ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
மகிந்தவின் கூட்டத்தில் நடக்கும் அவலம். July 24, 201512:15 am மகிந்தவின் கூட்டத்தில் ஆட்கள் அமரும் இடம் எல்லாம் உயிரில்லா மனிதன் உக்கார்வது வேடிக்கையாக உள்ளது. மக்கள் அதிகமாக சென்றாலும் அங்கு அரைவாசி பங்கு உயிரில்லா உடல்கள் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது இதைவிட மகிந்த கம்பனிக்கு என்ன வேண்டும் .http://www.jvpnews.com/srilanka/117824.html
-
- 0 replies
- 430 views
-
-
ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு – ஐதேகவின் தேர்தல் வாக்குறுதிJUL 24, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அனைத்து தரப்பினரின் இணக்கத்துடன், ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை நேற்று கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் வெளியிடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும், நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணியிலுள்ள கட்சிகளின் தலைவர்களும், மாதுளுவாவே சோபித தேரர் உள்ளிட்ட பௌத்த குருமாரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நாட்டை மீளவும் கட்டி எழுப்புவ…
-
- 0 replies
- 465 views
-
-
http://www.tamilkingdom.org/2015/07/21_59.html பாதுகாப்பு சிக்கலை அடுத்து முகநூலில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் சுமந்திரன் கடந்த வாரங்களில் பிரச்சாரத்திற்கு சென்ற சுமந்திரனை சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் காரசாரமாக கேள்விகளை கேட்டு தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிய நிலையில் மாலைநேர சந்திப்புக்களை தவிர்த்து வந்த முன்னாள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் சின்னக்கதிர்காமர் என செல்லமாக அழைக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரில் செல்வதில் தனிநபர் பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்டு தனது பிரச்சாரப் பணிகளை முகநூல் வாயிலாக ஆரம்பித்திருக்கிறார். வாக்காளர்கள் தங்கள் கேள்விகள்,ஐயங்கள்,த.தே.கூட்டமைப்பின் சாணக்கிய நகர்வுகள்,ராஜதந்திர…
-
- 25 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணத்தின் நுரையீரலாக விளங்கும் பழைய பூங்காவில் பலர் தன்னிச்சையான முறையில் கட்டடங்களை அமைத்து அங்குள்ள மரங்களை வெட்டியளித்தனர் .இனிமேலாவது எஞ்சியுள்ள மரங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். எனவே எதிர்வரும் காலங்களில் எந்தவிதமான கட்டடங்களை அமைத்தாலும் மரங்களை வெட்டாத முறையில் அமைக்க வேண்டும் என வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 32 ஆவது அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போது வடக்கு ஆளுநரின் பழைய பூங்காவில் உள்ள அலுவலகத்தை விஸ்தரிப்பதற்கான நிதிவிடுவிப்பு தொடர்பில் அவைத்தலைவரால் அனுமதி கோரப்பட்டது. அதன்போதே அமைச்சர் இதனை முன்வைத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆளுநரின் அலுவலகத்தை விஸ்தரிப்பதில் எம…
-
- 1 reply
- 366 views
-
-
தனது விரல்களைப் பாதுகாக்க சும்மா தள்ளிவிட்டேன் என்கிறார் மகிந்தJUL 23, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தனது கைவிரலைக் கெட்டியாக பிடித்துக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவே அவரைச் சும்மா தள்ளி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக் கூட்டத்துக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச திடீரென ஆவேசமடைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர் ஒருவரைத் தாக்க முயன்றார். மகிந்த ராஜபக்சவின் கையைப் பிடித்த ஆதரவாளரை அவர் தாக்க முதுயன்ற போது, அவரது பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர். அப்போது …
-
- 0 replies
- 751 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திடீர் எழுச்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரை கதி கலங்கச் செய்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். இம்முறை அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுகின்ற போதிலும் அது மூன்று சிங்கள பிரதிநிதித்துவங்களுக்கே வழி வகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சாய்ந்தமருதில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பே…
-
- 0 replies
- 541 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் கூட்டணி சேர்ந்தால் மாவட்டத்தினை வெல்வது இந்தக் கூட்டணியைத் தவிர தங்களால் இயலாது என்ற ஒரே காரணத்தினால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்னைப் பற்றித் தாறுமாறாக பேசி வருகிறது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்றுநடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளரும் வேட்பாளருமான எம்.ஏ.எம்.மஹ்ரூப் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரிஸாத் பதூர்தீன், தயாகமகே, இம்ரான…
-
- 3 replies
- 600 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதனை நிரூபிப்பதற்கு சாட்சியங்கள் உண்டு என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 2005ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பகிரங்கமாக பதிலளிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மாவிலாறு போராட்டத்தின் போது ராஜபக்ஸ குடும்பத்தை கொலை செய்ய வேண்டாம் எனக் கோரி மஹிந்த பெருந்தொகைப் பணத்தை புலிகளுக்கு வழங்கியதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.எனினும், யுத்தத்தில் ஆயிரக் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்…
-
- 1 reply
- 250 views
-
-
-
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பலதரப்பட்ட கட்சிகளும் வடக்கு கிழக்கில் போட்டியிடுவதால் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அக் கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் இ. சந்திரசேகரன் உள்ளிட்டோர் இன்று யாழ் ஆயரை சந்தித்து உயைராடினர். இதன்போது தற்போதைய தேர்தல் நிலமைகள் தொடர்பில் யாழ் ஆயர் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார். வட மாகாணத்தில் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளதாக குறிப்பிட்டள்ள அவர் அவற்றை தீர்ப்பதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடினார். தேசிய ஒற்றுமையை சிதைக்கின்ற நடவடிக்கையை சில தலைவர்கள் முன்னெடுப்பதாகவும் இதன்போது யாழ் மாவட்ட ஆ…
-
- 0 replies
- 268 views
-
-
மஹிந்த சிந்தனை கொள்கை கைவிடப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முகநூலின் ஊடாக நடைபெற் கேள்வி பதில் நிகழ்வில் பங்கேற்ற போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார். புதிய கொள்கைகளுடன் நாட்டின் அபிவிருத்திக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் 8ம் திகதிக்குப் பின்னர் மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டம் கைவிடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய கொள்கைகளுடன் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு புதிய தேர்தல் விஞ்ஞாபனமொன்றை முன்வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 254 views
-
-
தேசத்தின் மனசாட்சி சிறிகொத்தவின் மனசாட்சியா? 8 லட்சம் கொடுத்தது யார்? மக்கள் விடுதலை முன்னணி நேற்று ஏற்பாடு செய்த விசேட மாநாடு மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டினை அரச தொலைக்காட்சி ஒன்றில் நேரடி ஔிபரப்புச் செய்ய 8 லட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நிதியை கட்சியில் இருந்து செலவு செய்யவில்லை என தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கையின் ஐக்கியம் பற்றி பேசவில்லை என்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏதுவான கட்சியை அநுரகுமார உருவாக்கியுள்ளதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். தேசத்தின் மனசாட்சி இன்று சிறிகொத்தவின் மனசாட்சியாக மாறிய…
-
- 0 replies
- 240 views
-
-
புலித்தலைமை எவ்வளவு கொடூரமானது என்பது என்னுடன் முரண்பட்ட பின்னரே எனக்குத் தெரிந்தது. மகிந்தவும், கோத்தபாயவும் எவ்வளவு கொடூரமானவர்கள் என்று புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரே எனக்குப் புரிந்தது. இருந்தாலும் மகிந்தவும் கோத்தவும் என்னுடன் நட்பாகப் பழகியதாலும், பிரபாகரன் எனக்கு செய்த துரோகத்தாலுமே எனக்கு மகிந்தவும், கோத்தாவும் செய்தது பெரிதாகப்படவில்லை. எனது அண்ணனையும் தமிழீழத்திற்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காது பிரபாகரனுடன் சேர்ந்து போராடிய கிழக்குப் போராளிகளையும் என்னுடன் சேர்ந்து இருந்ததற்காக கொடுமையான முறையில் புலிகள் கொன்றார்கள்.வெருகல் பகுதியில் தங்களது சகோதரிகள் போல் இருந்த பல பெண் போராளிகளை புலிகளின் வன்னிப் படையணி கொடூரமாக கற்பழித்துக் கொன்றது. இ…
-
- 24 replies
- 3.2k views
-
-
மஹிந்தவிடம் நேரடி கேள்வி..! நீங்கள் தயாரா…? July 22, 20157:52 pm மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன், நேரடிபேஸ்புக் கேள்வி, பதிலுக்கு நாளைய தினம், ஜூலை 23, 2015, காலை 8.30 மணிக்கு இணைந்து கொள்ளுங்கள். http://www.jvpnews.com/srilanka/117556.html
-
- 5 replies
- 618 views
-
-
சிரிய அரசாங்கத்திற்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னெடுத்துவரும் யுத்தத்தில், விமானத் தாக்குதலில் சில தினங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட இலங்கையர் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. கண்டி, வெரலகம, குறுந்துகொல்ல பிரதேசத்தில் வசித்துவரும் ஆறு பிள்ளைகளின் தந்தையான, மொஹமட் முஹடீன் சர்நாஸ் நிலாம் எனப்படும் நிலாம்டீன் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் (7735881070 V) பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2014ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் கலேவல நகரில் ஹமீடியா கட்டிடத்தில் நடத்தப்பட்டுவந்த சர்வதேச பாடசாலையொன்றின் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது அவர…
-
- 0 replies
- 499 views
-
-
அம்பாறையில் தமிழர் பகுதிகளில் அதிரடி சிங்கள குடியேற்றம். July 22, 20152:41 pm அம்பாறை மாவட்டத்தில் பௌத்த பிக்குகளும், இராணுவத்தினரும் இணைந்து தமிழ் மக்களை துரத்தியடிக்கும் செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொது மக்கள் இதனைத் தெரிவிக்கின்றனர். தற்போது தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இருந்து காணிகளை சுவீகரித்து விகாரைகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் தமிழர் கிராமங்களின் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். இதற்கு பௌத்த பிக்குகளும், கடற்படை மற்றும் இராணுவமும் கூட்டிணைந்துள்ளனர். http://www.jvpnews.com/srilanka/117610.html
-
- 6 replies
- 434 views
-
-
சம்பூர் மக்களுக்கு ஐநா அகதிகள் அமைப்பின் மூலமாகவே உதவி: பிரிட்டன் 8 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் சம்பூர் மக்களை சந்தித்த பிரிட்டிஷ் தூதர்இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள சம்பூர் பிரதேச மீள்குடியேற்றத்திற்கு ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் வழியாகவே உதவுவது பற்றி கவனம் செலுத்தப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய தூதர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ள அவர், திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்திற்கும் சென்றிருந்தார். அந்தப் பிரதேசத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டு தமது காணிகளை துப்பரவு செய்யும் மக்களையும் அவர் சந்தித்து உரையாடினார். மீள்குடியேற்றத்திற்கு தயாராகிவரும் தங்களுக்கு தற்க…
-
- 0 replies
- 245 views
-
-
வயல் காவலுக்காக சென்றுகொண்டிருந்தபோது கரடிகளினால் கடித்துக் குதறப்பட்ட இளைஞர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை, கும்புறுப்பிட்டியிலுள்ள நெல்வயலில் காவல் கடமை புரிவதற்கு காட்டோரமாக திங்கட்கிழமை (20) இரவு சென்றுகொண்டிருந்த சிநேகிதர்களான நான்கு பேரை 06 கரடிகள் சூழ்ந்துகொண்டன. இந்நிலையில், கரடிகளிடமிருந்து தப்பிக்கொள்வதற்காக இந்த இளைஞர்கள் படாதபாடுபட்டுள்ளனர். இந்நிலையில், இவர்களில் இருவர் ஓடிச்சென்று மரத்தில் ஏறி தப்பியுள்ள அதேவேளை, ஏனைய இருவரும் கரடிகளிடம் வசமாக மாட்டுப்படவே அவர்களை கடித்துக் குதறியுள்ளன. கரடிகளிடம் கடிபட்ட இருவரும் உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்ப…
-
- 3 replies
- 393 views
-
-
அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாராகும் மகிந்தவின் விசுவாசிகள்JUL 23, 2015 | 2:04by கி.தவசீலன்in செய்திகள் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், விரைவில் தமது பதவிகளை விட்டு விலகலாம் என்று, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ‘ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழுவைக் கூட்டி, தொடர்ந்தும் தாம் ஐதேக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்று இறுதி முடிவு ஒன்றை எடுக்குமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்தவிடம் சில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நான் எனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளேன். ஆனால் கட்சியின…
-
- 0 replies
- 526 views
-
-
மகிந்தவை முந்தினார் ரணில் – அரச பணியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சலுகைக் கொடுப்பனவுJUL 23, 2015 | 1:41by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் இருபிரதான கட்சிகளும், அரச பணியாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை முக்கிய வாக்குறுதியாக முன்வைத்துள்ளன. அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, தாம் பதவிக்கு வந்ததும் அரச பணியாளர்களின் ஆகக்குறைந்த சம்பளத்தை 25ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப் போவதாக, வாக்குறுதி அளித்திருந்தார். இந்தநிலையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று, எல்பிட்டியவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது , அரச பணியாளர்களின் ஆகக்குறைந்த சம்பளத்தை 31ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப் போவதாக…
-
- 0 replies
- 417 views
-
-
துறைமுகநகரத் திட்டத்தை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை – வெளிவிவகார அமைச்சுJUL 23, 2015 | 1:29by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு, சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக, வெளியான தகவல்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிராகரித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னேயிடம், சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டப் பணிகளை நிறுத்துமாறு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், அத்தகைய செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்தார். …
-
- 0 replies
- 408 views
-
-
வெள்ளை வான் சர்ச்சையில் வெளிவரும் புதிய தகவல்கள் JUL 23, 2015 | 1:14by புதினப்பணிமனைin செய்திகள் மிரிஹான பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் சிறிலங்கா இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து வந்தது என்றும், அதிலிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்குச் சொந்தமானது என்றும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கைத்துப்பாக்கி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவினால் கடந்த 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அவரது சொந்தப் பாதுகாப்புக்காக சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தினால் இது வழங்கப்பட்டது என்றும் விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது. இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வெள்ளை வான் மிரிஹான பிரதேசத்தில் சுற்…
-
- 0 replies
- 387 views
-
-
யாழ்ப்பாணத்தில் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுJUL 23, 2015 | 0:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடும்படி கோரி, எமது சிறிலங்கா சுதந்திர முன்னணி என்ற அரசியல் கட்சியின் செயலர் சாகர காரியவசம், மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமது கட்சி வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாகவும், அந்த மனுவை யாழ். மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்து விட்டதாகவும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தமது வேட்புமனு தவறான முறையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஏற்றுக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் மற்றும் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதி…
-
- 0 replies
- 231 views
-
-
தமிழ்மக்களின் உண்மையான விடுதலைக்காக செயற்படுகின்ற அமைப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியை தேர்ந்தெடுத்ததாக விடுதலைப்புலிகள் அமைப்பில் முன்னர் செயற்பட்ட செல்வி கோகுலவாணி தமிழ்க்குரல் அவுஸ்திரேலிய வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். புலத்துவாழ் தமிழர்களிடம் எதிர்பார்ப்பது என்ன? தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உண்மையில் என்ன செய்கின்றது? வித்தியாதரன் மேற்கொள்கின்ற சதித்திட்டங்கள் என்ன என்பது பற்றி இந்நேர்காணலில் கோகுலவாணி விபரித்துள்ளார். அவரது முழுமையான வானொலி நேர்காணல்: http://tamilleader.com/?p=50148
-
- 2 replies
- 2k views
-
-
ஹக்கீமின் கண்டி அலுவலகம் தகர்ப்பு. July 22, 20157:33 pm ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கண்டி மாவட்டத்தில், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் மஹியாவை அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதல் இன்று மாலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் லெஹான் ரத்வத்தையின் ஆதரவாளர்கள் மேற்கொண்டதாக அமைச்சர் ஹக்கீமின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதேவேளை அமைச்சர் ஹக்கீமிற்கும் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் குறித்த குழுவினர் கொலை அச்சுறுத்தல்களையும் விடுத்ததாக ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்த…
-
- 0 replies
- 280 views
-