Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழிலும் சர்வதேச யோகா தினம்; இந்திய துணைத்தூதரகத்தால் ஏற்பாடு முதலாவது சர்வதேச யோகா தினம் எதிர்வரும் 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் 2014 டிசெம்பர் 11 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்று யூன் மாதம் 21 திகதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிரகடனப்படுத்தியது. முதலாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யாழ். இந்தியத் துணைத் தூதரகம் இரண்டு சிறப்பு நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 21 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 - 09.30 மணி வரை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் 4ஆயிரம் முதல் 5ஆயிரம் மாணவர்கள் வரை ப…

  2. மாற்றத்துக்காக உயிரையும் மாய்ப்பேன் :சூளுரைக்கிறார் மைத்திரி அரசியல் மற்றும் சமூக மாற்றத்துக்காக எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டார நாயக்க செய்த தியாகத்தை எமது நாடு மீண்டும் வேண்டி நிற்கிறது. நாட்டுக்கு தேவையான மாற்றங்களைக் கொண்டு வர எனது உயிரையும் தியாகம் செய்ய நான் தயார். இவ்வாறு சூளுரைத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தம்பதெனியவில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பொதுத் தேர்தல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.அந்த நிகழ்வு பிளவுபட்டு நிற்காமல் கட்சியினர் அனைவரும் ஒரே அணியாக ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்றும் அவர…

  3. சமூக விரோத குற்றச்செயல்களுக்கு பிணை வழங்கப்படாது; நீதிபதி இளஞ்செழியன் சமூக விரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். சமூக விரோதக் குற்றச்செயலுடன் சம்பந்தப்பட்ட வழக்கொன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையொன்றின்போதே, நீதிபதி இளஞ்செழியன் இதனைத் தெரிவித்துள்ளார். போதைவஸ்து குற்றங்கள், அபாயகரமான ஆயுதங்களை வைத்திருக்கும் குற்றங்கள், சுடுபடைக் கலன் சட்டத்தின் கீழான குற்றங்கள், வீதி வாள்வெட்டுக்கள், கோஷ்டி மோதல்கள், மற்றும் பாலியல் துஸ்பிரயோகக் குற்றங்கள் போன்ற குற்…

  4. மைத்திரி அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தினில் தமிழ் மக்களிற்கு உறுதியளிக்கப்பட்டவை நிறைவேற்றப்படவில்லை.அத்துடன் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குறுதிகள் தந்த மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் எந்தக்கரிசனையும் கொள்ளவில்லை யெனவும் இது தொடர்பினில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரை ஆகியோருடன் பேச்சுவாத்தை நடத்தவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நேற்று செவ…

  5. ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை மற்றும் தராகி சிவராம் படுகொலையுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகள் கைது செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பினில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விதந்துரையினை துரித கதியினில் தந்துதவுமாறு தாம் கோரியிருப்பதாக காவல்துறையின் ஊடகப்பேச்சாளர் றுவான் குணசேகர தெரிவித்தார். நேற்றைய தினம் கொழும்பிலுள்ள இலங்னை காவல்துறை தலைமையகத்தினில் ஊடக செயற்பாட்டு அணியினருடனான சந்திப்பினிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.பதிவு இணையசெய்தி பிபிசி செய்தியாளர் நிமலராஜன் மற்றும் தராகி சிவராம் படுகொலை விசாரணைகள் தொடர்பினில் அங்கு பிரசன்னமாகியிருந்த யாழ்.ஊடக அமையப்பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த காவல்துறையின் ஊடகப்பே…

    • 0 replies
    • 474 views
  6. தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு ரணில் நிதி வழங்கியதான குற்றச்சாட்டு தொடர்பினில் முதலமைச்சரிடம் விளக்கம் கோராப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார். அத்துடன் பெருமளவு பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமரிடமிருந்து பெருமளவு நிதியை பெற்றுள்ளதாக வெளியாகிவரும் செய்திகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தென்னிலங்கைக்கு அழைக்கப்பட்டு பெருமளவு பணம் கைமாற்றப்பட்டுள்ளதாகவும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தி இவர்கள் இவ்வளவு இவ்வளவு பணத்தை பெற்ற…

    • 0 replies
    • 409 views
  7. வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள மக்களுடைய எஞ்சிய வீடுகளையும் உடைக்கும் இராணுவத்தினர் அங்குள்ள கிணறுகளையும் இடித்து மூடிவருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன் உறுப்பினர் அப்பாத்துறை விநாயக மூரத்தி குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பினில் வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தினில் வலி.வடகில் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினருடைய கட்டுப்பாட்டின் கீழ் பெரும்பாலான நிலங்கள் உள்ளது. இவ் நிலங்களுக்கு உரித்தானவர்கள் இன்றுவரை எதுவித வசதிகளும் அற்ற நலன்புரி நிலையங்களில் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகின்றனர். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கின் மீள்கு…

    • 0 replies
    • 367 views
  8. நியூசீலந்து நாட்டில் நடைபெற்ற ஆசியா , பசிபிக் பசுமைக் கட்சியின் கூட்டமைப்பு மாநாட்டில் ஈழத்தமிழர்கள் தொடர்பான இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றம் கடந்த இரண்டு நாட்களாக நியூ சீலந்து நாட்டில் நடைபெற்ற ஆசியா , பசிபிக் பசுமைக் கட்சியின் கூட்டமைப்பு மாநாட்டில் தமிழின அழிப்பு தொடர்பான தீர்மானம் ஒன்று நியூ சீலந்து நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் Catherine Delahunty அவர்களால் முன்வைகப்பட்டத்தை தொடர்ந்து , ஏற்பட்ட விவாதத்தில் ஆஸ்திரேலியா நாட்டு பசுமைக் கட்சியின் சார்பில் கலந்துகொண்டவர்களால் இத் தீர்மானம் நீர்த்துப் போக வைக்கப்பட்டது . ஆரம்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் Catherine Delahunty அவர்களால் முன்வைகப்பட்ட தீர்மானத்தின் தமிழ் ஆக்கம் : இத் தீர்மானத்தில் ஈழத்தமிழர்களுக்கு …

    • 0 replies
    • 392 views
  9. கனடாவின் பிரதமர் மாண்புமிகு ஸ்டீபன் ஹார்பர் அண்மையில் தனது அரசின் பாதுகாப்பு தொடர்பான கொள்கைவிளக்க நிகழ்விற்கு கனடாவின் பிரதான நகரமாகிய டொரண்டோ வந்த போது விசேடமாக அழைக்கப்பட்ட கனேடிய தமிழ் சமூகத்தினருடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடாத்தினார். கனேடிய பிரதமரின் அலுவலகத்தால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டு விசேடமாக அழைக்கப்பட்ட கனேடிய தமிழ் சமூகத்தினர் இன்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். கனடிய அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் கனடாவின் பாதுகாப்பு மற்றும் கனடாவிற்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் பயங்கரவாதத்திலிருந்து கனடிய மக்களையும் கனடாவின் நன்மதிப்பையும் பாதுகாப்பதற்காக தமது அரசாங்கம் உறுதியாக எடுத்துவரும் நடவடிக்கைக…

    • 14 replies
    • 1.1k views
  10. நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கை மீது மீண்டும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2002 -2004ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கிடையில் சமாதான செயற்பாடுகளை, சொல்ஹெய்ம் முன்னெடுத்திருந்தார். அண்மையில், இலண்டன் நகரில் இடம்பெற்ற உலக தமிழர் அமைப்பினர் - இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சொல்ஹெய்ம் கலந்துகொண்டார். இதன்போது, தமிழ் டயஸ்போரா அமைப்பினருடன் செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பில் தமது அனுபவங்ககை கொண்டு சொல்ஹெய்ம் விளக்கமளித்தார். இவ்வாறு, அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும் போது, தெரிவித்துள்ளார். …

  11. ஐ.தே.க. ஆட்சியிலேயே வடக்கிலிருந்து 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சாட்ட முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தாம் ஆட்சிப் பொறுப்பைக் கையேற்றதன் பின்னர் வடக்கிலிருந்து ஒரு இராணுவ முகாமைக்கூட அகற்றவில்லை. அனைத்தும் மஹிந்தவின் காலத்திலேயே அகற்றப்பட்டன என்று தெரிவித்துள்ளது. தமது ஆட்சிக்காலத்தில் வடக்கிலிருந்து 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டிருந்தால், அவற்றின் பெயர் விவரங்களை வெளியிடுமாறு மஹிந்தவுக்கு ஐ.தே.க. சவால் விடுத்துள்ளது. வடக்கிலிருந்த 152 முகாம்களில் 59 முகாம்கள் அகற்றப்பட்டு 93 முகாம்களே தற்போது எஞ்சியுள்ளன என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்நி…

    • 4 replies
    • 413 views
  12. உள்நாட்டு விசாரணை நம்பகமானதாக இருக்கும் – என்கிறார் விஜேதாச ராஜபக்ச JUN 17, 2015 | 1:29by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கும் உள்நாட்டுப் பொறிமுறை, அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் நம்பகம்மிக்க ஒன்றாக இருக்கும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சிறிலங்கா உருவாக்கும் உள்நாட்டுப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களை பெரும்பான்மையாக உள்ளடக்க வேண்டும் என்று, ஜெனிவா கூட்டத்தொடரில் நியுயோர்க்கைத் தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருந்தது. இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்…

    • 0 replies
    • 462 views
  13. தமிழ் முற்போக்கு கூட்டணி நேற்றிரவு ரணிலுடன் பேச்சு! - நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு [Tuesday 2015-06-16 19:00] ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நேற்று இரவு அலரி மாளிகையில் இடம் பெற்றது. தமுகூ தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதி தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், ராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர், ஐதேக தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடினர். பிரதமரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், ஐதேக பொது செயலாளர் கபீர் ஹஷிம், உப தலைவர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற தவிசாளர் லக்ஷ்மன் கிரியல்ல ஆகியோரும் கலந்து கொண்…

  14. மகிந்த -மைத்திரியை இணைக்க ஆறு பேர் கொண்ட குழு நியமனம்! [Tuesday 2015-06-16 19:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இணைக்கும் முயற்சியில் சுதந்திரக் கட்சி ஈடுபட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடிய போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்தவையும் மைத்திரியையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காக ஆறு பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினால் 100 நாள் திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியினால் அமுல்படுத்த முடியாவிட்டால், அமைச்சர்கள் பதவி விலகி சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்கவும் இன்றைய கூட்…

  15. வித்தியா கொலை குற்றவாளிகளுக்கான தண்டனை அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும்! - கிழக்கு முதல்வர் [Tuesday 2015-06-16 20:00] கடந்த மாதம் வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலையின் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமான தண்டனை அவசரமாக வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார். கிழக்கு மாகாண சபையின் சபை அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. அதன்போது கொலை செய்யப்பட்ட மாணவி வித்யாவின் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டதுடன், கொலையாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமைய…

  16. மேல்மாகாணசபை ஆளும்கட்சி உடைந்தது! - ஏட்டிக்குப் போட்டியாக செய்தியாளர் சந்திப்பு [Tuesday 2015-06-16 19:00] மேல் மாகாணசபை ஆளும்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இருவேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்புக்கள் இன்று நடத்தப்பட்டுள்ளன. இன்று முற்பகல் பத்தரமுல்ல றோயல் பிலாசாவில் கூடிய ஹிருனிகா பிரேமசந்திர, மல்சா குமாரதுங்க, ரஞ்சித் சோமவன்ச, காமினி திலகசிறி, மஞ்சுள புத்ததாச, இசுர தேசப்பிரிய, உபாலி குணரட்ன ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் மேல் மாகாணசபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் நடவடிக்கைகளையும், அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவோரையும் கடுமையான விமர்சனம் செய்தனர். …

  17. சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கியமைக்கான ஆதாரங்களை இந்தோனசியா வெளியிட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்கு வெளியே அழைத்துச் செல்வதற்காக இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் பெரும் தொகை பணம் வழங்கியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அண்மையில் இந்தோனேசியாவை சென்றடைந்திருந்தது. சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் படகைச் செலுத்தியோருக்கு ஆயிரக் கணக்கான அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கியமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என இந்தோனேசிய அ…

    • 1 reply
    • 482 views
  18. ஒரு மில்லியன் பரல் மசகு எண்ணெயுடன் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த ஈரானிய எண்ணெய்க் கப்பல் தொடர்பாக அமெரிக்கா விசாரணைகளை நடத்தி வருவதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா தடைவிதித்துள்ளது. இந்தநிலையில், ஈரானில் இருந்து சிறிலங்கா வந்த லலிமா என்ற ஈரானிய எண்ணெய்க் கப்பல் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். லலிமா என்ற இந்தக் கப்பல், எவ் வேல் என்ற கப்பலுக்கு மசகு எண்ணெயை ஏற்றியுள்ளது. கடந்த 5ம் நாள் கொழும்புத் துறைமுகம் வந்த லலிமா கப்பல் குறித்து சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கத் தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்யூ லோ என்ற அமெரிக்க அதிகாரி, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளு…

  19. நாங்கள் அரசிடமிருந்து பணம் பெறவில்லை ; மாவை எம்.பி தெரிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெற்குக்கு அழைக்கப்பட்டு அரசாங்கத் தரப்பினரால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு, தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெற்குக்கு அழைக்கப்ப…

    • 10 replies
    • 626 views
  20. சிறிலங்கா நிதியமைச்சரின் தலை தப்புமா? – ஜூலை 6இல் தெரியும் JUN 16, 2015 | 14:51by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் ஜூலை 6 ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக 100க்கும் அதிகமான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த மாதம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2015/06/16/news/6997

    • 0 replies
    • 446 views
  21. உள்நாட்டு விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் பெரும்பான்மையாக இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் இலங்கை அரசாங்கம் தான் ஏற்படுத்த திட்டமிட்டுள்ள உள்நாட்டு விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் பெரும்பான்மையாக இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவையின் 29 வது அமர்வில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இலங்கையின் புதிய அரசு நம்பகத்தன்மை, வெளிப்படையான நீதி மற்றும் பொறுப்புக்கூறுதல் ஆகியவற்றை உருவாக்கும் போது அதற்கான பொறிமுறை சர்வதேச பொறிமுறையாகவே அல்லது அந்த பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் பெரும்பான்மையாக இடம்பெறுவத…

  22. நாட்டை பயங்கரவாதத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீட்டுள்ள போதும் மக்களின் மனங்களை அவரால் வெல்ல முடியாது போயுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அகில இலங்கை வை. எம். எம். ஏ. மாநாட்டில் நேற்று பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டார். ஆனால் அவர் சமாதானத்தை யதார்த்தமாக்கவில்லை. மக்களின் மனங்களையும் அவர் வெல்லவில்லை. ஜனவரி 08 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் இதனைத் தெளிவுபடுத்தின.எதிர்கால அரசியல் தலைவர்க ளும் இதனைத் தகுந்த பாடமாக ஏற்று மக்கள் மனங்களை வெல்ல வேண்டும்.இனப்பிரச்சினைக்கு மூல காரணம் அதிகாரப் பசியேயாகும்…

    • 3 replies
    • 720 views
  23. வித்தியா படுகொலை - பொலிஸ் அதிகாரிகள் அளித்த சாட்சியம்! [Tuesday 2015-06-16 07:00] கைகள் இரண்டும் தலைக்குமேல் உயர்த்திக் கட்டப்பட்டிருந்தன. மாணவியின் ஆடைகள் அகற்றப்பட்டிருந்தன. இடது காதிலிருந்து இரத்தம் வழிந்திருந்தது. அவரது கழுத்துப்பட்டி கழுத்தை இறுக்கிய வண்ணம் காணப்பட்டது. மரத்தில் கால்கள் இழுத்து கட்டப்பட்டிருந்தன என்று மாணவி வித்தியா படுகொலை வழக்கில் நேற்று சாட்சியமளித்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்த பொலிஸ் இன்பெக்டர் காமினி ஜயவர்த்தன தெரிவித்தார். நான் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுகின்றேன். இந்த சம்பவம் இடம்பெற்ற போது நானே கு…

    • 2 replies
    • 1.5k views
  24.  தகுதியிருந்தும் புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைசேர்ந்த தமிழ் தேர்வு நாடிகளுக்கு ஜூலை 1ஆம் திகதிக்கு முன்னர் நியமனங்களை வழங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை உறுதிமொழியளிக்கப்பட்டது. தகுதியிருந்தும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் தேர்வுநாடிகள், எழுத்தாணைகள் கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் இரண்டு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் இரண்டும், மேன் முறையீட்டு நீதிமன்ற தலைவர் விஜித் மலல்கொட முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை(15) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. மனுதாரர்கள் சார்பில், சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் பணிப்பின் பேரில் சட்டத்தரணிகளான ம. ஆ. சுமந்திரன் மற்றும் …

  25. யாழ்ப்பாணத்தில் மதுபானத்தின் பாவனை 2009 இன் பின்னர் பல மடங்குகள் அதிகரித்துள்ளன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மதுவரித் திணைக்களத்தின் ஆதாரங்களின்படி 2009 இல் யாழ்ப்பாணத்தில் 7 இலட்சத்து 62 ஆயிரத்து 610 லீற்றர் பியர் நுகரப்பட்டது. அதுவே 2013 இல் ஐந்து மடங்கால் அதிகரித்து 40 இலட்சத்து 56 ஆயிரத்து 999 லீற்றர் பியர் நுகரப்பட்டது. தற்போது இது இரண்டு அல்லது மூன்று மடங்கால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்று வெளிநாட்டு மதுபான வகைகளின் நுகர்வு 800 வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2009 இல் வெளிநாட்டு வகை 6 ஆயிரத்து 598 லீற்றர் மதுபான வகைகள் நுகரப்பட்டன. ஆனால் 2013 இல் 61 ஆயிரத்து 134 லீற்றர் வெளிநாட்டு மதுபான வகைகள் நுகரப்பட்டன எனத் தெரியவந்துள…

    • 4 replies
    • 720 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.