Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1.  சேயாவை நானே கொன்றேன்: கொண்டையாவின் சகோதரர் ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமியை தானே கொலை செய்ததாக கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்தவின் மூத்த சகோதரர் ஒத்துக்கொண்டார் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர். சேயா சந்தவமியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்த மற்றும் அவரது அண்ணா ஆகிய இருவரும் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, கொண்டையா, நீதவானிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர். மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தின் பாதுகாப்பு வழமையை விடவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.…

  2. வடக்கு, கிழக்கில் 1,37,529 வீடுகள் தேவை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக இடம்பெயர்ந்து தற்போது தமது சொந்த இடங்களில் மீள்குடியமரும் மக்களுக்கு 1,37,529 வீடுகள் தேவைப்படுகின்றன என்று அந்தந்தப் பிரதேச செயலகத் தரவுகள் மூலம் தெரியவருகின்றது. இடம்பெயர்ந்த மக்களின் வீடுகள் பெரும்பாலும் அழிவடைந்துள்ள நிலையில் தற்போது அவர்கள் வீடுகளை அமைத்துக் குடியமரும் நிலை ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக 2009 ஆம் ஆண்டில் 300,000 கும் மேற்பட்ட மக்கள் வவுனியா செட்டிக்குளத்தில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்தனர்.இரண்டாண்டுகள் வரையிலான காலத்துக்கு இடையிலான காலகட்டங்களில் அந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. அவ்விதம் மீளக்குடியமர்வு இடம்பெற்றிருந்த…

  3. வித்தியா, சேயா கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரி யாழிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை புங்குடுதீவு மாணவி வித்தியா, சிறுமி சேயா ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும், இ.போ.ச. வடக்கு ஊழியர்கள் யாழிலிருந்து கொழும்பு வரை பாதயாத்திரை செல்கின்றனர். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று 7 மணிக்கு ஆரம்பமாகிய இந்தப் பாதயாத்திரை மாலை கிளிநொச்சி வரை சென்றடையும். நாளை கிளிநொச்சியிலிருந்து வவுனியாவைச் சென்றடையும்.நாளை மறுதினம் வவுனியாவிலிருந்து ஆரம்பமாகி அநுராதபுரத்தைச் சென்றடைந்து எதிர்வரும் வியாழக்கிழமை அங்கிருந்து மாகோவை சென்றடையும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாகோவிலிருந்து குருநாகலுக்குச் சென்று …

  4. 25 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் இடம் பெயர்வதற்கு உடனடிக்காரணமென்ன ?

    • 6 replies
    • 808 views
  5. போர்க்குற்ற விசாரணையின்போது படையினர் பாதுகாக்கப்படுவர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முப்படை அதிகாரிகளுக்கும் உறுதியளித்துள்ளார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படுதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் தரைப்படையினர், கடற்படையினர், விமானப்படையினர், பொலிஸ் உயர் அதிகாரிகளை அழைத்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ஜெனீவா அறிக்கையின்படி படையினர் மீது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார். எனினும் இந்த தாக்குதல்களுக்கு உத்தரவிட்டது யார் என்ற விசாரணையே மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141622&category=TamilNews&l…

    • 4 replies
    • 638 views
  6. ஐ.நா தீர்மானம் கூட்டமைப்புக்கு திருப்தியா? ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிறைந்த திருப்தியைக் கொடுத்திருக்கும். இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமையும் சேர்ந்து தீட் டிய திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஈழத் தமிழர்களுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த மிகமோசமான துரோகத்தனம் ஜெனிவாவில் நிறைவேறியது. தமிழ் மக்களிடம் தங்களை நம்பிக்கைக்குரியவர்களாக நம்ப வைத்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் மிகப் பெளவியமாக சிதறடித்துவிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சதியை தமிழ் மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டா…

    • 0 replies
    • 300 views
  7. தற்போதைய தேசிய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக ஜேவிபி குற்றம்சுமத்தியுள்ளது. பத்தரமுல்லை பெலவத்தையிலுள்ள ஜேவிபி தலைமை செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டின் உள்நாட்டு பிரச்சினையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சர்வதேச பிரச்சினையாக மாற்றியது மக்களுக்கு செய்த பாரிய தவறாகும். தற்போதைய நிலைமையில், ஏற்றுக்கொள்ளக் கூடிய விசாரணையை நடத்தாமல் விடுவதானது, வெளியில் விசாரணையை கை நீட்டி அழைப்பதாக அமையும். அத்துடன் இது சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொண்டு மேற்குலக நாடுகளுக்கு தலையிட இடமளிப்பதாகவும் அமைந்து விடும் எனவும் ரில்வின் சில்வா கு…

    • 1 reply
    • 326 views
  8. மாலைதீவு ஜனாதிபதி யாமின் அப்துல் கையும் பயணித்த படகொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பந்தமான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை பொலிஸ்துறையின் மூன்று விசேட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அந்நாட்டுக்குச் சென்றுள்ளது. இந்தக் குழுவில் பொலிஸ் விசேட செயலணியின் குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் பிரிவின் நிபுணரான இன்ஸ்பெக்டர் சமரநாயக்க, புலனாய்வுப் பொலிஸ் பிரிவின் இன்ஸ்பெக்டர் தினேஷ் சில்வா, குற்றம் நடந்த ஸ்தானம் பற்றிய விசாரணைப் பிரிவின் இன்ஸ்பெக்டர் காரியவசம் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரியயாருவர் தெரிவித்தார். இந்தக் குண்டு வெடிப்பில் ஜனாதிபதியின் பாரியார் பாத்திமா இப்ராஹிமுக்கும் அவரது மெய்க்காப்பாளர் ஒருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதைத் தவிர பாரிய அசம்பாவ…

  9. சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியில் நூறு தமிழ் இளைஞர்கள் பயிற்சி பெற்று வருவதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிக்கு அண்மையில் 500 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு தற்போது இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறித்த பயிற்சி அணியில் சுமார் 100 தமிழ் இளைஞர்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. குறித்த தமிழ் இளைஞர்கள் அணி இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள குருவிட்ட திறந்தவெளிச் சிறைச்சாலையில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் பயிற்சிக்காலம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறைச்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள…

  10. ஜேர்மன் ஜனாதிபதி எஞ்சலோ மர்கெல் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங்க் வோல்டர் ஸ்டெயின் மேயர் மூலமாக இந்த அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. ஜேர்மன் ஜனாதிபதியின் இந்த அழைப்பிதழை ஏற்றுக்கொள்வதாகவும் தனது விஜயத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி அமைச்சர் ஸ்டெயின் மேயரிடம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த காலத்தில் ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இரத்துச்செய்திருந்தது. அந்த யூனியனில் அங்கம் வகி…

  11. ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றியென அரசாங்கம் கூறுவதை தன்னால் ஏற்ப முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஸ்தாபிக்கப்படும் விசாரணைப் பொறிமுறையில் பாதுகாப்பு படையினரில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகப்படுவோர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அளவுக்கு சாட்சியங்கள் இல்லை என்றால், நிர்வாக ரீதியான செயற்பாடுகள் மூலம் விலக்கப்படுவார். வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணை அதிகாரிகள், சட்டத்தரணிகளை கொண்ட, இலங்கையின் போர் காலம் பற்றி விசாரணை நடத்த ஸ்தாபிக்கப்படும் பொறிம…

  12. வன்முறை முடிவுக்கு வந்ததால் தான் சர்வதேச ஆதரவு கிடைத்தது - மீண்டும் வன்முறையை ஆதரிக்க முடியாது: வன்முறை முடிவுக்கு வந்து தமிழ் சமூகம் அஹிம்சை வழியில் செயற்பட தொடங்கியுள்ளதால் தான் சர்வதேச ஆதரவு கிடைத்தள்ளது எனவே நாம் மீண்டும் வன்முறையை ஆதரிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்,இந்துக்கல்லூரியில் காந்தி ஜெயந்தி தினம் கொண்டாடப்பட்டது. அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மஹாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திரத்திற்காக அஹிம்சை வழியில் போராடினார். அவர் பிரிவினையை ஆதரிக்கவில்லை …

    • 15 replies
    • 1.1k views
  13. நாட்டை அழிவுக்குள்ளாக்கும் ஜெனீவா தீர்மானத்தை உயிரைக் கொடுத்தாவது தடுக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி சூளுரைத்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், கிராமிய மட்டத்திலுள்ள சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களின் அபிலாசைகளுக்கேற்பவே எனது அரசியல் செயற்பாடுகள் அமைந்திருக்கும். எதிர்காலத்தில் நாங்கள் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியை சரியான வழியில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். அதே நேரம் அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்குவதுடன், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை எதிர்க்கவும் தயங்க மாட்டோம். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்டுள்ள ஜெனீவா தீர்மானம் நாட்டை அழிவுப் பாதைக்குள்…

  14. கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களை மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கும் நிகழ்வு நாளை காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்துக்கு நாளை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தரவுள்ளார். இரணைமடுக் குளத்துக்கு அருகில், உணவு உற்பத்தி தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால, அன்றைய தினமே இந்தக் காணி விடுவிப்பு நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட சில பகுதிகள் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படாத நிலையிலேயே உள்ளன. இந்தக் காணிகளை விடுவிப்பதற்கா…

  15. குருநகர் கடற்பரப்பில் இன்று அதிகாலை கடலுக்கு சென்ற ஒருவர் மின்னல் தாக்கி மரணமானார். நேற்று பிற்பகல் குருநகரில் இருந்து இறால் பிடிப்பதற்காக படகில் சென்றவர்கள் அதிகாலையில் தொழிலை முடித்து வீடு திரும்பியுள்ளார்கள். இந்த நேரத்தில் கடலிலும் அதிக மழை பெய்ததுடன் இடி மின்னலும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலில் படகின் இயந்திரத்தை செலுத்தி வந்த யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்ரின்யூட் கனிஸ்டன் என்பவர் மின்னல் தாக்கியதில் தலையிலும் முகத்திலும் காயத்திற்கு உள்ளாகி மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணமானார். இவருடைய மரண விசாரணை நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரனை அ…

  16. உடுப்பிட்டிப் பகுதியில் படையினர் முகாமிட்டிருந்த வீடொன்றின் மலசலகூட குழியிலிருந்து பெருமளவு வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். உடுப்பிட்டி காளிகோவிலடி பகுதியில் படையினரின் பயன்பாட்டில் இருந்த வீடொன்று பின்னர் மக்களிடம் கையளிக்கப்பட்டது. வீட்டின் உரிமையாளர் வீட்டின் மலசல குழியை துப்புரவு செய்தபோது நேற்று குழியில் வெடிபொருட்கள் இருப்பதை கண்டு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் பின்னர் இந்தப் பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு குழியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது 14 கைக்குண்டுகள், 4 கிளைமோர்கள், 5 ஆயிரம் வரையான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். …

  17. வாழைக்குலைத் திருடரால் விவசாயிகள் திண்டாட்டம் புன்னாலைக்கட்டுவன் வடக்கில் தொடரும் வாழைக்குலைத் திருட்டினால் வாழைச் செய்கையாளர்கள் செய்வதறியாது திண்டாடுகின்றார்கள். கடந்த வியாழக்கிழமை அதிகாலையிலும் சுமார் 25000 ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய வாழைக்குலைகள் திருடப்பட்டுள்ளன. சுமார் 15 முதல் 20 வரையான வாழைக்குலைகள் புன்னாலைக்கட்டுவன் மஸ்கன் வீதியில் அமைந்துள்ள இரண்டு வாழைத் தோட்டங்களில் திருடிச் செல்லப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கிராம அலுவலர்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வாழைக்குலைத் திருட்டுக்கள் சம்பந்தமாக முறையிட்டபோதிலும், இதனை கட்டுப்படுத்த ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளத…

  18. 30 வருடங்கள் எமது இளைஞர்கள் ஆயுதத்தால் மனவுறுதி காட்டினர் கடந்த 30 வருட காலத்தின் போது எமது இளைஞர்யுவதிகள் ஆயுதங்கள் வாயிலாக தமது மன உறுதியை காட்டி வாழ்ந்தார்கள். இனி விளையாட்டுக்கள் மூலமாகவும் கல்வி மூல மாகவும் வேறு வழிகளிலும் எமது மன உறுதியை வெளிக்காட்டும் காலம் உதயமாகியுள்ளது என வட மாகாண முதலமைச்சர் க.வி.விக் னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாகாண பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி ஒதுக்கீட்டின் நிதியத்தில் இருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட மன்னார் மாவட்ட பல் தொகுதி உள்ளக விளையாட்டரங்கு திறப்பு விழா நேற்றுக்காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த விளையாட்டு அரங்கை திறந்துவைத்த பின் உர…

  19. ஒரு மனிதன் மூன்று வகையான சோர்வு நிலைக்கு உட்படலாம் என்பது பொது விதி. உடற்சோர்வு, உளச்சோர்வு, உயிர்ச்சோர்வு என்பனவே அந்த மூன்றும் ஆகும். குறித்த மூன்று சோர்வில் எது மனிதனைப் பாதித்தாலும் அது அவனின் வாழ்வியலுக்கு இடையூறாகவே இருக்கும். பாரதப் போர் நடைபெறப் போகிறது. கெளரவர் தரப்பில் தன் குருநாதர்களும், நண்பர்களும் நிற்பதை அருச்சுனன் பார்க்கிறான். இவர்களைக் கொல்வதா? என்று நினைத்து அருச்சுனன் மனம் சோர்கிறான். போர்க் களத்தில் உளச்சோர்வுக்கு உட்பட்ட அருச்சுனனை அதிலிருந்து மீட்டு யுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு கண்ண பரமாத்மா கீதோபதேசம் செய்தார். அருச்சுனனின் உளச்சோர்வுக்கு குருசேத்திரத்தில் நடந்த சிகிச்சை தான் கீதோபதேசமாகும். இன்றைய மருத்துவ மொழியில் இதனைக் கூறுவதாயின், போ…

  20. இன்று லண்டனில் 2010 இற்கு பின் தமிழரசு கட்சிக்குள் உள்நுளைக்கப்பட்டு, குறுகிய காலத்தில் ஈழத்தமிழினத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கும் மான்புமிகு சுமந்திரன் அவர்கள், லண்டன் வாழ் தமிழ் மக்களை சந்திக்க இருக்கிறார். இக்கூட்டத்தில் சிறிலங்கா தேசத்துக்காக ஜெனீவாவில் ஆற்றிய பங்கு குறித்து விபரிக்க இருக்கிறாராம் இடம்: Ruskin Hotel (entrance via Ruskin Avenue). 386 High St. North. Manor park. London. E12. 6PH 3-10-15 at 4.00 pm https://www.youtube.com/watch?v=7Eg6qWy75n4

  21. [ வெள்ளிக்கிழமை, 02 ஒக்ரோபர் 2015, 01:13.50 PM GMT ] வடமாகாணத்தின் பாரம்பரிய நிகழ்வான மாட்டு வண்டி சவாரி போட்டி மன்னார் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வில் வட மாகாணத்திலிருந்து பல போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். குறித்த நிகழ்விற்கு கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் இ.ரவிந்திரன் தலைமை தாங்குகின்றார். இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், சிறப்பு அதிதிகளாக மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சர் ரி.குருகுலராஜா, மற்றும் கௌரவ விருந்தினர்களாக வடமாகாண அமைச்சர்களான பி.டெனிஸ்வரன், பி.சத்தியலிங்கம், பி.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்…

    • 4 replies
    • 546 views
  22. பட்டப்பகல் வேளையில வீட்டின் முன்கதவை உடைத்து நுழைந்த திருடர்கள் துணிகரமான முறையில் சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் மற்றும் பத்தாயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்கள். சுன்னாகம் பழைய பொலிஸ் நிலைய வீதியில் தனிமையாக வசித்து வரும் இளம் பெண் ஒருவரின் வீட்டில் இந்த துண்கரமான திருட்டு நடை பெற்றுள்ளமை அந்தப் பகுதயில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பெண் தையல் வேலைக்கு செல்வது வழமையாகும்.இதனை அவதானித்த திருடர்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட திருட்டு சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன் சோக்கோ பொலிசார் கைவிரல் அடையாளங்களை பெற்றுச் சென்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத…

  23. எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முதன் முறையாக யாழ்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது அவருக்கு அங்கு பெரு வரவேற்பு வழங்கப்பட்டதுடன், பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் இரா.சம்பந்தன் வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து வருகின்றார். இதன்போதே அவர் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்திற்கும் சென்றுள்ளார். அவருடன், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பிரதேச சபை உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள…

  24. ஐ.நா. பரிந்துரைகளை நிறைவேற்றுவது சிரமம்: நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு இலங்கை தொடர்பில் ஐ.நா. பரிந்துரைத்துள்ள விடயங்களை நடை முறைப் படுத்தும்போது பல பிரச்சினைகள் ஏற்படும் என்று சுட்டிக் காட்டியுள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான நிமல்சிறிபால டி சில்வா. இலங்கையின்நீதித்துறைக்குள் இருந்துகொண்டு இந்தப் பரிந்துரைகளைநடைமுறைப்படுத்தும் போது சிக்கல்கள் ஏற்படும். இலங்கையின் அதியுயர் நீதிமன்றமாக உயர் நீதிமன்றம் விளங்குகின்றது. இந்த நிலையில் கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்து ரையின்படி கலப்பு நீதிமன்றை உருவாக்க நீதித் துறையில் பல புதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண் டும். எனினும்…

    • 2 replies
    • 489 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.