ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
08 OCT, 2024 | 11:55 AM இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 277 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளன. அதிகளவான யானைகள் பயிர்களை பாதுகாப்பதற்காக காணிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்சார கம்பிகளில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காணிகளில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள மின்சார கம்பிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195741
-
- 3 replies
- 195 views
- 1 follower
-
-
08 OCT, 2024 | 11:24 AM பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 15 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி முதல் கட்டமாக 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர், வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காது தன்னை ஏமாற்றி விட்டதாக இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளான். முறைப்பட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்தனர். …
-
- 1 reply
- 340 views
- 1 follower
-
-
08 OCT, 2024 | 11:08 AM இவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 9 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில், 80 சதவீதமான முறைப்பாடுகள் சமூக ஊடகங்களுடன் தொடர்புடையவவை ஆகும். அதன்படி, இணையவழி மோசடி தொடர்பில் 1,400 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 85 முறைப்பாடுகள் சிறுவர்கள் மீதான இணைய அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையவை என்பதுடன், 40 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகங…
-
-
- 12 replies
- 444 views
- 1 follower
-
-
08 OCT, 2024 | 11:23 AM இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறும் சிவஞானம் சிறீதரனுக்கு மாவை சேனாதிராஜா, கடிதம் அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா ஆகிய நான் இதுவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றேன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு 2024 ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்றபோது பொதுக்குழுவில் தாங்கள் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள். தாங்கள் அந்தவகையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை இன்னும் ஏ…
-
- 2 replies
- 716 views
- 1 follower
-
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போ வதில்லை என்று தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியானது ஜனநாயக தேசியக் கூட்டணியில் அங்கத்துவம் வகிப்பதுடன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இதில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு ஏற்ப இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடும் முகமாக இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்குத் தான் தீர்மானித்துள்ளார் என்று சிவசக்தி ஆனந்தன் அறிவ…
-
-
- 12 replies
- 805 views
-
-
08 OCT, 2024 | 10:06 AM மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் திங்கட்கிழமை (07) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் JICA திட்டத்தின் பணிப்பாளர் திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக பாராட்டுக்களை தெரிவித்ததுடன் மாவட்ட அரசாங்க அதிபரும் இத் திட்டத்திற்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியுள்ளமைக்கு நன்றிகளையும் இதன்போது தெரிவித்துக் கொண்டார். மேலும், இத்திட்டத்தில் உள்ள சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கும் போது பெண்களைய…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
இ.தொ.க உப தலைவர் பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி விலகல்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகும் கடிதத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இன்று (07) மாலை அனுப்பி வைத்துள்ளார். மக்களினதும், கட்சி அங்கத்தவர்களினதும் எதிர்பார்ப்புகளை மீறி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த நாட்டினை வங்குரோத்து நிலைக்கு அடைய செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தங்களது சுயநல அரசியலுக்காக கண்டி மக்களை அடகு வைத்த உறுப்பினர்களோடு இணைந்து தாம் போட்டியிட தயார் இல்லை எனவும், கட்சியின் தீர்மானத்திற…
-
- 2 replies
- 128 views
-
-
வடக்கில் காத்திருப்பு காலமின்றி கண்புரை சத்திர சிகிச்சையை முன்னெடுக்க நடவடிக்கை October 8, 2024 வடமாகாணத்தில் காத்திருப்பு பட்டியல் இன்றி கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் , 10 நாட்களுக்கு 2ஆயிரம் கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ் . போதனா வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச பார்வை தினத்தினை முன்னிட்டு, யாழ் . போதனா வைத்தியசாலை கண்ணியல் பிரிவில் 2ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை செய்யவுள்ளோம். யாழ் போதனா வைத்தியசாலையில் குறுகிய …
-
- 0 replies
- 122 views
-
-
Published By: VISHNU 07 OCT, 2024 | 10:46 PM (எம்.ஆர்.எம்.வசீம்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக இருந்துவந்த பொலிஸ் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகின்றபோதும் பதில் பொலிஸ்மா அதிபர் அதனை மறுத்துள்ளார். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை இலக்காகக்கொண்டு அவரை அவமதிக்கும் வகையில் போலிப்பிரசாரம் மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகிறதை ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் வன்மையாக கண்டிக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை (7) ஊடகங்களுக்கு விடுத்திருந்த விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 07 OCT, 2024 | 05:47 PM (நா.தனுஜா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்திருந்த பின்னணியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்று திங்கட்கிழமை (07) கட்சியிலிருந்து விலகினார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினா…
-
- 3 replies
- 159 views
- 1 follower
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள கட்சியின் மகளிர் அணியினர், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்கள். தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தினர். இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணித் தலைவி மதனி நெல்சன் தெரிவித்ததாவது:- “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளிர் அணிக்குக…
-
- 4 replies
- 380 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 08 OCT, 2024 | 10:07 AM யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த 69 வயதுடைய திருச்செல்வம் ஞானப்பிரகாசம் என்பவரே உயிரிழந்துள்ளார். தனது கட்டுமரத்தில் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற வேளை கட்டுமரம் கடலில் கவிழ்ந்ததில், அவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சடலம் சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195731
-
- 7 replies
- 240 views
- 1 follower
-
-
சிங்கள தேசம் போன்று தமிழர் தேசத்திலுல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்! தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் தங்கள் தனித்துவத்துடன் ஒற்றுமையாக ஒருசேர நின்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென தமிழ்க் கட்சிகளிடம் மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலக் காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளிடம் விடுக்கும் கோரிக்கை எனும் தலைப்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்…
-
- 0 replies
- 292 views
-
-
Published By: DIGITAL DESK 7 07 OCT, 2024 | 05:45 PM காட்டு யானைகளை அன்றாடம் சிறுவர்கள் விரட்டும் நிகழ்வு அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட புற நகர் பகுதிகளில் தற்போது வழமையாகி விட்டது. இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பை அண்மித்த கல்முனை சாய்ந்தமருது மற்றும் நற்பிட்டிமுனை பிரதேச கரைவாகு வயல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடாமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் வேடிக்கை பார்க்கும் நிலையில் யானைகளை சிறுவர்கள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குறித்த பிரதேச வயல் வெளி பகுதியில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக காட்டு யானைகள்…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
07 Oct, 2024 | 12:57 PM ஞாயிற்றுக்கிழமை (06) காலை 08.30 மணி முதல் இன்று (07) காலை 07.00 மணி வரையான 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 162.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட (112.5 மி.மீ) மற்றும் ஹொரணை (111.5 மி.மீ) ஆகிய பகுதிகளிலும், காலி மாவட்டத்தில் நெலுவ (109.5 மி.மீ) மற்றும் மாத்தறை மாவட்டத்தில் களுபோவிட்டியான (84.0 மி.மீ) ஆகிய பகுதிகளிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அயன அயல் ஒருங்கல் வலயமானது நாட்டின் வ…
-
- 0 replies
- 898 views
-
-
07 Oct, 2024 | 03:50 PM ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று திங்கட்கிழமை (07) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கட்டமைப்பு சார்பாக சங்குச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்,வேட்பாளர்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். அம்பாறை மற்றும் திருகோ…
-
-
- 4 replies
- 445 views
-
-
Published By: Digital Desk 7 07 Oct, 2024 | 07:04 PM வரலாற்றில் முதன்முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக பெண் அதிகாரி ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலை என்பவரே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் 2007ஆம் ஆண்டில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக சேவையில் இணைந்ததுடன் ருஹுனு பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை விஞ்ஞான பட்டத்தையும் திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் முதன்முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக பெண் அதிகாரியின் பெயர் பரி…
-
- 0 replies
- 170 views
-
-
07 Oct, 2024 | 06:21 PM நாடாளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிடமுடியாது என தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி ஐக்கிய லங்கா மகா சபை லங்கா ஜனதா கட்சி இலங்கை முற்போக்கு முன்னணி உட்பட ஆறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழு வர்த்…
-
- 0 replies
- 328 views
-
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார். இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெறவுள்ள நாடா…
-
-
- 45 replies
- 2.8k views
-
-
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி! kugenOctober 7, 2024 யாழ் மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு இன்று திங்கட்கிழமை (07) தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈபிடிபி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய வேட்பு மனுவே யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அத்தாட்சி அலுவலரிடம் கையளித்தார். இதேவேளை வேட்புமனு த…
-
-
- 9 replies
- 580 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் வேட்புமனு தாக்கல் October 7, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதன்போது கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். வேட்புமனுத்தாக்கலின் பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். https://eelanadu.lk/நாடாளுமன்றத்-தேர்தலில்-ப/
-
- 1 reply
- 141 views
-
-
இலங்கையில் புதிய சனத்தொகை கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையின் 15ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை இன்று (07.10.2024) ஆரம்பமாகவுள்ளது. இதன்படி சனத்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று பார்வையிடவுள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா சேனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். புதிய சனத்தொகை 2012 மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், சமீபத்திய பட்டியல்கள் வீட்டு அலகுகளில் 24 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10 வருடத்துக்கு ஒ…
-
- 1 reply
- 140 views
- 1 follower
-
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அநுராதபுரம் (Anuradhapura) வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெறுவதற்காக விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயமானது நேற்றைதினம் (06.10.2024) இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி முதலில் அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்தி ஆசி பெற்றுக்கொண்டதோடு, அவரிடம் நலம் விசாரித்துள்ளார். தேசிய கொள்கை அதனையடுத்து உடமலுவ விகாரைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அடஸ்தானாதிபதி தலைமையிலான மகா சங்கத்தினரால் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டுக்கு தேசிய கொள்கையொன்று அவசியம் என்றும…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
07 OCT, 2024 | 03:05 PM பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும். அத்துடன் சில நியாயமான கொள்கைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மார்ச் 12 இயக்கம் வலியுறுத்துகின்றது, என மார்ச் 12 இயக்கச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் மார்ச் 12 இயக்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கும் பவ்ரல் அமைப்பின் கள இணைப்பாளர் சசீஸ்காந்த் அவர்களுக்கும் இடையில் கே. கலாராஜ் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சில தகைமைக…
-
- 3 replies
- 195 views
- 1 follower
-
-
07 OCT, 2024 | 11:56 AM இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தூய அரசியலுக்காக தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களை பங்குபற்றுதலை இளைஞர்களின் மேம்படுத்துவதற்கான மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு தனியார் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதத்தினை அதிகரித்தல், நிராகரிக்கப்படுகின்ற வாக்களிப் பினை எவ்வாறு தடுப்பது, பெண்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தல், சம்பந்தமான கருத்துரைகளும் முன்வைக்கப்பட்டதுடன், இதன்போது தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை அரசியல் பண்புகள் பற்றியும் இங்கு விரிவாக …
-
- 0 replies
- 116 views
- 1 follower
-