Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆட்சியில் இருக்கும் போது ஆட்டம் போடக் கூடாது - க.வி.விக்னேஸ்வரன் ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுவதில் மட்டும் குறிக்கோளாக இருந்தால், எமக்கு என்ன நடக்கும் என்பதற்கு, கடந்த அரசின் ஆட்சிக் இழப்பு சிறந்த எடுத்துக் காட்டாகும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு முதலமைச்சர் உரையாற்றினார். அவர் தனது உரையில் தெரிவித்ததாவது: ஆட்சியில் கடந்த அரசு ஆட்சியில் இருந்த போது மஹிந்தோதய தொழில் நுட்ப ஆய்வுகூடம், ம…

  2. பழைய தேர்தல் முறையிலேயே பொதுத்தேர்தல் நடாத்தப்பட வேண்டும்:இரா.சம்பந்தன்

    • 1 reply
    • 308 views
  3. மாவை சேனாதிராஜா அவர்களின் செவ்வி (june 7 2015)

    • 0 replies
    • 420 views
  4. இந்தியா புலிகளுக்கு நிதி வழங்கியதாக பாகிஸ்தான் செனட் சபையில் குற்றச்சாட்டு யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்தியா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக பாகிஸ்தான் செனட்சபையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தொடர்பில் இந்திய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கைகளுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று செனட்சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என செனட்சபையின் தலைவர் ராஜா மொஹ்முட் சபார் உல் ஹக் இந்த தீர்மானத்தை முன்வைத்திருந்தார். இந்தியாவின் இவ் மேலாதிக்க மனப்போக்கை பாகிஸ்தான் நிராகரித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய தலைமை அறிக்கைகளுக்கு எதிராக நடந்த விவா…

  5. ஆஸ்திரேலியாவுக்குள் ஆட்கள் சட்டவிரோதமாக குடியேறி வருவதை தடுக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்வோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் ஆஸ்திரேலிய கடற்கரைகளை குடியேறிகள் படகுகள் வந்தடைவதை தடுக்க ஆக்கத்திறனுடனான யுக்திகள் அனைத்தையும் தாம் கையாள்வோம் என்றும், அவை வெற்றிகரமான வழிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படகுகளில் வரும் குடியேறிகள் ஒரு படகில் வந்த குடியேறிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப, ஆஸ்திரேலியா முப்பதினாயிரம் டாலர்கள் லஞ்சமாக வழங்கியதாக இந்தோனேசிய பொலிஸ் தலைமை அதிகாரி குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய பிரதமரின் இந்தக் கருத்து வந்துள்ளது. சர்வதேச கடற்பரப்பில் நியூசிலாந்தை நோ…

    • 2 replies
    • 582 views
  6. புலம்பெயர் தமிழர் மத்தியில் ஊடுருவிய சிறிலங்கா புலனாய்வு அமைப்பு – அம்பலமாகும் இரகசியம் JUN 09, 2015 | 2:03by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் யாழ்ப்பாணத்திலும், ஐரோப்பாவிலும் இயங்கும் டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர் எஸ்.என்.குகநாதன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைப்பிட்டுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவருடன் இணைந்து சட்டவிரோதமான வகையில் நிதியை திரட்டியதாக, டான் தொலைக்காட்சியின் நிறைவேற்றுப் பணி…

    • 11 replies
    • 1.7k views
  7. இலண்டன் பேச்சுக்கள் அம்பலமாகியதனால் அரசியல் கைதிகளது விடுதலை தடைப்பட்டுவிட்டதாக புதிய கதை அவிழ்த்துள்ளார் சுமந்திரன். புலம்பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் அமைப்புக்கள் மீதுள்ள தடைகளை நீக்குவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளில் சந்திப்புக்களை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் பொய்யான பிரச்சாரம் செய்துவரும் நிலையில் நாங்கள் திரைமறைவான சந்திப்புக்களை செய்து வருகின்றோம் என கூறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு, வெளிநாட்டில் நடத்தும் இரகசிய கூட்டங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் கூறிவந்தனர். சர்வதேச…

  8. இலங்கையில் யுத்தத்தினால் கைகளை இழந்துள்ளவர்களுக்கு செயற்பாட்டுத் திறன் மிக்க செயற்கைக் கைகளை வழங்கும் நிகழ்வொன்று முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் வெள்ளியன்று நடைபெற்றிருக்கின்றது. புதிதாக கையைப் பெற்றவர் எழுதிப் பார்க்கிறார் ஆஸ்திரேலிய ரோட்டரிக் கழகத்தினர் யாழ்ப்பாணம் ரோட்டரிக் கழகத்துடன் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். யுத்தத்தில் கைகளை இழந்துள்ள முன்னாள் விடுதலைப்புலிகள், பொதுமக்கள் என ஆண்களும் பெண்களுமாக இந்தத் திட்டத்தின் கீழ் கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பலர் வருகை தந்திருந்தனர். முழங்கைக்குக் கீழ் கைகளை இழந்துள்ளவர்களுக்கு ஸ்பிரிங் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆகிய இந்தக் கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. முழங்கைக்குக் கீழ் நீண்டுள்ள கைப்பகுதியில் …

    • 0 replies
    • 370 views
  9. கண்டவர்கள் எல்லோருக்கும் பறை அடித்துவிட்டு இலண்டன் போக வேண்டிய தேவை எனக்கில்லை.கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் சொல்லி அனுமதி பெற்ற பின்னர் தான் நான் இலண்டன் சென்றேனென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ்.நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஆஜராகிய பின்னர் ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு அவர் பதிலளித்தார். கட்சியின் அனுமதியின்றி நீங்கள் இலண்டன் சென்று பேச்சுக்களினில் ஈடுபட்டிருந்ததாக கட்சியின் ஊடகப்பேச்சாளர் குற்றஞ்சாட்டியுள்ளாரேயென்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ஒருவிடயத்தை தெரிந்தால் ஓடோடிப்போய் ஊடகங்களிற்கு பறைதட்டுவது போன்று என்னால் செய்ய முடியாது.கட்சி தலைவரிடம் அறிவித்து அனுமதி பெற்றே இலண்டன் சென்ற…

  10. முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இம்மாதம் இறுதியில் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள சக்தி மற்றும் வலு தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே இம்முறை அவர் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/06/10/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-…

    • 16 replies
    • 1.1k views
  11. தேர்தல்முறை மாற்றம் – மைத்திரியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் JUN 12, 2015 | 8:19by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த புதிய யோசனையை சிறிலங்கா அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் இன்று அங்கீகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை அமைக்கவும், இதில் 125 உறுப்பினர்களை தொகுதி வாரியாகத் தெரிவு செய்யவும், 75 பேரை மாவட்ட அடிப்படையில் விகிதாசார முறைப்படி தீர்வு செய்யவும், எஞ்சிய 25 பேரை தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கவும் வகை செய்யும் திருத்த யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்க…

    • 1 reply
    • 418 views
  12. எங்கள் முற்போக்கு போராட்டத்துக்கு முதற்கட்ட வெற்றி: தமுகூ தலைவர் மனோ கணேசன் Jun 12, 20150 125 தொகுதிகள்+ 75 மாவட்ட விகிதாசாரம்+ 25 தேசிய விகிதாசாரம்= மொத்தம் 225 என்று இருந்த தேர்தல் முறை திருத்த கணக்கு இப்போது மாறி 145 தொகுதிகள்+ 55 மாவட்ட விகிதாசாரம்+ 37 தேசிய விகிதாசாரம் = மொத்தம் 237 என அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது. அதாவது 125 ஆக இருந்த தொகுதிகள் 145 ஆக அதிகரிக்கப்பட்டு 20 தொகுதிகள் கூடியுள்ளன. இது எங்கள் உறுதியான விட்டுக் கொடுக்கா போராட்டத்துக்கு கிடைத்துள்ள முதற்கட்ட வெற்றி. மூன்று நாட்களுக்கு முன்னர் இருந்த நிலைமையை இது முற்போக்கான நிலைமை என்பது நிச்சயம். அடுத்த கட்டமாக பாராளுமன்றத்தில் இந்த மசோதா கொண்டு வரப்படும்போது அவசியமானால் இன்னமும் தொகுதிகளை க…

    • 1 reply
    • 390 views
  13. நாடாளுமன்றத்தின் ஆசனங்களை 237ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிறிலங்காவின் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போது புதிய தேர்தல் திருத்தச் சட்டமூலம் இறுதி அங்கீகாரத்துக்காக முன்வைக்கப்பட்டது. புதிய திருத்தச் சட்டத்தின் கீழ், நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 237ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொகுதி முறையில் தெரிவாகின்ற எண்ணிக்கை 145ஆகவும், 45 பேர் விகிதாசாரமுறையிலும், 37 பேர் தேசிய பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த தொகுதி முறை தெரிவைக் காட்டிலும், 20 பேர் அதிகமாக தொகுதி வாரியாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இது ஓரளவுக்கு சிறுபான்மை மக்களுக்கு சாதகத்தை ஏற்படு…

    • 0 replies
    • 416 views
  14. வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குடந்த புதன்கிழமை வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தினால் ஒப்பமிடப்பட்டுள்ளது. இடமாற்றம் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சகல உறுப்பினர்களும் வடக்கு மாகாண சபையின் அமர்வு ஆரம்பித்தவுடன் சபா மண்டபத்தில் நடுவே எமக்கு முன்பாக நின்று தமது ஆட்சேபத்தை வெளிப்படுத்தினர். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனும் தொடர்பு கொண்டு பொருத்தமன நடவடிக்கை எம்மால் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தத்தமது ஆசனங்களுக்குத் திரும்பினர…

    • 0 replies
    • 522 views
  15. யாழ்.நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈபிடிபியின் முக்கிய கைகள் இருந்தமை தொடர்பான தகவல்கள் விசாரணைக் குழுவிற்கு கிட்டியுள்ளது. கொழும்பில் இருந்து வருகைதந்துள்ள விசேட குற்றத்தடுப்புகாவல்துறையிடமே இவை கிட்டியுள்ளன. அவ்வகையில் ஈபிடிபி வசமள்ள வேலணைப்பிரதேச சபையின் தலைவரான போல் என்றழைக்கப்படும் சி.சிவராசா உள்ளிட்ட வேறு சில கட்சியின் உறுப்பினர்களிடம் மேற்படி வன்முறைச் சம்வங்களின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் டக்ளஸின் வலது கையும் முன்னாள் யாழ்.மாநகர துணை முதல்வாரன றீகனையும் தேடி வலைவிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைதாகியுள்ள விஜயகாந்த் மற்றும் செந்தூரன் இருவரும் இத்தகைய பின்னணியினை கொண்டுள்ளனர். இதனிடையேகை…

    • 0 replies
    • 621 views
  16. கிளிநொச்சி, அக்கராயன் ஆற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக ஆற்றுநடுவே காணப்படும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அழிவடையும் அபாயநிலை உள்ளது என கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் ஒருவர் வியாழக்கிழமை (16) தெரிவித்தார். அத்துடன், அக்கராயன் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கையால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்;படும். சுமார் ஏழரை கிலோமீற்றருக்கு இந்த மணல் அகழ்வு நடைபெறுகின்றது. மணல் அகழ்வு காரணமாக அக்கராயன் மத்திய பகுதி, கிழக்குப் பகுதி, ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் ஆகிய கிராமங்களின் நிலத்தடி நீர் எதிர்காலத்தில் குறைவடையக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. அக்கராயன் ஆற்றில் மணல் அகழ்வு தொடருமானால் எதிர்காலத்தில் அக்கராயன் பிரதேச…

    • 4 replies
    • 718 views
  17. தனது ஆலோசனையின் பேரிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்களில் ஒருவராகவிருந்த எழிலன் (சசிதரன்) இலங்கை இராணுவத்தினரிடம் கரணடைந்ததாக அவரது மனைவி அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிராகரித்துள்ளார். 'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை. இந்த செய்தியின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியாது' என்று, இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து பத்திரிகைக்கு கனிமொழி எம்.பி கூறியுள்ளார். 'தனது கணவர் எழிலன், இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு தீர்மானம் எடுக்க முன்னர், செய்மதி தொலைபேசி மூலம் கனிமொழியுடன் உரையாட…

    • 65 replies
    • 5.7k views
  18. பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினால் (FCID) நாமல் ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில், நாமல் ஏன் அழைக்கப்பட்டார் என்பது குறித்த உள்ளக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன. சிங்கள பாடகி நட்டாஷாவுடன் தாராளமாக நடந்து கொண்டதன் எதிர்வினையாகவே விசாரணையை சந்திக்கவுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. அவ்வளவாக பிரபலம் இல்லாத பாடகி நட்டாஷா அண்மையில் திருமணம் செய்து கொண்டிருந்தார். நட்டாஷா மற்றும் பிரிஹான் திருமணத்திற்கு 20 மில்லியன் (200 லட்சம்) செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையைசெலவிடக்கூடிய நிலையில் நட்டாஷா மற்றும் பிரிஹான் இல்லையென்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். நட்டாஷா பிரபல பாடகி அல்ல. அவரட செல்வந்த குடும்ப பி…

    • 3 replies
    • 799 views
  19. புலம்பெயர் தமிழர்களின் நிதிச் செல்வாக்கின் தாக்கத்திற்கு வித்யா என்கின்ற பாடசாலை மாணவி கோரமாகப் படுகொலை செய்யப்பட்டமை யாழ்ப்பாணத்தின் இன்றைய சமூகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது என்கின்ற உண்மையை வெளிப்படுத்துகின்ற சாட்சியமாகக் காணப்படுகிறது. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் அனந்த் பாலகிட்னர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ‘குடும்பங்களை மனதளவில் பாதிக்கின்ற பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறான மோசமான சம்பவங்களால் சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட்டுள்ளதை காணமுடியும். குடும்ப மற்றும் சமூக உறவுகள், நிறுவகங்கள், நடைமுறைகள், சமூக வளங்கள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே பெரியளவில் உளவியல் பாதிப்பை உண்டுபண்ணக் கூடிய சம்பவங்கள் உருவா…

    • 9 replies
    • 931 views
  20. பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவுடன் ஓட்டங்கள் ஆரம்பமாகியிருக்கிறது. மக்களும் கண்ணை மூடிக்கொண்டு வெறும் உணர்ச்சி பேச்சுக்களுக்கும் அல்லது வேலைவாய்ப்பு, நிவாரணம் தருகிறோம் என்ற வெற்று வார்த்தைகளுக்கு மயங்கி வாக்களிக்க தயாராவார்கள். இந்த வேளையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிட இருக்கும் தமிழ் வேட்பாளர்களை நோக்கி சில கேள்விகளை எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். வடக்கு கிழக்கில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து கடந்த காலங்களை போல தமிழ் தேசியக் கூட்…

    • 2 replies
    • 764 views
  21. வடகிழக்கு தமிழ் மக்களின் உடனடித்தேவைகள் மற்றும் தேர்தல் நிலமைகள் குறித்து உள்நாட்டுக்குள் ஒரு பேச்சுவார்த்தையினை நடத்தாமல் வெளிநாட்டில் அதுவும் இரகசியமான முறையில் ஒரு பேச்சுவார்த்தையினை தமிழ்தேசிய கூட்டமைப்பு நடத்துவதாக கூறப்படுவது விந்தையான விடயமாக எமக்கு தெரிகின்றது. இந்நிலையில் மேற்படி கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? என்ன பேசப்பட்டது? என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்தவேண்டும். இல்லையேல் குறித்த இரகசிய கூட்டம் சர்தேச விசாரணையிலிருந்து முன்னைய ஆட்சியாளர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியென்றே நாங்களும், மக்களும் தீர்மானிக்கவேண்டுமென தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்ற…

    • 18 replies
    • 1.3k views
  22. புதுக்குடியிருப்பு 10 ம் வட்டாரத்தை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 6ம் திகதி சனிக்கிழமை முதல் காணாமல் போயிருப்பதாக கிளிநொச்சி காவல்நிலையத்தினில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 62வயதுடைய பாலகிருஸ்ணன் மீனாட்சி என்பவரே காணாமல் போயிருந்தார்.தனது மகனொருவனுடன் தங்கியிருந்த இவர் வெளியே சென்றிருந்த நிலையினில் பின்னர் தகவல்கள் அற்றிருப்பதாக காவல்துறையிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டினில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தோர் தகவல் தருமாறு மகனான பிரபாகரன்(தொலைபேசி இல-0777637197) உதவி கோரியுள்ளார். http://www.pathivu.com/news/40803/57//d,article_full.aspx

    • 0 replies
    • 599 views
  23. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் எதிர்வரும் 14ம் திகதி மீண்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கூட்டம் கடந்த 10ம் திகதி நடைபெற்றிருந்தது. இதன் போது கட்சிகளுக்கான ஆசனங்களை ஒதுக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும் இதன் போது பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைஅடுத்து இணக்கப்பாடுகள் இன்றி நிறைவடைந்த இந்த கூட்டத்தை பின்னர் 14ம் திகதி மீண்டும் நடத்துவதாக இணங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/40800/57/14/d,article_full.aspx

    • 0 replies
    • 398 views
  24. ஆட்சிக்கு வந்ததும் மீள்குடியேற்றம் செய்வதாக உறுதியளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது மீள்குடியேற்றம் நடந்துவிட்டது என்ற தோரணையை ஏற்படுத்த முயற்சிப்பதாக வலி வடக்கு மீள்குடியேற்றக் குழு குற்றம் சுமத்தியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவ்வமைப்பின் தலைவர் எஸ். சஜீவன் இவ்வாறு தெரிவித்துள்ளார். ”துர்க்கையம்மன் கோவிலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ரணில் தெரிவித்திருந்தார் தான் ஆட்சிக்கு வந்தால் மீள்குடியேற்றம் செய்யப் போவதாக. ஆனால் இன்று ஆட்சிக்கு வந்து 100 நாள் வேலைத்திட்டம் கழிந்து 2 மாதங்கள் ஆகியுள்ள சூழலில் வெறும் 570 ஏக்கர் நிலப்பரப்பை விடுவித்துவிட்டு, அதிலும் ஏறத்தாழ 50 ஏக்கர் நிலத்தில் பாரிய இராணுவத்தளங்கள் உண்டு, இப்…

    • 0 replies
    • 627 views
  25. அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் பெற்ற அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­தினால் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது. ஆகையால் இது தொடர்பில் பங்­காளிக் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதன் பின்னர் திருத்­தங்­களை முன்­வைக்­க­வுள்­ள­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் பொதுச் செய­லாளர் சுசில் பிரே­ம்ஜ­யந்த தெரி­வித்தார். இலங்­கையின் வர­லாற்றின் அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்­ற உறுப்பினர்களின் எண்­ணிக்கையை அதி­க­ரிப்­பது என்­பது பெரிய விட­ய­மல்ல. சனத்­தொகை வளர்ச்­சிக்­கேற்ப உறுப்­பினர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். மேலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்த யோச­னை­யினால் யாழ்ப்­பா­ணத்தின் …

    • 0 replies
    • 377 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.