ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு kugenOctober 12, 2024 தமிழ் தேசிய பரப்பில் கொலை செய்யாதவர்கள், கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக்கொடுக்காதவர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர். ஏனைய கட்சிகளில் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்…
-
- 0 replies
- 373 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் 4 உறுப்பினர்கள் தெரிவுக்கு 217 வேட்பாளர்கள் போட்டி -03 கட்சிகள், 03 சுயேச்சைக் குழுக்கள் நிராகரிப்பு திருகோணமலை மாவட்டத்தில் 04 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக களத்தில் 17 கட்சிகளின் சார்பில் 119 வேட்பாளர்களும், 14 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 98 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். அத்துடன் இம்முறை கட்சிகள் பல பிரிந்து புதிய அணிகளாக போட்டியிடுவதால் மாவட்டத்தில் கடும் போட்டி நிலை உருவாகியுள்ளது. 20 கட்சிகள் வேட்புமனுவை கையளித்த போதும் அவற்றில் 03 கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், 03 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. …
-
- 1 reply
- 228 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் தனது சொத்துக்கள் குறித்த கணக்குகளை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (Commission to Investigate Allegations of Bribery or Corruption)அறிவித்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொத்துப் பிரகடனங்களை மீள சமர்ப்பிக்க வேண்டும் என புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சொத்துப் பொறுப்பு அறிக்கையை வழங்கத் தொடங்கியுள்ளனர். சொத்துக்கள் மற்றும் கடன்கள் பொதுவாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் போது,…
-
- 0 replies
- 471 views
- 1 follower
-
-
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குருவில்வான் கிராமத்தில் வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினால் அமைக்கப்பட்ட புதிய வீடு இன்று சனிக்கிழமை (12) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு குறித்த குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 10 வது கெமுனு கோவா படைப் பிரிவினால் அமைக்கப்பட்ட குறித்த வீடு தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.பி.ஏ.ஆர்.பி ராஜபக்ஷ தலைமையில் திறப்பு விழா இடம்பெற்றது. இதன் போது குறித்த வீட்டை இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல், ஜே.பி.சி.பீரிஸ் வைபவ ரீதியாக திறந்து வைத்து குறித்த குடும்பத்திடம் கையளித்தார். மேலும் குறித்த வீட்டு வளாகத்தில் மர நட…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் இன்று சனிக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் கசிப்பினை எடுத்துச் சென்றவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/196117
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர் தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் மோசடி செய்து மாகாண சபையில் அமைச்சராக இருந்து இடைநிறுத்தப்பட்டவரே தற்போது வன்னி வேட்பாளரெனவும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் (S. Sivamohan) குற்றம்சாட்டியுள்ளார். குறித்த விடயத்தை இன்று (12) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்முறை தேர்தலில் தமிழரசுக்கட்சி வன்னியிலும் யாழிலும் ஆறு ஆசனங்களை வெல்லக்கூடிய சூழல் இருந்தது ஆனால் இன்று சுயநலவாதிகளின…
-
-
- 7 replies
- 604 views
-
-
யாழ்ப்பாணம் - வல்வை பாலத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை (11) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை, முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர். உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https:…
-
- 0 replies
- 670 views
- 1 follower
-
-
ஊடகவியலாளர் சிவராம் படுகொலை லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை உட்பட் முக்கிய ஏழு சம்பவங்கள் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகளையும் தீவிரப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/196135
-
-
- 37 replies
- 2.4k views
- 1 follower
-
-
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் நாங்கள் வெற்றியடைவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். ” இலங்கை தமிழரசுக் கட்சியால் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (நேற்…
-
-
- 6 replies
- 648 views
-
-
நாம் ஒரு பலமான எதிர்க்கட்சியாக வருவோம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சர்வஜன அதிகார கட்சியானது, நாடு முழுவதும் அதிகளவிலான ஆசனங்களைப் பெற்று ஒரு பலமான எதிர்க்கட்சியாக செயற்பட்டு, நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவோம் எனவும் அக்கட்சியின் புத்தளம் மாவட்ட தலைமை வேட்பாளரான சிலாபம் நகர சபையின் முன்னாள் பிரதித் தலைவரும், சட்டத்தரணியுமான சாதிக்குள் அமீன் தெரிவித்தார். பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பதக்கம் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் சர்வஜன அதிகாரம் கட்சியின் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந…
-
- 1 reply
- 292 views
-
-
(எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவிகளிடம் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கடிதம் மூலம் முறைப்பாடு அளித்துள்ளனர். பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இரண்டு ஆசிரியர்கள், பெண்பிள்ளைகளை பாடசாலையின் தனிப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்று விசாரிப்பது, முறையற்ற தொடுகைகளில் ஈடுபட்டது என பெற்றோர்கள் முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த முறைப்பாட்டுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இந்த பிள…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
தமிழர்களுக்கு எதிராக தமது உறுப்பினர்களை உள்நுழைய வைத்து யுத்தத்தை தீவிரப்படுத்தியதோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றியவர்களும் மக்கள் விடுதலை முன்னணியினரே. இவர்களின் காலத்தில் அரசியல் தீர்வுக்கும் வழியில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் இன்று (12) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல் எனும் தலைப்பிலான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51/1 இலக்க தீர்மானத்தினை ஏற்க மாட்டோம…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (11) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவை (ஓய்வு) இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்தார். சம்பத் துய்யகொந்தவுக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. சந்திப்பின் போது தூதுவருடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டார். இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கோஸ்டாவும் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/196090
-
- 0 replies
- 563 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்துவரும் ஒவ்வொரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று விட முடியும் என்று எண்ணுவது தவறான நிலைப்பாடாகும். கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறி விட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் யாரை பாராளுமன்றத்தை அனுப்புவது என்பதை தலைமை பீடம் தெரிவு செய்வதற்கு இது சீனா அல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தல் , மாகாணசபைத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நிலைப்பாடு பெரும்பாலானோர…
-
- 1 reply
- 269 views
- 1 follower
-
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் (USAID) நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (11) இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது. பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கருத்துப் பரிமாறப்பட்டதுடன், எதிர்காலத்தில் இலங்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் கொள்கைகளுக…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
சங்கு சின்னமும் அரசியலில் அறமும்! October 11, 2024 சங்கு சின்னத்தை முன்வைத்து பொதுச் சபையினர் ஆங்காங்கே அறம் பற்றி பேச முற்படுவதாகத் தெரிகின்றது. அவர்கள் அவ்வாறு பேசுவது சரியானதா – அதற்கான தார்மீக தகுதி அவர்களுக்கு உண்டா? சங்கு சின்னத்தை ஒரு தேர்தல் தந்திரமாகவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எடுத்திருக்கின்றனர். தேர்தல் என்றால் ஒவ்வொரு கட்சியும் தங்களது வெற்றி பற்றியே சிந்திக்கும். இதில், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சங்கு சின்னத்தை எடுத்திருக்கும் அரசியல் கட்சிகள் தங்களின் நியாயத்தை கூறுகின்றனர். குறிப்பாக, பொதுச் சபையின் சார்பில் பங்கு கொண்ட…
-
-
- 6 replies
- 437 views
-
-
கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (10) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அதற்கமைய ஐந்து ஏக்கரை விட குறைவான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளதுடன், அதற்கென ஒழுங்கான பொறிமுறைமையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(10) பிற்பகல் சந்தித்த போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்ற…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் தீர்மானித்துள்ளனர். அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியான பின்னர் எங்கு தங்கியிருக்கின்றார் என்பது தொடர்பில் பலரும் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி, ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தவில்லை என தெரிவந்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்க தான் இதுவரையில் தங்கியிருந்த வீட்டிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தனது தனிப்பட்ட தேவைக்கு ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தப்போவதில்லை எனவும் ஜனாதிபதி செயலக விடயங்கள் மற்றும் பணி விடயங்களுக்கு மட்டுமே அதனை பயன்படுத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பிரதமரும் அலரி…
-
- 1 reply
- 206 views
- 1 follower
-
-
பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. அவர் பயன்படுத்திய வாகனம், ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் பதிவு செய்யப்படாத இலக்கத்தில் பயணித்ததாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்த உண்மைகளை சுட்டிக்காட்டி கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த காரை யார் இலங்கைக்கு கொண்டு வந்தனர், எப்போது, யார் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறி…
-
-
- 15 replies
- 12.8k views
- 1 follower
-
-
ராஜபக்சர்களின் பணம் உகண்டாவில் அல்ல உலகில் எந்த நாட்டில் பதுக்கி வைத்திருந்தாலும் அவை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியதுடன் மேலும் கருத்து வெளியிடுகையில், உகண்டாவில் ராஜபக்சர்கள் பணத்தை பதுக்கி வைத்திருந்தால் அவற்றை நாட்டுக்கு கொண்டுவருமாறு நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். உகண்டா அல்ல உலகில் எந்த நாட்டில் ராஜபகசர்கள் பணத்தை பதுக்கிவைத்திருந்தாலும் அவற்றை மீட்டு வருவதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். ரவி வைத்தியலங்காரவுடன் ‘டீல்’ செய்து மறைத்துவைக்கப்பட்ட ‘பைல்’ களை மீள எடுக்க மாட்டோம் என நாமல் ராஜபக்ச நினை…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
ஊழல் அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தோல்வியிலிருந்து தப்புவதற்காக ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அடுத்த தேர்தலில் அவ்வாறான அரசியல்வாதிகள் வேட்பாளர்களாக நிற்காத நிலையை ஏற்படுத்தியமை பொதுத்தேர்தலிற்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பெருவெற்றி என தெரிவித்துள்ளார். அனுரகுமாரவை ஜனாதிபதியாக தெரிவு செய்யதமைக்காக மக்களிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும், இது இறுதியில் ஊழல் இனவாத அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை முடித்துவைத்தது என அவர் தெரிவ…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் நாங்கள் வெற்றியடைவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். "இலங்கை தமிழரசுக் கட்சியால் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எமது கட்சியில் சிவஞானம் சிறீதரனை முதன்மை வேட்பாளராக உள்ளடக்கி இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட…
-
-
- 4 replies
- 302 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் பொலிஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில் வீதி மானிப்பாயில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த கடையினை பொலிஸார் சோதனையிட்டனர். சோதனையின் போது கடையின் பின் பகுதியில் இருந்து 50 மாத்திரைகளும், ஒரு தொகை வெற்று மாத்திரை அட்டைகளும் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து உரிமையாளரை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, தான் போதை மாத்திரைகளை உட்கொள்வதாகவும், தெரிந்த நபர்களுக்கு மாத்திரம் அவற்றை விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 84 views
- 1 follower
-
-
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் பெயர்கள் Freelancer / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 05:37 பாராளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளநிலையில், தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அதில் பிமல் ரத்நாயக்க, பேராசிரியர் வசந்த சுபசிங்க, கலாநிதி அனுர கருணாதிலக்க, பேராசிரியர் உபாலி பனிலகே, எரங்க உதேஷ் வீரரத்ன, அருணா ஜெயசேகர, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனித ருவன் கொடிதுக்கு, புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி, ராமலிங்கம் சந்திரசேகர், கலாநிதி நஜித் இந்திக்க, சுகத் திலகரத்ன, …
-
- 1 reply
- 361 views
-
-
11 OCT, 2024 | 02:48 PM இஸ்ரேல் லெபனானில் கிராமமொன்றை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதலில் இலங்கையை சேர்ந்த இரண்டு அமைதிப்படையினர் காயமடைந்துள்ளனர். இராணுவ பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196033
-
- 3 replies
- 219 views
- 1 follower
-