் சட்டம் ஒழுங்கு சரியான முறையில் கடைப்பிடிக்காமையே காரணம் என்றும் அவர் சுட்டிக்…

  10. ஐக்கிய நாடுகளவையின் திட்டத்தின் கீழ் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கென ஒதுக்கியுள்ள 150 கோடி ரூபாய்கள் நிதியை தனது தனிப்பட்ட நலனிற்காகத் தள்ளிவருகின்றார் வட மாகாண முதலமைச்சர் என்பதை ஐக்கிய நாடுகளவையின் ஒரு கடிதம் வெளிக் கொண்டு வந்துள்ளது. தனது மருமகனை இந்த மீள் குடியேற்ற நிதிச் செலவீனத்திற்கான “விசேட ஆலோசகர்” பதவிக்கு நியமிக்க வேண்டுமென்பதே அவர் ஐக்கிய நாடுகளவைக்கு முதலமைச்சர் முன்வைத்துள்ள “கடும்” நிபந்தனையாகும். நிர்மலன் கார்த்திகேயன் என்பதே இவரது மருகனின் பெயர் என்றும் அவரிற்கான ஊதியமாக மாதமொன்றிற்கு ஏழு லட்சம் ரூபாய்களும் அவருடைய போக்குவரத்து, குடியிருப்பு, இதர செலவுகளும் வழங்கப்பட வேண்டுமென முதலமைச்சர் நிபந்தனை விதிக்கதாக ஐக்கிய நாடுகளைவையை மேற்…

    • 11 replies
    • 997 views
  11. விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை : இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு கிளிநொச்சி விசுவமடு கூட்டுறவுப் பாலியல் வல்லறுவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 5 பிள்ளைகளின் தாயார் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். நள்ளிரவு வேளையில் பாதுகாப்பற்ற தற்கா…

  12. ஏழாலை மயிலணிப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அட்டகாசம் புரிய முற்பட்ட 5 பேர் கொண்ட கும்பலை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிளில் வாள்கள், கத்திகளுடன் மயிலணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் கும்பலொன்று நுழைய முற்பட்டுள்ளது. எனினும், வீட்டிலிருந்தவர்கள் சத்தமிட்டு அயலவர்கள் கூடியமையால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளது. இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொறுப்பதிகாரி துஸ்மந்த தலைமையிலான பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன்போது, அந்தக் கும்பல் மீண்டும், அந்த வீட்டுக்குள் நுழைய முற்பட்ட வேளையில் பொலிஸார் அவர்களில் ஐவரைக் கைது செய்தன…

    • 2 replies
    • 637 views
  13. பப்பாசிப்பழ ஏற்றுமதியில் வவுனியா விவசாயிகள் சாதனை : நடப்பு ஆண்டில் 7 கோடி ரூபாவுக்கு விற்பனை பப்பாசிப்பழ ஏற்றுமதியில் வவுனியா வடக்கு விவசாயிகள் அபார சாதனை படைத்திருக்கிறார்கள். நடப்பு 2015 ஆம் ஆண்டில் 7 கோடி ரூபாவுக்குப் பப்பாசிப்பழ விற்பனை இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கில் பப்பாசிச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தனித்தனியாகப் பிரிந்து நின்று இயங்காமல் பழச் செய்கையாளர் கூட்டுறவு அமைப்பாகச் செயற்பட்டதாலேயே இது சாத்தியமாகியது. இது கூட்டுறவுக்குக் கிடைத்த ஒரு வெற்றி என்று வடக்கு விவசாய மற்றும் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பெருமையோடு தெரிவித்துள்ளார். வவுனியா முத்தையா மண்டபத்தில் சர்வதேச கூட்டுறவாளர்தின விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (04.10.2015) கொண்…

  14. யாழில் ஆசிரியர் அடித்துக் கொலை : இருவருக்கு தொடர் விளக்கமறியல் யாழ்.நகரப் பகுதியில் வைத்து தம்பதிகள் மீது மோசமான தாக்குதலை மேற்கொண்டு கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ஆம் திகதி யாழ்.மணிக்கூட்டு வீதியினைச் சேர்ந்த யாழ்.நகரப் பாடசாலையில் பணியாற்றும் மாதவமணிவண்ணன்(44) திருமதி எம்.தர்சினி எனும் தம்பதிகள் சில காடையர்களால் தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இவர்களில் மாதவமணிவண்ணன் சிகிச்சை பலனின்றி கடந்த 23ஆம் திகதி உயிரிழந்தார். இதனையடுத்து குறித்த தம்பதிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இரகசிய …

  15. வடக்கில் சம்பந்தன் கலந்துகொண்ட நிகழ்வுகளைப் புறக்கணித்த முதலமைச்சரும் அமைச்சர்களும்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற பின்னர் வடக்கிற்கு முதல் தடவையாக கடந்த வாரம் வந்திருந்தார். அவர் இங்கு மூன்று நாள் தங்கி நின்று பல்வேறு நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்துகொண்டார். முதல் நாள் தந்தை செல்வா நினைவுத்தூபிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின் நல்லூருக்குச் சென்று வழிபட்டார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற சம்பந்தனுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மறுநாட்களில் வலி.வடக்கு பிரதேசத்துக்கு சென்ற சம்பந்தன் அண்மையில் மீள்குடியேறிய மக்களை சந்தித்து உரையாடினார். அத்துடன் மாவிட்டபுரம்…

    • 4 replies
    • 1.3k views
  16. தனித்து வாழவே தமிழர் விருப்பம்:வடக்கு முதலமைச்சர் எமது மக்கள் கொடிகளாகப் பெரும்பான்மையினருடன் இணைந்து வாழ்வதை விரும்பவில்லை. பெரும்பான்மையினர்கள் தனிமரங்களாக வாழ்வதைப் போன்று தாமும் தனி மரங்களாக வாழ்வதையே எமது மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக, வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பெரும்பான்மையின மக்கள் மரமாகவும் சிறுபான்மையின மக்கள் கொடியாகவும் இணைந்து வாழ் வதே தேசிய ஒருமைப்பாடு என்ற எண்ணம் இந்த நாட்டில் பலர் மத்தி யிலும் இருந்து வந்திருக்கின்றது. வடக்கு - கிழக்கு மாகாண மக்கள் அதை ஏற்கவில்லை. ஏற்கவும் முடி யாது. காரணம் சரித்திர ரீதியாக பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசும் வட - கிழக்கு மாகாண மக்கள் இந்தப் பிரதேசங்களில் ப…

    • 3 replies
    • 1.3k views
  17. வெலிக்கடை சிறைச்சாலை தூக்குமரம் உயிர் பெறுகிறது வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பழைய தூக்குமரம் தற்சமயம் பழுதுபார்க்கப்பட்டுவருவதாக சிறைச்சாலைகள் தலைமையகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 40 வருடங்களாக செயற்படாமல் இருந்த இந்தத் தூக்கு மரத்தைப் பழுதுபார்க்க 50 ஆயிரம் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தூக்குத்தண்டனை அரசால் நடைமுறைப்படுத்தப்படும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதனை நிறை வேற்றத் தயாராக இருப்பதற்காகவே இந்த பழுதுபார்ப்பு வேலை நடந்து வருவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்ததும் தூக்குத்தண்டனை நடைமுறைக்கு வருமென ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்த கருத்தின் அடிப்படையிலேயே தூக்குமரம் …

  18. மகிந்த மீது இன்னமும் ஊடகங்களுக்கு அச்சம்:லக்ஸ்மன் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச மீது ஊடகங்கள் இன்னமும் அச்சம் கொண்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார் . கண்டியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், மனித உரிமைகள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்த முதலில் இணங்கியவர் மகிந்த ராஜபக்ச தான் என்று ஒரு நாளிதழுக்கு அளித்திருந்த செவ்வியில் நான் குறிப் பிட்டிருந்தேன். அந்த நாளிதழ், செவ்வியின் அந்தப் பகுதியைப் பிரசுரிக்கவில்லை. மகிந்த ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிட்டபோது சில ஊடகவியலாளர்கள் அவருக்கு எதிராக எதையும் கூறவோ, பிரசுரிக்கவோ பயப்படுவதாகத் தெரிவித்தனர். 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைக்கு வந்தி…

  19. ஜனாதிபதியை வரவேற்றார் சி.வி தேசிய உணவு வழங்கல் வாரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிளிநொச்சி வட்டக்கச்சியில் வைத்து இன்று திங்கட்கிழமை (05) ஆரம்பித்து வைத்தார். இந்த வைபவத்துக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றார். (படப்பிடிப்பு: ரொமேஷ் மதுசங்க) - See more at: http://www.tamilmirror.lk/155745/ஜன-த-பத-ய-வரவ-ற-ற-ர-ச-வ-#sthash.iWairJKv.dpuf

    • 8 replies
    • 1.9k views
  20. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உல்லாசபிரயாணிகளின் வருகை 36 வீதத்தால் அதிகரிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு கடந்த செப்டெம்பர் மாதம் வருகைதந்த உல்லாசபிரயாணிகள் 36 வீதமாக அதிகரித்துள்ளது. அதற்கமைய கடந்த செப்டெம்பர் மாதம் 143,374 உல்லாசப்பிரயாணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர் என இலங்கை உல்லாசப்பிரயாணத்துறை அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ளன என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் இலங்கைக்கு அதிகமாக சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உல்லாசப்பிரயாணிகளே வருகைத்தந்துள்ளனர். செப்டெம்பரில் இலங்கைக்கு 41 சதவீதமான இந்தியர்களும் 54 வீதமான சீனர்களும் வருகைத்தந்துள்ளனர். கடந்த 9 மாதங்களில் இலங்கைக்கு 1,315,000இற்கும் அதிகமான உல்லாசப்பிரயாணிக…

  21. ஜனநாயகம் என்றால் அங்கு நீதி இருக்க வேண்டும். அடிமைத்தனம் என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது. எனினும் எங்கள் நாட்டில் ஜனநாயகம் என்பது எப்படி இருந்தது-இருக்கிறது என்பது தெரிந்த விடயமே. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் அண்மையில் ஜெனிவாவில் நடந்தபோது அங்கு இலங்கை தொடர்பிலான அமெரிக்கத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. இத் தீர்மானம் இலங்கை அரசுடன் சேர்ந்து தயாரிக்கப்பட்டது என்பது தெரிந்த உண்மை. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி யைத் தரக்கூடிய தீர்மானமே தேவையாயினும் அவ்வாறானதொரு முடிபை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூடியிருந்த நாடுகளால் எடுக்க முடியாமல் போயிற்று. ஆக, வல்லவன் பம்பரம் மணலிலும் சுற்றுவதாகத்தான் நிலைமை எங்கும் உள்ளது. இது ஒரு புறம் இருக்க, ஜனாத…

    • 0 replies
    • 397 views
  22. (2ம் இணைப்பு) 2015க்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபெறுகள் வெளியீடு - மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம் [ புதன்கிழமை, 07 ஒக்ரோபர் 2015, 12:27.03 AM GMT ] 2015ம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின. இந்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது இந்தநிலையில் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்க்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம் 2015ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட மட்டத்திலான தேசியப் பாடசாலை அனுமதி புள்ளிகளும் வெளியாகியுள்ளன. இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆக…

  23. இல்லத்தை புனரமைக்க 18 கோடி ரூபா கேட்கிறது அரசாங்கம்! [Wednesday 2015-10-07 07:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய இல்லத்தை புனரமைப்பதற்கு 18 கோடி ரூபா தேவைப்படுவதாக நாடாளுமன்றில் குறைநிரப்புப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் புதிய இல்லத்தை புனரமைத்தல், கட்டிட நிர்மானம் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு வாகனக் கொள்வனவு ஆகியனவற்றுக்காக மொத்தமாக 25 கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்ய குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய இல்லத்தை புனரமைப்பதற்கு 18 கோடி ரூபா தேவைப்படுவதாக நாடாளுமன்றில் குறைநிரப்புப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் புதிய இல்லத்தை புனரமைத்தல், கட்டிட நிர்மானம் மற்றும…

  24. கொழும்பில் இன்று நடைபெற்ற சர்வதேச மரதன் ஓட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டார். இந்த மரதன் ஓட்டம் இன்று காலை கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் ஆரம்பமாகி ஒருகொடவத்தை சந்தியில் நிறைவடைந்தது. 5 கிலோமீட்டர் தூர மரதன் ஓட்டத்தில் இணைந்த மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்ட தூரத்தை 50 நிமிடத்தில் ஓடி நிறைவு செய்துள்ளார். ஓட்டப்போட்டியில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=141641&category=TamilNews&language=tamil

    • 6 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.