Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விஜயகலா தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஐதேக வேட்புமனு! - முற்றிலும் புதுமுகங்கள் போட்டி [Saturday 2015-07-11 08:00] ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக யாழ் மாவட்டத்தில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதன்போது அவரது வேட்பாளர்களும் பெருமளவான ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தனர். ஐ.தே.கட்சியின் சார்பாக யாழ்.தேர்தல் மாவட்டத்தில் திருமதி விஜயகலா மகேஸ்வரன் முதன்மை வேட்பாளராகக் களமிறங்குகின்றார். இவர் தலைமையில் இராஜலிங்கம் சிவசங்கர், சின்னத்துரை குலேந்திரராஜா, செபஸ்டியாம்பிள்ளை மரியதாஸன், ரவீந்திரன் துஜீபன், குமாரு சர்வானந்தன், இளையதம்பி நாகேந்திரராஜன், மொஹமட் சுல்தான் ரஹீம், வன்னியசிங்கம் பிரபாகரன்,…

  2. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் திருகோணமலையில் வேட்பு மனு! [Saturday 2015-07-11 08:00] ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக திருகோணமலை கச்சேரியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் இராமநாதன் ஸ்ரீ ஞானேஸ்வரன் தலைமையில், சுந்தரலிங்கம் தங்கேஸ்வரன், இராசமாணிக்கம் ஜீவேந்திரன், (விவசாயி) ஞானகணேசன் கேதீஸ்வரன், கந்தசாமி சந்திரகுமார், செல்வராஜா செல்வ குமார், ஆறுமுகதாஸ் வாசுகி ஆகியோர் போட்டியிடவுள்ளனர். சுயேட்சைக்குழு ஒன்று உட்பட இதுவரை 5 கட்சிகள் திருகோணமலையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=135683&category=TamilNews&la…

    • 1 reply
    • 359 views
  3. யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னிலை சோசலிசக்கட்சி, 3 சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனு! [Saturday 2015-07-11 08:00] யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நேற்று முன்னிலை சோஷலிசக் கட்சியும் 3 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. நேற்று பிற்பகல் 2.45இற்கு முன்னிலை சோஷலிசக் கட்சி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தது. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் அக் கட்சியின் சார்பாக ஜூட் கிருஷாந்த சில்வா பிள்ளை முதன்மை வேட்பாளராகக் களமிறங்குகின்றார். இதேவேளை ஜனநாயக தொழிலாளர் கட்சியின் தலைவர் சத்தியேந்திரா சாம்பசிவம் சுயேச்சையாக களமிறங்குகிறார். இவர் தனது வேட்புமனுவை நேற்றையதினம் பிற்பகல் ஒரு மணியளவில் தாக்கல் செய்தார். அதேநேரம் பெண்கள் அமைப்புச் சார்பாக தம்பிப்பிள்ளை இதயராணி சுயேச்சைக…

  4. அம்பாந்தோட்டையில் மூன்று ராஜபக்சக்கள் போட்டி! - கம்பகாவில் மூன்று ரணதுங்க[Saturday 2015-07-11 08:00] பாராளுமன்றத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக் ஷ குடும்பத்தை சேர்ந்த மூவர் போட்டியிடவுள்ளனர். அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் மூன்று ரணதுங்கக்கள் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். மஹிந்த ராஜபக் ஷ எதிர்வரும் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும் அவரின் சகோதரர்கள் மூவர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர். மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வர் நாமல் ராஜபக் ஷ, மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரி நிருபமா ராஜபக் ஷ ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில…

  5. இறுதி நேரத்தில் மஹிந்த நிராகரிக்கப்படலாம்! - என்கிறார் திஸ்ஸ விதாரண[Saturday 2015-07-11 08:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை இறுதி நேரத்தில் நிராகரிக்கும் வேலைத்திட்டங்கள் கட்சிக்குள் இடம்பெறலாம். ஆனால், அதை எம்மால் அனுமானிக்க முடியாதுள்ளது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பலமான கட்சியாகவும் பிளவுபடாத கட்சியாகவும் இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எம்மிடம் இருந்தது. அதேபோல் இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் மைத்திரி-…

  6. மகிந்தவை வீழ்த்த ஐதேக தலைமையில் புதிய கூட்டணி! - மைத்திரி ஆதரவாளர்களும் கைகோர்ப்பு[Saturday 2015-07-11 08:00] ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, கிராமிய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க, காணி அமைச்சர் எம்.கே.டி. எஸ்.குணவர்தன, அமைச்சர் பியசேன கமகே, உயர்கல்வி அமைச்சர் சரத் அமுனுகம, விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, பிரதியமைச்சர்களான …

  7. மட்டக்களப்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது கடந்த அமர்வை திருகோணமலையில் நடத்தியது. மட்டக்களப்பில் இதற்கு முன்னரும் பொது அமர்வு நடத்தப்பட்டிருந்தது. அதன்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் புதிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்காகவுமே அங்கு மீளவும் அமர்வு நடைபெறுகின்றது. காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து. எனினும் விசாரணைக்கான தி…

  8. தேர்தல் தொடர்பில் சட்ட மீறல்கள் அதிகரித்துள்ளன ; கண்காணிப்பாளர்கள் குற்றச்சாட்டு அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மாகாண சபை மட்டத்திலும், அமைச்சு மட்டத்திலும் நியமனங்கள் வழங்கப்படுதல் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் கூடுதலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும், குறித்த சம்பவங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுபடுத்தியுள்ளதுடன் இதுபோன்ற சில செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இம்முறை தே…

  9. யாழ்.இந்து கல்லூரியின் அதிபர் பதவிக்கான விண்ணப்பத்துக்கு மேல் நீதிமன்று தடை உத்தரவு யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் புதிய அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரலை தேர்தல் காலச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, உடன் நிறுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். வடக்கு மாகாண கல்வியமைச்சரால் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரலானது முறையற்றது என தெரிவித்து தற்போதைய அதிபர் மகேந்திரராசாவினால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கினை நேற்றைய தினம் விசாரனைக்கு எடுத்துக்கொண்ட போதே அவர் இவ் உத்தரவை பிறப்பித்திருந்தார். குறித்த அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரலானது பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்த…

  10. விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் அனந்தி சசிதரன் இலங்கையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை திங்கட்கிழமை 6-ம் திகதி முதல் 15-ம் திகதி வரையில் தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. தனித்துப் போட்டியிடுவதா- இணைந்து போட்டியிடுவதா என்பதைத் தீர்மானிக்கும் நடவடிக்கைகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இறங்கியிருக்கின்றன. வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் …

  11. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் இருவர், விசுவமடு குளத்தில் மூழ்கி இன்று சனிக்கிழமை(11) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா சென்று விசுவமடு குளத்தில் குளித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/150105#sthash.RE5kWYz1.dpuf

    • 2 replies
    • 438 views
  12. தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அதேவேளை, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தத்தேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக அவர் முறையாக விண்ணப்பித்திருந்தால், அவரை அழைத்து தாங்கள் பேசியிருப்போம் என்றும் மாவை சேனாதிரஜா பிபிசி தமிழோசையிடம் கூறினார்…

  13. அனுமதி பத்திரம் இன்றி, மாடுகளை வெட்ட முயன்ற இருவர் கைது : விற்பனையாளர்கள் கடையடைப்பு. யாழ்.மாநகரசபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாவாந்துறை,கல்வியங்காடு,பாசையூர்,அரியாலை , சின்னகடை ,பண்ணை ஆகிய கடைகளின் 30 உரிமையாளர்கள் குறித்த கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த கடையடைப்பு தொடர்பில் தெரிய வருவது, இன்று காலை 6.30 மணியளவில் பண்ணையில் அமைந்துள்ள கொள்களத்தில் வைத்து வெட்டதயாராக இருந்த 4 மாடுகளை கொண்டு சென்றதுடன் அதனை வெட்ட இருந்த இரண்டு நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனால் குறித்த கடை உரிமையாளர்கள் மாநகர ஆணையாளர் பிரணவநாதனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவிருந்தனர். எனினும…

  14. நாங்கள் அமைச்சரவையில் சேருவோம் என்ற கருத்துக்கு இடமில்லை சென்ற ஆட்சி மாற்றத்தின் போது கூட அந்த கோரிக்கை எம்மிடம் விடுக்கப்பட்டது. இனப்பிரச்சனைக்கு தீர்வு தான் எமது நோக்கு என அன்று கூறி இருந்தோம் ன தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசு அமைப்பதற்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற வேண்டிய நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் நாங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு , அகதி வாழ்வுக்கு தீர்வு , நில பிரச்சனைக்கு தீர்வு மீள் குடியேற்ற பிரச்சனை சிறையில் உள்ளவர்களை விடுவித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு ஒ…

  15. தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமஸ்டி முறையை வலியுறுத்தியே எமது தேர்தல் விஞ்ஞாபனம் அமையும் என தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.அத்துடன் ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையில் மாற்றமில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட–கிழக்குத் தமிழர் தாயகங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துக் களமிறங்கவுள்ளது. நாம் ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையிலிருந்து விலகாது தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம். இதில் எவ்வித மாற்றமுமில்லாது தொடர்ந்தும் மக்கள் சேவையினை மேற்கொள்வோம். எமது தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றன. தமிழர் தேசம் அங்கீகரி…

  16. ஈழத்தமிழரது தனித்துவ அரசியல் பேரியக்கத்தின் வலுவான தொடர்ச்சியை மீளக் கட்டமைப்போம்: - ஜேர்மனியில் மாற்றத்தின் குரல் மக்கள் சந்திப்பு [Friday 2015-07-10 19:00] மாற்றத்தின் குரல் சமகாலத்தில் இடம்பெற்றுவரும் ஈழத்தேசிய அரசியல் போக்குகளை மனதிற்கொண்டு எம்மால் ஏதேனும் ஆக்கபூர்வமாக ஆற்ற முடியுமா என்ற ஆழமான சிந்தனைக்குப் பின் தோற்றம் கொண்டதே "மாற்றத்தின் குரல் " என்ற இந்த செயற்றிட்டம் . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அறவழி அரசியற் தொடர்ச்சியின் போக்குகளும் நோக்கங்களும் தடம் மாறிச் செல்வதாக பலரும் கூற ஆரம்பித்துள்ளார்கள் . இக் கருத்தை ஆராய்ந்ததின் அடிப்படையில் தமிழ் அரசியற் தலைமையை தமிழர் நலன் சார்ந்து வழிப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்த் தேசிய விடுதலைய…

  17. மகிந்தவின் பரப்புரைப் போர் 14இல் 11 ஜுலை 2015, சனி 9:20 மு.ப news ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முதலாவது பரப்புரை நடவடிக்கையை எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளார். மகிந்தவின் விசுவாசிகளுள் ஒருவரான முன்னாள் அமைச்சரால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 13ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் மறுநாள் காலை மகிந்த ராஜபக்ச குருநாகலுக்குச் சென்று மத வழிபாடுகளிலும் ஈடுபட்ட பின்னர்,மக்களை சந்திப்பார் என அறிய முடிகின்றது. மேலும் குருநாகலில் தனக்கு விசுவாசமான உறுப்பினர்களின் மேடைகளிலும் மகிந்த ஏறுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://onl…

  18. மகிந்த றாஜபக்சவிற்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த பலர் கட்சியிலிருந்து வெளியேறி புதிய முன்னணியொன்றை அமைத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக லங்காதீப சிங்கள இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அர்யுன ரணதுங்க றாஜித சேனாரத்ன கிருணிகா பிரேமச்சந்திர சுதர்சினி பெர்னாண்டோ பிள்ளே உள்ளிட்ட 20 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் இவ்வாறு வெளியேற இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு நாளைய தினம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

  19. டக்ளஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி வேட்புமனுத் தாக்கல்Jul 10, 2015 யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. டக்ளஸ் தேவானந்தாவை முதன்மை வேட்பாளராக முன்னிறுத்தி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வேட்புமனுவில் ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற, முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன், புதுமுகமாக ஆசிரியர் இரா.செல்வவடிவேல் இடம்பெற்றுள்ளார். ஈபிடிபி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்- டக்ளஸ் தேவானந்தா முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) பசுபதி சீவரத்தினம் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் (ரங்கன்) சூசைமுத்து அலெக்ஸ்சாண்டர் (…

  20. சிறிதரனுக்கு எதிராக துண்டுப்பிரசுரம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் சுவரொட்டியாக ஒட்டப்பட்டும் உள்ளன. சிறிதரனின் மோசடிகளும் ஊழல்களும் எனத் தலைப்பிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் முன்னாள் போராளிகளை சிறிதரன் பிடித்துக் கொடுத்தவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து ஐ.நாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் சூரியசிங் என்பவருடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்டு, சுயநலமாக நடந்தனர் என அந்தத் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் இந்த துண்ட…

  21. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுடுள்ளதாக சிங்கள அரசியல் நிகழ்ச்சியான பொலிரிக்சில் கருத்து பரிமாறப்பட்டிருந்தது. இந்தத் தேர்தல் விஞ்ஙாபனத்தில தமிழர்களின் சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்பட வேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் தெரிவித்ததாகவும் எனினும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சேர்ப்பதற்கு சம்பந்தனும் சுமந்தீரனும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகவும் அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு http://www.lankachannel.com/politix-10th-july-2015_1b44a0bfc.html நான் கூறிய விடயம் 16ம் நிமிடத்திலிருந்து பேசப்படுகிறது

    • 0 replies
    • 393 views
  22. வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தமிழினம் தமது அடையாளங்களையெல்லாம் இழந்து நிற்கின்றது: - சீனித்தம்பி யோகேஸ்வரன் [Friday 2015-07-10 19:00] வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் சரியான தலைமைத்துவத்தின் கீழ் வழிநடத்தப்பட்டதன் காரணமாக நாம் தமிழர்களாகவும் எமது மொழியைப் பின்பற்றபவர்களாக தமிழ் இனத்தைக் காப்பாற்றி வருகிறோம் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஏனைய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார் மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலே இவ…

  23. தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐதேக கூட்டமைப்பில் ஆறு மாவட்டங்களில் போட்டி: [Friday 2015-07-10 20:00] மனோ கொழும்பில், திகா, ராதா நுவரெலியாவில் போட்டியிட வேட்பு மனுக்களில் கையெழுத்து.. தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள், ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் முகமாக நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்ட வேட்புமனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர். இன்று பிற்பகல் கையெழுத்திடும் நிகழ்வு ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம் பெற்றது. இதன்படி கூட்டணி தலைவரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கொழும்பு மாவட்ட வேட்பு மனுவிலும், கூட்டணி பிரதி தலைவர்களான தொழிலாளர் தேசிய முன்னணி தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி தலைவர் வி…

  24. முன்னாள் போராளிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி 10 நிமிடங்களுக்கு முன்னர்பகிர்க விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. முன்னாள் போராளிகள் மற்றும் கூட்டமைப்பினர் இடையேயான பேச்சுவார்த்தைஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளிக்கவில்லை என அந்தப் புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராகிய நடேசபிள்ளை வித்தியாதரன் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தச் சந்திப்பு இன்று வவுனியாவில் நடைபெற்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்க…

    • 52 replies
    • 2.9k views
  25. முழுமையான அதிகாரப்பகிர்வை கோருகிறது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்! [Friday 2015-07-10 07:00] பொதுத்தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடவுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் பூரண அதிகாரப் பகிர்வு கோரப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து பூரண அதிகாரப் பகிர்வு தமிழ் மக்களுக்கு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கோரப்படவுள்ளது. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இதுபற்றி விளக்கியுள்ளார். வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. தடுத்து வைக்கப்பட்டுள்…

    • 2 replies
    • 263 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.