ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
ஜெனீவா வரைவு இலங்கையில் இறுதி யுத்தத்தில் மீறப்பட்டதாக கூறப்படும் மனித உரிமைகள் மற்றும் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வை தேடுவதற்கான உள்ளூர் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் யோசனை அடங்கிய வரைவு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளினால் ஜெனீவா மனித உரிமை பேரவையில் கடந்த வியாழனன்று (24) உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது. 'இலங்கையில் நல்லிணக்கத்துக்கான பொறுப்பு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தொனிப்பொருளில், இந்த வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வரைவில் உள்ளக்கப்பட்டுள்ள விடயங்களின் சுருக்க, மொழிப்பெயர்ப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சு, அனுப்பிவைத்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/155119/ஜ-ன-வ-வர-வ-#sthash.fhpybiCH.dpuf
-
- 2 replies
- 946 views
-
-
சர்வதேச யுத்தக் குற்றச்செயல் விசாரணைகளில் இருந்து தப்பியதா இலங்கை? இலங்கையில் மிக நீண்ட காலமாக நீடித்து வந்த சிவில் யுத்தத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதிலிருந்து இலங்கை தப்பித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் வாரத்தில் புதிய தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ளது. கலப்பு நீதிமன்றின் அடிப்படையில் சர்வதேச தலையீட்டுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னதாக உத்தேச தீர்மானத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், கொழும்பு அரசாங்கம் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படக் கூடிய …
-
- 19 replies
- 964 views
-
-
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கிலங்கையிலுள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்று சிங்கள, முஸ்லிம் சமூகங்களைக் காட்டிலும் விகிதாச்சார அடிப்படையில் பாடசாலைகளிலிருந்து விலகும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையே கூடுதலாக உள்ளது என மாகாண கல்வி அமைச்சின் உயரதிகாரி அப்துல் நிசாம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குறைந்தது 2,000 தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கணக்கெடுப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார். இந்த அளவுக்கு மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து வெளியேறுவது அதிர்ச்சியளிப்பதாக நிசாம் தெரிவித்…
-
- 0 replies
- 533 views
-
-
கொழும்பு மிரருக்காக ஆஸ்திரேலியாவிலிருந்து பி. தெய்வீகன் மனுநீதி மறுக்கப்பட்ட இவ்வுலகில் கந்தகத்தின் வெம்மை அடங்காத கொடும்போரின் தீக்குழம்புகள் மானிட வர்க்கத்தின் அடுத்த தலைமுறையும் அழிக்க முடியாத வடுக்களை தொடர்ச்சியாக ஏற்படுத்திவருவது ஒன்றும் புதிய விடயமல்ல. இவ்வாறானதொரு, போரின் பக்கவிளைவினால் நுரைகரையும் கடலடியில் உலகின் கன்னங்களில் ஓங்கி அறைந்துவிட்டு உயிர்துறந்த பச்சிளம் பாலகன் அய்லனின் மரணம் உலகின் உதடுகளை உச்சரிக்கவைத்திருந்தமை அனைவரும் அறிந்ததே ஆகும். சிரிய போரின் கொடுமையிலிருந்து தப்பித்து ஐரோப்பியாவுக்குள் அலையென வந்திறங்கித் தஞ்சம் கோரும் பல்லாயிரணக்கணக்கான அப்பாவி பொதுமக்களுடன் அய்லனின் தந்தை தனது இரு குழந்தைகளுடனும் மனைவியுடனும் கடல்தாண்டி வரும்போது இடம்ப…
-
- 0 replies
- 590 views
-
-
அமெரிக்காவில் இரண்டு நாளில் 2 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிட்ட மஹிந்த! [ ஞாயிற்றுக்கிழமை, 27 செப்ரெம்பர் 2015, 06:02.28 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக சென்று அமெரிக்காவில் தங்கியிருந்த இரண்டு நாட்களுக்கு மாத்திரம் 2 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. டொலர்களில் செலவிடப்பட்ட இந்த பணம் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதற்கான சாட்சியம் தற்போது கிடைத்துள்ளது. மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமானவரும், அவரது இணைப்புச் செயலாளராகவும் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய சஜின் வாஸ் குணவர்தன, மஹிந்த ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் செலவாகும் பணத…
-
- 0 replies
- 499 views
-
-
நாட்டில் இரு ஜனாதிபதிகள் இருக்க முடியாது - மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இரு ஜனாதிபதிகள் இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது புதன் கிழமை இடம்பெற்ற வாராந்தர அமைச்சரவை சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது ஜனாதிபதி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இலங்கையில் இரு ஜனாதிபதிகள் இருக்கமுடியாது அவ்வாறான செயற்பாடுகள் முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும் என்றார் சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி குடும்பத்தினருடன் தங்கியுள்ள பாசிக்குடா சுற்றுலாவிடுதியை சுற்றி முப்படையினர் தீவிரபாது…
-
- 0 replies
- 569 views
-
-
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களின் போது வெளிப்படைத்தன்மை அவசியமானது – பெபரல் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களின் போது வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியமானது என பெபரல் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரியுள்ளது. உறுப்பினர்களை நியமிக்கும் போது வெளிப்படைத்தன்மையுடன் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளது. அரசியல் சாசனப் பேரiவியல் சிவில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது எனவும், இதில் சபாநாயகரின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளது.19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 319 views
-
-
சமந்தா பவர் மற்றும்; சிசன் ஆகியோருடன் சுமந்திரன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஐக்கியநாடுகளிற்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் மற்றும் அமெரிக்காவின் பிரதி தூதுவர் சிசன் ஆகியோரை கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜெனீவாவில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கை தொடர்பான தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.சர்வதேசசமூகத்தின் பங்களிப்புடனான செயற்பாடுகளால் மாத்திரமே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களிற்கு நீதி கிட்டும் என சுமந்திரன் இந்த சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றபடி தீர்மானத்தின் இறுதிவடிவில் …
-
- 0 replies
- 1.2k views
-
-
வரலாற்று சிகப்புமிக்க வல்லிபர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெற்று வல்லிபுர ஆழ்வார் காலை 10.30 மணிக்கு தேரில் ஏறி வலம் வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கு கொண்டிருந்தனர். ஏராளமானோர் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் ஆலயச் சூழலில் பருத்தித்துறைப் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். வல்லிபுர ஆழ்வார் வருடாந்த உற்சவம் கடந்த 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் மாலை சமுத்திர தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது. http://www.tamilwin…
-
- 1 reply
- 453 views
-
-
இலங்கைக்கு முதன் முதலாக விசாலமான கொள்கலன் தாங் கிக் கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புத்துறை முகத்தை வந்தடைந்தது. பிரிட் டிஷ் கொடியின் கீழ் பயணிக்கும் "மார்கோ போலே" என்ற இக் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் துறை முகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கலந்து கொண்டார். வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக் கப்பலில் பெருந்தொகையான கொள்கலன்களை களஞ்சியப்படுத்த முடியும். பிரிட்டிஷ் கொடியின் கீழ் பயணிக்கும் இக் கப்பல் 2012 ஆம் ஆண்டில் முதல் முறையாக வெள்ளோட்டம் விடப்பட்டது. இக் கப்பலின் உயரம் 29.9 மீற்றராகும். இதற்கு முன்னர் இலங்கைக்கு வந்த விசாலமான கொள்கலன் தாங்கிக் கப்பல் நுனiவா அயசளம கப்பலாகும். இக் கப்பலில் 1…
-
- 2 replies
- 960 views
-
-
வன்புணர்வுக்குப் பின்னர் பெண்ணைக் கிணற்றுள் தள்ளி கொல்ல முயற்சி : வேலணைக் கடத்தல் குறித்த மேலும் தகவல்கள் வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை வன்புணர்ந்த பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அந்தப் பெண் அவர்களது காலில் விழுந்து கதறியதோடு புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டதால் உயிர்தப்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேலணையிலுள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டுக்கு இரண்டு சந்தேக நபர்களும் சென்றுள்ளனர். அவர் திருமணமாகி 7 மாதங்களாகின்றன.அங்கு சென்ற சந்தேக நபர்கள் கதவைத் தட்டியுள்ளனர். எனினும் குடும்பஸ்தர் கதவைத் திறக்காது என்ன, ஏது என்று கேட்டுள்ளார். பின்னர் மறுநாள் வருமா…
-
- 9 replies
- 962 views
-
-
யாழில் 6 மாதங்களில் 27 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் யாழில் 27 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம் மாவட்ட சிறுவர் அலுவலக மேம்பாட்டு அதிகாரி வி.கௌதமன் தெரிவித்தார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ் மாவட்டத்திலே கடந்த 06 மாதங்களில் 27 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலகத்திற்கு பொறுப்பாகவுள்ள அலுவலகர்களிடம் இருந்து தரவுகள் கிடைத்துள்ளன. கடந்த 03 வருடங்களில் 167 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன. அந்தவகையில் 2013 ஆம் ஆண்டு 71 துஷ்பிரயோகங்களும் 2014ம் ஆண்டு 69 துஷ்…
-
- 0 replies
- 626 views
-
-
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் பிரேரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்தமை குறித்து, பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த பிரேரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளமையானது, யுத்தத்துக்கான அடிப்படை காரணங்கள் என்வென்பதை அறியும் காலகட்டத்தை நெருங்க செய்திருப்பதாக, பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் முதல்வரையின் திருத்தங்களுடன், இரண்டாம் வரைவு நேற்று முன்தினம் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. இதில் உள்நாட்டு பொறிமுறைக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளதுடன், பொதுநலவாய நாடுகளின் அலுவலகம், சர்வதேச நீதிபதிக…
-
- 1 reply
- 598 views
-
-
அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொது சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு கட்டமாகவே அவர் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரை சந்திக்கவுள்ளார். இன்னும் சில மணித்தியாலங்களில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஜனாதிபதியின் இந்த விஜயத்துடன் இணைந்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சு…
-
- 0 replies
- 171 views
-
-
மோடி - மைத்திரிபால சந்திப்பு அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேசினார். அப்போது, இரு தலைவர்களும் இந்தியா - இலங்கை இடையிலான உறவு குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் 70வது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பூடான், சைப்ரஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை இன்று காலை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மைத்திரிபால சிறிசேனவுடனா…
-
- 0 replies
- 378 views
-
-
ஜனாதிபதி புதல்வரை ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது புதல்வரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபாலவின் புதல்வர் தஹாம் சிறிசேன, நியூயோர்க்கில் ஜனாதிபதியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் காட்சிகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.உயர்மட்ட இலங்கைகுழுவின் ஒர் உறுப்பினராக தஹாம் பங்கேற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது புதல்வர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் உத்தியோகபூர்வ விஜயங்களில் இணைத்துக்கொள்வதாக தற்போதைய அரசாங்கம் கடுமையாக விமர்சனம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 291 views
-
-
வலுவிழந்து போகுமா அமெரிக்கத் தீர்மானம்? கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. அதேசமயம் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை இன்று வியாழக்கிழமை மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் நிறுவும் ஐ.நா. விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் பிரேரணை அமைந்துள்ளது. இப்பிரேரணையின் நகல்வரைபு ஏற்கனவே உறுப்…
-
- 0 replies
- 312 views
-
-
ஜனாதிபதியின் அதிகாரத்தால் தூக்கை நிறைவேற்ற முடியும் - பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு குற்றச் செயல்களுக்காக விதிக்கப் படும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் நாடாளுமன்றின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் தேசிய அரசுக்கு இருக்குமானால், அதனை ஜனாதிபதியின் அதிகாரத்தால் நிறைவேற்ற முடியும் எனக் குறிப்பிட்டுள்ள பிரசன்ன ரணதுங்க, அதற்காக நாடாளுமன்றின் அனுமதியைப் பெற வேண்டிய அவசிய மில்லை என்றும் கூறியுள்ளார். எனினும் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதி அதனை நாடாளுமன்றின் பொறுப்புக்கு விட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற ஒரு நிகழ்…
-
- 0 replies
- 237 views
-
-
எமது பிள்ளைகள் அனைவரையும் பொதுமன்னிப்பு அடிப்படையில் உடன் விடுதலை செய்யுங்கள்! நீதியமைச்சருக்கு கடிதம் அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகள் அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து உடனடியாக விடுதலை செய்து தங்களின் உண்மையான நல்லாட்சி மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.இவ்வாறு நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- அரசியல் கைதிகளின் உறவினர்களான பெற்றோர் மற்றும் மனைவி, பிள்ளைகளாகிய தாம் கடந்த 20 ஆம் திகதி அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை வேண்டி ஜனாதிபத…
-
- 0 replies
- 190 views
-
-
கலப்பு நீதிமன்றம் உத்தேச யோசனையிலிருந்து நீக்கம்: கலப்பு நீதிமன்றம் என்ற விடயம் உத்தேச யோசனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சமர்ப்பித்துள்ள உத்தேச தீர்மானத்தில், கலப்பு நீதிமன்ற பொறிமுறைமை குறித்து பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இரண்டாவதாக திருத்தி அமைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்த விடயம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நீதவான்களுடன் கூடிய கலப்பு நீதிமன்ற முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென முன்னதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போது அந்த கலப்பு நீதிமன்றம் உள்ளக நீதிமன்ற விசாரணையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு நீதவான்கள், பொதுநலவ…
-
- 13 replies
- 1k views
-
-
மத்திய மாகாண அரசியல்வாதி ஒருவரின் மனைவியைக் கடத்தி வந்து தன்னுடன் வைத்திருப்பதாக அசாத் சாலி மீது பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான அசாத் சாலி, மத்திய மாகாணத்தைச் சேர்ந்த இன்னொரு அரசியல்வாதியின் மனைவியைக் கடத்தி வந்து தடுத்து வைத்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பை அண்மித்த நாவல பிரதேசத்தில் அமைந்திருக்கும் அசாத் சாலியின் வீட்டில் குறித்த பெண்ணும், அசாத் சாலியும் தனியாக பதுங்கியிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த வீடு பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அசாத் சாலியிடம்…
-
- 12 replies
- 2.2k views
-
-
ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகைத்திட்டம் தொடர்பில் இலங்கைக்கும் ஐரோப்பியஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்தை 26 செப்டம்பர் 2015 ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பதில் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஹர்ஸ டி சில்வாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைத் தூதுவர் டேவிட் டாலிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை மீள அளிப்பது குறித்து பேசப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை உள்ளிட்ட சில காரணங்களினால் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த, ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ரத்து செய்திருந்தது. நிபந்தனைகளுக்கு உ…
-
- 0 replies
- 365 views
-
-
5வயது சிறுமி கொலை : கொண்டயாவுக்கு 72 மணிநேரம் தடுப்பு ஏற்கனவே 2 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தவர் கொட்டதெனியாவ பகுதியின் சேயாசதெளமியின் கொலையுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதிவான் நேற்று சி. ஐ. டி.யினருக்கு அனுமதி வழங்கினார். இதனடிப்படையில் சி. ஐ. டி.யினர் பிரதான சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து பல உண்மைகள் வெளிவந்திருப்பதாக பொலிஸ் பதில் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். கொட்டதெனியாவ படல்கம சேயா சதெளமியின் கொலை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரின் வாக்கு மூலத்திலிருந்து பல உண்மைகள் வெளிவந்திருப்பதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்…
-
- 2 replies
- 526 views
-
-
ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சுவிஸில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் மிக நெருங்கி சகாக்களில் ஒருவர் சரன்? தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சுவிட்சர்லாந்தில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக சரன் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை கைது செய்ய சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் மிக நெருங்கி சகாக்களில் ஒருவ…
-
- 0 replies
- 540 views
-
-
யாழ்.பல்கலைகழக நிர்வாகத்தை தடுத்து வைத்து பொலிஸ் விசாரணை - யாழ்.பல்கலைகழக நிர்வாகத்தினரை அழைத்து கோப்பாய் பொலிசார் பல மணிநேரம் தடுத்து வைத்து இன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்.பல்கலைகழக கலைப்பீட சிரேஸ்ட - கனிஸ்ட மாணவர்களுக்கு இடையில் கடந்த 9ம் திகதி ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து 9 ம் திகதியும் 10ம் திகதியும் மாணவர்கள் தமக்கு இடையில் மோதிக்கொண்டனர். 10ம் திகதி மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தின் வெளியில் வீதியில் நின்று தமக்கு இடையில் மோதிக்கொண்டனர். அதனால் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. அதனை அடுத்து மோதல் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிசார் தெரிவிக்கப…
-
- 0 replies
- 405 views
-