Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் இளைஞர்கள் கடத்தலுடன் கடற்படையினருக்குத் தொடர்பு – நீதிமன்றத்தில் சிஐடி அறிக்கை JUN 04, 2015 | 0:57by புதினப்பணிமனைin செய்திகள் கொழும்பில் 2008ம் ஆண்டு, ஐந்து தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் சிலர் தொடர்புபட்டுள்ளதாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கடத்தப்பட்டு காணாமல்போன இளைஞர்கள் தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று நடந்தபோது சாட்சியமளித்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க, சம்பந்தப்பட்ட இளைஞர்களின் கடத்தல்களுடன் சுமித் ரணசிங்க மற்றும் சந்தன குமார ஆகிய கற்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தான் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்ததாக…

    • 2 replies
    • 486 views
  2. இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி அதிபர் பதவியை மைத்ரிபால சிறிசேனா கைப்பற்றுவதற்கு முக்கியமான காரணம், நாட்டின் சிறுபான்மை யினரான தமிழர்களும் முஸ்லிம்களும். இலங்கையில் சர்வாதிகார குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சவுக்கு மாற்றாக, ஜனநாயக முறையிலான அரசு அமைய வேண்டும், பொறுப்பான அரசாக அது இருக்க வேண்டும் எனும் மக்களின் எண்ணம் மட்டும் சிறிசேனாவை ஆட்சிக்குக் கொண்டு வந்துவிடவில்லை. அந்நாட்டு மக்களை வெறுப்பில் ஆழ்த்தியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் சிறிசேனாவின் வெற்றிக்குக் காரணம். அவற்றில் மிக முக்கியமானது ராணுவமயமாக்கல். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குப் பின்னர், இலங்கையில், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழ…

    • 2 replies
    • 748 views
  3. கற்காலத்துக்குத் திரும்பும் இலங்கை [ வியாழக்கிழமை, 04 யூன் 2015, 07:10.34 AM GMT ] “மூன்றாம் உலகப் போரில் என்னென்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பதை ஓரளவு யூகிக்க முடிகிறது. நான்காம் உலகப் போரில் பயன்படுத்தப் போகும் ஆயுதங்கள் எவை எவை என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால், ஐந்தாம் உலகப் போரில் என்னென்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பது, இப்போதே தெளிவாகத் தெரிகிறது. அந்தப் போரில் கற்களைத் தான் ஆயுதங்களாகப் பயன்படுத்தப் போகிறோம்....." உலகின் மிகச் சிறந்த அறிஞர்களில் ஒருவர் வேதனையுடன் சொன்ன வார்த்தைகள் இவை. ஓரிரு வாரங்களுக்கு முன்தான் இதைப் படித்தேன் என்றாலும், நான் ஒரு ஞாபக மறதிப் பேர்வழி. அதற்குள் அந்த அறிஞரின் பெயர் மறந்துவிட்டது! (ஐன்ஸ்டீன்?) மனித இனமே அழிந்து…

  4. கிளிநொச்சி மலையாளபுரத்தில் புதன்கிழமை (03) இரவு இடம்பெற்ற குழு மோதலில் நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். மலையாளபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் சுகந்தன் (வயது 19), எஸ்.சாந்தன் (வயது 19), மணியண்ணன் பிரசாந்த் (வயது 19) ஆகியோரே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ரி.வினோதன் (வயது 21) என்பவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரையும் கைது செய்யப்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிளிநொச்சி பொலிஸார் மேலும்…

    • 0 replies
    • 726 views
  5. கொழும்பு மற்றும் மலையகத்தை மையப்படுத்தி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் தலைமையில் 'முற்போக்கு தமிழ் கூட்டணி' என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று இன்று உதயமாகிறது. கொழும்பு மற்றும் மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமையினை பாதுகாப்பதற்காக கூட்டணி அரசியல் ஒன்று தேவை என்பதை பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று மாலை 3 மணிக்கு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலின் கோல்டன் பொன்ட் மண்டபத்தில் 'முற்போக்கு தமிழ் கூட்டணி' என்னும் புதிய அரசியல் கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்தி தெரிவிக்கிறது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் இராஜா…

    • 4 replies
    • 618 views
  6. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்பட்டிருந்த ரொஷான் சானகவின் இறுதிக்கிரியையை, கோத்தபாயவின் ‘எவன்கார்ட்’ நிறுவனமே நடத்திய விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. 2011 இல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரொஷான் கொல்லப்பட்டிருந்தார். பொலிசாரின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருந்தார். இதனையடுத்து, அங்கு மக்களின் எதிர்ப்பு வலுவடைந்தது. மக்களின் எதிர்ப்பை அடக்குமுறையின் மூலம் மகிந்த ராஜபக்ச அரசு கட்டுப்படுத்தியது. இதற்கு எவன்கார்ட் நிறுவனத்தை பயன்படுத்திய விவகாரமும் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. கொல்லப்பட்டவரின் சகோதரன் இதனை பகிரங்கப்படுத்தியுள்ளார். ஊழியர்களின் எதிர்ப்பை அடக்க பொலிசார் நடத்திய தாக்குதலில் ரொஷான் கொல்லப்பட்டிருந்தார். இதனை அடக…

    • 0 replies
    • 791 views
  7. இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற்ற வேளை கொழும்பு நகரப்பகுதியிலிருந்து அகற்றப்பட்ட நாய்களுக்கு உணவு வழங்குவதற்காக 1094294 ரூபாயை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செலவு செய்ததாக நேற்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டது. ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்தார். கொழும்பிலிருந்து பிடிக்கப்பட்ட 203 நாய்கள் பேஸ்லைன் வீதி மற்றும் மகசின் வீதியில் வைக்கப்பட்டிருந்தன, ஆனால் பின்னர் அவற்றை விடுவித்துவிட்டனர். அந்த நாய்களுக்கு உணவு வழங்குவதற்காக 1094294 ரூபாயை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செலவு செய்தது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதனை மறுத்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, குறிப்பிட்ட நாய்களை வில்பத்துவிலும…

    • 1 reply
    • 533 views
  8. எதிர்க்கட்சியின் இனவாத நிகழ்ச்சி நிரல்- பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ரணில் JUN 04, 2015 | 2:21by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன மகேந்திரன் நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் பின்னணியில், இனவாத நிகழ்ச்சி நிரல் உள்ளது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார். மத்திய வங்கி ஆளுநர் நியமனம் தொடர்பாக நேற்றுக்காலை சிறிலங்கா நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ”எந்தவொரு நாட்டினதும் குடிமகனாவதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும். அது சட்டரீதியானது. இதேபோன்று கோத்தாபாய ராஜபக்ச அமெரிக்காவில் சத்தியப்பிரமாணம்…

    • 0 replies
    • 633 views
  9. பௌத்தத்தின் இருண்ட பக்கம் – பிபிசியின் ஆய்வு JUN 04, 2015by நித்தியபாரதிin கட்டுரைகள் தமிழ்ப் புலிகளுக்கு எதிரான நீண்ட யுத்தமானது கடும்போக்கு பௌத்தவாதிகள் மேலும் தமது மதவாதக் கருத்துக்களைப் பரப்பச் செய்ய வழிவகுத்தது. சிங்களவர்களையும் பௌத்தத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு யுத்தமாகவே புலிகளுடனான யுத்தம் சித்தரிக்கப்பட்டது. இவ்வாறு பிபிசி சஞ்சிகையில், ‘பௌத்தத்தின் இருண்ட பக்கம்’ என்ற தலைப்பில், Charles Haviland எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. வன்முறையற்ற கோட்பாடு என்பது புத்த மதத்தின் போதனையாக உள்ளது. ஆனால் சிறிலங்காவில் செயற்படும் சில புத்த பிக்குகள் ஏனைய சிறுபான்மை மதங்கள் மற்றும் அவற்றின் நம்பி…

    • 0 replies
    • 755 views
  10. மைத்திரியின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரி பதவிஇறக்கம் JUN 04, 2015 | 1:22by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக சிறிலங்கா காவல்துறையின் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறை மா அதிபர் கடந்த ஜூன் முதலாம் நாள் தொடக்கம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த மூத்த காவல்துறை மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க தொடர்ந்தும், அதிபர் பாதுகாப்புப் பிரிவிலேயே பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர், அவரது பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் அண்மையில் பெரும் ச…

    • 0 replies
    • 631 views
  11. மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் ஒருவரை வாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை நாரந்தனையில் இடம்பெற்றுள்ளது. இரு சமூகப் பிரிவுகளுக்கு இடையே கடந்த ஒரு மாத காலமாக நிலவும் பிரச்சினையே இந்த வாள்வெட்டுக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே மது போதையில் சென்ற நால்வர் ஊர்காவற்றுறைப் பகுதியில் வைத்து ஒருவரை வாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை ஊர்காவற்ற…

  12. வரலாற்று சிறப்பு மிக்க கீரிமலைப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் பெருமளவு மலர்கள் கொண்ட நந்நதவனம் ஒன்று அமைப்பதற்கான முன் முயற்சி நடவடிக்கைகளை சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிவபூமி அறக்கட்டளை நிலையத்தின் ஸ்தாபகர் ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். இதற்கான காணியை ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் மூவர் தமது தாய் தந்தையர்களின் நினைவாக வழங்கியுள்ளனர் எனவும் இந்த நந்தவனத்திற்கு வேண்டிய மலர் கன்றுகள் யாவும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு நடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறிப்பிட்ட நந்தவனம் அமைப்பதற்கு வேண்டிய ஆரம்ப நடவடிக்கையாக குறிப்பிட்ட திட்ட செயற்பாடுகள் சம்பந்தமாக இந்தியாவின் இலங்கைக்கான துணைத் தூதரகத்தில் உள்ள …

    • 0 replies
    • 645 views
  13. எமது காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் [ புதன்கிழமை, 03 யூன் 2015, 11:59.33 AM GMT ] வாகரை முருக்கையடிமுனை கிராமத்தில் படையினரின் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீளப்பெற்றுத்தருமாறு கோரி பொதுமக்கள் வாகரை பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை பிரதேச அமைப்பாளர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காரணமாக வாகரை முருக்கையடிமுனை கிராம மக்கள் இடம…

    • 7 replies
    • 722 views
  14. நாட்டை விட்டு ஓடமாட்டாராம் கோத்தா JUN 03, 2015 | 1:41by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தான் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற கோத்தாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதால் அவர் அந்தப் பதவியை ஏற்க முடியாதுள்ளதாகவும், ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து தனது முகநூல் பதிவில் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச, “சிறிலங்காவுக்கு எனது தேவை இருக்கும் போது நான் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். என்மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்…

  15. பதவி விலகினார் திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை JUN 03, 2015 | 14:53by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள் கத்தோலிக்கத் திருச்சபையின் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தனது பதவியை விட்டு விலகியுள்ளார். அவரது பதவி விலகலை பாப்பரசர் பிரான்சிஸ், ஏற்றுக்கொண்டுள்ளதாக, வத்திக்கான் வானொலி தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை, வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பதவி விலகியதையடுத்து, வண.நொயல் இம்மானுவெல் கிறிஸ்ரியன், திருகோணமலை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பாப்பரசரினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பதவி விலகியமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. http://www.puthinappalakai.net/2015/06/03/new…

    • 1 reply
    • 866 views
  16. நல்லாட்சியை வலுப்படுத்த இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையில் நல்லாட்சியை வலுப்படுத்த அதிகளவு உதவிகளை வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதித் துணைச்செயலாளர் ரிச்சர்ட் ஈ. ஹோக்லாண்ட் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக நீதி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான உதவிகளை வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக ரீதியான தேர்தலின் பின்னர் இலங்கையுடனான உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சியையும் மனித உரிமைகளையும் மேம்படுத்த இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகத் தெரி…

    • 3 replies
    • 470 views
  17. சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க சபாநாயகர் பரிந்துரை JUN 03, 2015 | 7:50 by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ச பரிந்துரை செய்துள்ளார். அரசியலமைப்பு சபைக்கான வெளியக உறுப்பினர்களின் நியமனத்தை உறுதிப்படுத்துவதற்காக இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு ஆரம்பமானது. எனினும், நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் விரைவாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் இருதரப்பு உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்து குழப்பத்தை ஏற்படுத்தியதால், சபை ஒத்திவைக்கப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர், இருதரப்பு உறுப்பினர்களும் விரும்புவதால் நாடாளுமன்றம் விரைவாக கலைக்கப்பட வேண்டும் என்று த…

    • 0 replies
    • 601 views
  18. சிறிலங்காவின் புதிய பாதை அமெரிக்காவுக்கு கிடைத்த வரம் – இராஜாங்கத் திணைக்கள அதிகாரி JUN 03, 2015 | 7:32by கார்வண்ணன்in செய்திகள் நல்லாட்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கும் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்றும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வொசிங்டனில் நேற்று அனைத்துலக வர்த்தகப் வேபரவையில் உரையாற்றிய தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் ரிச்சர்ட் ஈ.ஹோக்லன்ட், இதனைத் தெரிவித்துள்ளார். ‘தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரியான அவர், ஜனநாயக வழியில் நல்லாட்…

    • 0 replies
    • 604 views
  19. வடக்கிற்கான உதவிகள் குறித்து முதல்வருடன் ஜேர்மன் தூதுவர் ஆராய்வு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்கன் மோர்கட்டிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜேர்மனிய தூதுவர் முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இச்சந்திப்பில் ஜேர்மன் தூதுவர் மற்றும் அந்தநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கலந்துகொண்டனர். தற்போதைய வடமாகாணத்தின் நிலமைகள் தொடர்பிலும் இளைஞர்களின் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த ஜேர்மன் தூதுவர், வடபகுதி இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பில் ஜேர்மன் அரசாங்கம் மிகுந்த அக்க…

  20. வித்தியாவின் கொலைக்கு நீதிகோரி பருத்தித்துறையில் அமைதிப்பேரணி புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மாணவிக்கு நீதி கோரியும் பருத்தித்துறை நகரசபை ஏற்பாட்டில் அமைதிப்பேரணியும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் இடம்பெற்று வருகின்றது. பருத்தித்துறை காந்தி சிலையடியிலிருந்து ஆரம்பமாகும் அமைதிப் பேரணி பருத்தித்துறை கோட்டுவாசல் அம்மன் கோயிலை சென்றடைந்து அங்கு மாணவியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெறுகின்றது. இதேவேளை. குறித்த பேரணியையும் மௌனப்பிரார்த்தனையையும் தடை செய்யுமாறும் இதனால் அசம்பாவிதங்கள் இடம்பெறக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவித்து பருத்தித்துறை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்…

  21. வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் காதலனான 20 வயதுடைய இளைஞனை புதன்கிழமை (03) கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். தன்னைக் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதாகக்கூறி கடந்த 25ஆம் திகதி யுவதியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன், யுவதியின் கழுத்தை வெட்டியதுடன், தன்னையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இளைஞன் சிகிச்சை பெற்று இன்று புதன்கிழமை (03) வீடு திரும்பியதை அடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். http://www.tamilmirror.lk/147531#sthash.28AYcg7W.dpuf

    • 1 reply
    • 561 views
  22.  கிளிநொச்சி, அக்கராயன் குளத்தின் நீர் சிறுபோக செய்கையின் தேவைக்காக தற்போது திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் இடதுகரை வாய்க்கால் ஊடாக வயல் நிலங்களுக்குச் செல்லும் நீர் அக்கராயன் அணைக்கட்டு வீதியில் ஓரிடத்தில் வீதியை குறுக்கறுத்துப் பாய்வதன் காரணமாக குளத்தின் நீர் அக்கராயன் ஆற்றினைச் சென்றடைந்து வீண்விரயமாகிக் கொண்டிருக்கின்றது. அக்கராயன்குளத்தின் கீழ் இவ்வாண்டு 2500 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. குளத்தின் நீர் நெற் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. அக்கராயன் அணைக்கட்டு வீதியில் அந்தோனியார் ஆலயத்துக்கு முன்பாக வீதியின் குறுக்கறுத்து வாய்க்காலில் செல்லும் நீர் வீணாகப் பாய்வதன் காரணமாக நீர் விரயமாகின்றது. இப்பகுதியிலுள்ள கமக்காரர் அமைப்புகள் இது…

    • 0 replies
    • 798 views
  23. வரலாற்றுப் பிரசித்தி பெற்றதும் கடல் நீரில் விளக்கு எரியும் அற்புதம் நிறைந்ததுமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் திருவிழா நேற்று திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இம்முறை சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்றனர். இந்த எண்ணிக்கையை வழமையை விட அதிகமாகும். நள்ளிரவு 12 மணிக்கு வழுந்து வைக்கும் சம்பிரதாயத்துடன் பொங்கல் விழா ஆரம்பமாகியது. நாடு முழுவதிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள், பாற்செம்புகள், கற்பூர சட்டி ஏந்தி தங்கள் நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர். வழமையாக இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் கூடியதாக இடம்பெற்ற இந்தத் திருவிழாவில் நேற்று இராணுவப் பிரசன்னம் இருக்கவில்லை. அத்துடன் ஹெலிகொப்டர் ம…

    • 0 replies
    • 699 views
  24. எமது இளைஞர்கள் இடையே போதைப் பொருட்களை அறிமுகம் செய்யப் பாரிய ஓர் அரசியல் காரணம் பின்னணியில் இருந்து வந்துள்ளது என்பதை எங்கள் மாணவ உலகம் அறிந்து கொள்ள வேண்டும். விநியோகம் செய்பவர்களை எமக்குக் காட்டிக் கொடுக்க மாணவ சமுதாயம் முன்வர வேண்டும். இந்தச் சதியில் இருந்து தப்ப முயற்சிக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். உதயன் பத்திரிகை நிறுவனம் ஒன்றின் உலகக் கிண்ண கிரிக்கெட் கொண்டாட்டம், யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், எமது இளைஞர், யுவதிகள் விளையாட்டுக்களில் ஈடுபாட்டுடன் செயற்பட்டால் தான் பலவித சமூ…

  25. அரசியல் என்னும் அவசியமானதொரு துறை ஒரு நாட்டைச்சார்ந்த நிர்வாகத்திற்காகவும் அந்த நாட்டில் வாழும் மக்களுக்காகவுமே தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாகும். அரசியலும் அரசியல்வாதிகளும் மக்களின் நலன் சார்ந்தும் குறிப்பிட்ட நாட்டின் உயர்வு சார்ந்தும் இயங்கவேண்டியவர்கள் ஆவார்கள். ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கு அரசியல்வாதிகள் அவசியமாகின்றார்கள். ஆனால் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கவும் நாட்டு மக்களின் நலனைப் பாதுகாக்கவும் தவறும் அரசியல்வாதிகள் அந்த ஆசனத்தை அலங்கரிப்பதற்கு எந்த வகையிலும் ஏற்புடையவர்கள் அல்லர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும். உலகில் பல நாடுகளை உதாரணமாக எடுத்துக்கொண்டால், மேற்படி நாடுகளில் அரசியல் துஸ்பிரயோகங்கள் தாராளமாகவே இடம்பெறுகின்றன. நாட்டின் வளங்கள் சூறையாடப்படுகின்றன.…

    • 0 replies
    • 360 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.